Untitled Document
May 1, 2024 [GMT]
மாகாணங்களின் பாடசாலைகளை கைப்பற்றுகிறது மத்திய அரசு!
[Friday 2021-01-29 17:00]

மாகாணப் பாடசாலைகள் தேசியப் பாடசாலைகள் ஆக்கப்படுதல் ஜனநாயக விரோதமானது எனவே இச்செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் வடக்கு மாகாண ஆளுநரிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி ஆலயங்களின் விளக்கேற்றும் நிகழ்வு! Top News
[Friday 2021-01-29 17:00]

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை மன்னாரில் விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.


பிரகீத் எக்னெலிகொடவுக்கு நீதி கோரி போராட்டம்! Top News
[Friday 2021-01-29 17:00]

கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொடவுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பில் 5ஆம் ஆண்டு மாணவனுக்கு கொரோனா!
[Friday 2021-01-29 17:00]

மட்டக்களப்பு நகரில் கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் 5 ஆம் ஆண்டு மாணவனுக்கு கொரோனா தொற்று இன்று காலை கண்டறியப்பட்டுள்ளதாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.


தடுப்பூசி ஏற்றும் பணி இன்று ஆரம்பம்!
[Friday 2021-01-29 09:00]

இந்திய அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட, கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கைகள், இன்றிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் ஆறு வைத்தியசாலைகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளது.


கவனயீர்ப்பு போராட்டத்துக்கு கூட்டமைப்பும் ஆதரவு!
[Friday 2021-01-29 09:00]

தமிழின அழிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவிப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


ரொறன்ரோ நெடுஞ்சாலை விபத்தில் 5 பேர் காயம்!
[Friday 2021-01-29 09:00]

ரொறன்ரோ நெடுஞ்சாலை 401இல் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் நால்வரின் நிலை ஆபத்தாக உள்ளது என்று கூறப்படுகிறது. நேற்று மாலை Jane Street பகுதியில் Volkswagen Jetta வாகனமும், பிக்கப் ட்ரக்கும் விபத்தில் சிக்கின. இதில் நான்கு ஆண்கள் படுகாயமடைந்துள்ளனர். ஒருவர் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார்.


பயணிகளுக்கான இலவச, தன்னார்வ அடிப்படையிலான பரீட்சார்த்த பரிசோதனைத் திட்டம்
[Friday 2021-01-29 09:00]

கோவிட்-19 நோய்த்தொற்றை விரைவாகக் கண்டறிந்து தடுப்பதற்கென, ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகளிடம் தன்னார்வ அடிப்படையிலான இலவச நோய்த்தொற்றுக்கான பரீட்சார்த்த பரிசோதனைத் திட்டம் ஒன்று ஒன்ராறியோ அரசினால் செயற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், 6,800 இற்கும் மேற்பட்ட சர்வதேச பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார்!
[Friday 2021-01-29 09:00]

ஈழத்தின் மூத்த இலக்கியவாதி டொமினிக் ஜீவா நேற்று மாலை தனது 94 வது வயதில் காலமானார். “மல்லிகை” எனும் மாதத் சஞ்சிகை ஆரம்பித்து 2012 நவம்பர் – டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர் டொமினிக் ஜீவா . நாற்பத்தி எட்டு வருடங்களாக, 401 இதழ்களை வெளியிட்டு பெருமை சேர்த்தவர்.


மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு பிரித்தானியாவும் ஆதரவு!
[Friday 2021-01-29 09:00]

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து செயற்படத் தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.


ஒரே நாளில் உச்சம் - நேற்று மட்டும் 892 பேருக்கு தொற்று!
[Friday 2021-01-29 09:00]

இலங்கையில் நேற்று ஒரே நாளில் 892 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் 298 பேர் கொழும்பு மாவட்டத்திலும் கம்பஹா மாவட்டத்தில் 203 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பவித்ராவுக்கு தொற்று தீவிரம்! - ஐடிஎச்சிற்கு மாற்றப்பட்டார்.
[Friday 2021-01-29 09:00]

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அங்கொடவில் அமைந்துள்ள தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் ஹிக்கடுவவில் உள்ள ஒரு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை அவர் கொழும்பின் புறநகர் பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.


நேற்றும் கொரோனாவுக்கு 7 பேர் பலி!
[Friday 2021-01-29 09:00]

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 297 ஆக அதிகரித்துள்ளது.


தடுப்பூசிகளுடன் வந்தது இந்திய விமானம்! Top News
[Thursday 2021-01-28 17:00]

இந்திய தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, கொவி ஷீல்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள 5 இலட்சம் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு, இந்திய விமானச் சேவைக்கு சொந்தமான ஏ.ஐ.281 என்ற விமானம் 11.35க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.


இலங்கைக்கு எதிரான நகர்வுக்கு பிரித்தானியா தலைமை தாங்கி முன்னெடுக்க வேண்டும்!
[Thursday 2021-01-28 17:00]

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைமையை நிவர்த்தி செய்ய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.


தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்துக்கு அழைப்பு!
[Thursday 2021-01-28 17:00]

வடக்கு கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரளுமாறு வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.


அமெரிக்காவுக்கு அடிபணியாது அரசாங்கம்!
[Thursday 2021-01-28 17:00]

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.


பொறுப்புக்கூறல் நகர்வுக்கு கனடா முழு ஆதரவு!
[Thursday 2021-01-28 17:00]

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதன் அவசியத்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியிருப்பதாக கனடா தெரிவித்துள்ளது. கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னோ டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


நெல்லியடி விபத்தில் ஒருவர் பலி! Top News
[Thursday 2021-01-28 17:00]

நெல்லியடி பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேகக் கட்டுப்பாட்டையிழந்த கப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ரொறன்ரோவில் கடும் குளிர் எச்சரிக்கை!
[Thursday 2021-01-28 17:00]

ரொறன்ரோவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கடுமையான குளிர் நிலவும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை -22 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலையை உணரும் நிலை ஏற்படும் என்றும், இன்று பிற்பகல் குளிர் காற்றுடன் -15பாகை செல்சியஸ் செல்சியஸ் வரை குளிர் காணப்படும் என்றும் சுற்றுச்சூழல் கனடா அறிவித்துள்ளது.


இந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும்!
[Thursday 2021-01-28 17:00]

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவதுதான் பொருத்தமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை இந்தியாவிற்கு இலங்கை அரசு வழங்குவது தொடர்பாக தமிழ் தேசிய முன்னணியின் நிலைப்பாடு குறித்து வவுனியாவில் ஊடகவியலாளர் எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல்! Top News
[Thursday 2021-01-28 17:00]

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. பொலிஸார் தடைகள் ஏற்படுத்த முற்பட்டபோதும், நிகழ்வு அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மகிழடித்தீவு நினைவுத்தூபியருகே நடைபெற்றது.


முச்சக்கர வண்டிக்குள் இளம் பெண்ணை வைத்து கலாசார சீரழிவு! - நால்வர் கைது.
[Thursday 2021-01-28 17:00]

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் கலாசார சீரழிவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.


முள்ளியவளை பாடசாலை மைதானத்தில் மோட்டார் கண்டுகள்!
[Thursday 2021-01-28 17:00]

முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி தேசிய பாடசாலை வளாகத்தில், இன்று அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது. கடந்த 25ஆம் திகதி, பாடசாலையின் மைதானத்தை துப்புரவு செய்தபோது, வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.


ஆனையிறவில் 27 அடி நடராஜர் சிலைக்கு அடிக்கல்! Top News
[Thursday 2021-01-28 17:00]

ஆனையிறவு, தட்டுவன்கொட்டியில் கரைச்சி பிரதேச சபையினால் அமைக்கப்படவுள்ள நடராஜர் சிலைக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், சிலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.


குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் மாயம் - பொலிசில் முறைப்பாடு.
[Thursday 2021-01-28 08:00]

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அப்பகுதி கிராம மக்களின் சார்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.


இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை!
[Thursday 2021-01-28 08:00]

இலங்கையில் மோதல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் தொடர்புபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார்.


ஒன்ராறியோவில் இரண்டு மாதங்களுக்குப் பின் குறைந்த தொற்றாளர்கள்!
[Thursday 2021-01-28 08:00]

ஒன்ராறியோவில் கடந்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர், குறைந்தளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று 1670 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நொவம்பர் 26ஆம் திகதிக்கு பின்னர், பதிவாகியுள்ள ஆக குறைந்த தொற்று இதுவாகும். ஒரு வாரத்துக்கு முன்னர் 2665 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கடந்த 3 நாட்களாக 2000இற்கும் குறைவான தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா