Untitled Document
October 23, 2026 [GMT]
 
நடிகர் ஆனந்த் ராஜின் சகோதரர் விஷம் அருந்தி தற்கொலை!
[Friday 2020-03-06 08:00]

தமிழ் தரையுலகில் பிரபல வில்லன்களில் ஒருவர் நடிகர் ஆனந்த் ராஜ். இவர் தற்போது வில்லன் கதாபாத்திரங்கள் விட காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கிவிட்டார். இவருக்கு கனகசபை எனும் இளைய சகோதரர் ஒருவர் உள்ளார். இவர் புதுச்சேரியில் வசித்து வந்துள்ளார். அங்கே பிரபல தொழிலதிபர்களிடம் இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தாக தெரிவந்துள்ளது. இந்த ஏலச்சீட்டில் கடன் ஏற்பட்டதாகவும் ரூபாய் 50 கோடி வரை இவருக்கு கடன் ஏற்பட்ட இருந்ததாகவும், இதனால் இன்று கனகசபை தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.


தொகுப்பாளினி டிடி-யிடம் இப்படி ஒரு மாற்றமா?!.. Top News
[Friday 2020-03-06 08:00]

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கடந்து 20 வருடமாக பணிபுரிந்து வருபவர் திவ்யதர்ஷினி. இவரை அனைவரும் செம்மலாக டிடி என்று தான் அழைப்பார்கள். இவர் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, பாய்ஸ் vs girls, சூப்பர் சிங்கர், காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகளை முன் நின்று தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டிடி தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாட்டினால் இவர்கள் இருவரும் விவாகரத்து வாங்கி கொண்டனர்.


கொரோனாவால் பாதிக்கப்பட்ட புகழ்பெற்ற அவுஸ்திரேலிய இசையமைப்பாளர்!
[Friday 2020-03-06 08:00]

புகழ்பெற்ற அவுஸ்திரேலிய இசையமைப்பாளர் ஒரு விழாவில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரிஸ்பேனில் பிறந்த பிரபல இசையமைப்பாளரான 58 வயதான பிரட் டீன், சனிக்கிழமை இரவு அடிலெய்ட் விழாவில் அடிலெய்ட் சிம்பொனி இசைக்குழுவை வழிநடத்த திட்டமிட்டிருந்தார்.


விபச்சார விடுதியில் கையும் களவுமாக சிக்கிய தொலைக்காட்சி பிரபலம்!
[Thursday 2020-03-05 17:00]

சினிமா, டிவி சானல் பிரபலங்களும் சில நேரங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது சகஜமாகிவிட்டது. இதில் தற்போது டோரா பாபு என்பவரும் அவரின் நண்பர் பரதேசி என்பவரும் சிக்கியுள்ளனர். Jabardasth என்ற டிவி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் காமெடியன் டோரா பாபு. இவர் X ரேட்டிங் படங்களிலும், B Grace ஆபாச படங்களிலும் நடித்து வருகிறாராம். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விசாகப்பட்டினத்தில் ஸ்பெஷல் படை ஒன்று லோக்கல் ஏரியாக்களில் அதிரடி சோதனை செய்தது. இதில் காம்பிளக்ஸ் ஒன்றில் டோரா பாபுவை பிடித்துள்ளனர்.


தள்ளிப்போனது சூரரைப் போற்று படத்தின் வெளியீடு திகதி!
[Thursday 2020-03-05 17:00]

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.


பட வாய்ப்பு இல்லாததால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு!
[Thursday 2020-03-05 17:00]

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில், பவன் கல்யாண் கதாநாயகனாக நடித்து 2010ம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படம் 'புலி'. இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நிகிஷா படேல். குஜராத்தை பூர்விகமாக கொண்ட இவர் லண்டனில் பிறந்து வளர்ந்தவர். அழகுடன் கிளாமராகவும் நடிக்கத் தயங்காதவர். அதன் காரணமாக, தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். தமிழில் 'தலைவன்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து சில கன்னடப் படங்களிலும் நடித்தார். தொடக்க காலத்தைத் தவிர அதன்பின் முக்கிய ஹீரோக்களுடன் ஜோடியாக அவர் நடிக்கவே இல்லை. கதாபாத்திரங்களை விடவும் கிளாமருக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.


அண்ணாத்த படம் குறித்து வெளியான முக்கிய தகவல்!
[Thursday 2020-03-05 08:00]

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி நடித்து கொண்டு இருக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தில் பல வருடன் கழித்து நடிகை மீனா மற்றும் குஷ்பூ நடித்து வருகிறார்கள். மேலும் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை அடைந்தது. இதன்பின், ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருவது இப்படத்தின் First லுக்.


தவறாக பேசிய ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த ரித்விகா!
[Thursday 2020-03-05 08:00]

தமிழில் பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரித்விகா. இதன்பின் பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த மெட்ராஸ் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து ரஜினியின் கபாலி, விக்ரமின் இருமுகன் போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் நடிகை ரித்விகா. ஆனால், பிக் பாஸ் சீசன் 3யில் வந்த பிறகு தான் இவருக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மனதில் இவரால் சம்பாதிக்க முடிந்தது என்று கூட கூறலாம்.


விஜய்யின் நடனத்தை பார்த்து வியக்கிறேன் - ஹிருத்திக் ரோஷன்!
[Thursday 2020-03-05 08:00]

விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் சென்னை வந்தார். ஹிருத்திக் ரோஷன் சென்னையில் உள்ள பிரபலமான மால் ஒன்றில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் நடனமாடி உற்சாகமூட்டினார். நடிகர் விஜய்யின் நடனம் குறித்து ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.


கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம்! Top News
[Wednesday 2020-03-04 18:00]

16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படம் தயாராகிறது. இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். ரூ.100 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை மார்ச் மாதம் 26-ந்தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.


முக்கிய நிகழ்வில் கலந்துகொண்ட அஜித்!
[Wednesday 2020-03-04 18:00]

கடந்த 2018-ம் ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீதேவிக்கு திதி கொடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில் போனி கபூரின் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் அஜித்தும் கலந்து கொண்டார்.


கொரோனாவை கேலி செய்யும் விதமாக வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை!
[Wednesday 2020-03-04 18:00]

தமிழில், சிம்பு நடித்த 'காதல் அழிவதில்லை' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சார்மி. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்போது, பிரபல தெலுங்கு இயக்குனர் புரி ஜெகநாத்துடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் இவர் தயாரித்த, ஐ ஸ்மார்ட் சங்கர் என்ற படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் அவர் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி கேலி செய்யும் விதமாக டிக்டாக் செய்து ஒரு வீடியோவை தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.


வலிமை படம் குறித்து வெளியான முக்கிய தகவல்!
[Wednesday 2020-03-04 08:00]

தல அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் வலிமை. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பாலிவுட் நடிகர் ஹூமா குரேசி நடித்து வருதாகவும் சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்தது. மேலும் வலிமை படத்தில் அஜித்துக்கு யார் வில்லன் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இணையத்தில் கேட்டு வருகின்றனர்.


கில்லி படத்தில் நடித்த நடிகையா இது! - வாயடைத்துப்போன ரசிகர்கள். Top News
[Wednesday 2020-03-04 08:00]

தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த படம் கில்லி. இப்படம் தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபு நடித்து வெளிவந்த படத்தின் ரீமேக் என்பதை நாம் அறிவோம். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்த த்ரிஷா, பிரகாஷ் ராஜ், Ashish Vidyarthi, ஜானகி சபேஷ் உள்ளியிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இதில் குறிப்பாக இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தவர் நடிகை ஜெனிபர். இவர் இப்படத்திற்கு முன்பு விஜய்யும் சூர்யாவின் இணைந்து நடித்திருந்த நேருக்கு நேர் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இதன்பின் 2017ஆம் அணைந்து அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த கூட்டத்தில் ஒருத்தன் என்று படத்தில் நடிகை பிரியா ஆனந்தின் தோழியாக நடித்திருந்தார்.


ரசிகர்களிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்த விஜய்!
[Wednesday 2020-03-04 08:00]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தில் இவர்களுடன் இணைந்து மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து முடித்துள்ளார்கள். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என்று விஜய்க்கு, விஜய் சேதுபதி கொடுத்து முத்தத்தின் புகைப்படத்தோடு இப்படத்தின் தயாரிப்பாளர் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.


தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து தவறு செய்துவிட்டேன் - ரகுல் பிரீத் சிங்!
[Tuesday 2020-03-03 17:00]

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ரகுல் பிரீத் சிங்குக்கு இப்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான் படங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து தவறு செய்து விட்டேன். அந்த தவறு இப்போதுதான் புரிகிறது. தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு பிரச்சினை கொடுத்தது இல்லை. சம்பள விஷயத்தில் கூட விட்டு கொடுத்தேன். யாருடனும் தகராறு செய்தது இல்லை. படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து விடுவேன். இவ்வளவு இறங்கியும் கூட வாய்ப்புகள் வரவில்லை என்றால் அதற்கு காரணம் நான் கவர்ச்சியாக நடித்ததுதான். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்காமல் தொடர்ந்து கவர்ச்சியாகவே நடித்து விட்டேன். அதனால் தான் படங்கள் குறைந்துவிட்டன. இப்போது சைவமாக மாறி விட்டேன்.


முக்கிய இயக்குனருடன் கைகோர்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
[Tuesday 2020-03-03 17:00]

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அண்மையில் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த வேர்ஸ்ட் ஃபேமஸ் லவ்வர் படம் வெளியானது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. தற்போது ரண சிங்கம், பூமிகா படங்களில் இணைந்துள்ளார். மேலும் தெலுங்கில் டக் ஜெகதிஷ் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக ஹீரோயினை மையப்படுத்திய கதையில் இணைந்துள்ளாராம்.


தவறான முன் உதாரணமாக மாறிய திரௌபதி!
[Tuesday 2020-03-03 17:00]

திரௌபதி பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம். இப்படத்தில் ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்திற்கு ரிலிஸுக்கு முன்பே நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைத்தது, அதை வைத்து இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் முதல் நாளே இப்படம் வெற்றி என்பது உறுதியாகிவிட்டது, ஆனால், இங்கு பிரச்சனையே வேறு. படத்தின் போஸ்டரில் கூட சாதிகள் உள்ளதடி பாப்பா என்று போட்டு பெரும் சர்ச்சயை உண்டாக்கினர், அதை தொடர்ந்து படத்திற்கு மேலும் பப்ளிசிட்டி கிடைத்தது.


"நான் கொஞ்சம் சோம்பேறி ஆகிவிட்டேன்" என கூறிய நஸ்ரியா!
[Tuesday 2020-03-03 08:00]

மலையாளத்தில் வெளியாகியுள்ள படம் 'டிரான்ஸ்'. பகத் பாசில், நஸ்ரியா, கவுதம் மேனன், விநாயகன், செம்பியன் வினோத் ஜோஸ், திலீஸ் போத்தன், ஜுன் ஜோசப் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 'பெங்களூர் டேஸ்' படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் தன் கணவர் பகத் பாசிலுடன் இணைந்து நடித்துள்ளார் நஸ்ரியா. படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் திருமணத்துக்கு பின் ஏன் திரையுலகில் பெரிய இடைவெளி விடுகிறேன் என்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.


முற்றிலும் வித்தியாசமான கோவில் கட்டும் ராகவா லாரன்ஸ்: சாத்தியமா?..
[Tuesday 2020-03-03 08:00]

திரையுலகில் நடிப்பதை தவிர்த்து மக்களுக்கு தன்னால் முடிந்த வரை உதவி செய்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் தனது தாய்க்கு கோவில் காட்டியது திரையுலகில் மிக பெரிய பெயரை இவர்க்கு தேடி தந்தது. மேலும் இவர் மாற்று திறனாளிகளுக்கு அறக்கட்டளை வைத்து பல வித உதவிகளை செய்து வருவதையும், அவர்களுக்கு தனது படங்களில் வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்தையும் நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது இதுவரை யாரும் செய்யாத ஒரு விஷயத்தை தனது கையில் எடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ்.


ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்ட ஸ்ருதிஹாசன்! Top News
[Tuesday 2020-03-03 07:00]

ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வந்தார். பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை, படங்களில் நடிப்பதை சில மாதங்கள் நிறுத்தி வைத்திருந்தார், தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு லாபம் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் ஒரு குறும்படம் ஒன்று வந்துள்ளது, இவை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றது. இந்த குறும்படத்தில் கஜோல் தான் முக்கியமான ரோலில் நடித்துள்ளார், சரி இது ஒரு புறம் இருக்க ஸ்ருதி தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


முன்னணி இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு!
[Monday 2020-03-02 17:00]

‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். மீதிப்படத்தை விஷால் இயக்க உள்ளார்.


தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை!
[Monday 2020-03-02 17:00]

சென்னை திருவெற்றியூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகை கலங்க வைத்துள்ளது. ஆம் சென்னை திருவெற்றியூரில் வசித்து வருபவர் துணை நடிகை பத்மஜா. இவர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையிலும் துணை நடிகையாக நடித்து வந்துள்ளாராம். இவர் திருவலூரில் தனது கணவன் பவானுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சைனைகள் வருமாம். இதனால் தங்களது 2வயது குழந்தையை கூட உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, வர இறுதியில் மட்டும் இருவரும் சென்று குழந்தையை பார்த்துவிட்டு வருவார்களாம்.


திருமணத்திற்கு தயாராகும் அனுஷ்கா!
[Monday 2020-03-02 17:00]

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள அனுஷ்காவுக்கு இப்போது 38 வயது. இவருக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வந்தன. அதை இருவரும் மறுத்தார்கள். பின்னர் தொழில் அதிபரை அனுஷ்கா மணக்க இருப்பதாக தகவல் வெளியானது. அப்படி எதுவும் நடக்கவில்லை. இதையடுத்து கிரிக்கெட் வீரரை அனுஷ்கா காதலிப்பதாகவும், அவருடன் டேட்டிங் சென்றதாகவும் செய்திகள் பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்த அனுஷ்கா, தனது திருமண முடிவை பெற்றோரிடம் விட்டுவிட்டதாக கூறினார்.


"விஜய் அண்ணா எந்த துறைக்கு சென்றாலும் சாதிப்பார்" - பிரபல நடிகர் பேச்சு!
[Monday 2020-03-02 08:00]

தமிழ் திரையுலகில் தற்போது டாப் ஹீரோக்களில் மிக முக்கியமான நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர் என்பதனை நாம் அறிவோம். சமீபத்தில் தான் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்தது என்று விஜய்க்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுக்கும் புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். தளபதி விஜய்யை பற்றி பலரும் தங்களது கருத்துக்களை நேரக்கனல்களில் தெரிவிப்பது வழக்கம் தான்.


"நடிகை ராதிகா எனக்கு அம்மா இல்லை" - வரலட்சுமி அதிரடி!
[Monday 2020-03-02 08:00]

தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார். இவர் நடிகர் சரத்குமாரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை நாம் அறிவோம். சரத்குமார் அவர்களின் முதல் மனைவியின் மகள் வரலட்சுமி சரத்குமார். வரலட்சுமி அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இதில் பல விஷயங்களை பற்றி பேசி வந்தார்.


நாட்டில் அமைதியை நிலைநாட்ட தயாராக இருப்பதாக ரஜினி பேச்சு!
[Monday 2020-03-02 08:00]

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இஸ்லாமிய மதகுருமார்கள் நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்துப் பேசினார்கள். இந்நிலையில் நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


முக்கிய விஷயத்திற்காக 1.5 கோடி ரூபாய் தானமாக கொடுத்த ராகவா லாரன்ஸ்!
[Sunday 2020-03-01 18:00]

நடிகர் அக்‌ஷய் குமார் பாலிவுட் சினிமாவின் டாப் ஹீரோ. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக 2.0 படத்தில் நடித்திருந்தார். ஹிந்தியில் அவர் நடித்து வரும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூல் செய்து கொண்டிருக்கின்றன. சமூக நலம் சார்ந்த விசயங்களையும் செய்து வருகிறார்.


"படுக்கைக்கு அழைத்த இயக்குனர்கள்" - போட்டுடைத்த வரலட்சுமி!
[Sunday 2020-03-01 17:00]

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாட்டின் ஒவ்வொரு மூலையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதே வேளையில் இதற்கு எதிரான போராட்டமும் தொடர்கதையாக உள்ளன. சினிமாவில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதாக கூறி பாதிக்கப்பட்ட பலர் #metoo என்ற டேக் மூலம் பேசப்பட்டு வருகின்றனர். இதில் சிலர் சிக்கினர். இந்நிலையில் நடிகை வரலட்சுமி தான் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார். இதில் அவர் தான் சினிமா பிரபலங்களின் வாரிசு என தெரிந்த பின்னும் தன்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர்.


மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபலம்!
[Sunday 2020-03-01 17:00]

காமெடிக்கான முக்கிய தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் லோகேஷ் பாப். இவரை பலருக்கும் தெரிந்திருக்கும் தானே. நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் இவர் சிறு வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு இடது கை மற்றும் இடது கால் செயலிழந்துள்ளதாம்.

Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா