Untitled Document
April 18, 2024 [GMT]
வவுனியாவில் மேலும் நால்வருக்கு கொரோனா!
[Saturday 2021-01-16 18:00]

வவுனியா நகரப் பகுதியைச் சேர்ந்த மேலும் 4 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா- பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்த நிலையில், வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.


முல்லைத்தீவில் 20 குளங்கள் நிரம்பின!
[Saturday 2021-01-16 18:00]

முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் ஆளுகையின் கீழ் உள்ள 20 பாரிய மற்றும் நடுத்தர குளங்கள் நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 அடி கொள்ளளவு கொண்ட முத்தையன்கட்டு குளம் 23´ 9" அடியினை பெற்றுள்ளதாகவும் இன்று மதியத்தின் பின்னர் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது,


இரவில் வீட்டுக்கு வீடு சுய தனிமைப்படுத்தல்!
[Saturday 2021-01-16 18:00]

சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசத்தில் நேற்றிரவு முதல் மறு அறிவித்தல் வரும்வரை, மாலை 8 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை “வீட்டுக்கு வீடு சுய தனிமைப்படுத்தல்” நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார துறையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.


வடக்கில் தனிமைப்படுத்தலை இடைநிறுத்துமாறு கொழும்பில் இருந்து உத்தரவு!
[Saturday 2021-01-16 07:00]

மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்துமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.


திருகோணமலை பிரதேச சபையை கூட்டமைப்பிடம் இருந்து கைப்பற்றியது மொட்டு!
[Saturday 2021-01-16 07:00]

25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலையின் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது.


யாழ்ப்பாணத்தில் இதுவரை 47 ஆயிரம் பிசிஆர் பரிசோதனை!
[Saturday 2021-01-16 07:00]

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.


காரை நிறுத்தும் அதிகாரம் பொலிசாருக்கு இல்லை!
[Saturday 2021-01-16 07:00]

ஒன்ராறியோவின் புதிய அவசர நடவடிக்கைகளின் கீழ், வீட்டிலேயே தங்குமு் உத்தரவை மீறியதாக காரை நிறுத்தி சோதனையிடுவதற்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்றும், தனிநபர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள் என்று அதிகாரிகளிடம் கூற வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மன்னாரில் 7,727 வாக்காளர்கள் நீக்கம்!
[Saturday 2021-01-16 07:00]

மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


இரண்டாவது டோஸ் வழங்குவது தாமதமாகும்?
[Saturday 2021-01-16 07:00]

கனடாவில் கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை காரணமாக, தடுப்பூசியை இரண்டாவது முறை போடும் நடவடிக்கைகளை தாமதப்படுத்தலாமா என்று ஒன்ராறியோ அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.


சீரற்ற வானிலையால் வடக்கில் 5 ஆயிரம் பேர் பாதிப்பு!
[Saturday 2021-01-16 07:00]

வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் ஆயிரத்து 672 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டத்தில் 558 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 745 பேரும், மன்னார் மாவட்டத்தில் 233 குடும்பங்களை சேர்ந்த 839 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 807 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 600 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 74 குடும்பங்களை சேர்ந்த 174 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மூன்றாவது அதிக வெட்டுப்புள்ளி ஹாட்லிக்கு!
[Saturday 2021-01-16 07:00]

2020 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி கொழும்பு றோயல் கல்லூரிக்கு அதிகபட்சமாக 187 புள்ளிகளும், டி.எஸ்.சேனநாயக்க கல்லூரிக்கு 178 புள்ளிகளும், வெட்டுப்புள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


5 இலட்சம் தடுப்பு மருந்துகளை சேமிக்க வசதி!
[Saturday 2021-01-16 07:00]

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை தேவையான வெப்பநிலையில் சேமிப்பதற்கான வசதிகள் உள்ளதாக தேசிய இரத்தவங்கி தெரிவித்துள்ளது. தேசிய இரத்தவங்கியில் 500,000 தடுப்பு மருந்துகளை சேமிப்பதற்கான வசதியுள்ளது என இரத்தவங்கியின் இயக்குநர் லக்ஸ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.


மேலும் நால்வர் பலி!
[Saturday 2021-01-16 07:00]

நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 255ஆக அதிகரித்துள்ளது.


முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு அத்திவாரம் அமைக்கும் பணி ஆரம்பம்! Top News
[Friday 2021-01-15 17:00]

யாழ்.பல்கலைக்கழகத்தில் மீள நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.


இந்தியாவிடம் இருந்து தடுப்பூசியை பெற நடவடிக்கை!
[Friday 2021-01-15 17:00]

இந்தியாவிடம் இருந்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.


38 மில்லியனைத் தாண்டியது கனடாவின் சனத்தொகை!
[Friday 2021-01-15 17:00]

கனடாவில் 2020ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி நிலவரப்படி, 38,005,238 மக்கள் வசிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 411,854 ஆல் அதிகரித்துள்ளது.


மேலும் 320 புதிய தொற்றாளர்கள்!
[Friday 2021-01-15 17:00]

மேலும் 320 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர் களின் மொத்த எண்ணிக்கை 51ஆயிரத்து 219 ஆக உயர்ந் துள்ளது.


மல்லாவியில் பேருந்து தீக்கிரை! Top News
[Friday 2021-01-15 17:00]

முல்லைத்தீவு - மல்லாவி, ஆலங்குளம் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து இனம் தெரியாத நபர்களினால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கச்சத்தீவு திருவிழா இம்முறை இடம்பெறாது!
[Friday 2021-01-15 17:00]

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் அறிவித்துள்ளார். கொரோனா சூழ்நிலை காரணமாக திருவிழாவை நடத்துவதை தவிர்க்க இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


நல்லூர் பிரதேச சபை வரவுசெலவுத் திட்டம் நிறைவேறியது! Top News
[Friday 2021-01-15 17:00]

நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 13 உறுப்பினர்களும், எதிராக இரண்டு உறுப்பினர்களும் வாக்களிக்க, மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.


பொத்துவில் பிரதேச சபை பிரதி தவிசாளர் வாள்வெட்டில் படுகாயம்! Top News
[Friday 2021-01-15 17:00]

பொத்துவில் பிரதேச சபை பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் வாள் வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார். பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன், ஊறணியிலுள்ள அவரது விடுதியில் தங்கியிருந்தபோது, உள்நுழைந்த குழுவினர் அவர் மீது வாள் மற்றும் பொல்லால் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.


15 எம்.பிக்களுக்கு கொரோனா இல்லை!
[Friday 2021-01-15 17:00]

கடந்த புதன்கிழமை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 15 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.


வவுனியாவில் மேலும் 16 பேருக்கு தொற்று!
[Friday 2021-01-15 17:00]

வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு, இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.


மன்னாரில் தொற்றாளர் தப்பியோட்டம்! - படையினரால் மடக்கப்பட்டார்.
[Friday 2021-01-15 17:00]

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் பாதுகாப்பு தரப்பினரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.


தகர்க்கப்பட்ட நினைவிடத்தின் எச்சங்கள் பேணப்பட வேண்டும்!
[Friday 2021-01-15 07:00]

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அழிக்கப்பட்ட நினைவிடம் மீள உடன் கட்டியெழுப்பப்பட வேண்டுமென்றும் அதன்போது முன்னைய நினைவிடத்தின் தகர்க்கப்பட்ட எச்சங்களும் பேணப்பட வேண்டுமென இலங்கையை தாயமாகக் கொண்ட பல்வேறு நாடுகளில் வதியும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


வலுவான தீர்மானம் அவசியம்!
[Friday 2021-01-15 07:00]

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக பலவந்தமாக அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் அதனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும் உலகளாவிய ரீதியில் அந்த உடைப்பு சம்பவம் ஏற்படுத்திய தாக்கமும் பின்னடைவும் இலங்கைக்கு எதிரான வலுவான நடவடிக்கைக்கான தீர்மானமொன்றின் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது என்று பிரித்தானிய தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டோனாக் வலியுறுத்தியுள்ளார்.


நினைவுத் தூபி இடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம் கவலை!
[Friday 2021-01-15 07:00]

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவம் கவலையை அளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.


வடக்கில் நேற்று 9 பேருக்கு தொற்று உறுதி!
[Friday 2021-01-15 07:00]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று இடம்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதை தெரிவித்தார்.

Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா