Untitled Document
May 20, 2024 [GMT]
வீட்டை விட்டு ஓடிப் போன ஜோன்ஸ்டன்! - நீதிமன்றம் பிடியாணை.
[Thursday 2022-06-09 09:00]

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே பிடியாணை பிறப்பித்துள்ளார்.


ஒரே இரவில் நாட்டைச் சீரழித்த ஜனாதிபதி!
[Thursday 2022-06-09 09:00]

ஒரே இரவில் ஜனாதிபதி எடுத்த முட்டாள்தனமான முடிவால் முழு நாடுமே சீரழிந்துள்ளது என்றும் உரத்தடை என்ற அவரது முடிவால் இன்று நாடு உணவு நெருக்கடியையும் பெரும் பஞ்சத்தையும் சந்தித்து வருகிறது என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்த முட்டாள்தனமான முடிவுகளால் நாட்டை சீரழிந்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.


அமைச்சர் பிரசன்னவுடன் அமரமாட்டேன்!
[Thursday 2022-06-09 09:00]

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நீதிமன்றத்தால் குற்றவாளியாக காணப்பட்டால் அவருடன் இந்த இடத்தில் என்னால் இருக்க முடியாது . நான் இருக்கப்போவதும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


கடவுச்சீட்டை மஹிந்த ஒப்படைக்கவில்லை!
[Thursday 2022-06-09 09:00]

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு அவரது கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும் அவர் அதனை ஒப்படைக்கவில்லை என நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.


அதிகாலையில் இருளில் மூழ்கிய இலங்கை!
[Thursday 2022-06-09 09:00]

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. கொழும்பு, கண்டி, கம்பஹா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல இடங்களில் இவ்வாறு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. எனினும் அந்த மின்தடைக்கான காரணம் என்னவென்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை


அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!
[Thursday 2022-06-09 09:00]

மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.


நானாட்டன் மக்கள் பதற்றமடைய வேண்டாம்!
[Thursday 2022-06-09 09:00]

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் இன்று காலை சுனாமி ஒத்திகை இடம் பெற உள்ளதால் அயல் கிராம மக்கள் அச்சமடைய தேவையில்லை என நானாட்டான் பிரதேச செயலாளர் மா. ஸ்ரீஸ்கந்த குமார் தெரிவித்தார்.


பதவி விலகுகிறார் பசில் ராஜபக்ஷ!
[Wednesday 2022-06-08 18:00]

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமுன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ, தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.


பசிலுக்குப் பதிலாக நாடாளுமன்றம் செல்கிறார் தம்மிக்க பெரேரா!
[Wednesday 2022-06-08 18:00]

தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் அவருக்கு முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த 91 பேர் கைது!
[Wednesday 2022-06-08 18:00]

நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த 91 சந்தேகநபர்களைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


சுயாதீனமாக செயற்படப் போவதாக சம்பிக்க அறிவிப்பு!
[Wednesday 2022-06-08 18:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில்சுயாதீன உறுப்பினராக செயற்படப் போவதாக அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்துள்ள அவர் இது குறித்து கட்சிக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


ராஜீவ் காந்தியை தாக்கும் காட்சியை படம் பிடித்தவர் மரணம்!
[Wednesday 2022-06-08 18:00]

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் தாக்குவதை படம் பிடித்த பிரபல புகைப்படபிடிப்பாளர் சேன விதானகம அவரது 80 ஆவது வயதில் காலமானார்.


கைது செய்வதை தடுக்குமாறு கோரி ஜொன்ஸ்டன் மனு!
[Wednesday 2022-06-08 18:00]

தன்னை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.


மின்கட்டண அதிகரிப்புக்கு அனுமதியில்லை!
[Wednesday 2022-06-08 18:00]

மின்சார கட்டண உயர்வு தொடர்பில் வலுசக்தி மற்றும் மின்சாரதுறை அமைச்சர் காஞ்சன விஜயசேகரவிற்கும் இலங்கையின் மின்சார சபையின் தலைமைக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.


மீசாலையில் சங்கிலி அறுப்பு!
[Wednesday 2022-06-08 18:00]

யாழ்ப்பாணம் - மீசாலை, டச்சு வீதி ஊடாக தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்ற தாயின் சங்கிலியை வழிப்பறி கொள்ளையர்கள் அபகரித்துள்ளனர்.


இன்றிரவு முதல் பணிப்புறக்கணிப்பு!
[Wednesday 2022-06-08 18:00]

இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. பாதகமான வகையில் மின்சார சட்டம் திருத்தப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இவ்வாறு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


செல்லப்பிராணிகளை கொஞ்ச வேண்டாம்!
[Wednesday 2022-06-08 18:00]

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடு காரணமாக, வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை அளவுக்கதிகமாக கொஞ்சி, அதன்மூலம் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ளுமாறு, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.


முழுக்கடனையும் தீர்க்க முன்வந்தால் அரசியல் தீர்வை வழங்கத் தயாரா?
[Wednesday 2022-06-08 08:00]

நாட்டின் கடன் தொகையான 50 பில்லியன் டொலரை புலம்பெயர் தமிழர்கள் செலுத்துவதற்கு முன்வந்தால், வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு தயாரா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் கேள்வி எழுப்பினார்.


கோ ஹோம் கோட்டாவை பெரும்பாலானோர் மறந்து விட்டனர்!
[Wednesday 2022-06-08 08:00]

கோ ஹோம் கோட்டா என்பதை பெரும்பாலானோர் தற்போது மறந்து விட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷ சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது விசேட உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


துப்பாக்கி, போதைப்பொருளுடன் கைதான இரு தமிழர்கள்!
[Wednesday 2022-06-08 08:00]

துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் குறித்த விசாரணையில் இரண்டு தமிழர்கள் மீது யோர்க் பிராந்திய பொலிஸார் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.


ரணில் கிளப்பிய பீதி - மீண்டும் வரிசையில் முண்டியடிப்பு!
[Wednesday 2022-06-08 08:00]

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று வாரங்களுக்கு எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்படலாம் என அறிவித்ததை தொடர்ந்து எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படலாம் என்ற போலியான தகவல்கள் பரவின.


21 ஐ நிறைவேற்ற விடமாட்டார் பசில்!
[Wednesday 2022-06-08 08:00]

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தினை நிறைவேற்ற பஷில் ராஜபக்ஷ ஒருபோதும் இடமளிக்க மாட்டார். இரட்டைக் குடியுரிமையை நீக்கிக் கொள்ளவோ, பாராளுமன்றத்திலிருந்து வெளியேறவோ அவர் விரும்பவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க தெரிவித்தார்.


சுயாதீன அணியில் சம்பிக்க?
[Wednesday 2022-06-08 08:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பாராளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நந்தலால் வீரசிங்கவை நீக்குவதற்கு முயற்சி!
[Wednesday 2022-06-08 08:00]

மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து நந்தலால் வீரசிங்கவை நீக்குவதற்கான முயற்சிகள் குறித்து மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற நிறைவேற்று அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.


இரவு விடுதிகளில் கூத்தடிக்கும் அமைச்சர்கள்!
[Wednesday 2022-06-08 08:00]

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சில உறுப்பினர்கள் ஹெரோயின் போதைப்பொருளை உட்கொண்டு இரவு விடுதிகளில் விபச்சாரிகளுடன் நேரத்தை செலவிடுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.


எம்.பிக்களுக்கு பலாக்காய், வற்றாளைக் கிழங்கு வழங்க உத்தரவு!
[Wednesday 2022-06-08 08:00]

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பலாக்காய், ஈரப்பலா, வற்றாளைக் கிழங்கு என்பவற்றை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.


சிறைத்தண்டனை தீர்ப்புக்கு எதிராக பிரசன்ன ரணதுங்க மேன்முறையீடு!
[Wednesday 2022-06-08 08:00]

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தனக்கு விதிக்கப்பட்ட 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைதண்டனைக்கு எதிராக மேன்முறையீட்டு மனுவொன்றை சட்டத்தரணிகளின் ஊடாக தாக்கல் செய்தார்.


அடுத்து 3 வாரங்கள் கடினமாக காலமாக இருக்கும்!
[Tuesday 2022-06-07 18:00]

அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா