Untitled Document
May 12, 2024 [GMT]
பறவைகள் செல்போன் டவர்களால் அழிவது உண்மையா? -ஆராய்ச்சியாளர்கள் கருத்து
[Saturday 2018-12-01 17:00]

செல்போன்கள் பயன்பாட்டுக்கு வந்தபோது, அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர். அதுபோல செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மனித உடலிலும், பிற உயிர்களையும் தாக்குகிறது என உலகம் முழுவதும் புகார்கள் எழுந்தன. முதலில் சிட்டுக்குருவிகள் முதலிய பறவைகளின் அழிவுக்கும், செல்போன் டவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் நடந்த ஆராய்ச்சிகளில் செல்போன் டவர்களால் பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படுவது உறுதிபடுத்தப்பட்டது.


இளம் ஆசிரியையை கடத்தி சென்ற கும்பல்: - பின்னணியில் இருந்த கார்த்திக்
[Saturday 2018-12-01 16:00]

தமிழகத்தில் பள்ளி ஆசிரியயை, அவரது டூவீலரில் காரை விட்டு மோதி கீழே விழ வைத்து பின்னர் கடத்திச் சென்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் லால் பகதூர் சாலையில் உள்ள ஏஜேசி மேல்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுபவர் காயத்ரி (31) நேற்று மாலை பள்ளியை விட்டு டூவீலரில் தனது வீட்டுக்குக் கிளம்பினார் காயத்ரி.


ஏல சீட்டு நடத்தி மோசடி செய்துவிட்டு வெளியூருக்கு தப்ப முயன்ற ஆசிரியை!
[Saturday 2018-12-01 16:00]

விழுப்புரம் மாவட்டத்தில் ஏலசீட்டு நடத்தி மோசடி செய்துவிட்டு வெளியூருக்கு தப்ப முயன்ற பெண் ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் விமல துரைநாதன் (40). இவருடைய மனைவி பியூலா (36) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசியராக பணியாற்றி வந்தார்.


கள்ள காதல் விவகாரம் - பெண் கொலை - கள்ளக்காதலன் கைது!
[Saturday 2018-12-01 10:00]

குமரி மாவட்டம் திற்பரப்பு அருகே சேக்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி லில்லிபாய் (வயது 41). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். லில்லிபாய் குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 19-ந் தேதி காலையில் வேலைக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை.


பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும்: - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
[Saturday 2018-12-01 10:00]

புதுக்கோட்டை:


வெளிநாட்டிலிருந்து வந்த கணவரைக் காதலனோடு சேர்ந்து கொன்று புதைத்த மனைவி!
[Saturday 2018-12-01 09:00]

காதலனோடு சேர்ந்து வெளிநாட்டிலிருந்து வந்த கணவரைக் கொன்று புதைத்துவிட்டு, காணவில்லை என்ற இரண்டு ஆண்டுகளாக நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தின் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த இளையராஜாவிடமிருந்து மனக்கசப்பால் மனைவி பிரிந்துபோக, தனது சகோதரி மகள் முத்துவை 11 ஆண்டுகளுக்கு முன் மணமுடித்தார்.


உமிழ்நீர் வழியாக எய்ட்ஸ் நோயை பரப்பிய கணவர்: - மனைவி புகார்
[Saturday 2018-12-01 09:00]

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் உமிழ்நீர் வழியாக தமது கணவர் எய்ட்ஸ் நோயை பரப்பியதாக மனைவி புகார் அளித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹோமியோபதி மருத்துவரான கணவருக்கு எதிராக புனே நகரத்து இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


"மருத்துவ காப்பீட்டு திட்டம் ரூ.5 லட்சமாக உயர்வு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.
[Friday 2018-11-30 22:00]

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் அதிகபட்ச தொகை ரூ.2 லட்சத்தில் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் - சிகிச்சை தொகை ரூ.5 லட்சமாக உயர்வு


"கொலையை செல்போனில் படம் பிடித்த மக்கள்" - உதவ நேரமில்லை....
[Friday 2018-11-30 22:00]

ஐதராபாத் அருகே பொது மக்கள் மத்தியில் ஆட்டோ டிரைவர் வாலிபரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அனைவரும் இணைந்து உதவுவோம்: - அமீர்கான்
[Friday 2018-11-30 19:00]

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு அனைவரும் இணைந்து உதவுவோம் என அமீர்கான் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


எதிர்க்குரல் கொடுக்க வாருங்கள்: - கெளசல்யா சங்கர்
[Friday 2018-11-30 19:00]

சாதி ஒழிப்புப் போராளியாக வலம் வந்து கொண்டிருக்கிற கெளசல்யா சங்கர், தன்னுடைய கணவர் சங்கரின் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவியிருக்கிறார். அந்த அறக்கட்டளையின் சார்பாக, வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கீழ்ப்பாக்கத்தில் உள்ள டான் போஸ்கோ இளைஞர் மன்றத்தில் 'நத்தீஸ் - சுவாதி'க்கு அஞ்சலியும், ஆணவக் கொலைக்கு எதிர்க்குரல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. சாதி ஒழிப்புக்காகக் குரல்கொடுத்து வருபவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். இதுகுறித்து கெளசல்யா சங்கரிடம் பேசினோம்.


எப்போதும் மக்களுடன் தான்: - தமிழிசை சவுந்தரராஜன்
[Friday 2018-11-30 17:00]

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நிவாரண உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது :- கஜா புயல் நிவாரண உதவியில் மத்திய அரசு எப்போதுமே உங்களுக்கு உதவ உங்களுடனேயே உள்ளது. அதற்காகத்தான் முதன் முதலில் மத்திய அரசு புயல் பாதிப்பிற்கு முன்பே மத்திய ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கடற்படையை அனுப்பி உதவியது.


இல்லற வாழ்வுக்காக கைதிக்கு 15 நாட்கள் பரோல்!
[Friday 2018-11-30 17:00]

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 28). இவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், பெருமாளின் மனைவி முத்துமாரி, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில்,


மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!
[Friday 2018-11-30 17:00]

கர்நாடகாவில் காவிரியாற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் அணைகட்ட முனையும் கர்நாடக அரசின் செயல்திட்ட வரைவுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கும் மத்திய அரசின் செயலானது பெரும் அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் அளிக்கிறது. தமிழர்களின் உரிமையினை மறுத்து உணர்வினை உரசிப் பார்க்கும் பா.ஜ.க. அரசின் தமிழர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.


"உறங்கிய யானை எழுந்து நிற்கும்:2021ல் இஸ்ரோ விண்வெளி மனிதர்கள்" - மோடி துணிகரம்.
[Friday 2018-11-30 12:00]

பிஎஸ்எல்எல்வி சி-43 ராக்கெட் மூலம் இஸ்ரோ சார்பில் அமெரிக்காவின்-23 மற்றும் மற்றநாடுகளை சேர்ந்த என மொத்தம் 30 செயற்கைகோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. ஏற்கனவே பல்வேறு நாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களையும் இஸ்ரோ சார்பில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு வருகின்றது. இஸ்ரோ சர்வதேச வர்த்தக தளமாகவும் திகழ்கின்றது.


கடல் வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி..! ஓகி புயலின் வயது ஒன்று!... இன்று!...
[Thursday 2018-11-29 23:00]

கன்னியாகுமரி: ஒகி புயல் தாக்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குளச்சலில் உயிர் நீத்த மீனவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி கடல் வீரர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது.குமரி மாவட்டத்தில் கழிந்து வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட ஒகி புயலின் கோர தாண்டவம் கன்னியாகுமரி மாவட்டத்தையே புரட்டி போட்டது.


"5 லட்சம் விவசாயிகள்.. நிர்வாண போராட்டம்.." டெல்லி அலெர்ட் !! நாளை........
[Thursday 2018-11-29 23:00]

டெல்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று மாலையில் இருந்து நாளை மாலை வரை மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. நாம் நட்ட விதையொன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது என்று தமிழக விவசாயிகள் சந்தோசமாக மார்தட்டிக் கொள்ள முடியும். தமிழக விவசாயிகள் டெல்லியில் சென்று வருடம் முழுக்க நடத்திய போராட்டம் தற்போது இந்திய விவசாயிகளின் போராட்டமாக மாறியுள்ளது.


காதலி வீட்டு நாயை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது!
[Thursday 2018-11-29 18:00]

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கரிசல்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கார்த்திக் (வயது22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பிளஸ்-2 மாணவியை காதலித்து உள்ளார். இதற்கு மாணவி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த பிரச்சினையால், மாணவியின் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அவரை திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனி வேலைக்கு அனுப்பினர். இது தொடர்பாக மாணவியின் சித்தப்பா ராமர் (35) என்பவர் கார்த்திக் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரிடம் காதல் விவகாரத்தை கூறி சத்தம் போட வலியுறுத்தி உள்ளார்.


பெற்ற குழந்தையை தாக்கி உணர்வு இழக்க செய்த தந்தை!
[Thursday 2018-11-29 18:00]

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஹவச்சா (வயது 26). இவர் ஈரோட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது ஈரோடு பகுதியை சேர்ந்த அமானுல்லா கான் (30) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பெண் குழந்தை பிறந்தது.


பருவநிலை மாற்றம் காரணமாக 5 ஆண்டில் 4 கோடி இந்தியர்கள் பாதிப்பு!
[Thursday 2018-11-29 18:00]

சூரிய வெப்பம் நேரடியாக பூமியை தாக்காத வகையில் பூமிக்கு மேலே ஓசோன் படலம் சூழ்ந்திருக்கிறது. இதில் விழுந்துள்ள ஓட்டைகள் காரணமாக உலகம் முழுவதும் பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகில் வெப்ப நிலையும் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவை கடுமையாக பாதிக்கும் என்று சுகாதார ஆய்வு அமைப்புகள் கூறி வருகின்றன.


ஆறு வயதில் சிறுமியாக இருந்த போது நடந்த திருமணம்:: - 12 ஆண்டுகள் கழித்து சட்டப்படி ரத்து
[Wednesday 2018-11-28 18:00]

இந்தியாவில் 6 வயதாக இருக்கும் போது சிறுமிக்கு திருமணம் நடந்த நிலையில் தற்போது 12 ஆண்டுகள் கழித்து அந்த திருமணம் சட்டப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பித்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் பிண்டுதேவி (18). இவருக்கு 6 வயதாக இருக்கும் போது கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாய திருமணம் செய்துவைக்கப்பட்டது.


புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை அளித்து நெகிழ வைத்த சிறுமி!
[Wednesday 2018-11-28 17:00]

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை அளித்து நெகிழ வைத்துள்ளார் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி சஞ்சனா. கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து உதவிகள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரம் கொடுத்துள்ளார் சஞ்சனா என்ற சிறுமி.


எட்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர்: - அதிர்ச்சி சம்பவம்
[Wednesday 2018-11-28 07:00]

இந்தியாவில் எட்டாவது மாடியில் இருந்து பெண் மருத்துவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் கடக்படா பகுதியை சேர்ந்தவர் பிரனவ் குல்கர்னி. இவர் மனைவி பிரஜக்டா (33). தம்பதிகள் இருவருமே மருத்துவர்கள் ஆவர். இருவரும் அங்குள்ள எட்டு மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.


ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த தமிழக காதல் ஜோடி: - சிக்கிய உருக்கமான கடிதம்
[Wednesday 2018-11-28 07:00]

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தமிழக காதல் ஜோடி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த மோனிஷா(21) எனும் கல்லூரி மாணவியும், அதே பகுதியைச் சேர்ந்த ஹேமந்த்குமார் (23) என்பவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.


பெற்றோர் எதிர்ப்பை மீறி திருநங்கையை திருமணம் செய்த நபர்: - திருமண பதிவு செய்வதற்கு கோரிக்கை
[Wednesday 2018-11-28 07:00]

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருநங்கையை திருமணம் செய்த அருண்குமார் தங்களது திருமணத்தை தமிழ்நாடு திருமண பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். தூத்துக்குடியை சேர்ந்தவர் அருண்குமார் (22). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ரெயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.


மாநில அரசின் முடிவைத் தடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை: - ஏழு பேர் விடுதலையில் அதிர்ச்சித் தகவல்
[Tuesday 2018-11-27 14:00]

சி.பி.ஐ விசாரித்த வழக்குகளில் மாநில அரசின் முடிவைத் தடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன் நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


நகை மற்றும் பணத்துக்காக கணவன் கணவன்-மனைவி அடித்து கொலை: - போலீசார் விசாரணை
[Tuesday 2018-11-27 14:00]

சென்னை ஆவடியில் இன்று காலை நடந்த கொடூர கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- ஆவடி சேக்காடு அய்யப்பன் நகர் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி விலாசினி. இருவரும் தமிழ்நாடு அரசு அச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.


திருமாவளவன் - தினகரன் திடீர் சந்திப்பு!
[Tuesday 2018-11-27 14:00]

கஜா புயல் பாதித்த தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் அமைச்சர்கள் முகாமிட்டு தீவிரப்படுத்தி வருகிறார்கள். 12 நாட்கள் ஆகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத மக்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து விவசாயிகளும் தவித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வை புனரமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சியினரோடு, தன்னார்வலர்களும் கைகோர்த்து இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா