Untitled Document
May 3, 2024 [GMT]
பிரதமர் ரணிலின் தீபாவளி வாழ்த்து!
[Sunday 2019-10-27 10:00]

மனிதனிடமும் சமூகத்திலும் காணப்படும் தீமை எனும் இருளை விரட்டியடித்து நன்மை எனும் வெளிச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை தீபாவளி முக்கியமாக வலியுறுத்துகிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


கோத்தாவுக்காக யாழ்ப்பாணத்தில் குவியும் முன்னாள் இராணுவ அதிகாரிகள்!
[Sunday 2019-10-27 10:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டம் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இதில், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.


கனடாவில் பாடசாலைக்கு அருகே நடமாடிய 5 கரடிகள் சுட்டுக்கொலை!
[Sunday 2019-10-27 10:00]

கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியா- பென்டிக்டன் பி.சி. ஆரம்ப பாடசாலைக்கு அருகில் வியாழக்கிழமை நடமாடிய, ஐந்து கரடிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அலுவலர் சேவை தெரிவித்துள்ளது. கரடிகள் சுட்டுக் கொல்லப்படும் வரை குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு உள்ளே பத்திரமாக பாதுக்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


முன்னாள் எம்.பி தங்கேஸ்வரி கதிராமர் காலமானார்!
[Sunday 2019-10-27 10:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிராமர் (வயது-67) மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் நேற்று காலமானார். இரண்டு ஆண்டுகளாக சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வைத்தியசாலையில் காலமானார்.


4 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது!
[Sunday 2019-10-27 10:00]

யாழ்ப்பாணம்- ஆனைக்கோட்டைப் பகுதியில் நான்கு கிலோ கேரள கஞ்சாவுடன், இளைஞன் ஒருவர் நேற்று இரவு விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


டிப்பர் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடிய பொலிஸ்! Top News
[Sunday 2019-10-27 10:00]

கிளிநொச்சி- முறிகண்டி பகுதியில் டிப்பர் வாகனம் மீது நேற்றிரவு 7.20 மணியளவில் பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார் அங்கிருந்து தப்பியோட்டியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


போர்க்கால மீறல்களுடன் கடற்படையின் முழுக் கட்டமைப்புக்கும் தொடர்பு!
[Saturday 2019-10-26 18:00]

இலங்கை கடற்படை முகாம்களில், 2008ல் இருந்து 2014 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சித்திரவதைகள், காணாமற்போதல் மற்றும் கொலை போன்றவற்றிற்கு பெருமளவான இலங்கை கடற்படை அதிகாரிகள் உடந்தையாக இருந்தமை கண்டுபிடிக்கப்படுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.


11 பேரை காணாமல் ஆக்கிய கடற்படை அதிகாரிகள் தேர்தல் பிரசாரத்தில்!
[Saturday 2019-10-26 18:00]

கொழும்பில் 11 பேரை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் கடற்படை அதிகாரிகள் கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.


பொதுமக்களை படையினர் கொன்றதற்கு ஆதாரம் இல்லை!
[Saturday 2019-10-26 18:00]

போரின்போது படையினர் வேண்டுமென்றே பொதுமக்களைக் கொன்றனர் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன, தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற டுவிட்டர் கணக்கில் பதிவேற்றப்பட்ட ஆபாசப்படங்கள்!
[Saturday 2019-10-26 18:00]

இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் நேற்று இரவு 25 நிமிடங்களாக ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


குளித்துக் கொண்டிருந்தவர் மயங்கி வீழ்ந்து மரணம்!
[Saturday 2019-10-26 17:00]

யாழ்ப்பாணம்- உடுவில், மல்வம் பகுதியில் இன்று காலை குளித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடுவில் மல்வம் பகுதியைச் சேர்ந்த செபஸ்தியான் தேவகுமார் (வயது 41) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார். யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சடலம், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது


அதிகாரபூர்வமற்ற முடிவு வெளிவருவதை தடுக்க நடவடிக்கை!
[Saturday 2019-10-26 17:00]

உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் சமூக ஊடகங்களில் கசிவதைத் தடுக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


குளத்தில் மூழ்கி இளைஞன் பலி!
[Saturday 2019-10-26 17:00]

யாழ்ப்பாணம், தென்மராட்சி – வரணி, இடைக்குறிச்சிப் பகுதியில் நேற்று குளத்தில் மூழ்கி இளைஞன் ஒருவர் பலியானார். வலிப்பு நோயாளியான இளைஞன், நேற்று மாலை குளப் பகுதியில் நின்றிருந்த போது வலிப்பு ஏற்பட்டு குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 34 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். தற்போது அவரது சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


கோத்தாவுடன் விவாதம் நடத்த சஜித்துக்கு தகுதியில்லையாம்!
[Saturday 2019-10-26 17:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் நேரடி விவாதம் நடத்த, புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தகுதியில்லை என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


கூட்டம் வராததால் பிரசார பேரணிகளை நிறுத்தினார் மகேஸ் சேனநாயக்க!
[Saturday 2019-10-26 17:00]

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பிரச்சார பேரணிகளை நடத்துவதை இடைநிறுத்தியுள்ளார். அவரது பிரச்சார பேரணிகளில் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாதமையினால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.


வாடகைப் பணம் கேட்ட ஓட்டோ சாரதி தாக்குதலில் படுகாயம்!
[Saturday 2019-10-26 17:00]

வவுனியா பழைய பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திய இளைஞர்கள் மூவர். வேப்பங்குளம் 6 ஆம் ஒழுங்கை பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோயிலடியில் சென்று இறங்கிய பின்னர், வாடகை பணமான 250 ரூபாயை தர முடியாது என கூறி முச்சக்கர வண்டி சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதுடன் முச்சக்கர வண்டியையும் சேதமாக்கியுள்ளனர்.


ஐந்து தமிழ்க் கட்சிகளும் திங்களன்று கூடி தீர்மானம்!
[Saturday 2019-10-26 08:00]

ஜனாதிபதி தேர்தலுக்காக, தமிழ் மக்களின் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பொது இணக்க ஆவணத்தில் கையெழுத்திட்ட ஐந்து தமிழ்க் கட்சிகளும் நாளை மறுதினம் திங்கட்கிழமை மீண்டும் சந்தித்து கலந்துரையாடவுள்ளன.


வெளியக சுயநிர்ணய உரிமையை கோரும் உரிமை மக்களுக்கு உள்ளது!
[Saturday 2019-10-26 08:00]

ஒரு நாட்டில் உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டால் வெளியக சுயநிர்ணய உரிமையை கோர மக்களுக்கு உரிமை உள்ளது என்று தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.


இனப்பிரச்சினை தீர்வு- கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மௌனம்!
[Saturday 2019-10-26 08:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிகாரப் பகிர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட எவ்வித வாக்குறுதிகளும் உள்ளடக்கப்படவில்லை. பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவால் நேற்று கொழும்பு தாமரை தடாக அரங்கில் வெளியிடப்பட்டது.


சுதந்திரபுரத்தில் குளவிகள் தாக்கி 7 பேர் வைத்தியசாலையில்!
[Saturday 2019-10-26 08:00]

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் வயல் வேலைக்கு சென்றவர்களை, குளவிகள் விரட்டி விரட்டிக் கொட்டியதில், பாதிக்கப்பட்ட 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பேருந்து மீது மோதியது இராணுவ வாகனம்!
[Saturday 2019-10-26 08:00]

பனிக்கன்குளம் பகுதியில் நேற்று இரவு 8.30 மணி அளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்றின் மீது இராணுவ வாகனம் மோதியது.


கோத்தாவைக் கொல்ல வேண்டும் என கூறினாரா பௌசி?
[Saturday 2019-10-26 08:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை கொல்ல வேண்டும் என்று தான் கூறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.


ஆட்கடத்தல் வழக்கில் 9 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
[Saturday 2019-10-26 08:00]

கிளிநொச்சியில் சிறிராம் விஜிதன் என்பவரை கடத்திச் சென்றமை மற்றும் அவரது நகைகளைக் கொள்ளையிட்டமை ஆகிய குற்றங்களுக்காக 9 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.


பாதசாரிகள் மீது மோதிய முச்சக்கர வண்டி!
[Saturday 2019-10-26 08:00]

வவுனியா ரயில் நிலைய வீதியில் நேற்று முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பாதசாரிகள் நடைபாதையுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்!
[Friday 2019-10-25 18:00]

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும், இல்லாவிடின், தாம் அமைக்கப் போகும் அரசாங்கத்தில் இலங்கையுடனான இராணுவ பொருளாதார உடன்படிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் எச்சரித்துள்ளார் பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின்.


சுதந்திரபுரம் மனித எலும்பு எச்சங்களை தோண்டும் பணி ஆரம்பம்! Top News
[Friday 2019-10-25 18:00]

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி தோட்ட காணியினை துப்பரவு செய்த போது, கண்டுபிடிக்கப்பட்ட, மனித எச்சங்களை மீட்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


13 அம்ச கோரிக்கையால் தமிழினமே அழியும்!
[Friday 2019-10-25 18:00]

தமிழ் மக்கள் 13 அம்ச கோரிக்­கையின் ஊடாக பயங்­க­ர­வா­தத்­தினுள் மீண்டும் செல்­வார்கள் எனின், தமி­ழி­னமே அழிந்து விடும் ஆபத்­தான நிலைமை தோன்றும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்து­ர­லியே ரத்ன தேரர் எச்சரித்துள்ளார். பத்­த­ர­முல்லை சதஹம் செவ­னவில் டம்பெற்ற ஊட­ க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது இதனை தெரி­வித்தார்.


தமிழ்க் கட்சிகளின் 13 கோரிக்கைகளையும் ஏற்கும் ஜனாதிபதி வேட்பாளர்!
[Friday 2019-10-25 18:00]

தமிழ்க் கட்­சி­களின் 13 கோரிக்­கை­களை ஏற்றுக் கொள்­வதில் எவ்­வித தயக்­கமும் இல்லை என்றும், இதேபோல் இக்­கோ­ரிக்­கை­க­ளுக்­காக விடாது குரல் கொடுத்தும் போரா­டியும் வரும் எம்மை ஆத­ரிக்க இக்­கட்­சிகள் ஏன் முன்­வ­ர­க்கூடாது என்றும், ஐக்­கிய சோஷ­லிசக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சிறி­துங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா