Untitled Document
April 19, 2024 [GMT]
அரசைத் தோற்டிக்க வேண்டும்!
[Sunday 2019-09-08 07:00]

பிள்ளைகளில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்போதைய அரசாங்கத்தை தோல்வியடைய செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பு என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவிசாவளையில் நடைப்பெற்ற மஹா ஜன எக்சத் பெரமுண கட்சியின் சம்மேளன கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.


4286 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனம்!
[Sunday 2019-09-08 07:00]

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பவுதற்காக இன்று 4286 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க இருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வியியல் கல்லூரிகளில் மூன்று வருடங்கள் பயிற்சி பெற்று வெளியேறும் டிப்ளோமாதாரிகளுக்கு இவ்வாறு இன்று நியமனம் வழங்கப்படுகிறது.


அபிவிருத்தியால் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாது!
[Saturday 2019-09-07 18:00]

தமிழ் மக்களின் சொத்துகள் அழிக்கப்படுவது மீள நடக்காமல் இருப்பதற்கு இந்த நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்க வேண்டும், வெறும் பௌதீக அபிவிருத்தியால், அரசியல் ஸ்திர தன்மையை உறுதிப்படுத்த முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.


வேட்பாளர் விவகாரம் - ரணில் மறுப்பு!
[Saturday 2019-09-07 18:00]

ஐக்கியத் தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிடவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததாக வெளியான செய்திகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சாளர் மறுத்துள்ளார். அக்கட்சியின் செயற்குழுவே இறுதி தீர்மானத்தை எடுக்கும் என்ற வகையில் தனது நோக்கம் தொடர்பில் அக்குழுவுக்கு அறிவிக்க உள்ளதாகவு பிரதமர் கூறினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


டிப்பரில் சிக்கி குடும்பஸ்தர் பலி! Top News
[Saturday 2019-09-07 18:00]

கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.


எழுக தமிழ் மூலம் தெளிவான செய்தி சொல்லப்படும்!
[Saturday 2019-09-07 18:00]

ஜனாதிபதி வேட்பாளர்கள் உட்பட சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு எழுக தமிழ் பேரணி மூலம் தெளிவான செய்தி வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


சஜித்தின் மற்றொரு பாரிய கூட்டம்! Top News
[Saturday 2019-09-07 18:00]

அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு அழுத்தம் கொடுக்கும் மற்றொரு கூட்டம் இன்று கொழும்பு சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கீழ் மட்ட உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.


முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது சுதந்திர கட்சி!
[Saturday 2019-09-07 17:00]

மொட்டு சின்னத்தை முன்னிலைப்படுத்தி முரண்பாடுகளை ஏற்படுத்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முயற்சிக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.


சஹ்ரான் குழு பற்றி 347 புலனாய்வு அறிக்கைகள்!
[Saturday 2019-09-07 17:00]

2016ம் ஆண்டு முதல் இவ்வருடம் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வரையான காலப்பகுதியில் அரச புலனாய்வுப் பிரிவினர் சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் பற்றிய 347 அறிக்கைகளை பொலிஸ்மா அதிபருக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும் அனுப்பியிருந்ததாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜாரான பிரதி பிரதி சொலிசிற்றர் ஜெனரல் தீலிப் பீரிஸ் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


வெட்கமின்றி வாக்கு கேட்க வருகின்றனர்!
[Saturday 2019-09-07 17:00]

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் முஸ்­லிம்­களின் மத ஸ்­த­லங்­க­ளையும் அவர்­க­ளது சொத்­து­க­ளையும் சேதப்­ப­டுத்­தி­ய­வர்கள் இன்று முஸ்லிம்­க­ளி­டத்தில் வந்து வெட்­க­மற்ற முறையில் வாக்­கு­க் கேட்க முனை­கின்­றனர் என்று ஐக்­கிய தேசிய கட்­சியின் பிரதித் தலை­வரும் வீட­மைப்பு, நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.


காணாமல் போயுள்ள அரச புலனாய்வு அதிகாரி!
[Saturday 2019-09-07 17:00]

அரச புலனாய்வு பிரிவில் பணியாற்றி வந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை காணவில்லை என அவரின் மனைவி நேற்று நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த அதிகாரி நேற்றுமுன்தினம் இரவு தனது மகனுக்கு அழைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டு தான் வீட்டுக்கு வருவதற்கு தாமதமாகும் என அறிவித்துள்ளதாகவும், அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனவும், அவரது மனைவி தெரிவித்துள்ளார்.


விரைவில் கம்பீரமான அழகிய யாழ்.நகர்! Top News
[Saturday 2019-09-07 17:00]

கம்பீரமாக எழுந்து நிற்கும் அழகிய நல்லூர் ஆலயம் போல் அனைவராலும் பேசப் படக்கூடிய புதியதொரு யாழ்ப்பாணம் நகரம் கட்டியெழுப்பப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர கட்டடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டிய போது இதனைத் தெரிவித்தார்.


ஊடகங்கள், சமூக ஊடகங்களுக்கு விதிமுறைகள்!
[Saturday 2019-09-07 17:00]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஊடகங்கள், சமூக ஊடகங்களுக்கு சில விதிமுறைகைள அறிமுகப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்களின்போது நடைபெறும் வெறுக்கத்தக்க பேச்சுக்களைத் தவிர்ப்பதற்காக இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தீக்கு இரையான மாணவி! Top News
[Saturday 2019-09-07 17:00]

பிரத்தியேக வகுப்பிற்குச் செல்வதற்காக தனது வீட்டில் தயாராகிக் கொண்டிருந்த பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை- காரைதீவு 10 குறிச்சி பகுதியில் இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


ரணில் - சஜித் நாளை முக்கிய சந்திப்பு!
[Saturday 2019-09-07 08:00]

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரை தெரிவு செய்வதில் தொடர்ந்து முறுகல் நிலை காணப்பட்டு வரும் சூழ்நிலையில், இறுதி இணக்கப்பாட்டை எட்டுவதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் நாளை முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் நாளை தனியாக நேருக்கு நேர் சந்தித்து பேசவுள்ளனர்.


ரணிலின் முடிவு - ஐதேகவுக்குள் குழப்பம்!
[Saturday 2019-09-07 08:00]

ஜனா­தி­பதி தேர்­தலில் தானே வேட்­பா­ள­ராக கள­மி­றங்­க­வுள்ளேன் என்றும் கட்­சியை ஒன்­றி­ணைத்து தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்கும் நட­வ­டிக்­கை­களை கையாள தயா­ரா­குங்கள் என்றும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசிய கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளிடம் நேற்று தெரி­வித்­துள்ளார். இதனால் ஐதேகவுக்கு முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.


தானே போட்டியிடுவதாக ரணில் கூறவில்லை!
[Saturday 2019-09-07 08:00]

ஜனாதிபதி தேர்தலில் தானே வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறவில்லை என தனக்கு தகவல் கிடைத்திருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


சஹ்ரானின் மடிகணினி அமெரிக்காவிடமா?
[Saturday 2019-09-07 08:00]

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மடிகணினி, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ இன் பொறுப்பில் உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த மடிகணினி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலேயே உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.


12 கட்சிகள் போட்டியிட விருப்பம்!
[Saturday 2019-09-07 08:00]

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாக 12 அரசியல் கட்சிகள் தனக்கு அறிவித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இந்த 12 அரசியல் கட்சிகளில் பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.


இளம் குடும்பஸ்தர் விபத்தில் பலி!
[Saturday 2019-09-07 08:00]

சாவகச்சேரி- மீசாலை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த அதிசொகுசு பஸ், மோட்டார்ச் சைக்கிள் மீது மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.


வாள்வெட்டுக் குழு தாக்குதல் -ஒருவர் படுகாயம்!
[Saturday 2019-09-07 08:00]

யாழ்ப்பாணம் - கோண்டாவிலில் வாள்வெட்டுக் குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் இரும்பக உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள இரும்பகத்தில், நேற்று மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


'கை'யை நம்பும் கோத்தா!
[Saturday 2019-09-07 08:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு தனக்கு கிடைக்கும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும்ம் இடையிலான 8 ஆம் சுற்று பேச்சு எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


முன்னாள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர மரணம்!
[Saturday 2019-09-07 08:00]

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர நேற்று மாலை காலமானார். தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எந்த அமைச்சும் ஜனாதிபதியிடம் இருக்காது!
[Saturday 2019-09-07 08:00]

அடுத்து தெரிவாகும் ஜனாதிபதியினால், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய, எந்தவொரு அமைச்சையும் தனக்கு கீழ் கொண்டு வர முடியாது என ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக, அரசாங்கத்தின் எந்த நிறுவனங்களையும் ஜனாதிபதி தன்கீழ் கீழ் கொண்டு வர முடியாது என கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்தார்.


வரதருக்கு 'விளக்குமாற்று அடி'! Top News
[Friday 2019-09-06 17:00]

காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிருடன் இல்லை என்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், வட-கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வவுனியாவில் 'எழுக தமிழ்' கலந்துரையாடல்!
[Friday 2019-09-06 17:00]

'எழுக தமிழ்' பேரணி தொடர்பாக வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடலுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.


கனடியத் தமிழ் மக்களுக்கான மிக முக்கியம் வாய்ந்த திட்டத்திற்க்கான உதவி கோரல்:
[Friday 2019-09-06 17:00]

அன்புள்ள தமிழ்க் கனடியர்களே !,

கடந்த இரு தசாப்தங்களாக தமிழ்ச் சமூகம் கனடாவில் அபரிமிதமான வளர்ச்ச்சியைக் கண்டுள்ளதுடன் பல துறைகளிலும் வெற்றிகளையும் ஈட்டியுள்ளது. மூன்று இலட்சத்துக்கும் (300,000) அதிகமான தமிழர்கள் கனடாவைத் தாயகமாக வரித்துக் கொண்டவர்கள். அவர்களில் பெரும்பாலோர் ரொறொண்டோ பெரும்பாகத்தில் வசிக்கிறார்கள்.


அரசியல் தலையீடே காரணம்!
[Friday 2019-09-06 17:00]

சுகாதார தொண்டர்கள் நியமன விடயத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதே,அவர்கள் இன்று வீதியில் நிற்பதற்கும் தற்கொலை முயற்சிக்கும் காரணம் என வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா