Untitled Document
March 28, 2024 [GMT]
அங்கஜனின் தன்னிச்னையான போக்கு- நெடுந்தீவு மக்கள் ஆர்ப்பாட்டம்! Top News
[Saturday 2020-02-01 05:00]

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அங்கஜன் இராமநாதனின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்து நெடுந்தீவு மக்கள் நேற்று எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.


அரசு தயார் என்றால் நாங்களும் தயார்!
[Saturday 2020-02-01 05:00]

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழர் தரப்புடன் அரசாங்கம் பேசுவதற்குத் தயார் என்றால் அரசுடன் பேசுவதற்கும் நாங்களும் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அப் பேச்சுவார்த்தை எப்போது எங்கே என்பது தொடர்பில் அறிவிக்கவில்லை. அதனை அறிவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.


கொரோனாவைப் பயன்படுத்தி சீன எதிர்ப்பு அலையை உருவாக்க வேண்டாம்!
[Saturday 2020-02-01 05:00]

கொரோனா வைரஸை பயன்படுத்தி சீன எதிர்ப்பு அலையை எவரும் உருவாக்க வேண்டாம் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.


திருகோணமலை கடற்பரப்பில் 8 இந்திய மீனவர்கள் கைது!
[Saturday 2020-02-01 05:00]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று அதிகாலை திருகோணமலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். கைதானவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக திருகோணமலை கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு சிறப்பு படிவம்!
[Saturday 2020-02-01 05:00]

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் நேற்று முதல் விசேட படிவம் வழங்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


ஐதேகவின் பிரிவினைகளால் நாட்டுக்கே பாதிப்பு!
[Saturday 2020-02-01 05:00]

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் யாராவது தான்தோன்றிதனமாக நடந்துகொள்வார்கள் என்றால் அது நாட்டு மக்களையை பாதிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


சஜித்துக்கு இரவில் கடிதம் அனுப்பிய ரணில்!
[Friday 2020-01-31 18:00]

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை ஏற்றுக்கொள்வதென நேற்று மாலை நடைபெற்ற விசேட செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடுத்து ரணில் விக்ரமசிங்க நேற்றிரவே சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். தனது கையெழுத்தில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள இந்த கடிதத்தில் வழங்கக் கூடிய அதிகாரங்கள் சம்பந்தமாக மீண்டும் ஒரு முறை விடயங்களை முன்வைத்துள்ளார்.


பிரபல பாடசாலையொன்றில் ஒரே சமயத்தில் மயங்கி விழுந்த 41 மாணவர்கள்!
[Friday 2020-01-31 17:00]

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேன – களுகல சிங்கள வித்தியாலயத்தில் உணவு விஷமடைந்தமை காரணமாக 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலை உணவை உட்கொண்டதன் பின்னர் மாணவர்களுக்கு திடீரென மயக்கம், வாந்தி ஏற்பட்டதன் காரணமாகவே இவ்வாறு மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக 11 மாணவிகள் உள்ளடங்களாக 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஈஸ்டர் தாக்குதல்: வைத்தியசாலையில் இருந்த யாழ். பெண் உயிரிழப்பு!
[Friday 2020-01-31 17:00]

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஏப்ரல்-21 பயங்கரவாதத் தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார். கொழும்பு, போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நெரின் புளோரின் (26 வயது) என்பவரே இவ்வாறு 9 மாதங்களின் பின்னர் உயிரிழந்தார்.


கண்கள் ஊடாக பரவும் கொரோனா வைரஸ் - கண் தொழில்நுட்பவியலாளர் சமித் ரத்நாயக்க!
[Friday 2020-01-31 17:00]

கொரோனா வைரஸ் கண்கள் ஊடாகத் தொற்றுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தேசிய கண் வைத்தியசாலையின் கண் தொழில்நுட்பவியலாளர் சமித் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் 23 நாடுகளில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையிலேயே கொரோ வைரஸ் தொற்று தொடர்பாக கண் தொழில்நுட்பவியலாளர் சமித் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்க புதிய முறை - உபாலி ஜெயசேகர!
[Friday 2020-01-31 17:00]

வெராஹெராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறையில் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி மேம்படுத்தல் காரணமாக நாளை (சனிக்கிழமை) குறித்த சேவை நிறுத்திவைக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் துறையின் செயல் ஆணையாளர் ஜெனரல் உபாலி ஜெயசேகர தெரிவித்தார்.


சீனாவில் சிக்கியிருக்கும் இலங்கை மாணவர்களை மீட்க சென்றது சிறப்பு விமானம்!
[Friday 2020-01-31 17:00]

சீனாவின்- வுஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு சிறப்பு விமானமொன்றை அனுப்பியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், “இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்கு UL-1422 விமானம் சீனாவின் வுஹான் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் விசேட பயிற்சி பெற்ற சுகாதாரக் குழுவொன்றும் சென்றுள்ளது.


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மகிந்த ராஜபக்சே!
[Thursday 2020-01-30 18:00]

இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே அரசு முறைப்பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருகை தருகிறார். வரும் 7 ஆம் தேதி இந்தியா வரும் ராஜபக்சே, 8 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். 11 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை பிரதமர் ராஜபக்சே, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.


சஜித்துக்கு பச்சைக்கொடி காட்டிய ரணில்!
[Thursday 2020-01-30 17:00]

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பரந்துபட்ட அரசியல் கூட்டணியின் தலைமைப் பதவியை விசேட அதிகாரங்கள் சகிதம் சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதற்கு ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க பச்சைக்கொடி காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.தே.க. தலைமைப் பதவியில் தானே தொடர்ந்தும் நீடிப்பார் என்றும், மாற்றம் தேவையெனில் தேர்தலின் பின்னர் அது குறித்து பரிசீலிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், பொதுத்தேர்தலின் போது வேட்புமனு வழங்கல், தேர்தல் பரப்புரை நடவடிக்கையை வழிநடத்தல் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரத்தை சஜித்துக்கு வழங்குவதற்கு ரணில் தயாராக இருக்கின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்கவுக்குச் சார்பான ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த திங்கட்கிழமை கொழும்பில் கூடி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்தனர்.


பிரபல கல்வியியல் கல்லூரியில் 175 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல்! Top News
[Thursday 2020-01-30 17:00]

பத்தனை - ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதன் காரணமாக எதிர்வரும் 3ஆம் திகதிவரை கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. நேற்றையதினம் சுமார் 100 பேரும், இன்றையதினம் சுமார் 75 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களுக்கு கொட்டகலை, டிக்கோயா கிளங்கள் ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது என்றும் மருத்துவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் சிலருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், மேற்படி மாணவர்கள் எவ்வகையான வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்பதை கண்டறிவதற்காக இரத்த, சிறுநீர் மாதிரிகள் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து மேலும் இருவர் நீக்கம்!
[Thursday 2020-01-30 17:00]

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து மேலும் இருவர் நீக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மாகார் ஆகியோரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி பெரேரா மற்றும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியதாக தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும் – பேராயர்!
[Thursday 2020-01-30 17:00]

மக்களின் நன்மைக் கருதி, ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழு வெளிக்கொண்டுவர வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டார். நீர்க்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இவ்வேளையில், நான் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் விசேட வேண்டுகோளொன்றை முன்வைக்கிறேன்.


கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள்! Top News
[Thursday 2020-01-30 17:00]

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை 11.00 மணியளவில் ஆரம்பமாகிய இப்பேரணி, பஜார் வீதியின் ஊடாக வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியை அடைந்து, மீண்டும் பழைய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தது. இதன்போது எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், ஜனாதிபதியின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் போன்ற கோசங்களை எழுப்பியவாறும் ‘இலங்கையில் ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு நீதியா?’, ‘கணவன்மாரை கையளித்த சின்னஞ்சிறு உறவுகளை எண்ணிப்பார்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியவாறு உறவுகள் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.


ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய கும்பாபிசேகத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்த கருடன்கள்!
[Thursday 2020-01-30 17:00]

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கல்லடி, உப்போடை அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்டபக்ஸ பிரதிஸ்டா மஹா கும்பாபிசேகம் இன்று (வியாழக்கிழமை) காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதன்போது 20க்கும் மேற்பட்ட கருடன்கள் ஆலயத்தினை வலம் வந்த காட்சி மக்களின் கவனத்தை இதன்போது ஈர்த்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையான ஆலயங்களில் ஒன்றாகவும் அற்புதங்கள் நிறைந்த ஆலயமாகவும் காணப்படும் இந்த ஆலயத்தின் மஹா கும்பாபிசேக கிரியைகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமானது. புரிவார மூர்த்திகள், இராஜகோபுரம் உட்பட பல்வேறு சித்திரவேலைப்பாடுகளுடன் குறித்த ஆலயம் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வும் நடைபெற்றது.


தலைவராக நியமிக்கப்பட்டாரா சஜித்: ரவி கருணாநாயக்க விளக்கம்!
[Thursday 2020-01-30 06:00]

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை என்று கட்சியின் உதவி தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று பௌத்த பிக்குகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் இந்த தகவலை அவர் வெளியிட்டார். இந்த நிலையில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும் இந்த விடயத்தில் இணைந்து செயற்படுவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தலின்போது சில உறுப்பினர்கள் பௌத்த நாடு மற்றும் சிங்களர்கள் விடயங்களில் வெளியிட்ட கருத்துக்களே ஐக்கிய தேசியக்கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைந்தன.


வவுனியாவில் ரயிலில் மோதி உடல் சிதறி பசுமாடு உயிரிழப்பு!
[Thursday 2020-01-30 06:00]

வவுனியாவில் இன்று மதியம் கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற ரயிலுடன் மோதி பசுமாடு ஒன்று உயிரிழந்துள்ளது. கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற புகையிரதம் வவுனியா புகையிரத நிலையத்தில் நிறுத்துவதற்கு முற்பட்டபோது குறுக்காக பாய்ந்த பசுமாடு ஒன்றுடன் புகையிரதம் திடீரென்று மோதியது. இதில் பசு மாடு சம்பவ இடத்திலேயே தலைவேறாக துண்டாடப்பட்டு உயிரிழந்துள்ளது.


யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் பயணித்த சாரதி: பேருந்தை இடைநிறுத்திய விசேட அதிரடிப் படையினர்!
[Thursday 2020-01-30 06:00]

யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி மதுபோதையில் பயணித்ததை அடுத்து இராணுவம் மற்றும் பொலிஸ் , பொலிஸ், விசேட அதிரடிப் படையினரால் பேரூந்து நிறுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை ஏழு முப்பது மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட அக்கரைப்பற்று - யாழ்ப்பாணம் பேருந்து யாழ்ப்பாணம் - நாவற்குழி வரவேற்பு வளைவு பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினரால் சோதனையிட்டபோது பேருந்தின் சாரதி மதுபோதையில் காணப்பட்டதோடு அவரது ஆசனத்துக்கு அருகாமையில் பியர் மற்றும் மதுபான போத்தல்களும் காணப்பட்டுள்ளன.


விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு: மலேசியாவில் கைதானவருக்கு அந்நாட்டு மேல்நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு!
[Thursday 2020-01-30 06:00]

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல்வாதியான சாமிநாதனுக்கு பிணை வழங்க அந்நாட்டு மேல்நீதிமன்றம் மறுத்துள்ளது. நீதிமன்றத்தில் வைத்து நீதிசேவை ஆணையாளர் டட்டுக் அஹமட் சாஹிர் இந்த தீர்மானத்தை அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பு குற்றங்களின் 2012 சட்டத்தின் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


கிளிநொச்சியில் அதிர்ஷ்ட லாபச்சீட்டிழுப்பில் முதலிடம் பெற்றவருக்கான ஆட்டோ! Top News
[Thursday 2020-01-30 06:00]

யெர்மெனியை தலைமைக் காரியாலயமாக கொண்டு இயங்கும் உதவும் இதயங்கள் அமைப்பின் அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு 26/1/2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் அமைந்துள்ள உதவும் இதயங்கள் நிறுவனத்தின் திட்டமிடல் பணியகத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் அதிர்ஷ்ட லாபச்சீட்டிழுப்பில் முதலிடம் பெற்றவருக்கான ஆட்டோ இரண்டாம் பரிசான ஆண்களுக்கான மோட்டார் சைக்கிள் மூன்றாம் பரிசாக பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் மற்றும் ஆறுதல் பரிசாக பத்து துவிச்சக்கரவண்டிகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கொடிகாமம் நட்சத்திரமஹால் உரிமையாளரும் தொழிலதிபருமான (பிரான்ஸ்) த.பரமானந்தம் கலந்து கொண்டு முதல் பரிசில் பெற்றவருக்கான ஆட்டோவை வழங்கி வைத்தார். உதவும் இதயங்கள் நிறுவனத்தின் முற்போக்கு அணி உறுப்பினர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!
[Wednesday 2020-01-29 15:00]

கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் உண்மைக்கு புறம்பான பிரசாரங்களைக்கண்டு ஏமாற வேண்டாம் என அரச தகவல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்த திணைக்களம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் அல்லது இடம் ஒன்று இனங்காணப்பட்டால் அது தொடர்பாக அரச சுகாதார அதிகாரிகளால் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


என்னை சிறையில் அடைக்க முயற்சி - ராஜித சேனாரட்ன குற்றச்சாட்டு!
[Wednesday 2020-01-29 15:00]

என்னை மீண்டும் சிறையில் அடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய ராஜித சேனாரட்ன, இவ்வாறு முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். குறித்த ஆணைக்குழுவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தலின் போது வெள்ளை வான் கடத்தல் சம்பந்தமாக நடத்தப்பட்ட ஊடக சந்திப்பு தொடர்பாக என்னை கைது செய்ய புலனாய்வுப் பிரிவினர் தயாராகியபோது நான் சட்டத்தரணி ஊடாக முன்பிணை மனுத்தாக்கல் செய்து, நீதிமன்றம் அந்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணைக்கு திகதி குறிப்பிட்டது. அத்துடன் பிணை வழங்கக்கூடிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தில் அழைப்பாணையைப் பெறாமல் சட்டரீதியற்ற முறையில் பிடியாணையைப் பெற்று தன்னை கைது செய்தமை அடிப்படை மனித உரிமை மீறலாகும்.


சிறையில் உள்ள கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை!
[Wednesday 2020-01-29 15:00]

சிறையில் உள்ள கைதிகளுக்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வழங்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கோரியுள்ளனர். சுதந்திர மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான அமைப்பான கஃபே மற்றும் மனித உரிமைகள் மத்திய நிலையம் ஆகியன இந்த கோரிக்கையினை எழுத்து மூலமான கடிதத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள.


காணி அபகரிப்பை எதிர்த்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! Top News
[Wednesday 2020-01-29 15:00]

வவுனியாவில் அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமக்களின் காணிகளை அபகரித்த அதிகாரிகளைக் கண்டித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் வடக்கு மாகாண மக்கள் திட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (புதன்கிழமை) வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசே யுத்தத்தால் இடம்பெயர்ந்து இந்தியாவில் அகதிகளாக இருக்கும் மக்களின் காணிகளை அபகரிக்காதே, காணி விற்பனையால் கிடைத்தது எத்தனை கோடி, காணி ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பு போன்ற கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கும்போது, வவுனியா நகர பிரதேச செயலாளராக கடமையாற்றிய உதயராசா பல காணி மோசடிகளில் ஈடுபட்டமை தொடர்பாக தகவல்களை வெளிக்கொணர்ந்ததை அடுத்து, அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனினும் அவரை பணி இடைநிறுத்தம் செய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா