Untitled Document
April 28, 2024 [GMT]
இலங்கையின் வான்பரப்பு 29 மில்லியன் டொலருக்கு இந்தியாவுக்கு விற்பனை!
[Wednesday 2022-03-23 06:00]

இலங்கையின் வான் வெளி 29 மில்லியன் டொலருக்கு இந்தியாவுக்கு விற்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.ஹப்புத்தளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.


தேசிய சொத்துக்களை விற்கவில்லை!
[Wednesday 2022-03-23 06:00]

இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையில் சம்பிரதாய பூர்வமான நட்புறவைப் பேணுவதற்கும் , பாதுகாப்பு தொடர்பான பயிற்சி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் மாத்திரமே இந்து சமுத்திரத்தின் கடல் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது. மாறாக தேசிய சொத்துக்களை விற்பதற்காக அல்ல என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.


நேற்றிரவு கொழும்பு வந்தார் விக்டோரியா நுலண்ட்!
[Wednesday 2022-03-23 06:00]

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இலங்கையை வந்தடைந்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இலங்கை வந்தடைந்துள்ளார். அவருடன் மேலும் ஐந்து மூத்த அதிகாரிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். நேற்று இரவு 07.30 மணியளவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தியாவின் புது டெல்லியில் இருந்து இந்த குழு இலங்கையை வந்தடைந்துள்ளது.


பதவி, வரப்பிரசாதங்கள், அதிகாரத்தை விட மனச்சாட்சி முக்கியமானது!
[Wednesday 2022-03-23 06:00]

பதவி, வரப்பிரசாதங்கள் மற்றும் அதிகாரம் என்பவற்றை விட மனசாட்சி மிகவும் முக்கியமானது என்ற அடிப்படையில் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.


பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்க மக்கள் ஆணை அவசியம்!
[Wednesday 2022-03-23 06:00]

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்றால் அதற்கு மக்கள் ஆணை அவசியம் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தெரிவித்தார். பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில், உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.


பல்கலைக்கழகங்களில் 16.6 சதவீத மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்!
[Wednesday 2022-03-23 06:00]

இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மற்றும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் (SGBV) அதிகரித்துள்ளதாகவும், 16.6 சதவீத மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் எனவும் புதிய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உணவுக்காக கடன் பெறுவது இதுவே முதல்முறை!
[Wednesday 2022-03-23 06:00]

இதுவரையில் எந்தவொரு அரசாங்கமும் இந்தியாவிடம் உணவிற்காக கடன்களை பெற்றுக்கொண்டதில்லை, எனினும் இந்த அரசாங்கம் உணவுக்காக கடன்களை பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என சபையில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி, கடனை பெற்றுக்கொள்ள துறைமுகத்தையும், எண்ணெய் தாங்கிகளையும் இந்தியாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது உண்மையா எனவும் கேள்வி எழுப்பினார்.


பயங்கரவாதத் தடுப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது!
[Tuesday 2022-03-22 17:00]

பயங்கரவாதத் தடுப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற நிலையில், சட்டமூலத்துக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கும் முன்னணி!
[Tuesday 2022-03-22 17:00]

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கிறோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஷ் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-


வடக்கு கல்வி அமைச்சை முற்றுகையிட்ட தொண்டர் ஆசிரியர்கள்! Top News
[Tuesday 2022-03-22 17:00]

தமக்கான நிரந்தர நியமனத்தைக் கோரி வடமாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தை முற்றுகையிட்டு தொண்டர் ஆசிரியர்கள் இன்று போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். நல்லூர் - செம்மணி வீதியில் உள்ள வட மாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் முன்பாக இன்று காலை ஒன்று திரண்ட தொண்டர் ஆசிரியர்கள் அலுவலக பிரதான வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.


பதவி விலகினார் நிமல் லான்சா!
[Tuesday 2022-03-22 17:00]

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவர் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் .


எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு!
[Tuesday 2022-03-22 17:00]

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அண்மைக்காலங்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைபெற்ற அசாதாரண சம்பவங்களை அடுத்து, இவற்றை கண்காணிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.


கல்லடி பாலத்திற்கு கீழ் ஆணின் சடலம்! Top News
[Tuesday 2022-03-22 17:00]

மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு கீழ் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.


இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!
[Tuesday 2022-03-22 17:00]

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் வாங்கும் விலை 272 ரூபாய் 06 சதமாகும். அதன் விற்பனை விலை 282 ரூபாய் 49 சதமாகும்.


யாழ்ப்பாணத்தில் மக்களைச் சந்திக்க முடியாமல் ஓடிய பிரதமர்!
[Tuesday 2022-03-22 17:00]

யாழ்ப்பாணம் வந்த பிரதமர், மக்கள் பிரச்சினைகளைக் கேட்காமல், மக்கள் நடமாட்டமில்லாத இடங்களுக்கு இரகசியமான முறையில் சென்று வந்தார். இவர்களால் மக்களுக்கு முகங்கொடுக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.


நிரோஷ், மயூரன் பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!
[Tuesday 2022-03-22 17:00]

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்த நிலையில், அங்கு காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்களுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளர் செல்வரட்ணம் மயூரன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


இந்தியாவில் அடைக்கலம் கோரிய 6 தமிழ் அகதிகள்!
[Tuesday 2022-03-22 17:00]

இலங்கையில் இருந்து ஆறு பேர் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகே உள்ள மணல் திட்டில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் இவ்வாறு வந்து இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஜனாதிபதியுடனான சந்திப்பை கூட்டமைப்பு புறக்கணிக்க வேண்டும்!
[Tuesday 2022-03-22 08:00]

ஜனாதிபதியுடனான சந்திப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.


சர்வகட்சி மாநாடு - ரெலோ புறக்கணிப்பதாக செல்வம் அறிவிப்பு!
[Tuesday 2022-03-22 08:00]

சர்வகட்சி மாநாட்டை டெலோவும் புறக்கணிப்பதாக அந்த கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


மோடி வரமாட்டார் - தாய்லாந்து பிரதமர் மட்டும் கொழும்பு வருவார்!
[Tuesday 2022-03-22 08:00]

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க தாய்லாந்து பிரதமர் மடடும் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


மனோ அடுத்து ஜீவனும் சர்வகட்சி மாநாட்டை புறக்கணிப்பு!
[Tuesday 2022-03-22 08:00]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், நாளை நடத்தப்படவிருக்கும் சர்வக் கட்சி மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.


மின்சக்தி அமைச்சரின் சாரதி அடித்துக் கொலை!
[Tuesday 2022-03-22 08:00]

மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் வாகன சாரதி நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கெஸ்பேவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சிலர் அவரைத் தாக்கியுள்ளதாகவும், தாக்குதலில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாரதி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். தாக்குதலுக்கான காரணம் என்னவென கெஸ்பேவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


பொலிசாரால் தாக்கப்பட்ட மரியசுரேஷ் ஈஸ்வரி வைத்தியசாலையில் அனுமதி!
[Tuesday 2022-03-22 08:00]

மட்டுவில் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் வருகைக்கு எதிரான நடத்தப்பட்ட போராட்டத்தில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு - கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தம்!
[Tuesday 2022-03-22 08:00]

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் யாழ். போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு. நந்தகுமார் தொிவித்துள்ளார்.


யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி!
[Tuesday 2022-03-22 08:00]

சம்மாந்துறை வயல் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்மாந்துறை பள்ளாறு மயிலோடை வயல் பிரதேசத்தில் வயல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது நேற்று மதியம் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.


சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கிறார் ரணில்!
[Tuesday 2022-03-22 08:00]

சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ள உள்ளதாக அக்கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவத்துள்ளார். கட்சி பேதங்களைக் கடந்து நாடு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய நெருக்கடி நிலைமைகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும். வீதிக்கிறங்கி போராடுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


சீனாவிடம் 2.5 பில்லியன் டொலர் கடன் கேட்கிறது இலங்கை!
[Tuesday 2022-03-22 08:00]

சீனாவிடம் இருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை கோரியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்தார். 70 ஆண்டுகளுக்கு முன்பு சீனா மிகக் குறைந்த புள்ளியில் இருந்தபோது இலங்கை சீனாவுக்கு உதவியதால், இலங்கையின் சூழ்நிலையை சீனா பயன்படுத்திக் கொள்ளாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


பிரதமர் மஹிந்தவின் பதாகைகளை தீக்கிரையாக்கிய மக்கள்! Top News
[Sunday 2022-03-20 17:00]

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை வரவேற்கும் முகமாக கட்டப்பட்டு இருந்த பதாகைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா