Untitled Document
October 25, 2026 [GMT]
 
அமெரிக்காவில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த அதிசய குழந்தை!
[Thursday 2021-03-18 08:00]

உலகையே கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், அந்த நோயை எதிர்க்கும் சக்தியுடன் குழந்தை பிறந்துள்ளதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. ஒரு சில நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு இருந்தாலும், அந்நாட்டில் இருக்கும் மக்கள் இதை சாதரணமாகவே நினைத்து கொள்வதால், அந்த நோயின் எதிர்ப்புசக்தி தானாகவே அவர்களில் உடலில் வந்துவிடுகிறது.


கனேடிய தம்பதிக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்!
[Tuesday 2021-03-16 17:00]

கனடாவில் தம்பதிக்கு லொட்டரியில் பெரியளவிலான பரிசு விழுந்துள்ளது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒன்றாறியோவை சேர்ந்த மார்க் - தோரோத்தி அன் தம்பதி தான் இந்த அதிர்ஷ்டசாலி ஆவார்கள். இருவரும் தனித்தனியாக லொட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கொண்டிருந்தனர். இந்த நிலையில் மார்க் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு $70,000,000 என்ற மிகப்பெரிய பிரம்மாண்ட பரிசு விழுந்துள்ளது. தங்களுக்கு இவ்வளவு பெரிய பரிசு விழுந்ததை தம்பதியால் நம்பவே முடியவில்லை.


தினமும் கற்களை மட்டுமே உண்டு வாழ்ந்து வரும் 78 வயது முதியவர்! Top News
[Tuesday 2021-03-09 17:00]

மகாராஷ்டிராவை சேர்ந்த முதியவர் ஒருவர் கற்கள் சாப்பிடுவதை தன் விருப்பமாக கொண்டு தினமும் 250 கிராம் சாப்பிட்டுவரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், சத்ரா மாவட்டம் அடர்கி குர்ட் கிராமத்தில் வசித்து வருகிறார் 78 வயதான ராமதாஸ் போக்கே என்னும் முதியவர்.


தாய்லாந்தில் அக்காவுக்கும் தம்பிக்கும் திருமணம் செய்துவைத்த வினோத பெற்றோர்!
[Saturday 2021-03-06 17:00]

தாய்லாந்தில், இரட்டையர்களான அக்காவுக்கும் தம்பிக்கும் அவர்களது பெற்றோரே திருமணம் செய்துவைத்த வேடிக்கை சம்பவம் ஒன்று நடைபெற்றது. தாய்லாந்தில் வாழும் Weerasak (31) மற்றும் அவரது மனைவியான Rewadee (30)க்கு இரட்டைக் குழந்தைகள் இருக்கிறார்கள். ஐந்து வயதாகும் இரட்டையர்களான Washirawit Bee Moosika மற்றும் அவனது அக்காவான Rinrada Breem ஆகிய இருவருக்கும் நேற்று முன்தினம் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.


உலக சாதனை படைத்த தமிழ் சிறுமி!
[Saturday 2021-03-06 16:00]

அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 4-ஆம் வகுப்பு மாணவி வர்ஷிஹா(9) 2 மணி நேரத்தில் 23 கி.மீ. தொடர் ஓட்டம் ஓடி நோபல் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.


கனேடிய தாய் மற்றும் மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Thursday 2021-03-04 17:00]

கனடாவில் தாய் மற்றும் மகளுக்கு லொட்டரியில் $500,000 பரிசு விழுந்துள்ளது. பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்த தெரசா வொர்திங்டன் மற்றும் அவர் மகள் அலெக்சா ஆகிய இருவரும் மருத்துவமனை ஊழியர்கள் ஆவார்கள். இருவரும் சேர்ந்து லொட்டரி விளையாட்டில் ஈடுபடுவதை பழக்கமாக கொண்டிருந்தனர்.


உலகிலேயே மிகப்பழமையான 'நிஞ்ஜாட்டியன் சபாடாய்' டைனோசரின் தொல்பொருள் புதைப்படிவம் கண்டுபிடிப்பு!
[Thursday 2021-03-04 16:00]

உலகிலேயே மிகப்பழமையான டைனோசர் வகைகளில் ஒன்றான நிஞ்ஜாட்டியன் சபாடாய் என்ற வகையை சேர்ந்த டைட்டனோசரின் தொல்பொருள் புதைப்படிவத்தை அர்ஜெண்டினாவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நீண்ட கால்கள் மற்றும் நீண்ட கழுத்தைக்கொண்ட இந்த டைனோசர்கள் 140 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.


அழிந்துவிட்டதாக அறியப்பட்ட பறவை திடீரென தோன்றிய ஆச்சரியம்!
[Wednesday 2021-03-03 16:00]

170 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்படாத அழிந்துவிட்டதாக அறியப்பட்ட பறவை ஒன்று திடீரென தோன்றியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு பறவைகள், விலங்குகள் வாழ்ந்து வரும் நிலையில் காலப்போக்கில் இயற்கை, தட்பவெட்ப சூழல் மாற்றங்கள், வேட்டை ஆகியவற்றால் பல உயிரினங்கள் அழிந்துள்ளன.


கனேடிய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Tuesday 2021-03-02 17:00]

கனடாவில் பெண் ஒருவருக்கு லொட்டரியில் பெரியளவிலான பரிசு விழுந்ததில் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளார். மாப்ளி ரிட்ஜ் நகரை சேர்ந்தவர் சமந்தா லோவ். இவருக்கு தான் லொட்டோ மேக்ஸ் குலுக்கலில் $637,000 பரிசு விழுந்துள்ளது. இது குறித்து சமந்தா கூறுகையில், நான் எப்போதும் போல தூங்கி எழுந்ததும் எனது இ-மெயிலை திறந்து பார்த்தேன்.


தூங்கினால் ரூ. 1 லட்சம் சம்பளம்: நூதன போட்டியை அறிவித்த இந்திய நிறுவனம்!
[Tuesday 2021-03-02 17:00]

இந்தியாவில் WakeFit நிறுவனம் தினமும் தூங்குவதற்காக ரூ. 1 லட்சம் சம்பளம் அறிவித்துள்ளது. நூறு நாட்களுக்கு தினமும் இரவில் குறைந்தது 9 மணி நேரங்கள் தூங்கினால் ரூ. 1 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது. பெங்களூருவைச் சேர்ந்த WakeFit நிறுவனம் மக்களின் தூக்க முறைகளை ஆய்வு செய்வதற்காக இந்த Sleep Internship-ஐ அறிவித்துள்ளது.


தாய்லாந்தில் பெண்ணுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்!
[Tuesday 2021-03-02 07:00]

தாய்லாந்தில் கடற்கரையில் நடந்து சென்ற பெண்ணுக்கு நினைத்து பார்க்க முடியாத வகையில் அதிர்ஷ்டம் அடித்துள்ளதால், அவர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். தாய்லாந்தின் Nakhon Si Thammarat மகாணத்தில் இருக்கும் கடற்கரைக்கு, கடந்த 23-ஆம் திகதி ஒரு கடுமையான மழைக்கு பிறகு Siriporn Niamrin(49) என்ற பெண் நடந்து சென்றுள்ளார்.


தங்களது சொத்தை விற்று இரட்டையர்கள் செய்த செயல்!
[Saturday 2021-02-27 09:00]

உலகிலேயே முதன் முறையாக, ஒரே நேரத்தில் பெண்களாக மாறிய இரட்டையர்கள் என்ற பெருமையை பிரேஸில் நாட்டைச் சேர்ந்த இருவர் தனதாக்கிக் கொண்டுள்ளனர். பிரேஸில் நாட்டில் உள்ள, டபிரா என்ற கிராமத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு பிறந்த சோபியா அல்புக், மைலா போபே டி ரெசென்டே என்ற இந்த இரட்டையர்களே அறுவை சிகிச்சை மூலம் பெண்களாக மாறியுள்ளனர்.


மனித முகத்துடன் பிறந்த அதிசய சுறா! Top News
[Wednesday 2021-02-24 17:00]

மனித முகத்துடன் கடலில் பிடிப்பட்ட சுறாவை கண்டு மீனவர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். இந்தோனேஷியாவில், கிழக்கு நியூஷா டென்காரா கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்த போது அவர்களின் வலையில் மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட சுறா ஒன்று சிக்கியது.


காதலருக்கு ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தை பரிசாக அளித்த காதலி! Top News
[Wednesday 2021-02-24 16:00]

பெண் ஒருவர் தனது காதலருக்கு காதலர் தினத்திற்கு ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடி அதன் இதயத்தை பரிசாக அளித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மெரலைஸ் வான் டெர் மெர்வே என்ற பெண் சிறு வயது முதலே வேட்டையாடுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருந்துள்ளார்.


ரஷ்யாவில் பாடுவது போன்று குரல் எழுப்பி வரும் அதிசய புலி! Top News
[Monday 2021-02-22 17:00]

ரஷ்யாவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் 8 மாத புலி ஒன்று பாடுவது போன்று குரல் எழுப்புவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்னால் என்ற ஊரில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஷெர்ஹான் என்ற 8 மாத புலி உள்ளது.


தனது திறைமையால் மக்களை கவர்ந்த 3 வயது தமிழ் சிறுமி!
[Friday 2021-02-19 17:00]

சார்ஜாவில் வசித்து வரும் 3 வயது தமிழ் சிறுமி 196 நாடுகளின் தலைநகரங்களை மனப்பாடமாக சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சார்ஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில், கே.பி.என். மகேஷ் கிருஷ்ணன் என்பவர் மனைவி திவ்யா சொர்ணம் மற்றும் மகள் காதம்பரியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதியினர் சென்னையை சேர்ந்தவர்கள்.


சமையலில் மாபெரும் சாதனை படைத்த 9 வயது சிறுவன்!
[Friday 2021-02-19 16:00]

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஹஷ்னாஸ் அப்துல்லா-ரஷா அப்துல்லா தம்பதியரின் மகன் ஹயன் அப்துல்லா (வயது 9). நான்கு வயதில் இருந்தே சமையல் மீது அதீத ஆர்வம் இருந்துள்ளது. சமீபத்தில் ஹயன் அப்துல்லா வேகமாக சமையல் செய்வதைப் பார்த்து அவரது பெற்றோர் அவனுக்கு ஊக்கம் கொடுத்துள்ளனர். அத்துடன் வித்தியாசமாக எதாவது செய்ய வேண்டும் என்று ஹயனும் நினைத்துள்ளார்.


118 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட அரிய வகை வாத்து! Top News
[Friday 2021-02-19 16:00]

அசாமி அழிந்துவிட்டதாக கருதப்பட்ட பல வண்ணங்கள் கொண்ட அரிய வாத்து வகை தென்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் சீதோஷ்ண நிலை மாற்றம், நகரமயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால் வரலாற்றில் பல பறவையினங்கள், விலங்கினங்கள் அழிந்துள்ளன.


பரம்பரை சொத்தான அரண்மனையை ஒரு யூரோக்கு அரசாங்கத்திற்கு விற்ற இளவரசர்!
[Friday 2021-02-19 08:00]

ஜேர்மனியில் பரம்பரை சொத்தான அரண்மனையை ஒரு யூரோ தொகைக்கு அரசாங்கத்திற்கு விற்பனை செய்த மகனுக்கு எதிராக ஹனோவர் இளவரசர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

பிரித்தானிய ராணியாரின் தூரத்து சொந்தமான 66 வயது ஹனோவர் இளவரசர், கடந்த 2000 ஆண்டில் மரியன்பர்க் அரண்மனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காலன்பர்க் எஸ்டேட் ஆகியவற்றை தமது 37 வயது மகனான ஏர்ன்ஸ்ட் ஆகஸ்ட் என்பவர் பெயரில் எழுதி வைத்துள்ளார்.


தாலி காட்டும் நேரத்தில் மாயமான மணப்பெண்: பின்னர் நடந்த ருசிகர சம்பவம்!
[Thursday 2021-02-18 16:00]

இந்தியாவில் திருமண நேரத்தில் மணப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்ததால் அவரின் 15 வயது தங்கையை மணமகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒடிசா மாநிலத்தின் கலாஹாண்டி மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.


'நான் கர்ப்பம் ஆனதற்கு காற்று தான் காரணம்' - அதிர வைத்த இளம்பெண்!
[Thursday 2021-02-18 08:00]

இந்தோனேஷியாவில் இளம் பெண் ஒருவர் கருவுற்ற இரண்டு நாட்களில் குழந்தை பெற்ற நிலையில், நான் கர்ப்பம் ஆனதற்கு காற்று தான் காரணம் என்ற விசித்திர காரணத்தை கூறியுள்ளார். இந்தோனேஷியாவின் சியாஜூர் என்னும் நகரில் கடந்த வாரம் சிட்டி ஜைனா என்ற 25 வயது மதிக்கத்தக்க பெண், தான் கர்ப்பமானதை உணர்ந்த சில மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ளார்.


முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்!
[Tuesday 2021-02-16 16:00]

காதலர் தினத்தன்று, கேரளாவில் உள்ள காப்பகம் ஒன்றில், முதியோர் இருவர் திருமணம் செய்துள்ளனர். கேரளாவில் உள்ள முதியோர் காப்பகத்தில் காதலர் தினத்தன்று, அரங்கேறி உள்ள ருசிகர சம்பவம், காதலுக்கு மொழி, இனம், வயது என எதுவும் தடையாகிவிடாது என்பதை எடுத்துக்காட்டி உள்ளது. திருச்சியை சேர்ந்த ராஜன்(58) என்பவர், சபரிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில், சமையல் வேலை செய்து வந்துள்ளார்.


5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மது ஆலை எகிப்தில் கண்டுபிடிப்பு!
[Tuesday 2021-02-16 08:00]

எகிப்து நாட்டின் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்று அபிடோஸ். இங்கு மிகப் பெரிய கல்லறைகள் மற்றும் கோவில்கள் உள்ளன. இந்த நகரில் எகிப்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.


'மன்னித்துவிடுங்கள், நான் உணவை சாப்பிட்டுவிட்டேன்': திடீரென வந்த குறுஞ்செய்தியால் ஆடிப்போன இளம்பெண்!
[Saturday 2021-02-13 16:00]

ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம்.


ரஷ்யாவில் சுற்றி திரியும் நீல நிற நாய்கள்!
[Friday 2021-02-12 17:00]

ரஷ்யாவில் நாய்கள் சில நீல நிறத்தில் சுற்றி திரிவது போன்ற புகைப்படங்கள் வைரலாகியதை அடுத்து, தொழிலர்ச்சாலைகளில் இருந்து வெளியாகியுள்ள இரசாயனங்கள் தான் இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.


29 வயது பெண்ணை காதலித்து கரம்பிடித்த 80 வயது முதியவர்!
[Friday 2021-02-12 08:00]

80 வயது முதியவர் ஒருவர் 29 வயது பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தென்னாப்பிரிக்க நாட்டின் கேப்டவுன் நகரத்தில் வசிக்கும், டெர்சல் ராஸ்மஸ் (29) சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டே உள்ளூர் பத்திரிக்கையொன்றில் வேலை செய்துவருகிறார். அவர் கடந்த 2016ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் வில்சன் ராஸ்மஸ் (80) எனும் முதியவரை சந்தித்துள்ளார்.


வானில் தோன்றிய இரட்டை நிலவு: வெளியான அதிர்ச்சி பின்னணி! Top News
[Thursday 2021-02-11 17:00]

விண்ணில் இரண்டு நிலவுகள் தெரிவதுபோல் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஐக்கிய அரபு அமீரக அரசு செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. இதற்காக, செவ்வாய் கிரகத்தின் புவி வட்ட பாதையில் ஐக்கிய அரபு அமீரக அரசு அனுப்பியுள்ள விண்கலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.


கொரோனாவை வென்ற 117 வயது மூதாட்டி!
[Wednesday 2021-02-10 17:00]

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவோரு, அதிகம் உயிரிழப்போரும் முதியோர்தான். எனவே, கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும், தடுப்பூசி போடுவதிலும் முதியோருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.


புதுவையில் காதலர்களுக்காக உருவாகியிருக்கும் 'காதல் பூட்டு மரம்'!
[Wednesday 2021-02-10 07:00]

காதல் இல்லை என்றால் உலகம் இல்லை. ஒருவருக்கு ஒருவர் காதலை புரிந்து கொண்டு அதனை வெளிப்படுத்திய பின்பு உடை, பரிசு பொருட்களை வாரி வழங்கி மகிழ்வது வழக்கம். தமிழர்களின் காதல் என்பது முதலில் வீரத்தில் பேசப்பட்டது. அதன்பின்னர் கிராம பகுதிகளில் கள்ளிச்செடி, பொது இடங்களில் உள்ள சுவர்களில் பெயர் எழுதி காதலை வெளிப்படுத்திய காலம் உண்டு.


திடீரென ஆவிகளுடன் பேசுவோரை நாடும் பிரித்தானியர்கள்!
[Monday 2021-02-08 18:00]

கொரோனாவால் திடீரென அன்பிற்குரியவர்களை இழக்கும் பிரித்தானியர்கள், இழப்பை தாங்க இயலாமல் ஆவிகளுடன் பேசுவோர் மூலம் மீண்டும் அவர்களை தொடர்பு கொள்ள முயன்று வருகிறார்களாம். ஒரு நாள் வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய லண்டனில் வாழும் ஜிம் (60) என்பவர், தன் மனைவியிடம் தனக்கு உடல் வலிப்பதாகவும், தலைக்குள் ஏதோ இடிப்பது போல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா