Untitled Document
October 25, 2026 [GMT]
 
மனைவிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்த கனேடிய பிரதமர்: ஏன் தெரியுமா? Top News
[Saturday 2021-05-29 17:00]

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தன்னுடைய காதல் மனைவியான ஷோபிக்கு திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. தற்போதைய சூழலில் கனடா என்றதுமே சட்டென நினைவுக்கு வருபவர் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தான். இதற்கு முன்னர் எந்த கனடா பிரதமரும் இந்தளவுக்கு பாப்புலர் ஆகவில்லை என்றே கூறலாம், இவரது காதல் மனைவி ஷோஃபி.


கனடாவில் கண்ணிமைக்கும் நேரத்தில் தோன்றி மறைந்த பிரம்மாண்ட நிலவு!
[Thursday 2021-05-27 17:00]

நேற்று சூப்பர் நிலவு, இரத்த நிலவு என உலகமே பரபரப்பாக நிலவைப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், இணையத்தில் ஒரு செய்தி பரபரப்பாக பரவியது. கனடாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 30 விநாடிகளில் நிலவு தோன்றி மறையும் ஒரு காட்சியைக் காட்டும் வீடியோ வைரலானது.


ஒருவருக்காக இயக்கப்பட்ட பிரம்மாண்ட விமானம்: சுவாரஸ்ய சம்பவம்!
[Wednesday 2021-05-26 16:00]

ஆச்சரியம்தான். கொரோனா காலகட்டத்தில் எதுவும் நடக்கும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்! ஒரே ஒரு பயணிக்காக, ஒரு மெகா விமானத்தை, எமிரேட்ஸ் நிறுவனம் அன்போடு இயக்கி இருக்கிறது என்றால் அது ஆச்சரியம்தானே!


காதலிக்கும், கள்ள காதலிக்கும் ஒரே நேரத்தில் நிச்சயதார்த்த மோதிரம் வாங்கிய கனேடிய நபர்: சிக்கியது எப்படி?
[Tuesday 2021-05-25 17:00]

மொன்றியலில், ஒரே நேரத்தில் தனது காதலிக்கும், தான் தவறான உறவு வைத்திருக்கும் பெண்ணுக்கும் நிச்சயதார்த்த மோதிரம் வாங்கியிருக்கிறார் ஒருவர். jake என்ற அந்த நபர், ஒரு 45 டொலர் மதிப்புள்ள மோதிரத்தையும், ஒரு 50 டொலர் மதிப்புள்ள மோதிரத்தையும் வாங்கியதோடு, அதைக் குறித்து பெருமையாக கடை ஊழியரான Eli என்ற இளம்பெண்ணிடம் பெருமை வேறு அடித்துக்கொண்டிருக்கிறார்.


கொரோனா தொல்லையால் நடுவானில் நடந்த திருமணம்: அசத்திய தமிழ் ஜோடி!
[Monday 2021-05-24 16:00]

தமிழகத்தில் இன்று முதல் தளர்வில்லா ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ள நிலையில் தமிழ் ஜோடி ஒன்று அந்தரத்தில் உறவினர்களுடன் திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மே 31ம் திகதி வரை தளர்வில்லா ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது. இதனால், திருமணங்கள் உட்பட சுப நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன.


இந்த ஆண்டு வானில் தோன்றவிருக்கும் முதல் சிவப்பு நிலவு!
[Sunday 2021-05-23 09:00]

சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம். இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் 26ம் தேதி பவுர்ணமி நாளில் நிகழவுள்ளது.கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியதாவது: ஒவ்வொரு மாதமும் சந்திரன் ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வருகிறது. அதுவே பூமிக்கு மிக அருகில் வரும்போது, முழு நிலவாக (பவுர்ணமி) இருப்பின், 'சூப்பர்மூன்' என்று அழைக்கப்படுகிறது.


இளைஞர்களுக்கு சினிமா பார்க்க, வீடியோ கேம் வாங்க பணம் கொடுக்கும் பிரபல நாடு!
[Saturday 2021-05-22 16:00]

பிரான்ஸ் அரசு தனது நாட்டிலுள்ள 18 வயது இளைஞர்களுக்கு 300 யூரோக்கள் மதிப்புடைய கலாச்சார பாஸ் ஒன்றை வழங்குகிறது. அதன்படி, ஆண்டொன்றிற்கு சுமார் 800,000 இளைஞர்கள் ஆப் ஒன்றை டவுன்லோட் செய்து அந்த 300 யூரோக்கள் மதிப்புடைய கலாச்சார பாஸை பெற்றுக்கொள்ள இருக்கிறார்கள்.


பிரபல நாட்டில் பெண் கிடைக்காமல் அவதிப்படும் ஆண்கள்!
[Saturday 2021-05-22 08:00]

சீனாவில் திருமணத்திற்கான பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், திருமணம் ஆகாத ஆண்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது. உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது சீனா தான், ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா இந்த முதல் இடத்தை பிடித்துவிடும் என்று கூறப்படுகிறது.


கொரோனாவால் கோடீஸ்வரரான நபர்!
[Friday 2021-05-21 08:00]

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியால், குறைந்தது 9 நபர் ஆவது பில்லியனராக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸால், ஐரோப்பிய நாடுகள் கடந்த ஆண்டு திணறி வந்தன. அதன் பின் தடுப்பூசி கண்டுபிடிப்புகளால், தற்போது ஐரோப்பிய நாடுகளில் கொரோனா நோயின் தாக்கம் குறைந்துள்ளது.


70 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த கிராமம்: கண்டுபிடித்த ஊர் மக்கள்!
[Thursday 2021-05-20 19:00]

ஏறத்தாழ இந்த கிராமம் 1950களில் ஒரு வெள்ளத்தில் காணாமல் போயிருக்கிறது. 70 ஆண்டுகள் கழித்து, ஏரியின் நீர்மட்டம் குறைந்த பிறகு, மீண்டும் மக்கள் கண்களில் தென்பட்டுள்ளது இந்த கிராமம். 1950-ம் ஆண்டு ஒரு நீர்மின் நிலையத்தை உருவாக்கம்போது ஏற்பட்ட வெள்ளத்திற்கு முன்பு குரோன் பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்துள்ளன.


அமெரிக்க ஆற்றில் பிடிபட்ட 100 வயதை கடந்த மீன்!
[Sunday 2021-05-09 17:00]

அமெரிக்காவில் உள்ள நதி ஒன்றில் 100 வயதைக் கடந்து வாழ்ந்து வரும் ஒரு ராட்சத மீனை ஒருவர் பிடித்துள்ளது விஞ்ஞானிகளை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் ஆற்றில் அல்பேனா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு ஊழியர், கடந்த ஏப்ரல் மாதம் 6 அடி 10 அங்குலம் நீளமும், 240 பவுண்டுகள் (கிட்டத்தட்ட 109 கிலோ) எடையுள்ள ஒரு பெண் மீனை பிடித்துள்ளார்.


ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை ஈன்றெடுத்த அதிசய தாய்!
[Thursday 2021-05-06 08:00]

மேற்கு ஆப்பிரிக்கா நாடானா மாலியைச் சேர்ந்தவர் ஹலிமா சிஸ்ஸின். 25 வயதான இவர் கர்ப்பம் தரித்தார். மருத்துவமனையில் முதலில் இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இவரது கர்ப்பப் பையில் ஏழு குழந்தைகள் இருப்பதாகக் கணித்தனர். மேலும், சிஸ்ஸுக்கு சிறப்பு கவனிப்பு தேவை எனக் கூறினர்.


கொரோனாவுக்கு மத்தியில் நடைபெற்ற வினோத திருமணம்!
[Tuesday 2021-04-27 16:00]

மத்திய பிரதேசத்தில் மணமகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், மணமக்களின் திருமணம் வித்தியாசமாக நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் உள்ள ரட்லம் நகரத்தில் நேற்று ஒரு ஜோடி PPE Kit எனும் மருத்துவ பாதுகாப்பு உடையணிந்து வித்தியாசமாக திருமணம் செய்துகொண்டனர்.


நான்கு ஆண்டுகளாக முகத்தைப் பார்க்காமலே மலர்ந்த காதல்: கனேடிய இளைஞரின் சுவாரஸ்ய கதை!
[Saturday 2021-04-24 16:00]

திரைப்படத்தில் வருவதுபோல, நான்கு ஆண்டுகளாக தன் காதலியின் முகத்தைப் பார்க்காமலே காதலித்துள்ளார் ஒரு இளைஞர். கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்த முபினா முஸ்தபாவும் Mubina Mustafa, 28), மேதி ஈசா ஆராதூனும் (Mehdi Isa Arathoon, 27) ஒரே கல்லூரியில் படித்திருக்கிறார்கள்.


லொட்டரி மூலம் கனேடிய பெண்மணிக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Friday 2021-04-23 16:00]

கனடாவில் லொட்டரியில் பெண்ணுக்கு பெரிய பரிசு விழுந்தது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒன்றாறொயோவின் கோலிங்வுட்டை சேர்ந்தவர் ஷரன் ஜன்கைண்ட் (64). இவருக்கு தான் லொட்டோ மேக்ஸில் $65,676.40 பரிசு விழுந்துள்ளது.


உலகின் மூத்த பெண்மணி உடல்நலக்குறைவால் திடீர் மரணம்!
[Tuesday 2021-04-20 16:00]

பஞ்சாப்பை சேர்ந்த 119 வயதுடைய உலகின் மூத்த பெண்மணி ஆகிய பச்சன் கவுர் அவர்கள் இன்று உயிரிழந்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் எல்லாம் 80 வயதை தாண்டி வாழ்ந்தாலே ஆச்சரியமாக பார்க்கக்கடிய அளவிற்கு மனிதர்களின் வாழ்நாள் காலம் மிக குறைந்து விட்டது. இந்த நேரத்தில் 100 வயதிற்கு மேல் தாண்டி வாழ்பவர்கள் மிக ஆச்சரியத்துடன் பார்த்து கூடியவர்களாக தான் இருக்கின்றனர்.


தமிழகத்தில் தென்பட்ட அரியவகை வெள்ளை காக்கை!
[Tuesday 2021-04-20 08:00]

ஆம்பூர் அருகே குடியிருப்புப் பகுதிகளில் வட்டமடிக்கும் அபூர்வ வகையான வெள்ளை நிற காக்கையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக வெள்ளை நிறம் கொண்ட காக்கை ஒன்று இரை தேடி அங்கும், இங்கும் பறந்து வட்டமடித்துக்கொண்டிருக்கிறது.


கனடா செல்லும் தெரு நாய்: சுவாரஸ்ய சம்பவம்!
[Sunday 2021-04-18 19:00]

இந்தியாவில் விபத்துக்குள்ளான தெரு நாய்க்கு கனடாவுக்கு செல்லும் மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கர்நாடகாவின் பல்லாரி நகரின், ரேடியோ பார்க் அருகில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 2 மாத நாயக்குட்டி, காரில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதையறிந்த ஹியூமன் வேர்ல்டு பார் அனிமல்ஸ் என்ற அமைப்பு, அந்த நாயை மீட்டு பெங்களூரு, சென்னையில் சிகிச்சையளித்தனர்.


கனேடிய பெண்ணுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்!
[Thursday 2021-04-15 16:00]

கனடாவில் உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் போது தான் கோடீஸ்வரர் ஆனதை உணர்ந்த பெண் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றுள்ளார். பிரிட்டீஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்போர்டை சேர்ந்தவர் யிங் சுன் சின். இவர் சமீபத்தில் தனது கணவர், மகன் மற்றும் மருமகளுடன் வீட்டில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார்.


மனித முகத்தோடு பிறந்த வினோத ஆட்டுக்குட்டி! Top News
[Wednesday 2021-04-14 07:00]

குஜராத்தில் மனித முகத்தோடு பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் பூஜை செய்து வணங்கி வரும் புகைப்படங்களும்,வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. குஜராத்தின் சோங்கத் தாலுகாவில் ஆற்றின் கரையில் உள்ள செல்டிபாடா கிராமத்தில் ஆடு ஒன்று குட்டி போட்டுள்ளது. பிறந்தவுடன் குட்டி ஆட்டை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


பிரித்தானிய சாரதிக்கு அடித்த பேரதிர்ஷ்டம்!
[Monday 2021-04-05 08:00]

பிரித்தானியாவில் டெலிவரி டிரைவர் ஒருவர் புகைப்பிடிப்பதை தவிர்த்து, லொட்டரி ஸ்கிராட்ச் கார்டு வாங்கிய நிலையில், அவர் தற்போது 1 மில்லியன் வென்று இன்ப அதிர்ச்சியில் மூழ்கி போயுள்ளார். பிரித்தானியாவின் Southampton-ஐ சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க John McFadden என்பவர், கடந்த மாதம் அங்கிருக்கும் கடை ஒன்றில் புகைப்பிடிப்பதற்காக vape வாங்க சென்றுள்ளார்.


1 ரூபாய்க்கு இட்லி விற்ற பாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Sunday 2021-04-04 16:00]

கேந்திரா குழுமத்தின் தலைவரும் இந்தியாவில் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவர் ஆனந்த் மகிந்திரா. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். இளைஞர்கள், சிறுவர்கள், முதியோர் என யாராக இருந்தாலும் அவர்களின் திறமைகள் குறித்த புகைப்படம்,வீடியோ இருந்தால் அதைப் பகிர்ந்து, தானும் கமெண்ட் கொடுப்பார்.


லொட்டரியின் மூலம் கனேடிய பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
[Tuesday 2021-03-30 17:00]

கனடாவில் குழுவாக லொட்டரி டிக்கெட் வாங்கியவர்களுக்கு $32,000 பரிசு விழுந்துள்ளது. பிரிட்டீஷ் கொலம்பியாவின் சரேவை சேர்ந்தவர் ஜெரிகா தாமஸ். இவர் தன்னுடன் பணிபுரியும் 10 நண்பர்களுடன் சேர்ந்து லொட்டரி டிக்கெட் வாங்கினார்.


73 வயதில் மணமகனை தேடும் வினோத மூதாட்டி!
[Monday 2021-03-29 08:00]

கணவன், மனைவி, பிள்ளைகள், உற்றார்-உறவினர்கள் போன்ற சொந்தங்கள் மனித வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள் என்று கூறலாம். இதில் ஒருவர் இறந்தாலும், மீதமுள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக்கொள்வது வழக்கம். ஆனால், வயதான பின் தாய், தந்தை ஆகியோரை இழந்து வேறு சொந்தம் இல்லாமல், தவிக்கும் சிலர் எப்படி பரிதவிக்கிறார்கள் என்பதற்கு மைசூருவில், நடந்த ஒரு சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது.


தாய்லாந்தில் ஏழைப்பெண்ணை கோடீஸ்வரராக்கிய கடல் நத்தை!
[Saturday 2021-03-27 18:00]

தாய்லாந்தில் ஏழை பெண் ஒருவருக்கு கடல் உணவில் இருந்து கோடிகள் மதிப்பு கொண்ட அரியவகை முத்து கிடைத்துள்ளதை அடுத்து அவர் ஒரே நாளில் கோடிபதியாகியுள்ளார். தாய்லாந்தின் சாதுன் மாகாணத்தை சேர்ந்தவர் Kodchakorn Tantiwiwatkul. ஏழையான இவர் ஜனவரி 30 அன்று இரவு உணவுக்காக சுமார் 160 ரூபாய் மதிப்பிலான கடல் நத்தைகளை வாங்கியுள்ளார்.


இங்கிலாந்தில் தோட்டத்தில் இருந்து சிறுவனுக்கு கிடைத்த அபூர்வ பொருள்!
[Saturday 2021-03-27 18:00]

இங்கிலாந்தில் வாழும் ஒரு சிறுவனுக்கு டைனோசர்கள் என்றால் அப்படி ஒரு பைத்தியம்... எப்போதும் கற்கால பொருட்களை தேடிக்கொண்டிருக்கும் Siddak Singh Jhamat (6)க்கு, அவனது பாட்டி அதற்கு உதவும் வகையில் கிட் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அதை வைத்து எப்போதும் தன் தோட்டத்தில் எதையாவது தோண்டி தேடிக்கொண்டிருப்பான் Jhamat.


வினோத நோயால் அவதிப்படும் அழகிய பெண்!
[Wednesday 2021-03-24 16:00]

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கிறிஸ்டி பிரவுன். 32 வயதான இவருக்கு இருக்கும் பிரச்சனை என்பது சற்று வித்தியாசமானது. அவர் ஒரு வகையான அபூர்வ மூளை கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்படி எந்த உணர்ச்சியானாலும், அது கோபமோ, சிரிப்போ, பயமோ அல்லது கவர்ச்சியாக இருந்தால் கூட உடனே மயங்கி விழுந்து விடுவார்.


3,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் தங்க முகக்கவசத்தை பயன்படுத்திய சீனர்கள்!
[Wednesday 2021-03-24 08:00]

சீனாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கத்தால் ஆன முகக் கவசம் அந்நாட்டு சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது. சடங்குகளின்போது பயன்படுத்தப்படும் இந்த தங்க முகக் கவசம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாகாணத்தில் உள்ள சான்ஷிங்துய் தொல்லியல் தலத்தில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 500 வெண்கலக் கால தொல் பொருட்களில் இந்தத் தங்க முகக் கவசமும் ஒன்று. சான்ஷிங்துய் தொல்லியல் தலம் சீனாவின் முக்கிய தொல்லியல் தலங்களில் ஒன்று.


ரூ. 6 கோடியை உதறித்தள்ளிய இளம்பெண்ணின் நேர்மை!
[Tuesday 2021-03-23 17:00]

கடனுக்கு வாங்கிய லொட்டரியில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்த நிலையில் அதை அதிர்ஷ்டசாலியிடம் நேர்மையாக கொடுத்த ஏழை பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது. கேரளாவில் ஸ்மிஜா மோகன் என்பவர் லொட்டரி சீட்டு விற்று வருகிறார். இவரின் மூத்த மகனுக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறான். இரண்டு வயது இளையமகனுக்கு புற்றுநோய் பாதித்துள்ளது. இதற்கான , சிகிச்சைக்கு பல லட்ச ரூபாய் ஸ்மிதாவுக்கு தேவைப்படுகிறது.


அரச குடும்பங்களின் வருமானம் குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்!
[Monday 2021-03-22 08:00]

உலகின் பல்வேறு நாடுகளில் இன்றளவும் கூட, அரச குடும்பங்களுக்கு என்று தனி மரியாதை உள்ளது. அவர்களுக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது. அவர்கள் எந்த ஒரு சின்ன விஷயம் செய்தால் கூட, அது அந்த நாட்டு ஊடகத்தின் தலைப்பு செய்தியாக மாறிவிடும். அவர்களுக்கு என்று ஒரு அந்தஸ்து, பட்டங்கள், பதவிகள் என்று இருந்தாலும், அவர்களுக்கு எப்படி வருமான கிடைக்கிறது என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா