Untitled Document
April 20, 2024 [GMT]
மின்வெட்டை அமுல்படுத்தாவிடின் நாடு இருளில் மூழ்கும்!
[Sunday 2022-01-30 07:00]

தற்போது முதற் கொண்டே நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். இல்லாவிடில், எதிர்வரும் காலத்தில் நாளொன்றுக்கு 4 அல்லது 5 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டி வரும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.


சர்வதேச நாணய நிதியத்தை நாடுகிறது அரசாங்கம்!
[Sunday 2022-01-30 07:00]

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பான கலந்துரையாடல்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். லண்டனிலுள்ள பைனான்சியல் டைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.


அதிரடிப்படை அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் பலி!
[Sunday 2022-01-30 07:00]

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலம் தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மரணத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹப்புத்தளை பொலிஸ் விஷேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நீதி அமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிராக போராட்டம்! Top News
[Saturday 2022-01-29 18:00]

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்று யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெற்ற போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் போனோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பாராளுமன்றம் செல்வதற்காகவே போராட்டம் நடத்துகிறார்கள்!
[Saturday 2022-01-29 18:00]

காணாமல் ஆக்கப்பட்டோர் தமது பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமாக இருந்தால் அரசுடன் பேசினால் அதற்குரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.


விரிவாக கலந்துரையாடல்கள் அவசியம்!
[Saturday 2022-01-29 18:00]

இலங்கை அரசாங்கத்தின் சட்ட மறுசீரமைப்புக்கான முயற்சிகள் குறித்து ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் கரிசனை வெளியிட்டுள்ளார்.இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அவற்றிலுள்ள குறைபாடுகளை அடையாளம் காண்பதற்கும் தீர்வுகளைக் கண்டறிவதற்கும் விரிவான கலந்துரையாடல்கள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு, டுவிட்டர் பதிவொன்றில் அவர் வலியுறுத்தியுள்ளார்.


13 இற்கு எதிரான வாகனப் பேரணி! Top News
[Saturday 2022-01-29 18:00]

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று பேரணி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வட்டுக்கோட்டை அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட வாகனப் பேரணியானது வட்டுக்கோட்டை தொகுதி முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


நீர்வீழ்ச்சியில் நீராடிய 4 பேர் பலி!
[Saturday 2022-01-29 18:00]

உமா ஓயா - கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.


பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பிணை வழங்கலில் சர்ச்சை ஏன்?
[Saturday 2022-01-29 18:00]

அஹ்னாப் ஜசீமுக்கு பிணை வழங்கிய அதே புத்தளம் மேல்நீதிமன்றம், பிணை வழங்குவது தமது அதிகார வரம்பிற்கு உட்பட்டதல்ல எனக்கூறி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கான பிணைக் கோரிக்கையை நிராகரித்திருக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.


விரைவில் தமிழ்க் கட்சிகளை சந்திப்பார் ஜனாதிபதி!
[Saturday 2022-01-29 18:00]

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக வெகுவிரைவில் ஜனாதிபதி தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவார் இதற்கான முயற்சிகள் இடம் பெற்று வருகின்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


225 எம்.பிக்களும் சைக்கிளில் செல்ல வேண்டும்!
[Saturday 2022-01-29 18:00]

எரிபொருள் நெருக்கடியினை முகாமைத்தும் செய்ய பொது மக்கள் துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துவதற்கு முன்னர் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றிற்கு துவிச்சக்கர வண்டியில் செல்ல வேண்டும். முதலில் அரசியல்வாதிகள் நாட்டு மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.


மட்டக்களப்பில் ஒமிக்ரோன் பாதிப்பு தீவிரம்!
[Saturday 2022-01-29 18:00]

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.சுகுணன் தெரிவித்தார்.


லசந்த அலகியவன்னவுக்கு கொரோனா தொற்று!
[Saturday 2022-01-29 18:00]

நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது இது உறுதிப்படுத்தப்பட்டதாக அவரது செயலாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளான எம்.பி.க்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.


வடக்கில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!
[Saturday 2022-01-29 06:00]

வடக்கு மாகாணத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணம் வந்தது 13இற்கு எதிரான வாகனப் பேரணி! Top News
[Saturday 2022-01-29 06:00]

13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ள வாகன பேரணி நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.


ஜெனிவா அமர்வுக்கு முன் திருத்தப்படும் பயங்கரவாத தடைச்சட்டம்!
[Saturday 2022-01-29 06:00]

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல், வெளியிடப்பட்டுள்ளது.


நாடு மீண்டும் முடக்கப்படுமா?
[Saturday 2022-01-29 06:00]

நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. எனினும், நாட்டை முடக்குவதற்கு இத்தருணத்தில் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


ஊடகப் படுகொலைகளுக்கு நீதி கோரி கறுப்பு ஜனவரி! Top News
[Saturday 2022-01-29 06:00]

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு நீதி கோரி, ஊடக அமைப்புக்களினால் நேற்று கறுப்பு ஜனவரி அனுஷ்டிக்கப்பட்டது. கறுப்பு ஜனவரியை அனுஷ்டிக்கும் வகையில், கொழும்பு − கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.


மீன்பிடிப் படகு மூழ்கடிக்கப்பட்டதா? - கரை திரும்பாத மீனவர்களால் கலக்கம்!
[Saturday 2022-01-29 06:00]

வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து நேற்று பிற்பகல் கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் இன்னும் கரை திரும்பாததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இவர்களோடு பலர் கடலுக்குச் சென்று திரும்பியிருந்த போதிலும் இருவர் மட்டும் நேற்றுகாலை கரை திரும்பாததால் பிரதேசத்திலுள்ள மீன்பிடி படகுகள் மூலம் மீனவர்கள் தேடுதல் நடத்தியிருந்தனர்.


விஜயகலாவுக்கு எதிரான வழக்கு - மீண்டும் ஒத்திவைப்பு!
[Saturday 2022-01-29 06:00]

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


சபாநாயகருக்கும் கொரோனா!
[Saturday 2022-01-29 06:00]

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கலிங்க மன்னர் நாகரிகத்தை அழித்தது போல விவசாயத்தை அழித்து விட்டனர்!
[Saturday 2022-01-29 06:00]

கலிங்க மன்னன் பண்டைய நாகரிகத்தை அழித்தைப் போன்று இந்த அரசாங்கம் விவசாய நாகரிகத்தை அழித்துள்ளதென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


நீதியமைச்சரின் நடமாடும் சேவைக்கு எதிராக போராட்டம்! Top News
[Friday 2022-01-28 18:00]

நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான நீதி அமைச்சின் நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து மழையில் நனைந்தபடி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று போராட்டம் ஒன்றை நடத்தினர்.


13 மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது! Top News
[Friday 2022-01-28 17:00]

13 ஆவது திருத்தம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது. ஆனால் சிறிய சிறிய அலுவல்களை பார்த்துக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இந்தியாவுக்கு பேரம் போகமாட்டோம்!
[Friday 2022-01-28 17:00]

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் கத்தி கத்தி களைத்து விட்டோம். ஆனாலும் இந்தியாவுக்கு பேரம் போகமாட்டோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


தமிழ் மக்களையும்,புலம்பெயர் தமிழ் மக்களையும் ஏமாற்ற முடியாது!
[Friday 2022-01-28 17:00]

தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ன தான் புரண்டாலும் , தமிழ் மக்களையும்,புலம் பெயர் தமிழ் மக்களையும் ஏமாற்ற முடியாது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.


அரசாங்கம் நினைப்பதை வடக்கில் நிறைவேற்றுகிறது முன்னணி!
[Friday 2022-01-28 17:00]

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் நினைக்கும் விடயங்களை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் பதவிக்கு முன்னணிக்குள் போட்டி!
[Friday 2022-01-28 17:00]

முதலமைச்சர் வேட்பாளர் யார் எனும் போட்டி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா