Untitled Document
May 8, 2024 [GMT]
அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணைக்குழு சந்திப்பு!
[Sunday 2022-05-29 07:00]

இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் ஆறாம் திகதி இந்தக் கலந்துரையாடல் தேர்தல் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.


500 கொள்கலன்கள் தேக்கம்!
[Sunday 2022-05-29 07:00]

திறந்த கணக்குகள் மூலம் இறக்குமதி செய்வதை தடை செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சுமார் 500 கொள்கலன்கள் விடுவிக்க முடியாதுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


கடவுச்சீட்டுக்காக முண்டியடிக்கும் மக்கள்!
[Sunday 2022-05-29 07:00]

கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக பெருந்தொகையான மக்கள் வௌ்ளம் நாள்தோறும் முண்டியடிக்கத் தொடங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.


சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 74 வயது தாத்தா!
[Sunday 2022-05-29 07:00]

இலங்கையில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இன்று தோற்றியுள்ளார். நெலுவ - களுபோவிட்டியன பகுதியில் வசிக்கும் கலன்கொடகே சந்திரதாச என்ற வயோதிபரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.


நெல்லியடியில் வீடு உடைத்து திருடிய இருவர் கைது!
[Sunday 2022-05-29 07:00]

நெல்லியடியில் வீடொன்றை உடைத்து நகைகள் மற்றும் அலைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கறுப்பு உடையுடன் பாரிய மக்கள் பேரணி! - பொலிசார் கண்ணீர் புகை தாக்குதல்! Top News
[Saturday 2022-05-28 18:00]

ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய கறுப்பு உடைப் பேரணி இடம்பெற்று வருகிறது. இதன் மீது பொலிசார் தற்போது கண்ணீர் புகை மற்றும் நீர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


இந்தியாவிடம் தொடர் ஒத்துழைப்புக் கோருகிறது இலங்கை!
[Saturday 2022-05-28 18:00]

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாட்டினை எட்டும் வரை அத்தியாவசிய பொருட்கள், கொள்வனவு, எரிபொருளுக்கான கடன் மற்றும் கடன் மீள் செலுத்தலை ஒத்தி வைத்தல் உள்ளிட்டவற்றில் இந்தியாவின் தொடர் ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.


பசிலின் நகர்வால் உடைகிறது மொட்டு!
[Saturday 2022-05-28 18:00]

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாவதை தடுக்கும் ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் எதிர்க்கின்ற காரணத்தால் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி இரண்டாக பிளவுபடும் நிலையில் உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.


பொலிஸ் பாதுகாப்புக் கோரும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!
[Saturday 2022-05-28 18:00]

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மேலதிகமாக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பல எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி! Top News
[Saturday 2022-05-28 18:00]

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.


காணாமல் போன சிறுமி பாத்திமா ஆயிஷா சடலமாக மீட்பு!
[Saturday 2022-05-28 18:00]

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் நேற்று காணாமற் போன சிறுமி வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு குறித்த இடத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


மின்சாரக் கட்டணம் 3 மடங்கால் அதிகரிக்கிறது?
[Saturday 2022-05-28 18:00]

மின்சாரக் கட்டணம் 300-400% அதிகரிக்கப்படலாம் எனவும் அதிகமாக மின்சாரத்தை பாவிக்கும் நுகர்வோருக்கு மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்பட வேண்டும் என தாம் நம்புவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


தலை சிதறி உயிரிழந்த இந்தியப் பிரஜை! Top News
[Saturday 2022-05-28 18:00]

வவுனியா நகரில் பஜார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு 11.30 மணியளவில் தலை சிதறிய நிலையில் இந்தியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


கஞ்சா கடத்திய கணவன்- மனைவி கைது!
[Saturday 2022-05-28 18:00]

முல்லைத்தீவு - முத்துஜயன்கட்டுப் பகுதியில் கஞ்சா கடத்திச் சென்ற கணவன் மனைவியை ஒட்டுசுட்டான் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். ஒட்டுசுட்டான் தொட்டியடிப் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட பொலிஸார் உந்துருளியில் சென்ற கணவன் மனைவி இருவரையும் சோதனை செய்தனர்.


ஜனாதிபதி பதவி விலகி நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும்!
[Saturday 2022-05-28 07:00]

தற்போதுள்ள அரசாங்கம் புதிய அரசாங்கம் இல்லை” எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், “பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டு, புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


கச்சதீவை வழங்க முடியாது!
[Saturday 2022-05-28 07:00]

கச்சதீவை வழங்க முடியாது அதில் உடன்பாடு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கச்சதீவை மீட்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பில் கருத்துரைக்கையிலேயே சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி மேற்படி தெரிவித்தார்.


மேலும் 2.5 பில்லியன் டொலர் கோருகிறது இலங்கை!
[Saturday 2022-05-28 07:00]

இந்தியாவிடமிருந்து பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஆசிய ஒத்துழைப்பு ஒன்றிணைவின் ஒத்திவைக்கப்பட்ட ஒதுக்கீடுகளிலிருந்து மற்றுமொரு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்ப்பதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


வட்டுக்கோட்டையில் வீட்டுக்குள் இரண்டு பெண்கள் சடலங்களாக மீட்பு!
[Saturday 2022-05-28 07:00]

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.


யாழ் நூலக எரிப்பு, அடையாள அழிப்பின் ஆறா வடு! Top News
[Saturday 2022-05-28 07:00]

யாழ் பொது நூலக எரிப்பின் 41 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி நடைபெறவுள்ளது.


டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி!
[Saturday 2022-05-28 07:00]

டெங்கு காய்ச்சல் காரணமாக 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடுவிலைச் சேர்ந்த பரசுதன் யோயிதா (வயது-5) என்ற சிறுமியே உயிரிழந்தார்.


ஊடக நிறுவனங்களின் தலைவர்களை பதவி விலக உத்தரவு!
[Saturday 2022-05-28 07:00]

அரசாங்கத்தின் அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அறிவிப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


காலிமுகத்திடல் போராட்டம் இன்று 50 ஆவது நாள்!
[Saturday 2022-05-28 07:00]

காலிமுகத்திடல் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் காலி முகத்திடலை மையமாக கொண்டு பாரிய போராட்டமொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.


இலங்கைக்கு உதவ ரஷ்யா பரிசீலனை!
[Saturday 2022-05-28 07:00]

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு இலங்கை விடுத்துள்ள கோரிக்கையை ரஷ்ய தரப்பு பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உதவி வழங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தற்போது பரிசீலித்து வருவதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடம் நகைகளை அபகரித்த யுவதி கைது!
[Saturday 2022-05-28 07:00]

வவுனியாவில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் 21 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை!
[Friday 2022-05-27 16:00]

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. போலியான தகவல்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் அவரை குற்றவாளியாக அறிவித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.


சம்பள அதிகரிப்பு - தீர்மானம் எடுக்கவில்லை!
[Friday 2022-05-27 16:00]

இடைக்கால வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள பிரதமர் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


சஷி வீரவன்ச தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு!
[Friday 2022-05-27 16:00]

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை மிரட்டல்!
[Friday 2022-05-27 16:00]

முல்லைத்தீவு -புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா