Untitled Document
May 3, 2024 [GMT]
தமிழுக்கு தடைவிதித்த உணவகம் மீது நடவடிக்கை!
[Wednesday 2019-10-30 07:00]

தமிழ் மொழியில் பேசக்கூடாது என தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்ட கொழும்பு உணவகத்துக்கு எதிராக உடனடியாக விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


வவுனியாவில் மர்மப் பொதியால் பரபரப்பு! Top News
[Wednesday 2019-10-30 07:00]

வவுனியா- குருமன்காட்டுச் சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்றிரவு காணப்பட்ட மர்ம பொதியினால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்து. நேற்று இரவு 7.30 மணியளவில் குருமன்காட்டுச் சந்தியில் ஹயஸ் ரக வாகனத்தில் வந்த சிலர் மர்ம பொதி ஒன்றினை வீதி ஓரத்தில் வைத்து விட்டு சென்றுள்ளனர்.


ஐதேகவில் இருந்து நீக்கப்பட்டார் வசந்த சேனநாயக்க!
[Wednesday 2019-10-30 07:00]

இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவை கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அவரை இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்தும் எதிர்காலத்தில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


நெடுங்கேணியில் கிணற்றில் வீசப்பட்ட இரு குழந்தைகள் பலி! Top News
[Tuesday 2019-10-29 17:00]

வவுனியா – நெடுங்கேணி, பட்டிக்குடியிருப்பு பகுதியில், தாயினால் கிணற்றில் வீசப்பட்ட இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இன்று மதியம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சுதந்திரபுரத்தில் மனித மண்டையோடு, எலும்புகள் மீட்பு! Top News
[Tuesday 2019-10-29 17:00]

முல்லைத்தீவு- சுதந்திரபுரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து, மண்டையோடுகள் உள்ளிட்ட மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 2019.10.20 ஆம் திகதி தோட்ட காணியினை துப்பரவு செய்த போது மனித எச்சங்கள் காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.


இனஅழிப்பு செய்தவர்களுக்கு முறையான பாடம் கற்பிக்க வேண்டும்!
[Tuesday 2019-10-29 17:00]

இன அழிப்பு செய்தவர்களை சர்வதேச நிதிமன்றில் நிறுத்த வேண்டும் என்றால், தமிழ் மக்கள் தனக்கு வாக்ளிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம். யாழ்பாடி விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்தில் சஜித்துக்கு 3 இலட்சம் வாக்குகள்!
[Tuesday 2019-10-29 17:00]

யாழ்ப்பாண, மாவட்டத்தில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை சஜித் பிரேமதாசவிற்கு கிடைக்கும் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


சந்திரிகா மீது பாய்கிறார் தயாசிறி!
[Tuesday 2019-10-29 17:00]

ஐக்கிய தேசிய கட்சியின் தேவைகளுக்காகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தற்போது அரசியல் ரீதியில் செயற்படுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.


சஜித்தின் சவாலை ஏற்கிறார் நாமல்!
[Tuesday 2019-10-29 17:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை நேரடி விவாதத்துக்கு வருமாறு புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்வைத்த சவாலை ஏற்கத் தயார் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


வாக்களிப்பு நேரம் 5 மணி வரை நீடிப்பு!
[Tuesday 2019-10-29 16:00]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம், நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் வாக்களிக்க முடியும். இது தொடர்பான, வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்களில் வழக்கமாக காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


காட்டாற்று வெள்ளத்தினால் செங்கடி- பதுளை வீதி துண்டிப்பு! Top News
[Tuesday 2019-10-29 16:00]

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையினால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், செங்கலடி - பதுளை வீதியின் போக்குவரத்து இன்று அதிகாலை முதல் தடைப்பட்டுள்ளது.


'பேட் மன்' ஆகிறார் சஜித்! Top News
[Tuesday 2019-10-29 16:00]

மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் அணியும் பேட்கள் குறித்து உரையாடுவதற்கு நான் வெட்கப்படமாட்டேன் என்றும், பெண்களுக்கான சுகாதாரத் துண்டுகளை இலவசமாக வழங்கப் போவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச.


தமிழில் பேசத் தடை- கொழும்பில் இனவாத உணவகம்! Top News
[Tuesday 2019-10-29 16:00]

கொழும்பு -7 பகுதியில் உள்ள பெப்பர்மின்ட் கபே என்ற உணவகத்தில், ஊழியர்கள் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரமே உரையாட வேண்டும். தமிழில் உரையாடக் கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களில், கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.


கோத்தாவுக்கு வாக்களிக்காவிடின் முஸ்லிம்கள் அழிவை சந்திக்க நேரிடும்!
[Tuesday 2019-10-29 16:00]

கோத்தபாய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்காவிட்டால், முஸ்லிம் சமூகம் வன்முறைகளுக்கு இலக்காக நேரிடும் என்று, கோத்தாபய ராஜபக்சவின் சட்டத்தரணி அலி சப்ரி எச்சரித்துள்ளார். இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கண்டனம் வெளியிட்டிருக்கின்றனர்.


மரணதண்டனைக்கு இடைக்காலத் தடை நீடிப்பு!
[Tuesday 2019-10-29 16:00]

மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


காணிகளை விடுவிக்க மறுப்பு- நிலைப்பாட்டை மாற்றியது இராணுவம்!
[Tuesday 2019-10-29 07:00]

யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கு தொடர்ந்து மறுத்து வருவதால் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.


தமிழ்க்கட்சிகளின் நிபந்தனைகள் - சஜித் ஏற்கமாட்டார்!
[Tuesday 2019-10-29 07:00]

ஐந்து தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக, பேச்சு நடத்துவதற்கு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தயாராக இல்லை என அவரது பிரசாரக் குழுவைச் சேர்ந்த ஷிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு கூட்டணி 11 நிபந்தனைகள்!
[Tuesday 2019-10-29 07:00]

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் 11 கோரிக்கைகளை முன்வைப்பதற்கும், அவற்றை ஏற்பவர்களுக்கு ஆதரவளிக்கவும் தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானித்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் வவுனியாவில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


தமிழர்கள் மீண்டும் தவறு செய்யமாட்டார்கள்! - மகிந்த
[Tuesday 2019-10-29 07:00]

தமிழ் மக்கள் மீண்டும் அரசியல் ரீதியில், தவறான தீர்மானத்தை மேற்கொள்ளமாட்டார்கள் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, காணி பிரச்சினைக்கு தீர்வு, காணாமல்போனோரது உறவுகளுக்கு நட்டஈடு மற்றும் வடக்கிற்கு முழுமையான அபிவிருத்தி எம்மால் துரிதகரமாக செயற்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.


ஓய்வுபெறும் எண்ணம் இல்லை! - ரணில்
[Tuesday 2019-10-29 07:00]

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தனக்கு இதுவரை ஏற்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


கடற்படைக்கு காணி சுவீகரிக்க முயற்சி!
[Tuesday 2019-10-29 07:00]

யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் தனியார் காணியை கடற்படையினருக்காக சுவீகரிக்க மேற்கொண்ட முயற்சிகள் பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டுள்ளது.


ஒன்ராரியோ விபத்தில் இளைஞன் பலி!
[Tuesday 2019-10-29 07:00]

கனடா- ஒன்ராறியோ, கோமோகா (Komoka) மேற்குப் பகுதியில் இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், ஒரு இளைஞன் உயிரிழந்தார். இருவர் படுகாயமைடந்துள்ளதாக STRATHROY-CARADOC பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த ஆட்டத்துக்கு விரைவில் முடிவு கட்டுவேன்! - சந்திரிகா சபதம்
[Tuesday 2019-10-29 07:00]

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச பல கொலைகளுக்குக் காரணமானவர். திருட்டுகளுக்கும் உடந்தையானவர்.அப்படிப்பட்டவரை இலங்கை மக்கள் அடியோடு நிராகரிப்பார்கள். அவரின் தோல்வி இப்போதே உறுதியாகி விட்டது.” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.


மீண்டும் முள்ளிவாய்க்கால் வரும் என்கிறார் வரதர்!
[Tuesday 2019-10-29 07:00]

சரத் பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக ஆக்கப்போகிறார்களாம். அவர் பாதுகாப்பு அமைச்சராக ஆகினால் முள்ளிவாய்க்காலில் என்ன நடந்ததோ அது தான் இங்கு தொடரப் போகின்றது என முன்னாள் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.


“வெள்ளை வான் முதலாளி கோத்தாவே வெளியேறு” Top News
[Monday 2019-10-28 16:00]

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று பிரசாரத்துக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் இன்று யாழ்பபாணத்துக்கு வந்தனர்.


5 தமிழ் கட்சிகளும் நாளை மறுநாள் தீர்மானம் எடுக்க முடிவு! Top News
[Monday 2019-10-28 16:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்காத பட்சத்தில் தமிழ் மக்கள் திட்டவட்டமான முடிவினை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதற்கான இறுதி முடிவினை நாளை மறுதினம் எடுக்கவுள்ளோம் என ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழ் மக்கள் என் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்!
[Monday 2019-10-28 16:00]

தமிழ் மக்கள் என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் கௌரவமாக வாழும் சூழலை நிச்சயம் உருவாக்குவேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.


கிளிநொச்சியில் ஒருவர் அடித்துக் கொலை!
[Monday 2019-10-28 16:00]

கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் நேற்று ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த நபர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா