Untitled Document
May 19, 2024 [GMT]
ஜனாதிபதி தேர்தலை தடுக்கக் கோரி வழக்கு!
[Thursday 2019-10-03 17:00]

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் காலி மேயர் மெத்சிறி டி சில்வா குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.


கோத்தாவை இன்று சந்திக்கிறது சுதந்திரக் கட்சி!
[Thursday 2019-10-03 17:00]

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இன்று இரவு மீண்டும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதா க சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.


ஐதேக மாநாட்டில் சஜித்துக்கு அங்கீகாரம்! Top News
[Thursday 2019-10-03 17:00]

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று காலை நடைபெற்ற ஐ.தே.கவின் 77ஆவது மாநாட்டிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேட்பாளராக சஜித் பிரேமதாசவை கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அங்கிீகரிப்பதாக கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.


போட்டியில் குதிக்கிறார் குமார வெல்கம!
[Thursday 2019-10-03 17:00]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் சார்பில், சுயேட்சை வேட்பாளராக குமார வெல்கம ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளார்.


யோசித ராஜபக்ஷவின் திருமணம்! Top News
[Thursday 2019-10-03 17:00]

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வன் யோசித ராஜபக்ஷவின் திருமண நிகழ்வு இன்று இடம்பெற்றது. கோல் பேஸ் ஹோட்டலில் இந்த திருமண வைபவம் இடம்பெற்றது, ஆனந்த ஜயசேகரவின் புதல்வி நிதீஷா ஜயசேகர மற்றும் யோசித ராஜபக்ஷவின் திருமண நிகழ்வு மிக கோலாகலமான முறையில் இடம்பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.


இந்திய மீனவர்கள் நால்வர் கைது!
[Thursday 2019-10-03 17:00]

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்தொழில் நீர்வள திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மீனவர்கள், தமிழக மாநிலம் - நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.இவர்களிடம் இருந்து படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


பளையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!
[Thursday 2019-10-03 17:00]

பளை- அத்திரான் பகுதியில், நேற்று மாலை கடற்படை புலனாய்வு பிரிவினர் மேற்கண்ட சுற்றிவளைப்பின் போது, 12 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா பொதிகளுடன், 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞன் தாளையடி பகுதியைச் சேர்ந்தவரென, விசாரணைகளின் இருந்து தெரியவந்துள்ளது.


கோத்தா வெளிநாடு செல்ல அனுமதி!
[Thursday 2019-10-03 17:00]

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ, மருத்துவ பரிசோதனைக்காக வௌிநாடு செல்வதற்கு விசேட நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை அவர் வௌிநாடு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


சர்வதேசம் தீர்த்து வைக்க வேண்டும்! Top News
[Thursday 2019-10-03 07:00]

இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு சர்வதேச சமூகம், அதிக பிரயத்தனம் கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


குடியுரிமை வழங்கியது சட்டவிரோதம்!
[Thursday 2019-10-03 07:00]

குடியுரிமை சட்டத்தின் 19 ஆவது அத்தியாயத்துக்கு அமைய, இரட்டை பிரஜாஉரிமை தொடர்பில் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் அதற்குப் பொறுப்பான அமைச்சருக்கு மட்டுமே உள்ள நிலையில், கோத்தாபய ராஜபக்ஷவுக்கான குடியுரிமை சான்றிதழை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வழங்கியுள்ளார்.இது சட்டவிரோதமானது என சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று வாதிட்டார்.


ஐ.நாவின் கோரிக்கையை நிராகரித்த அவுஸ்ரேலியா!
[Thursday 2019-10-03 07:00]

அவுஸ்ரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டிருக்கும் பிரியா-நடேஸ் குடும்பத்தை கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிலிருந்து விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரியிருந்த போதிலும் அதனை அவுஸ்ரேலிய அரசு நிராகரித்துள்ளது.


கோத்தா போட்டியிட முடியாவிட்டால்?
[Thursday 2019-10-03 07:00]

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிட முடியாத சூழ்நிலை எழுந்தால் அது புதியதோர் அரசியல் சூழ்நிலையாக இருக்கும், அத் தருணத்தில் சிந்தித்தே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம் எடுக்கும் என்று கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.


20 பேர் இதுவரை கட்டுப்பணம்!
[Thursday 2019-10-03 07:00]

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை 20 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவர்களில் அரசியல் கட்சிகள் சார்பாக இதுவரை 10 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். 10 பேர் சுயேட்சை குழு மற்றும் ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்களாவர் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


பதாகைகள் கிழிக்கப்பட்டதால் நள்ளிரவில் பதற்றம்!
[Thursday 2019-10-03 07:00]

கொழும்பில் மருதானை சந்தியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பதாதைகள் கிழிக்கப்பட்டமையினால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


யோஷிதவுக்கு பதவி உயர்வு - திருமணப் பரிசு!
[Thursday 2019-10-03 07:00]

லெப்.யோஷித ராஜபக்ஷ, தற்காலிகமாக லெப்.கொமாண்டராக பதவி உயர்த்தப்பட்டு கடற்படை தலைமையகத்தில் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் என கடற்படை தெரிவித்துள்ளது.


வெற்றி பெறுவது உறுதி!
[Thursday 2019-10-03 07:00]

தனக்கு எதிராக எந்த வகையான சூழ்ச்சிகளை செய்து, வழக்குகளைத் தாக்கல் செய்தாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


சம்பளம் பெறாத ஜனாதிபதி!
[Thursday 2019-10-03 07:00]

ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால், தனது சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறமாட்டேன் என்றும் அவை அனைத்தையும் மக்களுக்கான தியாகம் செய்வேன் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் - சம்பந்தனுடன் ஆலோசனை! Top News
[Wednesday 2019-10-02 17:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வகையான முடிவை எடுக்க வேண்டுமென்பது தொடர்பில், இரா. சம்பந்தனை வடக்கு - கிழக்கின் மதத் தலைவர்கள், பத்தி எழுத்தாளர்கள்,மற்றும் புத்திஜீவிகள் சிலர், இன்று நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.


மொட்டு பணியாவிடின் சஜித்துக்கு ஆதரவு!
[Wednesday 2019-10-02 17:00]

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி பேச்சுக்கள் தோல்வியடைந்தால், சஜித் பிரேமதாசவை முன்னிறுத்தியுள்ள ஜனநாயக தேசிய கூட்டணிக்கு ஆதரவு அளிக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


அவிசாவளையில் வெடித்த குழு மோதல்!
[Wednesday 2019-10-02 17:00]

அவிசாவளை – தல்துவ பகுதியில் இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல், குழு மோதலாக உருவெடுத்ததை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. பேருந்து ஒன்றின் சிங்கள சாரதிக்கும் முச்சக்கரவண்டியொன்றின் முஸ்லிம் சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதலாக மாறியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


கோத்தாவின் வாயை மூடி வைத்துள்ள சட்டத்தரணிகள்!
[Wednesday 2019-10-02 17:00]

ஊடகங்கள் முன் கருத்து தெரிவிப்பதை தவிர்க்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ சட்ட ஆலோசனையின் அடிப்படையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தவிர்த்து வருகிறார் என அவரது பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.


இனக்குரோதம், வன்முறையை தூண்டுகிறார் ஞானசாரர்!
[Wednesday 2019-10-02 17:00]

இலங்கை சிங்­கள பௌத்­த ­நாடு. இதை­ ஏற்­ப­வர்கள் இந்­த­ நாட்டில் இருக்­கலாம். ஏனையோர் தங்­க­ள­து­ உ­டமை­க­ளுடன் வெளி­யே­றலாம் என்ற ஞான­சா­ர­ தேரரின் கருத்து இனங்­க­ளுக்­கி­டையில் குரோ­தத்­தையும் வன்­மு­றை­யையும் தூண்­டு­வ­தாக அமைந்­துள்­ளது என்று ஈபி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­வித்துள்ளார்.


கோத்தாவின் தலைவிதியை தீர்மானிக்கும் விசாரணை ஆரம்பம்!
[Wednesday 2019-10-02 17:00]

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை, மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


நீராவியடியில் பிள்ளையார் இல்லை, புத்தரே இருந்தார்!
[Wednesday 2019-10-02 17:00]

முல்லைத்தீவு - நாயாறு பகுதியில் எந்தவொரு இந்து ஆலயமும் இருக்கவேயில்லை. ஆரம்பத்திலிருந்து குருகஹந்த என்ற பௌத்த விகாரை மாத்திரமே காணப்பட்டது என்று மகிந்த அணி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.


பலருக்கு கோத்தாவினால் அச்சம்!
[Wednesday 2019-10-02 17:00]

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஒரே நபர் கோத்தாபய ராஜபக்ஷ தான் என்று, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பென்தர, எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.


ஆனையிறவு விபத்தில் ஹயஸ் சாரதி பலி! Top News
[Wednesday 2019-10-02 16:00]

கிளிநொச்சி- ஆனையிறவு பகுதியில், இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குடும்பத்தை குலைத்து விட்டார் சந்திராணி!
[Wednesday 2019-10-02 16:00]

ஐதேகவின் அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார தனது குடும்பத்துக்குள் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளார் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே,தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.


பாம்பு தீண்டிய பெண் மரணம்!
[Wednesday 2019-10-02 16:00]

புடையன் பாம்பு தீண்டிய நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பிள்ளைகளின் தாய், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆலடிவீதி - உடுவில் பகுதியைச் சேர்ந்த சுமன்ராஜ் சுதர்சினி (வயது 28) என்ற தாயே உயிரிழந்தவர் ஆவார்.

Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா