Untitled Document
April 20, 2024 [GMT]
ஓய்வுபெற்ற பின்னர் மைத்திரிக்கு ஜனாதிபதி இல்லம்!
[Wednesday 2019-10-16 16:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் கொழும்பில் தற்போதைய உத்தியோகபூர்வ அரச வாசஸ்தலத்திலேயே, விசேட அதிரடிபடை பாதுகாப்புடன் வசிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.


போர் வெற்றிக்கு யாரும் உரிமை கோர முடியாது!
[Wednesday 2019-10-16 16:00]

போர் வெற்றி தனியொரு நபருக்கோ அல்லது எந்தவொரு அரசியல் கட்சிக்கோ சொந்தமானதல்ல. அதில் பல்வேறு தரப்பினரின் பங்களிப்பு காணப்படுவதுடன், போர் வெற்றி முழு நாட்டிற்கும் சொந்தமானதாகும். அதனை தேர்தல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.


பொலிஸ் காவலில் இருந்து தப்பியோடியவர் சிக்கினார்!
[Wednesday 2019-10-16 16:00]

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த போது, பொலிஸ் நிலைய கூண்டில் இருந்து தப்பிச் சென்றவர், இரண்டு வாரங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்


இராணுவ வாகனம் மோதி ஒருவர் படுகாயம்! Top News
[Wednesday 2019-10-16 16:00]

முல்லைத்தீவு– கொக்காவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இராணுவ வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர் கைக்குண்டுடன் கைது!
[Wednesday 2019-10-16 16:00]

யாழ்ப்பாண நகரம் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட காலமாக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜமேசன் அஜந்தன் (வயது 21) என்ற இளைஞனே கைது செய்யப்பட்டார்.


ஸ்ரீரங்காவைக் கைது செய்ய உத்தரவு!
[Wednesday 2019-10-16 16:00]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு சட்டமா அதிபர், ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் நிஷாரா ஜயரத்ன, தெரிவித்தார்.


673 தேர்தல் முறைப்பாடுகள் - மட்டக்களப்பில் 5!
[Wednesday 2019-10-16 16:00]

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 673 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08 ஆம் திகதியில் இருந்து நேற்று வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.


யாழ்ப்பாணத்தில் கிளைமோருடன் இளைஞன் கைது!
[Wednesday 2019-10-16 08:00]

யாழ்ப்பாணத்தில் கிளைமோர் குண்டு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இளைஞன் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – இராசாவின் தோட்டம் பகுதியில் வைத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதான இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வடக்கில் கோத்தாவுக்கு மூன்றாமிடம் தான்!
[Wednesday 2019-10-16 08:00]

இறுதிப் போரில் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தவர்களை ஈவிரக்கமின்றி சுட்டுப் படுகொலை செய்த ராஜபக்ஷ குடும்பத்தை, தமிழ் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என, ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.


நீராவியடி விகாரையில் சிவிரிவி பொருத்த தடை!
[Wednesday 2019-10-16 08:00]

முல்லைத்தீவு - நீராவியடி குருகந்த ரஜமஹா விகாரையின் பாதுகாப்பு கருதி அந்த விகாரையின் விஹராதிபதி மினிதுபுர ரத்தனதேவ கீர்த்தி தேரர் சி.சி.ரி.வி கண்காணிப்பு கெமராக்களை பொருத்துவதற்கு எடுத்த நடவடிக்கைக்கு பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.


காணாமல் ஆக்கப்பட்டவர்கள்- கேள்விகளால் தடுமாறினார் கோத்தா!
[Wednesday 2019-10-16 08:00]
இராணுவ நடவடிக்கைகளின் போது அடையாளங்காண முடியாத சடலங்கள் இருக்க முடியும். உறவினர்களின் சடலங்களைக் கண்களால் காணாததாலேயே, தமது உறவினர்கள் காணாமல் போயுள்ளதாக சிலர் கூறுகிறார்கள். சரணடைந்தவர்கள் மீளத் திரும்பிவரவில்லை என்பது ஊகம் மாத்திரமே என்று ஸ்ரீலங்கா பொதுஜன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

கொலையாளியின் வீட்டுக்கு தீவைப்பு!
[Wednesday 2019-10-16 08:00]

யாழ்ப்பாணத்தில் நேற்றுமாலை ஒருவரை கோடரியால் அடித்துக் கொலை செய்த சந்தேகம் நபரின் வீடு நேற்றிரவு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. மணியம்தோட்டம் 2ம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த கொன்ஸ்ரன் கலஸ்ரன் (வயது 33) என்ற குடும்பஸ்தரே கொலை செய்யப்பட்டார்..


சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் சஜித்துடன் இணைவு!
[Wednesday 2019-10-16 08:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் சிலர் நேற்று ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இவ்வாறு ஆதரவு வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


வேட்பாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க உத்தரவு!
[Wednesday 2019-10-16 08:00]

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்குவதற்கு தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் கேட்கும் அடிப்படையில் பாதுகாப்பு ஒழுங்குகளை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் இடம்பெற்ற போது, பாதுகாப்பு பிரிவுகளின் தலைவர்களுக்கு இது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


யாழ்ப்பாணத்தில் ரணில்!
[Wednesday 2019-10-16 08:00]

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று யாழ்ப்­பா­ணத்­திற்கு பயணம் செய்­கின்றார் . இன்றும் நாளையும் அங்கு தங்­கி­யி­ருக்கும் பிர­தமர் பல்­வேறு நிகழ்­வு­க­ளிலும் பங்­கேற்­க­வுள்ளார். நாளை யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலைய திறப்பு விழா­விலும் பிர­தமர் பங்­கேற்­க­வுள்ளார். இன்­றைய தினம் வட­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சின் ஏற்­பாட்டில் இடம்­பெறும் பல்­வேறு அபி­வி­ருத்தி திட்ட ஆரம்ப நிகழ்­வு­க­ளிலும் அவர் பங்­கேற்­க­வுள்ளார்.


தேர்தல் ஆணையாளராக சமன் ரத்நாயக்க!
[Wednesday 2019-10-16 08:00]

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளராக சமன் ஶ்ரீ ரத்நாயக்கவை நியமிக்க அரசியலமைப்பு சபை நேற்று அனுமதி வழங்கியுள்ளது. இன்று முதல் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளராக அவர் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமன் ஶ்ரீ ரத்நாயக்க குறித்த பதவியில் தற்காலிகமாக பணியாற்றியதுடன், தேசிய தேர்தல்கள் செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியிருந்தார்.


பலாலியில் தரையிறங்கியது இந்திய விமானம்! Top News
[Tuesday 2019-10-15 17:00]

இந்தியாவின் எயர் இந்தியா அலைன்ஸ் விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியது. இந்த விமானத்தில் இந்திய தொழில்நுட்ப அதிகாாிகள் குழு வந்துள்ளது. இந்திய அதிகாரிகள் ஓடுபாதை பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராயவுள்ளனர்.


ஜெனிவா தீர்மானத்தை கிழித்தெறிவோம்- கோத்தா சூளுரை! Top News
[Tuesday 2019-10-15 17:00]

ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை தனது அரசாங்கம் அங்கீகரிக்காது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டு முதலாவது தடவையாக இன்று ஷங்ரிலா விடுதியில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.


11 பேர் கடத்தி கொலை- கரன்னகொட சந்தேகநபராக சேர்ப்பு!
[Tuesday 2019-10-15 17:00]

கொழும்பு பகுதிகளில் 11 பேரை வெள்ளை வானில் கடத்தி கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னகொடவை 16 ஆவது சந்தேக நபராக சி.ஐ.டி. இன்று பெயரிட்டுள்ளது. வசந்த கரன்னகொட பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இன்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் சி.ஐ.டி அவரை 16 ஆவது சந்தேக நபராக பெயரிட்டது.


வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது! Top News
[Tuesday 2019-10-15 17:00]

யார் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உரிய நீதியை வழங்கப் போவதில்லை. எனவே தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் யாழ். மாவட்ட சங்கத் தலைவி சுகந்தினி தெரிவித்தார்.


கூட்டமைப்பு இதுவரை பேச வரவில்லை!
[Tuesday 2019-10-15 17:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எம்முடன் பேச்சுக்களை முன்னெடுக்க வரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார். விரைவில் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் கோடரியால் அடித்துக் கொலை!
[Tuesday 2019-10-15 17:00]

யாழ்ப்பாணம் - மணியந்தோட்டத்தில், குடும்ப தகராறு காரணமாக இன்று மாலை ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மணியம்தோட்டம் 2 ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த கொன்ஸ்ரன் கலஸ்ரன் (வயது 33) என்ற குடும்பஸ்தரே பலியாகியுள்ளார். அவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.


மன்னாரில் வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்! Top News
[Tuesday 2019-10-15 17:00]

தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையினால், மன்னார் மாவட்டத்தில் பல கிராமங்கள் மற்றும் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்காளாக கடும் மழை பெய்து வரும் நிலையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் கடும் மழை பெய்தது. இதனால் மன்னார் தீவு பகுதியில் உள்ள குளங்கள் , கால்வாய்கள் மற்றும் நீரோடைகள் மழை நீரில் நிறைந்து கொணப்படுகின்றது.


திருகோணமலையில் தங்கப் படிமங்கள்!
[Tuesday 2019-10-15 17:00]

திருகோணமலை, சேருவில பகுதியில் இரும்பு, செம்பு கனிமங்கள் இருக்கும் இடத்தில் தங்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அசேல தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேச செயலக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


5 கட்சிகளும் இணைந்தே தெற்குடன் பேசுவோம்!
[Tuesday 2019-10-15 17:00]

பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளும், ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய ஐந்தும் ஒன்றிணைந்தே இனிமேல் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தென்னிலங்கைத் தரப்புகளுடன் பேச்சு நடத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தை சேர்ந்த 6 பேர் சிலாபத்தில் கைது!
[Tuesday 2019-10-15 17:00]

சிலாபத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த 6 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக கடல் வழியாக வெளிநாடு செல்லும் நோக்கில் இவர்கள் தங்கியிருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம்!
[Tuesday 2019-10-15 17:00]

திருகோணமலை- கும்புறுப்பிட்டி பகுதியில், தலையில் இரண்டு வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம், இன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம், கும்புறுப்பிட்டி - ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்திரகுமார் சதீஸ்கரன் (35 வயது) என, குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


கடலில் மிதந்த கஞ்சா பொதிகள்! Top News
[Tuesday 2019-10-15 17:00]

தலைமன்னார் கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த 86 கிலோ கேரள கஞ்சாப் பொதிகளை கடற்படையினர் நேற்று மீட்டனர். சந்தேகத்திற் கிடமான 2 பொதிகள் தலைமன்னார் கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் அவதானித்தனர்.

Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா