Untitled Document
May 18, 2024 [GMT]
எங்களை மன்னித்து விடுங்கள்: - போலீஸாரிடம் கெஞ்சிய தொழிலாளி, ஆட்டோ ஓட்டுநர்
[Friday 2018-10-19 15:00]

சென்னை திருவான்மியூரில் ஓசியில் பீடி தராத பிளாட்பாரத்தில் தங்கியிருந்தவரைத் தாக்கிய சம்பவத்தை தட்டிக்கேட்ட கட்டடத் தொழிலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டடத் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தியை எரித்து கொலை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் மற்றும் அவரின் நண்பர்


சபரிமலையை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு!
[Friday 2018-10-19 15:00]

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கேரளாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பைக் கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் சபரிமலையில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தீர்ப்பை சுட்டிக் காட்டி குறிப்பிட்ட வயது பெண்களும் கோவிலுக்கு செல்வதற்கு முயற்சித்தனர். ஆனால், கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.


சபரிமலைக்கு சென்ற பெண்ணின் வீட்டின் மீது மர்மநபர்கள் திடீர் தாக்குதல்!
[Friday 2018-10-19 15:00]

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்து அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இது ஒருபுறமிருக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததால் கோவிலுக்கு செல்வதற்கான முயற்சியில் சில பெண்கள் இறங்கினர். அவர்களுடன் சமூக ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள், செய்தியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அங்கு செல்வதற்கு ஆர்வம் காட்டினர்.


புயலில் சிக்கி பலியான 7 வயது மகளின் உடலை 8 கிலோ மீட்டர் தூக்கி சென்ற தந்தை!
[Friday 2018-10-19 15:00]

ஒடிசாவில் கடந்த 11-ந்தேதி டிட்லி புயல் கடுமையாக தாக்கியது. கஜபதி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. லட்சுமிபூர் பஞ்சாயத்தில் உள்ள கதாங்பூர் கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர்.


சரண கோஷம் எழுப்பும் பக்தர்கள்: - பதறும் காவல்துறையினர்
[Thursday 2018-10-18 16:00]

சபரிமலை, பம்பை, நிலக்கல் பகுதிகளில் பக்தர்கள் ஒன்றாகச் சேர்ந்து சரண கோஷம் எழுப்பினாலே, காவல்துறையினர் பதறியடித்தபடி கண்காணிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.


போதை மாத்திரைகள் கேட்டு மருந்து கடையை அடித்து நொறுக்கிய கல்லூரி மாணவர்கள்!
[Thursday 2018-10-18 16:00]

சென்னை அடுத்த படப்பையில் மருந்து கடையில் போதை மாத்திரைகள் கேட்டு கல்லூரி மாணவர்கள் 2 பேர் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படப்பையில் உள்ள மருந்து கடைக்கு சென்ற கல்லூரி மாணவர்கள் போதை மாத்திரை கேட்டு வற்புறுத்தியுள்ளனர். கடையின் உரிமையாளர் சரவணன், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தர முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த மாணவர்கள் மருந்துகடை மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.


மரணமடைந்த நண்பனின் முன்னாள் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞன்!
[Thursday 2018-10-18 16:00]

மஹாராஷ்டிராவில் இறந்த நண்பனின் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மாகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அபூர்வா யாதவ் (20) என்ற இளம்பெண் Sarthak Jadhav என்ற இளைஞரை காதலித்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், Jadhav-ன் காதலை முறித்துக்கொண்டு அபூர்வா வேறு ஒரு நபரை காதலிக்க ஆரம்பித்துள்ளார்.


தரம் தாழ்ந்த வார்த்தைகளால் திட்டாதீர்கள்: - இளைஞரின் கலங்கவைக்கும் முடிவு
[Thursday 2018-10-18 09:00]

சென்னையில் பெண் வேடமிட்டு மியூசிக்லி செய்து வீடியோ வெளியிட்ட இளைஞரை கிண்டல் செய்த காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். கலையரசன். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.ஆப்பை பயன்பபடுத்தி பல சினிமா பாடல்களுக்கும் பெண்கள் போல வேடமிட்டு மியூசிக்லி செய்து வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


மொடல் அழகியை ஏன் கொன்றேன்? - இளைஞனின் திடுக்கிடும் வாக்குமூலம்
[Thursday 2018-10-18 09:00]

மும்பையில் 20 வயது மொடல் அழகியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு 19 வயது கல்லூரி மாணவர், அதற்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். மான்சி தீக்ஷித் என்பவர் மொடல் ஆகும் ஆசையில் மும்பையில் வசித்து வந்துள்ளார். இவருக்கு மும்பையில் பி.காம் படித்துக்கொண்டிருக்கும் முஸாமில் சையத் (19) என்பவர் தொடர்பு, கிடைத்தது.


சபரிமலையில் 144 தடை உத்தரவு: - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு
[Wednesday 2018-10-17 21:00]

நிலக்கல் மற்றும் பம்பையில் தடியடி நடத்தப்பட்ட சமயத்தில் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. போலீஸார் மீது கல்லெறியும் சம்பவம் நடைபெற்றது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டதை அடுத்து, சபரிமலையில் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பா.ஜ.க சார்பில் பந்த்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


பக்தர்களை தடுக்க யாருக்கும் அனுமதி இல்லை: - தேவசம்போர்டு எச்சரிக்கை
[Wednesday 2018-10-17 16:00]

சபரிமலை அய்யப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்களை தடுக்க யாருக்கும் அனுமதி இல்லை என கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அமைதியை குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


மருமகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட மாமனார் அடித்து கொலை!
[Wednesday 2018-10-17 16:00]

திருவண்ணாமலை காந்தி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவரது மகன் சுரேஷ் (29), மருமகள் தாமரைச் செல்வி (22). கடந்த 14-ந்தேதி மாமனார் ஆறுமுகத்துடன் தாமரைச்செல்வி, மாட்டிற்கு புல் அறுத்து தூக்கி கொண்டு வந்தார். அப்போது, 6 பேர் கும்பல் தாமரைச்செல்வியை கிண்டல் செய்தனர். இதனை ஆறுமுகம் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த கும்பல் உருட்டுக்கட்டை, கல்லால் ஆறுமுகத்தை பயங்கரமாக தாக்கினர். இதனை தடுக்க வந்த மகன் சுரேசையும் அந்த கும்பல் தாக்கியது. இதில் தந்தையும், மகனும் பலத்த காயமடைந்தனர். 2 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.


மொடல் அழகி கொலை: - உடலை சூட்கேசில் அடைத்து வீசிய கல்லூரி மாணவர் கைது
[Wednesday 2018-10-17 08:00]

மும்பையை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ஒருவர் தன் காரில் வந்த பயணி ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர் போலீசாரிடம் கூறுகையில், அந்தேரி பகுதியில் இருந்து முசாமில் சையத் என்ற பயணி செல்போன் செயலி மூலம் என்னுடைய காரை பதிவு செய்து மும்பை விமான நிலையம் செல்ல வேண்டும் என ஒரு சூட்கேசுடன் வந்தார். விமான நிலையம் நோக்கி காரை ஓட்டிச்சென்ற போது திடீரென அவர் மலாடு பகுதிக்கு காரை திருப்புமாறு கூறினார். அங்குள்ள ஒரு புதரில் தான் கொண்டு வந்த சூட்கேசை தூக்கி வீசி விட்டு அவர் காரில் இருந்து இறங்கி ஓடி விட்டார் என்று தெரிவித்தார்.


ஐந்து குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்!
[Wednesday 2018-10-17 08:00]

வறுமையின் கோரப்பிடியில் சிக்கியதால், தன் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, தானும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டவள் நல்ல தங்காள். நவீன நல்லதங்காள், இன்றைக்கும் வாழ்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம், குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் நடந்து இருக்கிறது. அங்கு பாஞ்ச் பிப்லா கிராமத்தை சேர்ந்தவர் கீதா பாலியா. இந்தப் பெண்ணுக்கு 5 குழந்தைகள். வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வந்திருக்கிறார்.


தவறாக நடக்க முயன்ற வங்கி மேலாளரை கதிகலங்கவைத்த பெண்!
[Tuesday 2018-10-16 17:00]

கர்நாடகாவில், லோன் கேட்டு விண்ணப்பித்திருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வங்கி மேலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சமூகவலைதளங்களில் நேற்று முதல் ஒரு வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வங்கி மேலாளரை ஒரு இளம்பெண் சாலையில் வைத்துப் புரட்டி எடுக்கிறார். கட்டை, காலணி போன்றவைக் கொண்டு சரமாரியாகத் தாக்கும் காட்சிகள்தான் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களில் பாடகி சின்மயி பிரச்சனையால் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது: - சரத்குமார்
[Tuesday 2018-10-16 17:00]

கரூரில் அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி இளைஞர் எழுச்சி நாள் விழா மற்றும் உடல்நல விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவரும், நடிகருமான சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என ஆகமவிதி இருக்கிற போது, பாலின சமத்துவத்தை சுட்டிக்காட்டி பெண்களை அங்கு அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது ஏற்புடையதல்ல.


மனைவியின் காதலனால் கத்தியால் குத்தப்பட்ட கணவர் பரிதாப மரணம்: - மனைவி, காதலன் மீது கொலை வழக்கு
[Tuesday 2018-10-16 16:00]

பல்லாவரத்தைச் சேர்ந்தவர் கதிரவன் (வயது30). கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவரது மனைவி அனிதா (25). இவர்களுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. கடந்த 13-ந்தேதி மாலை இருவரும் திருவான்மியூர் கடற்கரைக்கு வந்தனர். அப்போது மர்ம வாலிபர் கதிரவனை கத்தியால் குத்தி விட்டு அனிதா அணிந்து இருந்த நகையை பறித்துச் சென்றார்.


செல்பியால் வந்த வினை: - கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி பலி
[Tuesday 2018-10-16 08:00]

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் என்.எஸ்.எஸ். முகாமிற்காக பெங்களூரு புறநகர் பகுதியான நெலமங்களாவுக்கு வந்தனர். நேற்று காலையில் நெலமங்களா தாலுகா தாபஸ்பேட்டை அருகே உள்ள தேவரஒசஹள்ளி கிராமத்தில் உள்ள ரேவண்ணா சித்தேஷ்வரா கோவிலுக்கு சென்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


பெண்ணின் தொடர் பாலியல் வற்புறுத்தலுக்கு இலக்கானவர் தூக்கிட்டு தற்கொலை!
[Tuesday 2018-10-16 07:00]

மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைநகர் மும்பையில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர் சச்சின் மிட்காரி(38).பர்பானி நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவந்த சச்சினுக்கும் உடன் பணியாற்றும் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.


பிரதமர் மனதில் தொழிலதிபர்களுக்கு மட்டுமே இடமுண்டு: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
[Tuesday 2018-10-16 07:00]

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் சட்டப்பேரவை ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைவதை தொடர்ந்து அம்மாநிலத்திற்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆளும் பாரதிய ஜனதா கட்சியும், 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் கட்சியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.


இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால் இலங்கையில் ஒரு தமிழன் கூட இருக்கமாட்டான்: - பொன்.ராதாகிருஷ்ணன்
[Sunday 2018-10-14 17:00]

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால் இலங்கையில் ஒரு தமிழன் கூட இருக்கமாட்டான் என்பதுடன் நம்முடைய தமிழர்களும் அழிக்கப்படுவார்களென மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார சென்னை துறைமுக விருந்தினர் மாளிகையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,


நேர்மையான அரசியல் பேச யாருக்கு துணிவு இருக்கு: - கல்லூரி விழாவில் கமல்ஹாசன்
[Sunday 2018-10-14 12:00]

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், மூன்று நாள் சுற்றுப்பயணமாக சேலம், நாமக்கல் மாவட்டத்திற்கு வந்திருக்கிறார். 12ம் தேதி காலை முதல் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் கமல். தொடக்கத்திலேயே நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.எம் கல்லூரியில் நடைபெற்ற சிவாஜி 90வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.


கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை: - மனைவி கைது
[Sunday 2018-10-14 12:00]

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் கதிரவன். ஐ.டி. ஊழியரான இவருக்கும் அனிதா என்பவருக்கும் கடந்த 20 நாட்களுக்குமுன் திருமணம் நடந்தது. புதுமண தம்பதியர் நேற்று திருவான்மியூர் கடற்கரைக்கு வந்திருந்தனர். அப்போது பைக்கில் வந்த இரண்டு நபர்கள் கதிரவன் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். இதனால் நிலைகுலைந்து கதிரவன் விழுந்ததும், அனிதாவின் கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் செயின் மற்றும் செல்போனை பறித்துகொண்டு தப்பி ஓடினர்.


கங்கையை சுத்தப்படுத்த கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபடும் சாமியார்!
[Sunday 2018-10-14 12:00]

உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை நதியின் குறுக்கே அணைகள், தடுப்பணைகள், நீர் மின் நிலையங்கள் கட்டுவதால் நதியின் போக்குமாறுகிறது என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஆன்மீகவாதியுமான ஜி.டி. அகர்வால் 4 மாதங்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார். அவரைத் தொடர்ந்து மேலும் ஒரு சாமியார் தலைநகர் ரிஷிகேஷில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் பெயர் கோபால்தாஸ்.


அய்யப்பனின் மேல் கை வைத்த கம்யூனிஸ்டு அத்தியாயம் முடிவுக்கு வரும்: - தமிழிசை சவுந்தர்ராஜன்
[Sunday 2018-10-14 12:00]

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது. கேரளா மட்டுமல்லாது தமிழகத்திலும் அய்யப்பபக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டம் அருமனையில் நேற்று ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற பெண்கள் சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர்.


இனியும் அமைதியாக இருந்தால் விபரீதமாகி விடும்: - பாரதிராஜாவிடம் கண்ணீர் சிந்திய வைரமுத்து
[Saturday 2018-10-13 20:00]

சின்மயி கூறியுள்ள பாலியல் புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இயக்குனர பாரதிராஜாவை வைரமுத்து சந்தித்து இது குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதோடு பல பெண்களிடம் வைரமுத்து தவறாக நடந்தார் என அவர்கள் கூறியதாக டுவிட்டரில் பாதிக்கப்பட்டவர்களின் பதிவை ஷேர் செய்தார்.


காதலனை அரிவாளால் வெட்டி காதலியைக் கடத்திய கும்பல்!
[Saturday 2018-10-13 19:00]

கன்னியாகுமரி அருகே, காவல் துறை விசாரணைக்கு காரில் வந்த காதல் ஜோடியை வழிமறித்து, 15 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி, காதலியை கடத்திச்சென்ற வழக்கில், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


10 ரூபாய்க்காக 20 ஆண்டுக்கால நண்பரை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற நபர்!
[Saturday 2018-10-13 19:00]

உத்தரப்பிரதேச மாநிலத்தில், 10 ரூபாய்க்காக நடந்த வாக்குவாதத்தில், சலூன் கடைக்காரர் ஒருவர், தனது 20 ஆண்டுக்கால நண்பரை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா