Untitled Document
March 28, 2024 [GMT]
பதுக்கப்படும் எரிபொருள்!
[Saturday 2022-02-19 08:00]

இலங்கைக்கு இன்று இரண்டு எரிபொருள் கப்பல்கள் வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். குறித்த இரண்டு கப்பல்களிலும் டீசல் மற்றும் பெற்றோல் இருந்ததாகவும் எரிபொருளை விடுவிக்க சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


சாணக்கியனின் ருவிட்டை மறுக்கிறது பொலிஸ்!
[Saturday 2022-02-19 08:00]

புலனாய்வுப் பிரிவினர் தொடர்பில் சமூக ஊடகங்களில் போலியான செய்தி பரவி வருவதாக பொலிஸ் ஊடக அறிக்கை கூறுகிறது.


பூசகர் வீட்டில் 24 பவுண் நகைகளைத் திருடியவர் அகப்பட்டார்!
[Saturday 2022-02-19 08:00]

யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில், பட்டப்பகலில் பூசகர் ஒருவரின் வீட்டில் இருந்து 24 பவுண் தங்க நகைகளைத் திருடிய மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலணையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நிலையில் திருட்டு நகைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.


தினமும் இரண்டு முறை மின்வெட்டுக்கு அனுமதி!
[Saturday 2022-02-19 08:00]

தினமும் ஒரு மணி நேரம் மற்றும் 45 நிமிடங்கள் என இரண்டு கட்டங்களாக மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.


தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வுக்கான துரும்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயம்: -ஜெயவனிதா Top News
[Friday 2022-02-18 21:00]

தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வுக்கான துரும்பு வந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயம் என தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் சங்கத்தின் தலைவி காசிப்பிளை ஜெயவனிதா தெரிவித்துள்ளார். கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தமிழீழமே நிரந்தர தீர்வு அனைத்துலக குற்றவியல் நீதிமன்று முன் நடந்த போராட்டம்: Top News
[Friday 2022-02-18 21:00]

​சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தியபடி 16.02.2022 அன்று பிரித்தானியாவின் பிரதமர் இல்லத்திலிருந்து ஆரம்பமான தமிழீழ விடுதலைகான மிதியுந்துப்பயணம் பெருந்தொற்று காலத்திலும் இன்று (18) நெதர்லாந்து சென்றுள்ள நிலையில் அங்கு அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்று முன் தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி எழுட்சிமிகு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.


வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு நான்காவது டோஸ் வழங்கத் தீர்மானம்!
[Friday 2022-02-18 21:00]

இலங்கையில் பயன்படுத்தப்படும் சில தடுப்பூசிகள் சில நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு நான்காவது தடுப்பூசி மருந்தை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சில நாடுகள் சினோபாம் தடுப்பூசியை கொவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியாக ஏற்றுக்கொள்ளவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேல குணவர்தன இன்று தெரிவித்துள்ளார்.


கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை ஹிட்லருடன் ஒப்பிட்ட எலான் மஸ்க்: எதிர்ப்பும் ஆதரவும்
[Friday 2022-02-18 21:00]

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டு வெளியிட்ட ட்வீட் கடும் விமர்சனத்துள்ளாகியுள்ளது. கனடாவில், ட்ரக் சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும் என்ற விதி அறிமுகம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே ட்ரக் சாரதிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விடயம் அனைவரும் அறிந்ததே.


மலையக மக்களின் அரசியல் ஆவணம் 21 ஆம் திகதி இறுதி வடிவம் பெறும்: மனோ கணேசன்
[Friday 2022-02-18 21:00]

இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவணம் எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பில் இறுதி வடிவம் பெறும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.


இத்தாலியில் இலங்கை பெண்ணை ஆவி கொலை செய்ததா?மகன் அதிர்ச்சித் தகவல் Top News
[Friday 2022-02-18 21:00]

இத்தாலியில் இலங்கைப் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மகன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். மிலான் நகரத்தில் உள்ள தனது வீட்டில் இலங்கை பெண்ணை கொலை செய்ததாக கூறும் 25 வயதுடைய மகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.


விடுவிக்கப்பட்ட 47 தமிழக மீனவர்கள் சென்னை சென்றடைந்துள்ளனர்.
[Friday 2022-02-18 21:00]

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்ட 47 தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்பினர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் SEA OF SRILANKA எனப்படும் இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பின் அருகே அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.


தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் டக்ளஸ்: சுமந்திரன்
[Friday 2022-02-18 21:00]

தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,


வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தகவல்!
[Friday 2022-02-18 20:00]

இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார்.


பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி சமயத் தலைவர்கள் கூட்டாக கைச்சாத்து
[Friday 2022-02-18 20:00]

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் சமயத் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சார்ய சுவாமிகள், கத்தோலிக்க திருச்சபையின் யாழ் பேராயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ,தென்னிந்திய திருச்சபையின் யாழ் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா , யாழ் மாவட்ட ஜமையத்துல் உலமா தலைவர் அல் ஹச் அப்துல் அஸீஸ் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.


பாராளுமன்றம் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் தீர்வைத் தராது!
[Thursday 2022-02-17 08:00]

ஆட்சியில் உள்ளவர்களுக்கு நெருக்குதல்களை நாம் உருவாக்காவிட்டால் பாராளுமன்றம் தமிழீழத் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு தீர்வைத் தராது என, ஆறு கட்சிகள் இணைந்து நடத்திய ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும் கருத்தரங்கில் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


மாகாண சபை இல்லாமல் போகலாம்!
[Thursday 2022-02-17 08:00]

எம்மிடம் இருக்கின்ற சிலவற்றை நாம் பாதுகாக்க நினைக்கின்றோம். ஆனால் அரசாங்கம் தமிழ் மக்களிடம் உள்ள எல்லாவற்றையும் பறிக்க முயற்சி செய்து வருகிறது என ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


டொலரின் பெறுமதி 300 ரூபா வரை உயரும்!
[Thursday 2022-02-17 08:00]

வருட இறுதிக்குள் 300 ரூபா வரை டொலரின் பெறுமதி அதிகரிக்கக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


உள்ளூர் துப்பாக்கியுடன் இளைஞன் கைது!
[Thursday 2022-02-17 08:00]

மட்டக்களப்பு - ஆயித்தியமலை பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாகியுடன் 24 வயது இளைஞன் ஒருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.


இருண்ட யுகம் உருவாகி வருகிறது!
[Thursday 2022-02-17 08:00]

தற்போதைய அரசின் கீழ் ஊடகவியலாளர்களுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இருண்ட யுகம் ஒன்று உருவாகி வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.


சுவிசில் இருந்து இரகசியமாக நாடு கடத்தப்பட்ட தமிழ் இளைஞன்!
[Thursday 2022-02-17 08:00]

சுவிட்சர்லாந்தில் இரகசியமான முறையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் நிட்வால்டன் (Nidwalden ) மாநிலத்தின் அகதித் தஞ்சம் கோரி வசித்து வந்தவரே இரகசியமான முறையில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்!
[Thursday 2022-02-17 08:00]

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் அரசாங்கம் தொடர்புபட்டிருந்தாலும் இல்லை என்றாலும், நாட்டில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். இதன் உண்மையான பின்னணியை கண்டு பிடிப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்தால் நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூற முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.


முடங்கியது வீரவன்சவின் முகநூல்!
[Thursday 2022-02-17 08:00]

அமைச்சர் விமல் வீரவன்சவின் முகநூல் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் வீரவன்சவின் தனிப்பட்ட முகநூல் கணக்கிற்குள் எவரே பிரவேசித்துள்ளதாகவும் சில நாட்களாகவே தம்மால் முகநூலை பயன்படுத்த முடியவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


பத்திரிகை ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம் ஞாபகார்த்த முத்திரை வெளியீடு! Top News
[Thursday 2022-02-17 08:00]

தமிழ் பத்திரிகை ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகத்தின் ஜனன தின நூற்றாண்டு (1921-2021) விழாவும், ஞாபகார்த்த முத்திரை வெளியீடும் நேற்று மாலை ஸ்ரீ சத்ய சாயி, சீரடி பாபா மத்ய நிலையத்தின் அறங்காவலரும் தலைவருமான எஸ். என். உதயநாயகம் தலைமையில் கொழும்பு 13 சாயி நிலையத்தில் நடைபெற்றது.


சி.சி.டி.வி காட்சிகளை துருவும் பொலிசார்!
[Thursday 2022-02-17 08:00]

பிலியந்தலவில் உள்ள ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது, தாக்குதலை மேற்கொண்டவர்கள் பயன்படுத்திய சொகுசு கார், மோட்டார் சைக்கிளின் வாகன இலக்கங்களை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரையில் சுமார் 100 சி.சி.டி.விகளை பொலிஸார் ஆராய்ந்துள்ளனர்.


காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!
[Wednesday 2022-02-16 18:00]

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் எதிர்வரும் 20ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.


தமிழ் தேசிய கட்சிகளின் கருத்தரங்கு - மாவை பங்கேற்கவில்லை! Top News
[Wednesday 2022-02-16 18:00]

யாழ்ப்பாணத்தில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், "ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும்" எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு நடைபெற்றுள்ளது.


பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை! Top News
[Wednesday 2022-02-16 18:00]

பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.


சர்வதேச போட்டிக்குச் செல்லும் குத்துச்சண்டை வீரர்கள் கௌரவிப்பு! Top News
[Wednesday 2022-02-16 18:00]

உலகக்கிண்ண கிக்பொக்சிங் போட்டிக்கான தெரிவுப் போட்டிக்குத் தெரிவாகிய 14 வீர, வீராங்கனைகளை யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கெளரவித்துள்ளார்.

Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா