Untitled Document
May 19, 2024 [GMT]
ரயிலில் கார் சிக்கி ஒருவர் பலி! Top News
[Thursday 2018-11-15 18:00]

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட ரயிலுடன்- யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கார் மோதியதில் காரை ஓட்டிச்சென்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 40) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.


ரூபா மதிப்பு மீண்டும் சரிவு!
[Thursday 2018-11-15 18:00]

இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 178.10 ரூபாவாக பதிவாகியுள்ளது.


கஞ்சாவுடன் நால்வர் கைது!
[Thursday 2018-11-15 18:00]

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் சென்ற பஸ்ஸில் கஞ்சா கடத்திச் சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடமிருந்து 1 கிலோ 580 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் நேற்று மாலை முதல் இன்று திகாலை வரை இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


ஹெரோயினால் மாணவனுக்கு சிறை!
[Thursday 2018-11-15 18:00]

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாதகால சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் இன்று உத்தரவிட்டார். ஒரு மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க மாணவனை சான்று பெற்ற சீர்திருத்தப் பாடசாலையில் சேர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் கட்டளை வழங்கியது.


நெருங்கியது கஜா!
[Thursday 2018-11-15 10:00]

கஜா புயலினால் வடக்கில் கடும் காற்றுடன் பெரு மழை கொட்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கஜா புயல் இலங்கைக்கு வடகிழக்கே தற்போது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 480 கிலோ மீற்றர் தூரம் அளவில் வங்காள விரிகுடா கடலின் மத்தியில் நிலை கொண்டுள்ளது.


ஜனாதிபதி நிராகரித்தார்!
[Thursday 2018-11-15 09:00]

நாடாளுமன்றத்தில் நேற்று மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்றிரவு சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.


இன்றும் குழப்பம் வெடிக்கும்?
[Thursday 2018-11-15 09:00]

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை நடத்தவுள்ளார். இதன்போது பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல் சம்பந்தமாக தீர்மானிக்கப்பட உள்ளது.


முல்லைத்தீவை மிரட்டும் 'கஜா'!
[Thursday 2018-11-15 09:00]

முல்லைத்தீவு மாவட்டம்


ஜனாதிபதியிடம் போகமாட்டோம்!
[Thursday 2018-11-15 09:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பில், இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற இருந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணி கலந்து கொள்ளாது என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


நிரந்தர தீர்வு உறுதியாம்!
[Thursday 2018-11-15 09:00]

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்தவுடன் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படுவது உறுதி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.


சதியில் வீழ்ந்தோம்!
[Thursday 2018-11-15 09:00]

மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தாங்கள் அனைவரும் எதிரிகளின் சதி வலையில் மீளமுடியாமல் தவிப்பதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


மைத்திரிக்கு மகிந்த அழுத்தம்!
[Thursday 2018-11-15 09:00]

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மஹிந்த ராஜபக்ச அழுத்தம் கொடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இறுதித் தீர்ப்பு கிடைக்கும் வரை, மீண்டும் நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்குமாறு மைத்திரியிடம் மஹிந்த, கோரியுள்ளார்.


வீதியில் இறங்குகிறது ஐதேக!
[Thursday 2018-11-15 09:00]

ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கான ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இன்று பகல் 2 மணிக்கு கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் பௌத்த தேரர்கள், சிவில் அமைப்புக்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ரணிலுக்கு கிடைக்காது பதவி!
[Thursday 2018-11-15 09:00]

பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை ஒரு போதும் நியமிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய அல்லது நவீன் திசாநாயக்க ஆகியோரில் ஒருவர் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டால் அதனை பரிசீலிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


குழப்பங்களைத் தீர்த்த சம்பந்தன்!
[Wednesday 2018-11-14 18:00]

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமையை முடிவுக்குக் கொண்டு வரும் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாட்டில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


முடிவு ஜனாதிபதி கையில்!
[Wednesday 2018-11-14 18:00]

சபாநாயகரிடமிருந்து கடிதம் கிடைக்கப் பெற்றதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பார் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.


மஹிந்தவே பிரதமர், நாங்களே அரசாங்கம்!
[Wednesday 2018-11-14 18:00]

பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும், சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர், நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம். இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.


முடிவில்லாப் போராட்டம்! Top News
[Wednesday 2018-11-14 18:00]

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் 631 நாட்களை கடந்த நிலையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ்.நல்லூர் கந்தன் ஆலய முன்றிலில் இன்று காலை 11 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


பலிக்கடா ஆக்கப்பட்ட மஹிந்த!
[Wednesday 2018-11-14 17:00]

சில சதிகாரர்களின் வலைகளில் மஹிந்த ராஜபக்‌ஷ, சிக்கிக்கொண்டார் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டுமென்ற ஆசையில், மஹிந்த ராஜபக்‌ஷவை பலிகொடுத்துள்ளார் என்றும், ஜேவிபி தலைவர் அநுரகுமார ​திசாநாயக்க தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.


வாக்கெடுப்பு நடக்க வெளியேறிய மஹிந்த! Top News
[Wednesday 2018-11-14 17:00]

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார். சபைக்கூடும் முன்பே சபைக்குள் வந்து அமர்ந்திருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சபை நடவடிக்கைகளை சிரித்தவாறே அவதானித்துக் கொண்டிருந்தார். இடை இடையே ஐக்கிய தேசியக் கட்சியை பார்த்து கைகளையும் காட்டிக்கொண்டிருந்தார்.


பாடசாலை சென்ற சிறுமி மாயம்!
[Wednesday 2018-11-14 17:00]

மட்டக்களப்பு- மயிலம்பாவெளி சவுக்கடியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் இன்று காலை பாடசாலைக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சவுக்கடியைச் சேர்ந்த ஜேசுதாஸ் ஜென்சிசா என்ற சிறுமியே காணாமல் போயுள்ளார்.


மூவர் ரணிலிடம் தாவினர்!
[Wednesday 2018-11-14 17:00]

அமைச்சர்கள் ஏ.எச்.எம். பௌசி, பியசேன கமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஆகியோர் இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இவர்கள், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அளித்ததுடன், மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையிலும் கையெழுத்திட்டனர்.


யாழ்.நகரில் பட்டப்பகலில் கத்திக்குத்து!
[Wednesday 2018-11-14 17:00]

யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று மதியம் பாதுகாப்பு உத்தியோகத்தரை இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கத்திக்குத்துக்கு இலக்காகிய சுரேஸ் என்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மீண்டும் ஐதேகவில்!
[Wednesday 2018-11-14 17:00]

வசந்த சேனநாயக்கவும், வடிவேல் சுரேஸும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைந்துள்ளார். வனஜீவராசிகள் மற்றும் சுற்றுலா அமைச்சராக புதிய அமைச்சரவையில் பதிவியேற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க தமது அமைச்சுப் பதவியிலிலிருந்து விலகுவதாகவும், இதுதொடர்பில், இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.


மகிந்தவுடன் டில்ஷான்! Top News
[Wednesday 2018-11-14 17:00]

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரட்ன டில்ஷான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளார். இன்று பிற்பகல் கட்சியின் தலைமையகத்துக்குச் சென்று உறுப்புரிமையைப் பெற்றதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் டில்ஷான் மொட்டு வேட்பாளராகப் போட்டியிடுவாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.


ஆதரவாளர்களால் பதற்றம்! Top News
[Wednesday 2018-11-14 17:00]

மஹிந்த ராஜபக்ஷவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் ஆதரவாளர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று முற்பகல் பெருமளவில் கூடி வாய்த்தர்க்கத்தல் ஈடுபட்டதால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டது. எனினும் , பொலிஸார், கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததால் நிலைமைகள் கட்டுப்படுத்தப்பட்டன.


மகிந்த அரசு தோற்கடிப்பு! Top News
[Wednesday 2018-11-14 13:00]

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, 122 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார். எனினும், இதனை மகிந்த ராஜபக்ச ஏற்க மறுத்து வருகிறது.


யாருக்கு அரியாசனம்?
[Wednesday 2018-11-14 08:00]

பாரா

Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா