Untitled Document
October 23, 2026 [GMT]
 
மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
[Monday 2020-03-16 08:00]

விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


தர்ஷனின் காதல் முறிவுக்கு நான் காரணமா? - கொந்தளித்த நடிகை!
[Monday 2020-03-16 08:00]

நடிகை ஷெரின் செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது சக போட்டியாளரும் மாடலுமான தர்ஷனை ஒரு தலையாக காதலித்தார். தர்ஷனுக்கு ஏற்கனவே காதலி இருக்கிறார் என்று தெரிந்தும் அவரை ஒரு தலையாக காதலித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தர்ஷன், தனது காதலியான சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்.


கொரோனா பீதி: திருமணத்தை ரத்து செய்த நடிகை!
[Monday 2020-03-16 08:00]

வவ்வால் பசங்க தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் உத்தரா உன்னி. பரத நாட்டிய கலைஞர். மலையாள நடிகை ஊர்மிளா உன்னியின் மகள். பல மலையாள படங்களில் நடித்து உள்ளார். உத்தரா உன்னி, நடிப்பு, நடனத்துடன் கொச்சியில் ஒரு நடனப்பள்ளியையும் நடத்தி வருகிறார். டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். மலையாள நடிகர் பிஜூமேனன், நடிகை சம்யுக்த வர்மா ஆகியோர் இவரது உறவினர்கள். உத்தராவுக்கும் நிதேஷ் நாயர் என்பவருக்கும் சில நாட்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் அடுத்த மாதம் கொச்சியில் நடைபெற இருந்தது.


மேடையில் பெற்றோரை கட்டித்தழுவிய தளபதி விஜய்!
[Sunday 2020-03-15 18:00]

இன்று மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா என்பதனை நாம் அறிவோம். சில நிமிடங்களுக்கு முன்னாள் தான் இந்த விழா மிக சிறப்பான முறையில் துவங்கியது. அதில் தற்போது விஜய்யின் தாய் மற்றும் தந்தை மேடையில் பேசியுள்ளனர்.


ரஷ்ய ஓட்டுனருக்கு கார் பரிசளித்த அனுஷ்கா!
[Sunday 2020-03-15 18:00]

2005ல் தெலுங்கில் பூரி ஜெகநாத் டைரக்சனில் நாகார்ஜுனா ஜோடியாக சூப்பர் என்கிற படத்தில் அறிமுகமான அனுஷ்கா, தற்போது தனது திரையுலக பயணத்தில் வெற்றிகரமாக 15ஆம் வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையடுத்து அனுஷ்காவுக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்தநிலையில் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஷ்யாம் பிரசாத் ரெட்டி என்பவர் அனுஷ்காவின் தாராள மனம், பிறருக்கு உதவி செய்யும் குணம் குறித்து ஆச்சர்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ஜார்ஜியா நாட்டிற்கு ஒருமுறை தயாரிப்பாளர் ஷ்யாம் பிரசாத் சென்றிருந்தபோது, ஷாஷா என்கிற ரஷ்ய டிரைவரை சந்திக்க நேர்ந்துள்ளது.


நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்த விஜய் - யுவன்!
[Sunday 2020-03-15 18:00]

விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், மாஸ்டர் படத்தின் டிராக் லிஸ்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் இடம்பெறும் அந்த கண்ண பாத்தாக்கா எனும் பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.


4 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பிய லட்சுமி மேனன்!
[Sunday 2020-03-15 08:00]

நடிகை லட்சுமி மேனன் கடந்த 2012ல் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் இவர் நடித்த கும்கி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா போன்ற திரைப்படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது. பின்னர் நடிகை லட்சுமி மேனனுக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாத காரணத்தினால் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். மேலும், இவர் கடைசியாக இயக்குனர் ரத்னம் சிவா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக றெக்க திரைப்படத்தில் நடத்திருந்தார்.


ட்விட்டரை கலக்கிய பிக்பாஸ் கவின்!
[Sunday 2020-03-15 08:00]

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவின். இதன்பின் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட, உலக நாயகன் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பு கிடைத்தது.


முன்னணி நடிகரின் படத்தில் இருந்து விலகிய திரிஷா!
[Sunday 2020-03-15 08:00]

தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தை தொடர்ந்து ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் 152-வது படமாகும். இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருவதாக தகவல் வெளியானது. படக்குழுவினர் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது இந்த படத்திலிருந்து விலகி விட்டதாக திரிஷா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


நடிகர் விவேக் குறித்து வெளிவந்த ரகசியம்!
[Saturday 2020-03-14 17:00]

நடிகர் விவேக் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வாரம் தாராள பிரபு படம் திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, இதை தொடர்ந்து படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. இந்நிலையில் நடிகர் விவேக் பழைய படங்கள் பலவற்றிலும் கண்ணாடி அதுவும் கூலிங் க்ளாஸ் அணிந்தே நடித்திருப்பார். அது ஏன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார், விவேக்கிற்கு இரவு நேரங்களில் எப்படியான காட்சியிலும் நடித்துவிடுவாராம்.


ரஜினியின் முடிவுக்கு பிறகு ரசிகர்கள் செய்த அதிர்ச்சி செயல்!
[Saturday 2020-03-14 17:00]

ரஜினிகாந்த் இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு உச்ச நட்சத்திரம். இவர் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்று பல வருடங்களாக பஞ்சாயத்து நடந்துக்கொண்டே தான் வருகின்றது. அந்த வகையில் இந்த முறை கண்டிப்பாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிடுவார் என ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர். அதற்கு ஏற்றார் போல் ரஜினி சமீபத்தில் பத்திரிகையாளரை சந்தித்து கட்சி குறித்து பேசுவார் என்று நினைத்தால், கட்சி ஆரம்பித்தாலும் நான் முதலமைச்சர் போட்டியாளராக இருக்க மாட்டேன் என்றார்.


ஒரு புகைப்படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!
[Saturday 2020-03-14 17:00]

பிரியங்கா சோப்ரா பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான இவர் ஹாலிவுட் சினிமா, டிவி நிகழ்ச்சி என கலக்கி வந்தார். அண்மையில் அவர் அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய காதலரான பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். அண்மையில் இருவரும் முகேஷ் அம்பானியின் அழைப்பால் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டாடினார்கள்.


தல அஜித்திற்கு சவால் விட்ட நடிகர் விவேக்!
[Saturday 2020-03-14 08:00]

தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பில் செம்ம பிஸியாகவுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் நிறைந்த காட்சிகள் உள்ள படமாக தயாராகி கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் அஜித்துடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் நடிகர் விவேக், கடைசியாக விஸ்வாசம் படத்தில் கூட நடித்து அசத்தியிருந்தார்.


கேஜிஎப்-2 படம் குறித்து வெளியான முக்கிய தகவல்!
[Saturday 2020-03-14 08:00]

2018-ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எப். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியானது. ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த இப்படத்தில் யஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். இப்படம் மாபெரும் வெற்றிபெற்றதோடு ஜப்பான், கொரியா முதலிய அயல் நாடுகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.


இயக்குனர் மிஷ்கினின் தாயை பற்றி அவதூறாக பேசிய விஷால்!
[Saturday 2020-03-14 08:00]

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் துப்பறிவாளன். இதன் தொடர்ச்சியாக 'துப்பறிவாளன் 2' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முடிந்தது. அதற்கு பிறகு விஷால் - மிஷ்கின் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், மிஷ்கின் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார். தற்போது இந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பை விஷாலே ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் பூர்ணா நடிப்பில் உருவாகியுள்ள 'கண்ணாமூச்சி' வெப்சீரிஸ் அறிமுக விழாவில் கலந்துக்கொண்ட இயக்குநர் மிஷ்கின் துப்பறிவாளன் 2 சர்ச்சை குறித்து விஷாலை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது: ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் விஷாலை மோசமாக பேசும் போதும், பார்க்கும் போதும் அவரை என் தோளில் போட்டு சகோதரனாக பாவித்தேன். என் நிஜ சகோதரனிடம் கூட அவ்வளவு அன்பு செலுத்தவில்லை. அவருக்காக 2-ம் பாகம் எழுதினேன். அதற்கு முந்தைய 3 படங்கள் விஷாலுக்கு தோல்வி. ’துப்பறிவாளன்’ வெற்றி பெற்றது.


"2021-ல் முதலமைச்சராக திட்டமிட்டுள்ளேன்" - வைகைப்புயல் வடிவேலு!
[Friday 2020-03-13 18:00]

தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத காமெடியனாக உயர்ந்துவிட்டவர் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு. அவரின் அண்மைகாலமாக படங்களில் நடிக்காமல் இருப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் கவலையே. நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் அரசியல் எண்ணம் குறித்து வெளிப்படையாக சென்னையில் செய்தியாளர்களை திரட்டி அறிவித்துவிட்டார்.


ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த அதிரடி முடிவு!
[Friday 2020-03-13 18:00]

தமிழில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த 'நீதானா அவன்' எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதன்பின், பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். ஆனால் காக்க முட்டை என்ற படம் தான் இவரின் திரையுலக பயணத்திற்கு மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நடிக்க துவங்கினார் ஐஸ்வர்யா.


உலகை அதிரவைத்த காஞ்சூரிங் படத்தின் 3-ம் பாகம் குறித்த முக்கிய தகவல்!
[Friday 2020-03-13 18:00]

ஹாலிவுட் சினிமா படங்களுக்கு உலகளவில் பெரும் வரவேற்பு இருக்கும். ஆக்‌ஷன் ஹீரோக்களின் படத்திற்கு இருந்த மோகத்தை தன் பக்கம் திருப்பிய திகில் படமே இந்த காஞ்சூரிங். கடந்த 2013 ல் வந்த இந்த படம் நாற்காலியில் சாய்ந்தாடிக்கொண்டு கோர முகம் கொண்ட பொம்பை ஒன்று தத்ரூபமாக அனைவரையும் மிரட்டியது. அமானுஷ்ய சம்பவம் நடக்கும் வீட்டில் எட் லொரையன் தம்பதி எப்படி பேயை சம்பாளிக்கின்றனர் என்பதே இந்த கதை.


நடிகைகளை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்!
[Friday 2020-03-13 08:00]

பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின் ஸ்டீன் (67) மீது நடிகை ஏஞ்சலினா ஜூலி உள்பட 80க்கும் மேற்பட்ட நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் புகார் கூறினர். இதுபோல் நடிகை ரோஸ் மெக்கோவன், அன்ன பெல்லா உள்ளிட்ட மேலும் பல நடிகைகளும் அவர் மீது செக்ஸ் புகார் கூறினார்கள்.


"கதாநாயகிகளுக்கு என்று பிரத்யேகமாக கதை எழுதும் காலம் வந்து விட்டது" - தீபிகா படுகோனே!
[Friday 2020-03-13 08:00]

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “தற்போது நிறைய பெண்கள் சினிமாவை ஒரு தொழிலாக செய்ய தைரியமாக வருகிறார்கள். முந்தைய காலத்தில் நடிகைகளை மோசமாக பார்த்தனர். இந்த தொழிலுக்கு மரியாதை இல்லாமல் இருந்தது. பெரிய குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு எல்லா தகுதியும் இருந்தாலும் நடிப்பதற்கு பயந்தனர்.


விஜய் சரியாக வரி செலுத்துகிறார்: வருமான வரித்துறையினர் இறுதி அறிக்கை!
[Friday 2020-03-13 08:00]

விஜய் வீட்டிற்கு தளபதி விஜய் இவரை சுற்றி கடந்த சில வருடங்களாக ஏதாவது ஒரு அரசியல் சர்ச்சை இருந்துக்கொண்டே தான் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். அதிலும் படப்பிடிப்பிலிருந்த விஜய்யை அவருடைய காரில் கூட செல்ல அனுமதிக்காமல் கையோடு அழைத்து வந்தனர். அதை தொடர்ந்து விஜய்யிடம் பணமாக எதுவும் இல்லை என்று விளக்கம் கொடுத்தனர்.


கொரோனா பீதியால் கைவிடப்பட்ட கோப்ரா படப்பிடிப்பு!
[Thursday 2020-03-12 17:00]

நாடு முழுவதும் தற்போது மக்களை அவதிப்பட வைத்து கொண்டிருக்கும் விஷயம் என்றால் அது கொரானா வைரஸ் தான். இதனால் வெளிநாடுகளில் பலரும் உயிர் இழந்துள்ளனர். மேலும் பல நாடுகளில் இந்த வைரஸ் பரவி வருகிறது என்று செய்திகளில் கூறி வருகின்றனர். இந்த வைரஸை தடுக்க மக்களிடம் பல விதமான விழிப்புணர்வை கைபேசி மூலமாகவும் சமூக வலைத்தளங்களில் மூலமாகவும் அந்தந்த நாடுகள் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த கொரானா வைரஸால் தற்போது தமிழ் திரையுலகில் சில சம்பவங்கள் நேர்ந்து வருகிறது.


"எனக்கு முதல்வர் பதவி வேண்டாம்" - ரஜினிகாந்த்!
[Thursday 2020-03-12 17:00]

ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். இன்று லீலா பேலஸில் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கினார். என் அரசியல் குறித்து நிலவும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், எனது வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்று விளக்கவுமே இந்த சந்திப்பு என்று அவர் தெரிவித்தார்.


விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை!
[Thursday 2020-03-12 17:00]

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பிகில் பட விவகாரம் தொடர்பாக கடந்த மாதம், நடிகர் விஜய் மற்றும் அன்பு செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில், அன்புசெழியன் வீடு மற்றும் அலுவலகத்திலிருந்து 77கோடி ரூபாய் பணமும், 1.5கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் விஜய் வீட்டில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது.


தடையை மீறி சிம்பு படத்தில் நடிக்கிறாரா வடிவேலு?..
[Thursday 2020-03-12 09:00]

வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சிம்புவை மிஷ்கின் சந்தித்து கதை சொன்னதாகவும், சிம்புவுக்கும் கதை பிடித்துப்போய் நடிக்க சம்மதம் சொல்லி இருப்பதாகவும், மாநாடு படத்தை முடித்துவிட்டு மிஷ்கின் படத்தில் நடிப்பார் என்றும் தகவல் பரவி உள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வடிவேலு படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே தடை விதித்துள்ளது.


"நான் நடிக்க ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் இவர்தான்” - கௌதம் மேனன்!
[Thursday 2020-03-12 08:00]

இயக்குனர் கௌதம் மேனன் தமிழில் மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குனாராக அறிமுகானார். அதன்பின் அவர் இயக்கிய அனைத்து படங்களுமே அவருக்கேன ஒரு தணி ஸ்டைலில் ஒருவாகியிருப்பார். கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இயக்கிய படங்களை ரசித்து வந்த ரசிகர்கள், தற்போது இவர் நடிக்கும் படங்களையும் ரசித்து வருகின்றனர்.


பிரபல ஹாலிவுட் நடிகருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
[Thursday 2020-03-12 08:00]

பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹங்ஸ் தனக்கு கொரோனா இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது மனைவி ரீட்டாவும் நானும் பட தயாரிப்பு பணிகளுக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தோம். அங்கு சென்றதும் எனக்கு லேசான உடல் சோர்வு, சளி தொல்லை இருந்தது. அதேபோல் எனது மனைவிக்கும் காய்ச்சல் ஏற்பட்டது.


திரையுலக ஊழியர்களுக்கு பாதுகாப்பு குழு அமைக்க கமல்ஹாசன் முடிவு!
[Wednesday 2020-03-11 18:00]

‌ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப் பிடிப்பில் கிரேன் விழுந்த விபத்தில் மூன்று பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து சினிமா துறையில் ஊழியர்களுக்கு உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சினிமா ஊழியர்களின் பாதுகாப்புக்கு சம்பந்தப்பட்ட பட நிறுவனங்கள் பொறுப் பேற்க வேண்டும் என கமல்ஹாசன் அறிக்கை விடுத்தார். இதையடுத்து கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் ஊழியர்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


வைத்தியசாலையில் மோசமான நிலையில் இருக்கும் தொகுப்பாளர் - நேரில் சென்று உதவிய விஜய் சேதுபதி! Top News
[Wednesday 2020-03-11 18:00]

பிரபல தனியார் தொலைக்காட்சியான ஆதித்யா டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தவர் லோகேஷ் பாபு. இவருக்கு சமீபத்தில் பக்கவாதம் வந்து மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவருடைய மருத்துவ செலவுக்காக ரூபாய் 7 லட்சம் தேவை என்று இவரது நண்பர் குட்டி கோபி சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார். இதன்பின், ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்தது என்று, குட்டி கோபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் அறிவித்திருந்தார்.


மாஸ்டர் படம் குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்!
[Wednesday 2020-03-11 18:00]

தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் என்ன செய்தாலும் அதை பாலோ செய்ய லட்சக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் விஜய் நடிப்பில் அடுத்த மாதம் மாஸ்டர் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தை பார்க்க பல லட்சம் ரசிகர்கள் வெயிட்டிங். மேலும், பர்ஸ்ட்லுக், செகண்ட் லுக், இரண்டு சிங்கிள் என மாஸ்டர் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றது.

Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா