Untitled Document
October 26, 2026 [GMT]
 
முகநூல் நண்பரை சந்திக்க சென்றவருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Monday 2021-02-08 17:00]

கேரள மாநிலம் புத்தலத்தானி பரவன்னூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். லாட்டரி ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது ஏஜென்சியில் பிரபாகரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். பிரபாகரனுக்கும், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த சோகன் ஹல்ராம் என்பவருக்கும் ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. அந்த நட்பு காரணமாக தனது ஊருக்கு வருமாறு சோகனை பிரபாகரன் அழைத்துள்ளார்.


திடீரென பற்றி எரிந்த கிணற்று நீர்!
[Thursday 2021-01-28 17:00]

தமிழக- கேரள எல்லையில் அமைந்திருக்கும் பனச்சமோடு கிராமத்தை சேர்ந்த கோபி என்பவரது கிணற்று நீர் பற்றி எரியும் காட்சிகள் வெளியாகி அதிர வைத்துள்ளது. கோபியின் குடும்பத்தினர் வழக்கம்போல் கிணற்று நீரை பயன்படுத்தி வந்துள்ளனர், ஆனால் கடந்த சில நாட்களாக தண்ணீரில் திடீரென பெட்ரோல் வாசம் வீசியதால் சந்தேகம் அடைந்த கோபி, கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீரை எடுத்து தீ பற்ற வைத்து சோதித்தார்.


ஊரடங்கு காலத்தில் அனைவரையும் நெகிழ வைத்த பிரித்தானிய தம்பதி!
[Wednesday 2021-01-27 08:00]

லொட்டரியில் பெருந்தொகை பரிசாக கிடைத்த நிலையில், பிரித்தானிய தம்பதி ஒன்று ஊரடங்கு காலத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வந்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது. பிரித்தானியாவின் கோவென்ட்ரி பகுதியை சேர்ந்த பில் மற்றும் கேத் முல்லர்கி தம்பதிகளே, கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஆதரவற்றவர்களுக்கு உதவும் வகையில் உணவு அளித்தவர்கள்.


கணவனின் கனவால் கோடீஸ்வரரான கனேடிய பெண்!
[Tuesday 2021-01-26 08:00]

கனடாவில் கணவனின் கனவில் வந்த எண்களைக் கொண்டு லொட்டரி வாங்கிய பெண்ணுக்கு 60 மில்லியன் டொலர் பரிசு விழுந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் டொரோண்டோவில் வசிப்பவர் Deng Pravatoudom, வயது 57. இவர் 1980-இல் தனது 14 உடன்பிறப்புகளுடன் லாவோஸிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தார். பல தசாப்தங்களாக, அவரும் அவரது கணவரும் தங்கள் குடும்பத்தை ஆதரிக்க கடுமையாக உழைத்து வந்துள்ளனர்.


27 மனைவிகள், 150 குழந்தைகள்: கனடாவின் மிகப்பெரிய குடும்பம்! Top News
[Sunday 2021-01-24 08:00]

கனடா நாட்டின் கொலம்பியா மாகாணத்தில் பவுண்டிபுல் பகுதியில் வின்ஸ்டன் பிளாக்மோர்(64) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 27 மனைவிகள், மொத்தம் 150 குழந்தைகள், இவரின் குடும்பம் தான் கனடாவிலே மிகப் பெரிய குடும்பம் என்று கூறப்படுகிறது.


6 நாட்களாக உரிமையாளருக்காக மருத்துவமனை வாசலில் காத்திருந்த நாய்! Top News
[Saturday 2021-01-23 17:00]

துருக்கியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் உரிமையாளரை சந்திக்க நாய் ஒன்று மருத்துவமனை வாசலில் பல நாட்களாக காத்திருந்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் 68 வயதான செமல் செண்டுர்க். இவர் கடந்த 9 ஆண்டுகளாக Boncuk என்ற ஒரு வெள்ளை நிற நாயை செல்லமாக வளர்த்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜனவரி 14-ஆம் திகதி செண்டுர்க் கொரோனாவால் பாதிக்கட்டது தெரியவந்தது. இதனால், Trabzon, Black Sea நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.


வாடிக்கையாளர்களை கவர வினோத அறிவிப்பை வெளியிட்ட உணவு விடுதி!
[Thursday 2021-01-21 17:00]

மராட்டிய மாநிலம் புனேவில் அதுல் வாய்கர் என்பவர் ஒட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின், ஓட்டலில் பிரமாண்ட தட்டுகளில் வழங்கப்படும் நான் வெஜ் ரகங்கள் வெகு பிரபலம். ஸ்பெஷல் ராவண் சாப்பாடு, புல்லட் சாப்பாடு, மால்வானி மீன் சாப்பாடு உள்ளிட்ட 6 வகை உணவு வகைகள் இந்த ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.


டிராகன் பழத்தின் பெயரை மாற்றிய மாநிலம்: என்ன பெயர் தெரியுமா?
[Wednesday 2021-01-20 17:00]

தாமரை வடிவ டிராகன் பழ வகைக்கு கமலம் (தமிழில் அர்ததம் தாமரை) என குஜராத் அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. ஆனால் இந்த முடிவில் அரசியல் ஏதும் இல்லை என அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி மழுப்பலாக விளக்கம் அளித்துள்ளார். குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார்.


திமிங்கலத்தால் கோடீஸ்வரனான இளம் வயது மீனவன்!
[Wednesday 2021-01-20 08:00]

தாய்லாந்தில் ஏழை மீனவரை அடையாளம் தெரியாத திமிங்கலம் கோடீஸ்வரன் ஆக்கியுள்ளதால், அவர் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளார். தாய்லாந்தின் Songkhla மாகாணத்தை சேர்ந்தவர் Chalermchai Mahapan. 20 வயதான இவர் மீனவராக உள்ளார். இந்நிலையில், இவர் கடந்த 6-ஆம் திகதி வானிலை மோசம் காரணமாக உடனடியாக தனது படகில் இருந்து கரைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


வீடு பறிபோகவிருந்த நிலையில் ஏழை தொழிலாளிக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Tuesday 2021-01-19 17:00]

இந்தியாவில் வாங்கிய கடனுக்காக வங்கி, வீட்டை பறிக்க தயாரான நிலையில் ரப்பர் தொழிலாளிக்கு லொட்டரியில் ரூ 12 கோடி பரிசு விழுந்துள்ளது. கேரளாவின் கைதாச்சல் கிராமத்தை சேர்ந்தவர் போருண்ண ராஜன். ரப்பர் அறுக்கும் தொழிலாளியான இவருக்கு கேரள அரசின் கிறிஸ்துமஸ் பண்டிகை லொட்டரியில் ரூ. 12 கோடி விழுந்தது.


திரைப்பட பாணியில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மாற்றுத்திறனாளி ஆண்!
[Monday 2021-01-18 17:00]

நண்பன் திரைப்படத்தில் நடிகர் விஜய் வீடியோ அழைப்பில் மருத்துவருடன் பேசி பிரசவம் பார்ப்பது போல ஓடும் ரயிலில் ஒரு பெண்ணுக்கு 30 வயது மாற்றுத்திறனாளி ஆண் ஒருவர் பிரசவம் பார்த்துள்ளார். சினிமாவில் கொட்டும் மழை, நிஜத்தில் ஓடும் ரயில். சினிமாவில் எல்லாம் நடிப்பு தான். ஆனால் நிஜத்தில் மனத்துணிவு. சம்பர்க்கிராந்தி சிறப்பு ரயில் டெல்லியில் இருந்து மத்திய பிரதேசத்தின் ஜவத்ப்பூருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.


மொய் பணத்தை வினோதமான முறையில் வசூலித்த மணமக்கள்! Top News
[Sunday 2021-01-17 16:00]

பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் மதுரை அனுப்பானடியை சேர்ந்த சிவசங்கரி என்பவருக்கும் மதுரை பாலெரங்காபுரம் சரவணன் என்பவருக்கும் இன்று மதுரையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, இந்த திருமண விழாவில் மொய் எழுதும் பகுதியில் மொய் எழுதுபவர்கள் டிஜிட்டல் முறையில் போன் பே, கூகுள் பே மொபைல் ஸ்கேன் மூலம் ஆன்லைனில் மொய் செய்யும் வகையில் 'QR' கோடுடன் கூடிய பத்திரிகையை ப்ரிண்ட் செய்துள்ளனர்.


வயலில் நாற்று நட்டபடி மாற்றுத்திறனாளி மாணவி செய்த செயல்!
[Saturday 2021-01-16 17:00]

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன். அரசு பஸ் டிரைவர். இவருடைய மனைவி மாலா. இவர் காது கேளாதோர் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியின் மகள் கிருஷ்ணவேணி(வயது 15).


நாயின் சிறுநீரை அருந்தும் வினோத பெண்!
[Friday 2021-01-15 17:00]

அமெரிக்காவில் நாயின் சிறுநீரை அழகிய இளம்பெண் தினமும் குடித்து வரும் விசித்திர சம்பவம் விவாத பொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் லீனா. இவர் தினமும் தனது செல்ல நாயின் சிறுநீரை குடித்து வருகிறார். இதனால் தனது தோல் மின்னுவதாகவும், முகத்தில் பருக்கள் வருவதில்லை எனவும் கூறுகிறார்.


கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் தெரிந்த டிரம்ப்பின் முகம்! Top News
[Thursday 2021-01-14 17:00]

பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஸ்கேன் செய்து பார்த்த போது, அதில் டிரம்பின் முகம் போன்று இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானியாவின் Newcastle பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க Leanne Harris என்பவர் கர்ப்பிணியாக உள்ளார். 20 வார கர்ப்பிணியான இவர் சமீபர்த்தில் தனது குழந்தையின் ஆரோக்கியத்திற்காக மருத்துவமனைக்கு சென்று சென்றுள்ளார்.


2 வயது சிறுமிக்கு கட்டுப்பட்ட ஜல்லிக்கட்டு காளை!
[Thursday 2021-01-14 17:00]

ஜல்லிகட்டு போட்டிக்காக காளையை அழைத்துவந்த 2வயது சிறுமியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்று தமிழர் திருநாளாம் தை முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது., இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.


ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்திய அரியவகை தேனீ!
[Wednesday 2021-01-13 17:00]

உலகின் மிகப்பெரிய தேனீயை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 1859ம் ஆண்டு இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவில் அரியவகை தேனீ கண்டுபிடிக்கப்பட்டது. இது மற்ற தேனீக்களை ஒப்பிடும் போது அளவில் நான்கு மடங்கு பெரியதாக இருந்தது.


கனடாவில் கணவனை நாய் என கூறி மனைவி செய்த இரக்கமற்ற செயல்!
[Wednesday 2021-01-13 17:00]

ஊரடங்கில் இருந்து தப்பிக்க தனது கணவனை நாய் என கூறி, வாக்கிங் அழைத்துச்சென்ற பெண்ணிற்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். உலகம் முழுவதும் தற்போதுவரை கொரோனா வைரஸின் தாக்கம் குறைவில்லை. பெரும்பாலான நாடுகளில் இரண்டாம்கட்ட கொரோனா அலை வீசிவருகிறது. இந்நிலையில் கனடாவில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துவருவதால் அங்கு இரண்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


பக்தர்களுக்கு ஆசி வழங்கும் வினோத நாய்!
[Tuesday 2021-01-12 17:00]

கோவில் ஒன்றில் பக்தர்களுக்கு நாய் ஆசி வழங்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள அஹமத்நகர் மாவட்டத்தின் சித்ததேக் பகுதியில் சித்திவிநாயகர் கோவில் ஒன்று உள்ளது.


ஜேர்மனியில் பயன்பாட்டில் இருக்கும் வினோத சிகிச்சை முறை!
[Monday 2021-01-11 17:00]

எந்த ஜேர்மனி முதன்முதலில் கொரோனா கண்டறியும் சோதனையை உருவாக்கியதோ, எந்த ஜேர்மனி முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியதோ, அதே ஜேர்மனியில் விண்கல்லையும் இஞ்சியையும் பயன்படுத்தும் கொரோனாவுக்கான சிகிச்சை ஒன்று பயன்பாட்டில் உள்ளதாம். எப்படி பல நாடுகளில் அலோபதி தவிர்த்த மாற்று சிகிச்சைகளான இயற்கை வைத்தியம் முதலானவையும் பயன்பாட்டில் உள்ளனவோ, அதேபோல் ஜேர்மனியிலும் ஒரு சிகிச்சை பயன்பாட்டில் உள்ளது.


கொரோனா தொற்றில் இருந்து மனைவியை காக்க கோடீஸ்வரர் செய்த செயல்!
[Sunday 2021-01-10 18:00]

கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க கோடீஸ்வரர் ஒருவர் ஒரு விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜகர்தாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பாலி நகரத்துக்கு தன் மனைவியுடன் செல்ல திட்டமிட்டார். ஆனால் பிற பயணிகளுடன் பயணித்தால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் தான் செல்லவிருக்கும் பயணிகள் விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்துள்ளார்.


வாட்ஸ் அப் செயலிக்கு போட்டியாக அறிமுகமாகியிருக்கும் சிக்னல் செயலி!
[Sunday 2021-01-10 07:00]

மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பிற்கு பதிலாக சிக்னல் என்ற ஆப் களமிறங்க உள்ளதாக உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. உலகிலேயே அதிக மக்கள் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. இந்நிலையில் சிக்னல் என்ற செயலி அதையொட்டி இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அதற்கு ஏற்றாற் போல் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் சிக்னலை பயன்படுத்துங்கள் என கூறியுள்ளார்.


காதலியை தேடி கடல் கடந்து வந்த காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
[Friday 2021-01-08 17:00]

கொலை வெறியோடு இத்தாலிக்கு தனது காதலியை தேடி வந்த பிரித்தானிய பணக்காரரை பொலிஸ் கைது செய்துள்ளது. பிரித்தனியாவின் பிர்மிங்கம் நகரத்தைச் சேர்ந்த மில்லியனர் அஜாஸ் ஹுசைன் ஷா, தனது 165,000 டொலர் மதிப்புள்ள தங்க லம்போர்கினி ஹுராக்கன் காரை எடுத்துக்கொண்டு, இத்தாலியின் மிலான் நகருக்கு தனது 26 வயது காதலியை பார்க்க வந்துள்ளார்.


தோழியின் கணவர் மீது கொண்ட காதல்: மூவரும் எடுத்த அதிரடி முடிவு!
[Friday 2021-01-08 17:00]

அமெரிக்காவில் கணவனை விவாகரத்து செய்த இந்திய இளம்பெண் தனது தோழியின் கணவர் மீது காதல் கொண்ட நிலையில் மூவரும் சேர்ந்து ஒரே வீட்டில் 10 வருடமாக மகிழ்ச்சியுடன் வசித்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Piddu Kaur (31) என்ற பெண்ணுக்கும், நபர் ஒருவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே மனக்கசப்பு ஏற்பட்டு Piddu Kaur கணவரை விவாகரத்து செய்தார்.


கனேடிய பெண்ணுக்கு கிடைத்த 100 ஆண்டுகள் பழமையான கடிதம்: என்ன எழுதப்பட்டிருந்தது தெரியுமா? Top News
[Thursday 2021-01-07 17:00]

கனேடிய பெண் ஒருவருக்கு அவரது பூட்டியார் (பாட்டியின் தாய்), 1918ஆம் ஆண்டு எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. Lindsay Doran-Bonk என்ற அந்த பெண்ணுக்கு, 100 ஆண்டுகள் பழமையான அந்த கடிதம் கிடைத்தபோது, அதன் அருமை தெரியவில்லை.

Marion Elizabeth "Bessie" Forester என்னும் அந்த பூட்டியார், 1918ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ப்ளூ என்னும் தொற்றுநோய் பரவிய காலகட்டத்தில் அந்த கடிதத்தை எழுதியிருந்தார்.


வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு வந்திருக்கும் புதிய சிக்கல்!
[Thursday 2021-01-07 17:00]

பிரபல குறுஞ்செய்தியான வாட்ஸ்அப் செயலியானது அதன் பிரைவசி கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைத்திருக்கிறது. இது குறித்து, அறிவிப்புகளை அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கு இன்-ஆப் நோட்டிபிகேஷன் மூலம் அனுப்பத் தொடங்கியுள்ளது. மேலும், பேஸ்புக் வழங்கும் பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் சிறப்பாக ஒருங்கிணைக்க வாட்ஸ்அப் இந்த அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.


விமானத்தின் சக்கரத்தில் அமர்ந்தபடி திருட்டுத்தனமாக 5000 மைல்கள் பயணித்த இருவர்!
[Tuesday 2021-01-05 08:00]

தென்னாப்பிரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக விமான சக்கரத்தில் தொங்கியபடி லண்டன் வந்து சேர்ந்த நபரின் இன்றைய நிலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015-ல் நடந்த இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30 வயது Themba Cabeka தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளார்.


17 வருடங்களாக பாசமாக வளர்த்த குழந்தை: பின்னர் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
[Monday 2021-01-04 18:00]

சீனாவிலிருந்து குழந்தை ஒன்றை தத்தெடுத்த அமெரிக்க தம்பதியர், அந்த குழந்தை வளரும்போது தன் தாய்நாட்டையும் கலாச்சாரத்தையும் மிஸ் பண்ணக்கூடாது என உறுதி எடுத்துக்கொண்டனர். ஆகவே, அந்த குழந்தைக்கு சீன மொழி மற்றும் கலாச்சாரத்தையும் கற்றுக்கொடுத்தே வளர்த்துள்ளனர்.


இத்தாலியில் தனது காதலை வித்தியாசமாக வெளிப்படுத்திய சுகாதார ஊழியர்!
[Sunday 2021-01-03 21:00]

பொதுவாக தான் காதலிக்கும் காதிலியிடம் காதலை வெளிபடுத்த இளைஞர்கள் பல்வேறு யுக்திகளை செயல்படுத்து வழக்கம். உயரமான பகுதியில் காதலை வெளிபடுத்துவது, கிரிக்கெட் மைதானத்தில் காதலை வெளிபடுத்துவது என சமீபத்தில் பல்வேறு காதல் கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரு பரபரப்பான மருத்துவமனையில் தான் காதலிக்கும் காதலியிடம் தனது காதலை சொல்ல ஒரு சுகாதார ஊழியர் வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார்.


புத்தாண்டில் மட்டும் இவ்வளவு குழந்தைகளா!..
[Saturday 2021-01-02 08:00]

புத்தாண்டு தினத்தன்று மட்டும் உலகம் முழுதும் 3.7 லட்சம் குழந்தைகள் பிறந்திருக்க வாய்ப்பு உள்ளது என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுதும், ஆங்கிலப் புத்தாண்டு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்கிடையே, யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம், பிறப்பு விகிதம் மற்றும் ஆயுட்காலம் குறித்த சில தகவல்கள் அடங்கிய ஆய்வறிக்கையை வெளியிட்டது.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா