Untitled Document
May 3, 2024 [GMT]
அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்!
[Thursday 2022-02-17 08:00]

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் அரசாங்கம் தொடர்புபட்டிருந்தாலும் இல்லை என்றாலும், நாட்டில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். இதன் உண்மையான பின்னணியை கண்டு பிடிப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்தால் நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூற முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.


முடங்கியது வீரவன்சவின் முகநூல்!
[Thursday 2022-02-17 08:00]

அமைச்சர் விமல் வீரவன்சவின் முகநூல் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் வீரவன்சவின் தனிப்பட்ட முகநூல் கணக்கிற்குள் எவரே பிரவேசித்துள்ளதாகவும் சில நாட்களாகவே தம்மால் முகநூலை பயன்படுத்த முடியவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


பத்திரிகை ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம் ஞாபகார்த்த முத்திரை வெளியீடு! Top News
[Thursday 2022-02-17 08:00]

தமிழ் பத்திரிகை ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகத்தின் ஜனன தின நூற்றாண்டு (1921-2021) விழாவும், ஞாபகார்த்த முத்திரை வெளியீடும் நேற்று மாலை ஸ்ரீ சத்ய சாயி, சீரடி பாபா மத்ய நிலையத்தின் அறங்காவலரும் தலைவருமான எஸ். என். உதயநாயகம் தலைமையில் கொழும்பு 13 சாயி நிலையத்தில் நடைபெற்றது.


சி.சி.டி.வி காட்சிகளை துருவும் பொலிசார்!
[Thursday 2022-02-17 08:00]

பிலியந்தலவில் உள்ள ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது, தாக்குதலை மேற்கொண்டவர்கள் பயன்படுத்திய சொகுசு கார், மோட்டார் சைக்கிளின் வாகன இலக்கங்களை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரையில் சுமார் 100 சி.சி.டி.விகளை பொலிஸார் ஆராய்ந்துள்ளனர்.


காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!
[Wednesday 2022-02-16 18:00]

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் எதிர்வரும் 20ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.


தமிழ் தேசிய கட்சிகளின் கருத்தரங்கு - மாவை பங்கேற்கவில்லை! Top News
[Wednesday 2022-02-16 18:00]

யாழ்ப்பாணத்தில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், "ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும்" எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு நடைபெற்றுள்ளது.


பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை! Top News
[Wednesday 2022-02-16 18:00]

பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.


சர்வதேச போட்டிக்குச் செல்லும் குத்துச்சண்டை வீரர்கள் கௌரவிப்பு! Top News
[Wednesday 2022-02-16 18:00]

உலகக்கிண்ண கிக்பொக்சிங் போட்டிக்கான தெரிவுப் போட்டிக்குத் தெரிவாகிய 14 வீர, வீராங்கனைகளை யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கெளரவித்துள்ளார்.


சடலங்களுக்கு பிசிஆர் பரிசோதனை அவசியமில்லை!
[Wednesday 2022-02-16 18:00]

வைத்தியசாலைகளில் அல்லது வைத்தியசாலைகளுக்கு வெளியில் இடம்பெறும் மரணங்களுக்கும் பிரேத பரிசோதனையின் போதும், பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


மூடப்படுகிறது அனுராதபுரம் - வவுனியா ரயில் பாதை!
[Wednesday 2022-02-16 18:00]

அனுராதபுரம் முதல் வவுனியா வரையான ரயில் பாதை 5 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில், எதிர்வரும் 5 ஆம் திகதியிலிருந்து 5 மாதங்களுக்கு மூடப்படவுள்ளது.


மின்வேலியில் சிக்கி யானை பலி - பெண் கைது!
[Wednesday 2022-02-16 18:00]

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் ஒதியமலை கிராமத்தில் காட்டு யானை மின்சாரவேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது. விவசாய தோட்டம் ஒன்றிற்கு கட்டப்பட்ட மின்சார வேலியில் தும்பிக்கையினால் பிடித்தபடி யானை உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டுள்ளதுடன் ஒட்டுசுட்டான் பொலிஸாரும் விசாரணை நடத்தியுள்ளார்கள்.


அராலியில் 15 இலட்சம் ரூபா நகைகள் கொள்ளை!
[Wednesday 2022-02-16 18:00]

யாழ்ப்பாணம் - அராலி தெற்கில் வீடொன்றில் புகுந்த திருடர்கள் சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிச் சென்றுள்ளனர். குறித்த வீட்டில் வசிப்போர் நேற்றைய தினம் தமது உறவினர் வீடொன்றுக்கு சென்று விட்டு, வீடு திரும்பிய போது , வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதனை கண்டுள்ளனர்.


சஹ்ரானின் மனைவியிடம் 6 மணி நேரம் வாக்குமூலம் பதிவு!
[Wednesday 2022-02-16 18:00]

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று, இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென அறியப்பட்ட, தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாசிமினின் மனைவியிடம் 6 மணி நேரம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இந்த வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கிய கட்டளையின் பிரகாரமே வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்ய கோரி கையெழுத்துப் போராட்டம்! Top News
[Wednesday 2022-02-16 09:00]

பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்திய கையெழுத்துப் போராட்டம் நேற்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்டது.


மூடிய கதவுகளுக்குப் பின்னால் நீதியைக் கோரும் முயற்சி!
[Wednesday 2022-02-16 09:00]

இலங்கை கத்தோலிக்க திருச்சபையானது, வத்திக்கானுடன் இணைந்து ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கையை மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்த கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், இதனால் இலங்கை அனுபவிக்கும் விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்!
[Wednesday 2022-02-16 09:00]

2022 ஆம் ஆண்டுக்கான தமது வழிவரைபடத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.


காணாமல் ஆக்கப்பட்டவர்களை முன்னாள் போராளிகளாக காட்ட முயற்சி!
[Wednesday 2022-02-16 09:00]

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கூட்டம் நெருங்கி வரும் நிலையில் வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை முன்னாள் போராளிகளாக காட்ட அரசாங்கம் பகீரத பிரயத்தனம் செய்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.


12 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசியல் கைதி விடுதலை!
[Wednesday 2022-02-16 09:00]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கைதான அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். விக்னேஸ்வரா கல்லூரி வீதி கரவெட்டி மேற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த கந்தப்பு ராஜசேகரே கொழும்பு நீதவான் நீதிமன்றின் நீதிபதி சந்திமல் லியனகேயினால் நேற்றைய தினம் நிரபராதி என தெரிவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


48 மணித்தியாலங்களுக்கு மேலாக காய்ச்சலா?
[Wednesday 2022-02-16 09:00]

ஒமிக்ரோன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை சமூகத்தில் பரவுவதைக் அவதானிக்கக் கூடியதாக இருப்பதாகத் தெரிவித்த சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத், 48 மணித்தியாலங்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.


நிமல் லான்சாவின் பதவியும் பறிபோகிறது?
[Wednesday 2022-02-16 09:00]

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது தனிப்பட்ட ஊழியர்களை அமைச்சு அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


புதையல் தோண்டிய ஒருவர் கைது!- ஐவர் ஓட்டம்.
[Wednesday 2022-02-16 09:00]

மன்னார் - அடம்பன் குருவில் வான் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பெயரில் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலும் ஆறு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.


கைபேசி உதவியுடன் பரீட்சை எழுதிய அதிபரின் மகன் !
[Wednesday 2022-02-16 09:00]

மன்னார் - மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் இடம் பெற்று வரும் உயர் தரப் பரீட்சையின் போது, அண்மையில் இடம் பெற்ற கணித பாட பரீட்சையின் போது குறித்த பாடசாலை அதிபரின் மகன் குறித்த பாடசாலை பரீட்சை மண்டபத்தினுள் கையடக்கத் தொலைபேசியை கொண்டு சென்று பிறிதொரு ஆசிரியரின் உதவியுடன் பரீட்சை எழுதிய போது கையும் மெய்யுமாக மாட்டிக் கொண்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.


நெல்லியடியில் ஐசுடன் இருவர் கைது!
[Wednesday 2022-02-16 09:00]

யாழ்ப்பாணத்தில் 818 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்த முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி நகரத்தில் நேற்று மாலை இருவரும் கைது செய்யப்பட்டனர். காங்கேசன்துறை அந்தோனிபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.


அவசர நிலையை பிரகடனம் செய்தார் கனேடியப் பிரதமர்!
[Tuesday 2022-02-15 17:00]

கனடாவில் தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் வலவடைந்து வரும் நிலையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


இலங்கை இராணுவ சிப்பாயை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே! - வலுக்கிறது எதிர்ப்பு.
[Tuesday 2022-02-15 17:00]

இந்திய ஐபிஎல் கிரிக்கட் போட்டிகளில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ரசிகர்கள் டுவிட்டரில் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். நான்கு முறை ஐபிஎல் போட்டிகளில் வெற்றியாளராகிய சென்னை சுப்பர் கிங்ஸை புறக்கணிக்கவேண்டும் என்று ரசிகர்கள் பதிவுகளை செய்து வருகின்றனர்.


சிவகரனுக்கு ரிஐடி அழைப்பாணை!
[Tuesday 2022-02-15 17:00]

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸார் ஊடாக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க கடற்படைத் தளத்தில் 89 இலங்கைத் தமிழர்கள்!
[Tuesday 2022-02-15 17:00]

20 சிறுவர்கள் உட்பட 89 இலங்கை தமிழர்கள் 2021 ஒக்டோபர் மூன்றாம் திகதி முதல் டியோகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என பிரிட்டிஷ் அரசாங்கம் உறுதி செய்துள்ளது என ஆசிய பசுபிக் அகதிகள் உரிமை வலையமைப்பு தெரிவித்துள்ளது.


ஒன்றுடன் ஒன்று மோதிய 3 மோட்டார் சைக்கிள்கள் - ஒருவர் பலி!
[Tuesday 2022-02-15 17:00]

வவுனியா- மரக்காரம்பளை வீதியில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா