Untitled Document
October 23, 2026 [GMT]
 
உடல் எடையை குறைத்து முற்றிலுமாக மாறிப்போன நடிகை மீனா! Top News
[Wednesday 2020-03-11 09:00]

தமிழில் 1991ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசுனிலே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீனா. இதற்கு முன்பு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். ஆம் இவரை நாம், ரஜினி நடித்து வெளிவந்த அன்புடன் ரஜினி எனும் திரைப்படத்தில் கூட குழந்தை நட்சித்திரமாக பார்த்திருப்போம். இதனை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார் நாடியாகி மீனா.


முன்னணி நடிகர்களை குறித்து தனது கருத்தை வெளியிட்ட நடிகர் விவேக்!
[Wednesday 2020-03-11 09:00]

தமிழ் திரையுலகில் தனது சிறந்த நடிப்பினால் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்திருப்பவர்கள் ரஜினி,அஜித் மற்றும் விஜய். இவர்கள் மூவரும் தற்போது தனது படங்களின் வேலைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர். ஆம் ரஜினி அண்ணாத்த, அஜித் வலிமை மற்றும் விஜய் தனது மாஸ்டர் படத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவரக்ளை பற்றி பலரும் பல கருத்துக்களை மேடைகளிலோ, சமூக வலைத்தளங்களிலோ அல்லது நேர்காணல்களிலோ தெரிவிப்பது ஒன்றும் புதிதல்ல.


மத்திய சுகாதாரத்துறையிடம் நடிகர் மாதவன் வேண்டுகோள்!
[Wednesday 2020-03-11 08:00]

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற தொலைபேசி சேவை வழங்கி வரும் நிறுவனங்கள் மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் படி கொரோனா விழிப்புணர்வுக்காக பிரத்யேக காலர்டியூனை வழங்கி வருகிறது. இருமலுடன் ஆரம்பிக்கும் அந்தக் காலர் டியூனில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் இடம்பெற்றுள்ளது.


நடிகர் சங்க தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!
[Tuesday 2020-03-10 18:00]

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு, ஜூன் 23-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்த பின்பு எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது எனவும் அவர் அறிவித்தார்.


குறும்படத்தில் நடித்தது குறித்து விளக்கமளித்த சாய் தன்ஷிகா!
[Tuesday 2020-03-10 18:00]

தமிழ் சினிமாவில் நன்றாக நடிக்க தெரிந்த நடிகை என்று பரதேசி, பேராண்மை, கபாலி படங்கள் மூலம் நிரூபித்தவர் சாய் தன்ஷிகா. ஆனந்த மூர்த்தி இயக்கத்தில், இவர் நடித்திருக்கும் குறும்படம் சினம்.


கொரோனா பீதி: அனைத்து திரையரங்குகளையும் மூடியது கேரள அரசு!
[Tuesday 2020-03-10 18:00]

உலகம் முழுக்க அனைத்து மக்களையும் நாட்டு அரசையும் மிகவும் பீதியில் ஆழ்த்தியுள்ள விசயம் கொரோனா வைரஸ் தாக்குதல். சீனாவில் பரவ தொடங்கிய இந்த நோயால் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இந்நோய் பல நாடுகளில் பரவி வருகிறது. இதற்காக பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளன. இந்தியாவின் சில மாநிலங்களில் சிலருக்கு நோய் தொற்று இருப்பதாக கூறி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.


"விஜய்க்கு பிறகு தான் அஜித் சாருடன் நடிப்பேன்" - இளம் நடிகை பேச்சு!
[Tuesday 2020-03-10 09:00]

தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, இப்போது வரை உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவரும் எப்போது மீண்டும் இணைந்து நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும் இவர்களுடன் இணைந்து நடிப்பதும் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகர் நடிகைகளுக்கு கனவு தான்.


விஜய்சேதுபதியை முந்திய சந்தானம்!
[Tuesday 2020-03-10 08:00]

தொலைக்காட்சியில் இருந்து மன்மதன் படம் மூலம் சினிமாவுக்கு வந்த சந்தானம் முன்னணி கதாநாயகர்களுடன் ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். காமெடி நடிகராக உச்சத்தில் இருந்தபோதே கதாநாயகனாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் கதாநாயகனாக நடித்த முதல் படமே வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து கதாநாயகன் வாய்ப்புகள் குவிந்தன. அனைத்து படங்களுமே வியாபார ரீதியாக நல்ல வசூல் பார்த்தன. ஒவ்வொரு வருடமும் அதிக படங்களில் நடிக்கும் கதாநாயகன் என்று விஜய்சேதுபதி பெயர் எடுத்து வருகிறார்.


அடுத்த அறிவிப்பை வெளியிட்ட மாஸ்டர் படக்குழு!
[Tuesday 2020-03-10 08:00]

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.


டிக்டாக்கில் கலக்கிய மலையாள நடிகைக்கு நேர்ந்த சோகம்!
[Monday 2020-03-09 18:00]

சினிமா பிரபலங்கள் சிலரின் சொந்த வாழ்க்கை விசயங்கள் பொது தளத்தில் பேசி சிலர் சர்ச்சைகளை உண்டாக்குவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அண்மையில் மலையாள சினிமாவை சேர்ந்த பிரபல நடிகையும் நடன கலைஞருமான தாரா கல்யாண் தன் மகள் சௌபாக்யாவுக்கு வெங்கட் என்பருடன் கடந்த மாதம் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தார். கணவரை இழந்த தாரா கல்யாண் தன் மகளுடன் இணைந்து டிக் டாக்கில் செய்து வீடியோ வைரலாகி பெரும் ரசிகர்கள் எண்ணிக்கை பெற்றார். இந்நிலையில் சிலர் தாராவுக்கு மருமகன் வெங்கட் உடன் கள்ளத்தொடர்பு இருக்கிறது, அதனால் தான் வெங்கட்டை தன் மகளுக்கு திருமணம் முடித்துள்ளார் என அசிங்கமாக பேசியுள்ளனர்.


கொரோனா பீதி: கதையை மாற்றிய வெற்றிமாறன்!
[Monday 2020-03-09 17:00]

வெற்றிமாறன் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர். இவருடைய படங்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த அசுரன் மிகப்பெரும் வசூல் சாதனை செய்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்து சூரியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார், இப்படம் கத்தார் நாட்டில் நடக்கவிருந்தது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர்களின் கஷ்டங்களையும், வாழ்க்கை முறைகளையும் அப்படம் காட்டவிருந்ததாம்.


தனது பெயரில் போலி கணக்கை பயன்படுத்தி வந்த நபரின் முகத்திரையை கிழித்த செய்தி வாசிப்பாளினி! Top News
[Monday 2020-03-09 17:00]

தற்போது இருக்கும் டிவி சானல் பிரபலங்களில் நடிகை அனிதா சம்பத்தும் ஒருவர். செய்தி தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் விஜய்யின் சர்க்கார் படத்தின் மூலம் நடிகையானார். பின் சூர்யாவின் காப்பான் படத்திலும் இவரை காண முடிந்தது. தற்போது சினிமா, வெப் சீரிஸிஸ் என திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.


தனுஷுடன் மோத தயாரான நயன்தாரா!
[Monday 2020-03-09 08:00]

தமிழ் திரையுலகில் தலைசிறந்த நடிகர் நடிகை பட்டியலில் இவர்கள் பெயர் இல்லாமல் இருக்காது. ஆம் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா தான் அது. தனுஷ் தற்போது நடித்து முடித்து ரீலிசுக்கு காத்திருக்கும் படம் ஜகமே தந்திரம். இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கியுள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளிவந்திருந்தது. இந்த மோஷன் போஸ்டேரே பல தரப்பு ரசிகர்களை ஈர்த்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். ஆம் அந்த அளவிற்க்கு மிக சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு இருந்து.


கர்ப்பமாக இருக்கும் சமந்தாவால் இது எப்படி சாத்தியம்?.. Top News
[Monday 2020-03-09 08:00]

தமிழில் அதர்வ நடிப்பில் வெளிவந்த பானா காத்தாடி படத்தில் மூலம் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வந்தார். மேலும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தார். குறிப்பாக விஜய், சூர்யா, மகேஷ் பாபு, ஜூனியர் என்.தி.ஆர் போன்ற பல நட்சத்திரங்களோடு இணைந்த நடித்தார்.


முக்கிய தகவலை வெளியிட்ட சூரரைப் போற்று படக்குழு!
[Monday 2020-03-09 08:00]

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.


முன்னணி நடிகரின் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய மலையாள நடிகை!
[Sunday 2020-03-08 18:00]

மலையாளத்தில் கடந்த 2016ல் அனுராக கரிக்கின் வெள்ளம் என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.


கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபல நடிகரின் தம்பி மீது நடிகை புகார்!
[Sunday 2020-03-08 18:00]

தமிழ், தெலுங்கு சினிமாவில் பணியாற்றி வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். சமூக சேவகராகவும் செயல்பட்டு வருகிறார். இவரின் காஞ்சனா படம் தற்போது ஹிந்தியில் லெட்சுமி பாம் என்ற பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது. அவரின் தம்பி எல்வின் என்ற வினோத். அவர் மீது தற்போது தெலுங்கு சினிமா துணை நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார்.


பின்னணி பாடகரை சரமாரியாக தாக்கிய கும்பல்!
[Sunday 2020-03-08 18:00]

சினிமா, டிவி பிரபலங்களுக்கு பொது இடங்களில் சில எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடைபெறத்தான் செய்கின்றன. அந்த வகையில் தற்போது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 வெற்றியாளரான பின்னணி பாடகரான ராகுலுக்கு நடைபெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை அவர் தன் தோழியுடன் கச்சிபோலி என்ற இடத்தில் உள்ள பப் ஒன்றிக்கு சென்றுள்ளார். அங்கு சிலர் அவரின் தோழியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற பொது அவர்களை ராகுல் தடுத்து தள்ளியிருக்கிறார்.


முக்கிய அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன்!
[Sunday 2020-03-08 08:00]

தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என்று வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை கொடுத்தார். இறுதியாக சூர்யாவை வைத்து என்.ஜி.கே. என்ற படத்தை இயக்கினார். சமீபத்தில் செல்வராகவன் அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டதாகவும், படத்துக்கான கதையை எழுத தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.


ஆர்யாவை கிண்டலடித்த ஜீவா!
[Sunday 2020-03-08 08:00]

ஆர்யா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். இவர் தற்போது அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இதற்காக ஆர்யா குஜராத்தில் உள்ளார், இவர் சமீபத்தில் வெளிவந்த ஜிப்ஸி படத்திற்காக ஜீவாவிற்கு பாராட்டுக்களை சொன்னார்.


அம்மாவின் நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேன் - ஜான்வி!
[Sunday 2020-03-08 08:00]

ஸ்ரீதேவி மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார், அவரது மகளும், நடிகையுமான ஜான்வி கபூர். சமீபத்தில், தன் தாயின் இரண்டாவது நினைவு நாள் அன்று, தன் குழந்தை பருவத்தில் எடுத்த, கறுப்பு - வெள்ளை புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, 'ஒவ்வொரு நாளும் உங்கள் இழப்பை உணர்கிறேன்' என, பதிவிட்டிருந்தார் ஜான்வி.


அஜித் பெயரில் சமூகவலைதளங்களில் வெளியான போலி அறிக்கை!
[Saturday 2020-03-07 17:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். ரசிக மன்றங்களை கலைத்துவிட்ட அஜித் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் ஒதுங்கியே இருக்கிறார். ஆனால், அவருடைய ரசிகர்கள் சமூகவலை தளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார்கள். நேற்று அஜித் பெயரில் ஒரு கடிதம் சமூகவலைதளங்களில் பரவியது. அது அஜித் கையெழுத்துடன் அவரது லெட்டர் பேடில் வெளியானதால் பரபரப்பானது. அந்த அறிக்கையில், “என்னுடைய ரசிகர்களுக்கான ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன்.


ட்விட்டரை கலக்கும் ரஜினி!
[Saturday 2020-03-07 17:00]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் அவர் கட்சி நடத்தவுள்ளதாகவும், ஆனால் வேறொரு நபரை முதல்வராக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. அண்மையில் அவர் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் மேன் வெர்ஸஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.


புதிய சாதனை படைத்த ராஷ்மிகா!
[Saturday 2020-03-07 17:00]

தெலுங்கு படங்களில் நடித்து தற்போது தமிழ், மலையாளம், கன்னடம் என மற்ற மொழி சினிமா ரசிகர்கள் மிகவும் ஈர்த்திருப்பவர் நடிகை ராஷ்மிகா. சலோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலமானார். பின் தொடர்ந்து மகேஷ் பாபுவுடன் சரிலேரு நீக்கெவரு படத்தில் நடித்திருந்தார்.


பல சாதனைகளை படைத்து வரும் "குட்டி ஸ்டோரி" பாடல்!
[Saturday 2020-03-07 08:00]

முதன் முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர். தற்போது இப்படத்தின் டப்பிங்கில் விஜய் இருப்பதாக தெரிவந்துள்ளது. இதன்பின் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் டப்பிங் போஷன் துவங்கும் என்றும் சில தகவல்கள் வெளியானது. பல ஆண்டுகள் கழித்து விஜய்க்கு இப்படத்தில் இசையமைத்துள்ளார், இசையமைப்பாளர் அனிருத். அண்மையில் இப்படத்தில் இருந்து விஜய்யின் சொந்த குரலில் பாடி 'ஒரு குட்டி ஸ்டோரி' எனும் பாடல் வெளிவந்திருந்தது.


நாகரிகம் தெரிந்தவராக இருந்தால் விஷால் வரமாட்டார் - பாரதிராஜா!
[Saturday 2020-03-07 08:00]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் விஷாலின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. சங்கத்துக்கு தேர்தல் நடத்த விருந்த நிலையில், அதில் முறை கேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தனி அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூன் 30ம் தேதிக்குள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


பிக்பாஸ் யாஷிகாவின் வாழ்நாள் ஆசை!
[Saturday 2020-03-07 08:00]

ஜீவா, காஜல் அகர்வால் இணைந்து நடித்து வெளிவந்த கவலை வேண்டாம் படத்தில் அறிமுக நடிகையாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதன்பின் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மிக பெரிய வெற்றியடைந்த படம் துருவங்கள் பதினாறில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை யாஷிகா. இப்படத்திற்கு பிறகு இவருக்கு பேர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படமும் அமையவில்லை என்று தான் கூறவேண்டும். இதனால் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, உலக நாயகன் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டார்.


ரசிகர்களால் மன உளைச்சலுக்கு ஆளான வலிமை படக்குழு!
[Friday 2020-03-06 17:00]

தல அஜித் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டம் கொண்ட நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இப்படங்கள் இரண்டுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது, இதை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் தற்போது வரை சென்னையில் தான் நடந்து வருகின்றது, சமீபத்தில் பிரமாண்ட பைக் சேஸிங் காட்சி ஒன்றை எடுத்து வருகின்றனர்.


பிரபல நடிகரின் படத்திலிருந்து விலகிய சமந்தா! இதுதான் காரணமாம்...
[Friday 2020-03-06 17:00]

சமந்தா தமிழ் சினிமாவிலிருந்து தெலுங்கு தேசம் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர். தமிழில் இவருக்கு கத்தி வரை பெரிய ப்ரேக் ஏதும் கிடைக்கவில்லை. படங்களில் நன்றாக நடித்தாலும், கத்தி தான் சமந்தாவின் பெரிய கமர்ஷியல் ஹிட், அதை தொடர்ந்து தெறி, மெர்சல் என கலக்கினார். இந்நிலையில் சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே. திருமணம் முடிந்தும் இவர் படங்களில் நடித்து தான் வந்தார்.


கொரோனா வைரஸ் தொற்றை கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்ட ஹிப்ஹாப் ஆதி!
[Friday 2020-03-06 17:00]

ஹிப்ஹாப் ஆதி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர். இவர் சினிமாவில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் செம்ம ஹிட் அடித்தது. இதன் மூலம் தொடர்ந்து 3 படங்கள் ஹிட் கொடுத்து ஹிப்ஹாப் ஆதி ஹாட்ரிக் அடித்துள்ளார். அது மட்டுமின்றி இசையமைப்பாளராக பல படங்களில் இவர் பணி புரிந்து வருகின்றார், நடிகர், இசையமைப்பாளர் என வெற்றி நடைப்போட்டு வருகின்றார்.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா