Untitled Document
April 27, 2024 [GMT]
சுங்கப் பணிப்பாளராக இராணுவ அதிகாரி - தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!
[Monday 2020-03-02 05:00]

சுங்கப் பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய இரண்டு ஆண்டுகளுக்கு மாத்திரமே, பதவியில் இருப்பார் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என்று சுங்க தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.


கொரோனா தொற்று - 16 பேர் கண்காணிப்பில்!
[Monday 2020-03-02 05:00]

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இலங்கையில் 16 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய தொற்று நோயியல் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.


கிளிநொச்சியில் 'ஐஸ்'- வாகனத்துடன் சிக்கினார் ஒருவர்! Top News
[Monday 2020-03-02 05:00]

கிளிநொச்சி – இரணைமடு பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஜி.பி.எஸ். கருவி ஆகியவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தேர்தல் ஆணைக்குழு பச்சைக்கொடி - எதிர்க்கட்சிகள் போர்க்கொடி!
[Monday 2020-03-02 05:00]

பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், 42 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை, பொது நிர்வாக அமைச்சு செயற்படுத்துவதற்கு, சதேசிய தேர்தல்கள் ஆணையம் பச்சைக்கொடி காண்பித்துள்ளது.


தீர்மானத்தில் இருந்து எந்த நாடும் வெளியேற முடியாது!
[Sunday 2020-03-01 17:00]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து எந்தவொரு நாடும் வெளியேற முடியாது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைய பேச்சாளர் ரொனால்டோ கோமிஸ் தெரிவித்துள்ளார்.


இன்னும் பல படை அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதிக்கும்!
[Sunday 2020-03-01 17:00]

இலங்கை படைஅதிகாரிகள் பலருக்கு அமெரிக்கா பயணத்தடையை விதிக்கக் கூடும் என்றும், வெளிப்படையாக அறிவிக்கப்படாமலேயே இந்த தடை மேற்கொள்ளப்படலாம் என்றும் ஆங்கில இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.


லண்டனில் உயிரிழந்த முன்னாள் போராளியைத் தெரியுமா? Top News
[Sunday 2020-03-01 17:00]

லண்டனில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தவர் முன்னாள் போராளி என்று சந்தேகிக்கப்படுபவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறு தமிழ் சமூக நடுவம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-


தேவாலயத்துக்குச் சென்ற முஸ்லிம் குடும்பம் கைது!
[Sunday 2020-03-01 17:00]

மட்டக்களப்பு- புனித செபஸ்டியன் தேவாலயத்தில் ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு நுழைந்த சந்தேகத்திற்கு இடமான இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அம்பாறையில் போட்டியில் குதிக்கிறார் யோஷித ராஜபக்ச!
[Sunday 2020-03-01 17:00]

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரான கடற்படை லெப். கொமாண்டர் யோஷித ராஜபக்ச எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பட்டியலில் போட்டியிட உள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பொதுத்தேர்தலில் இரண்டே முக்கால் இலட்சம் புதிய வாக்காளர்கள்!
[Sunday 2020-03-01 17:00]

இம்முறை பொதுத் தேர்தலில் 2 இலட்சத்து 70 ஆயிரம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் - ஜனாதிபதி அறிவிப்பு!
[Sunday 2020-03-01 17:00]

தனது புகைப்படங்களையோ அல்லது சித்திரங்களையோ பிரசித்தமான இடங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அரச செயலகங்களில் தமது அல்லது அமைச்சர்களின் படங்களுக்குப் பதிலாக அரச இலச்சினையை காட்சிப்படுத்துமாறு முன்னதாக ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


வானொலி, தொலைக்காட்சியில் பாடலை ஒளிபரப்ப கட்டணம்!
[Sunday 2020-03-01 17:00]

இலங்கையில் வானொலியில் ஒலிபரப்பாகும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு பாடலுக்கும் அந்தப் பாடலின் உரிமையாளர்களுக்கு பணம் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அமைச்சரவையின் செய்தித் தொடர்பாளர் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.


மட்டக்களப்பில் பிரமாண்டமான ஔவையார் விழா! Top News
[Sunday 2020-03-01 17:00]

தமிழ் வளர்த்த அன்னை ஒளவையாரைச் சிறப்பிக்க மட்டக்களப்பில் பிரம்மாண்ட விழா நடத்தப்பட்டது. கல்லடிப் பாலத்தில் உள்ள தமிழ் பாட்டி ஒளவையின் சிலையருகில் வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையுடன் கதிரவன் பட்டிமன்றப் பேரவையினால் ஒளவை விழாவாக சிறப்பாக நடைபெற்றது.


சுவரொட்டிகள், கட் அவுட்களுக்கு தடை!
[Sunday 2020-03-01 17:00]

நாடாளுமன்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது சுவரொட்டிகள் மற்றும் கட்-அவுட்களை காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தத் தடையை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


தென்கொரியாவில் இருந்து திரும்பிய இருவருக்கு காய்ச்சல்!
[Sunday 2020-03-01 17:00]

தென் கொரியாவில் இருந்து இன்று அதிகாலை 137 இலங்கையர்கள் நாடு திரும்பினர். இவர்களில் இருவரின் உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வவுனியாவில் ஆவா குழு கைவரிசை! - பெற்றோல் குண்டு தாக்குதல் Top News
[Sunday 2020-03-01 07:00]

வவுனியா- பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று இரவு 9 மணியளவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான வீட்டின் சுவரில் ஆவா குழு என்றும் எழுதப்பட்டுள்ளது.


நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நீதி- பிரித்தானியா உறுதி!
[Sunday 2020-03-01 07:00]

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் தொடர்பான தனது நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் மாற்றியமைத்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.


சங்குப்பிட்டிப் பாலம் அருகே விபத்தில் இளைஞன் பலி! Top News
[Sunday 2020-03-01 07:00]

பூநகரி- சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கார் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். புங்குடுதீவை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.


தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் விரைவில்!
[Sunday 2020-03-01 07:00]

அரசியலில் தன்னாட்சி, சமூக ரீதியாக தற்சார்பு, பொருளாதாரத்தில் தன்னிறைவு காண்பதே எமது குறிக்கோள். இதன் அடிப்படையில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் தயாரித்து வருகிறோம். விரைவில் வெளியிடுவோம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


சஜித் கூட்டணியை யானையில் போட்டியிட வைக்க ரணில் முயற்சி!
[Sunday 2020-03-01 07:00]

ஏப்ரல் மாதம் 25ம் திகதி நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர்தலின் போது எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்று ஐக்கிய தேசிய சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் முடிவெடுக்கவுள்ளன.


ஐதேகவில் அஜந்த பெரேரா!
[Sunday 2020-03-01 07:00]

இலங்கை சமூகவாத கட்சி சார்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கலாநிதி அஜந்தா பெரேரா ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டார்.ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் பதவியை அவர் உத்தியோகபூர்வமாக அவர் பெற்றுக்கொண்டுள்ள அவர் வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.


தயார் நிலையில் இராணுவம்!
[Sunday 2020-03-01 07:00]

நாட்டின் பாதுகாப்பை உறுப்படுத்துவதற்கு இராணுவத்தினர் எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


சர்வதேசம் தலையிடவே முடியாது!- என்கிறார் பிரதமர் மஹிந்த
[Sunday 2020-03-01 07:00]

“இலங்கைக்கு என்று இறைமை இருக்கின்றது. கொள்கை இருக்கின்றது. சட்ட வரையறைகள் இருக்கின்றன. அரசமைப்பு இருக்கின்றது. இவையெல்லாவற்றையும் மீறி உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடவே முடியாது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு சம்பந்தமாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.


கஞ்சா விற்ற ஆணும் பெண்ணும் கைது!
[Sunday 2020-03-01 07:00]

திருகோணமலை - முள்ளிப்பொத்தானை பகுதியில் கேரள கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் ஒருவரும், இளைஞனும் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கேரளா கஞ்சாவும், 45000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.


பின்னணியில் இருக்கிறதா இந்தியா? - விக்கி பதில்
[Saturday 2020-02-29 19:00]

நான் கட்சி தொடங்கிய பின்னர் இந்தியாவிடம் இருந்து எனது அரசியல் தொடர்பாக எந்த அழுத்தமோ அல்லது தொடர்போ இருக்கவில்லை. எனது மக்களின் அபிலாசைகள் தொடர்பாக எந்த சக்திக்கும் அடிபணிந்து செயற்பட மாட்டேன் என்று வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


முகமூடிக் கொள்ளைக் கும்பல் சிக்கியது! Top News
[Saturday 2020-02-29 19:00]

வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில், முகமூடி அணிந்து ஆயுத முனையில் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த ஐந்து சந்தேக நபர்கள் இன்று அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், சுன்னாகம், சாவகச்சேரி, கொடிகாமம் மற்றும் மன்னர் உள்ளிட்ட பகுதிகளில் முகமூடிகளை அணிந்தவாறு வாள்கள் மற்றும் கைக் குண்டுகளை காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிட்டு வந்துள்ளனர்.


நாடாளுமன்ற கலைப்பு - நாளை வெளியாகிறது வர்த்தமானி?
[Saturday 2020-02-29 19:00]

எட்டாவது நாடாளுமன்றம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் திங்கட்கிழமை கலைக்கப்பட உள்ளதாகவும் இதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு நாளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதும் என்றும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.


இந்தியா, சீனாவிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படும் இலங்கை!
[Saturday 2020-02-29 19:00]

இலங்கை அரசாங்கம் இந்தியாவிடமும் சீனாவிடமும் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்படப் போகிறது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதுஅவர் இதனை குறிப்பிட்டார்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா