Untitled Document
May 3, 2024 [GMT]
19 ஒழிக்கப்படுவது உறுதி!
[Saturday 2020-08-08 07:00]

19வது திருத்தத்தை அவசியமான தருணத்தில் நீக்குவதற்கு பொதுஜன பெரமுன தயாராகவுள்ளது என கொழும்பு மாவட்டத்தில் அதிகவாக்குகளை பெற்ற சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


எந்தவொரு நாட்டுக்கும் அடிபணிய மாட்டோம்!
[Saturday 2020-08-08 07:00]

எந்தவொரு சர்வதேச நாட்டுக்கும் அமைப்புக்கும் நாம் அடிபணிந்து செயற்பட மாட்டோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


பெண்களின் நாடாளுமன்றப் பிரவேசம் மேலும் வீழ்ச்சி!
[Saturday 2020-08-08 07:00]

புதிய நாடாளுமன்றத்துக்கு 8 பெண்கள் தெரிவு செய்யபட்டுள்ளனர். தேர்தலில் 59 பெண்கள் போட்டியிட்ட போதும் அதில் 8பேரே நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.


இலங்கைப் பயணத்தை மறுபரிசீலனை செய்ய கோருகிறது அமெரிக்கா!
[Saturday 2020-08-08 07:00]

இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கா, தமது நாட்டு பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பயண அறிவுறுத்தலில் அமெரிக்க தொற்று நோய் தடுப்புப்பிரிவு இந்த ஆலோசனையை விடுத்துள்ளது.


நாடாளுமன்றம் செல்லும் 3 தந்தை மகன் ஜோடிகள்!
[Saturday 2020-08-08 07:00]

நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று தந்தையரும் அவர்களின் மூன்று மகன்களும் வெற்றி பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளனர்.


லெபனான் வெடிப்பில் 14 இலங்கையர்கள் காயம்!
[Saturday 2020-08-08 07:00]

லெபனான்- பெய்ரூட் நகரில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக லெபனானுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.


மனித உரிமை, சட்டத்தின் ஆட்சியைக் கட்டியெழுப்ப புதிய அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும்! - அமெரிக்கா நம்பிக்கை
[Friday 2020-08-07 20:00]

மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கட்டியெழுப்ப புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என, எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


கறுப்புத் துணியால் மூடப்பட்டுள்ள ரவிராஜ் உருவச் சிலையின் தலை! Top News
[Friday 2020-08-07 20:00]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ந. ரவிராஜின் உருவ சிலையின் முக பகுதி கறுப்பு துணியால் மூடப்பட்டுள்ளது.


கேட்டது 20, கிடைத்தது 9! - சம்பந்தன் ஏமாற்றம்.
[Friday 2020-08-07 20:00]

20 ஆசனங்கள் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கூட்டமைப்பிற்கு ஒன்பது ஆசனங்களே கிடைத்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.


கொள்கை அடிப்படையில் ஒருங்கிணைந்து செயற்படத் தயார்!
[Friday 2020-08-07 20:00]

“பாராளுமன்றத்துக்கு என்னைத் தெரிவு செய்த வாக்காளர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள். உங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


கஜேந்திரன், விக்கியுடன் இணைந்து செயற்படத் தயார்! - சுமந்திரன்
[Friday 2020-08-07 20:00]

வடக்கில் தெரிவு செய்யப்பட்ட சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


முன்னாள் எம்.பிக்கள் 66 பேர் “அவுட்”!
[Friday 2020-08-07 20:00]

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 66 பேர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியில் இம்முறை போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்.


பாதையை மாற்றும் நேரம் வந்து விட்டது! -கோவிந்தன் கருணாகரம்
[Friday 2020-08-07 20:00]

தமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றாற்போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.


ரிஷாட் கைதாவதை தடுக்கக் கோரும் மனு நிராகரிப்பு!
[Friday 2020-08-07 20:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவொன்றை கோரி ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.


தெரிவான உறுப்பினர்களும் -கிடைத்த வாக்குகளும்!
[Friday 2020-08-07 20:00]

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.


ஞானசார தேரரும் நாடாளுமன்றம் செல்கிறார்?
[Friday 2020-08-07 20:00]

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாடாளுமன்றுக்குச் செல்லும் வாய்ப்புள்ளாக தெரிவிக்கப்படுகின்றது. நடைபெற்று முடிந்த 9 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் அபே ஜன பலய கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் இடம் கிடைத்துள்ளது. தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கலகொட அத்தே ஞானசார நியமிக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


மொட்டு சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளோர்! - சுரேன் ராகவனும் தெரிவு
[Friday 2020-08-07 20:00]

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சி சார்பில் தேசியப்பட்டியில் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 17 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.


அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பிரதமர் மஹிந்த - ஞாயிறன்று பதவியேற்கிறார்!
[Friday 2020-08-07 20:00]

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, இந்த மாதம் 9ஆம் திகதி மீண்டும் பிரதமராக, பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை களனி ரஜமகாவிரையில் இந்த பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. புதிய அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் 10 அல்லது 11ஆம் திகதி இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவித்துள்ளன.


145 ஆசனங்களுடன் மொட்டு அசுர வெற்றி! - சுருண்டது ஐதேக
[Friday 2020-08-07 06:00]

பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களுடன் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி, திருகோணமலை தவிர்ந்த ஏனைய 18 மாவட்டங்களையும் கைப்பற்றி சிறிலங்கா பொதுஜன பெரமுன பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.


திருகோணமலையில் சம்பந்தன் வெற்றி!
[Friday 2020-08-07 06:00]

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இருவரும்,இலங்கை தமிழ் அரசு கட்சியில் ஒருவரும்,பொதுஜன பெரமுனவில் ஒருவரும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்கள்.


பதுளையில் செந்தில் தோல்வி! - வடிவேல் சுரேஸ், அரவிந்தகுமார் வெற்றி.
[Friday 2020-08-07 06:00]

நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் நிமல் சிறிபால 141,901 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், இதொகாவின் செந்தில் தொண்டமான் தோல்வியடைந்துள்ளார்.


நுவரெலியவில் 5 தமிழ்ப் பிரதிநிதிகள்! - ஜீவன், திகா, ராதாகிருஷ்ணன் வெற்றி
[Friday 2020-08-07 06:00]

நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமான் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட ஜீவன் தொண்டமான் 109,155 விருப்பு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியைப் பெற்றுள்ளார்.


விருப்பு வாக்குகளில் முறைகேடு -ஆணைக்குழுவிடம் முறையிடப் போவதாக சசிகலா அறிவிப்பு.
[Friday 2020-08-07 06:00]

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் விருப்பு வாக்கு எண்ணிக்கையில் குழறுபடி ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ், இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் சிறிதரன், சுமந்திரன், சித்தார்த்தன் வெற்றி! - 742 வாக்குகளால் சசிகலா “அவுட்”
[Friday 2020-08-07 06:00]

யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


விருப்பு வாக்குகளில் அங்கஜன் முதலிடம்!
[Friday 2020-08-07 06:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதன் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். இவருக்கு, 36,356 வாக்குகள் கிடைத்துள்ளன.


தேசியப் பட்டியல் ஆசனங்கள் அறிவிப்பு! - வீடு, சைக்கிளுக்கும் தலா ஒன்று
[Friday 2020-08-07 06:00]

நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப்பட்டியலில் ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளனஃ இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 7 ஆசனங்களைப் பெற்றுள்ளது.


விருப்பு வாக்கு விவகாரத்தில் சர்ச்சை - யாழ்ப்பாணத்தில் பதற்றம்! Top News
[Friday 2020-08-07 06:00]

யாழ்ப்பாண மாவட்டத்தில் விருப்பு வாக்கு எண்ணிக்கை தொடர்பில் நள்ளிரவு தாண்டியும் பாரிய குழப்பம் நீடித்து பதற்ற நிலை ஏற்பட்டத்தை அடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் மீது அதிரடி படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்புக்கு கிடைத்த ஆசனங்கள் மூன்றில் முதல் ஆசனத்தை சிறிதரன் வென்றிருந்தார்.


வடக்கு கிழக்கில் 10 ஆசனங்களுடன் கூட்டமைப்பு முதலிடம்!
[Friday 2020-08-07 06:00]

வடக்கு, கிழக்கில் ஐந்து தேரதல் மாவட்டங்களினதும் தேரத்ல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 9 ஆசனங்களையும், ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தையும் பெற்று வெற்றி பெற்றுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றுடன் இரண்டு ஆசனங்களை வென்றுள்ளது.

Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா