Untitled Document
May 2, 2024 [GMT]
மஹிந்தவுக்கு ஆதரவான வாக்குகள் சரிவு!
[Tuesday 2018-02-13 07:00]

2015 ஜனாதிபதித் தேர்தலில் 5.77 மில்லியன் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 4.95 மில்லியன் வாக்குகளையே பெற்றுள்ளார். இதனால் எமக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வாக்களித்தவர்களை மட்டுமன்றி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்த 6.1 மில்லியன் மக்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகுமென நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்தார்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் 5.77 மில்லியன் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 4.95 மில்லியன் வாக்குகளையே பெற்றுள்ளார். இதனால் எமக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வாக்களித்தவர்களை மட்டுமன்றி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்த 6.1 மில்லியன் மக்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகுமென நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

  

இதேவேளை, வாக்காளர்களின் நம்பிக்கையைப் பலப்படுத்துவதற்காக நம்பிக்கைக்குரிய ஜனநாயக அரசியல் சக்திகளுடன் இணைந்து செயற்படுவோமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அமைச்சர் மங்கள சமரவீர இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

நாட்டின் 51 சதவீதமான மக்கள் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதியன்று எமது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதிகளுக்காக அவருக்கு வாக்களித்தனர். அது தான் நாட்டில் அதுவரை இருந்து வந்த சர்வாதிகாரம் முடிவுக்கு வந்த காலப்பகுதி. இலங்கையில் ஜனநாயகத்தை மீள கட்டியெழுப்புவதாக வாக்குறுதியளித்தவர்கள், தனி ஒரு குடும்பம் மற்றும் அவர்களது விசுவாசிகளை மட்டுமன்றி அனைத்து மக்களையும் பாதுகாக்கும் என்ற உறுதிப்பாட்டுக்கு வந்தனர்.

இலங்கையர்கள், இலங்கையின் சட்டத்தாலன்றி பயத்தால் நிருவகிக்கப்பட முடியாதென்ற நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி,சுதந்திரக் கட்சியின் பல பலசாலிகள், மக்கள் விடுதலை முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட 30 அரசியல் மற்றும் சமூக அமைப்புக்கள் அன்றைய தினம், ஒன்றாக கூட்டு சேர்ந்தன.

அரச சேவையில் சுதந்திரத்தை நிலைநாட்டவும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவும், எமது சட்ட முறைமையிலுள்ள சட்ட கட்டுப்பாட்டுக்கேற்ப அனைத்து இலங்கையர்களின் உரிமைகளைப் பேணவும் அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு நாம் வாக்குறுதி அளித்திருந்தோம். v திறைசேரியின் கஜானாவை திருடியவர்களை நீதிக்கு முன் கொண்டு நிறுத்துவதாக நாம் வாக்குறுதியளித்தோம். அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இரத்தத்திலேயே தைரியம் நிறைந்த ஊடகவியலாளர்களின் ஆளுமையை நிலைநிறுத்துவதற்கான தாகத்தை தீர்த்து வைப்பதாக நாம் வாக்குறுதியளித்தோம். எல்லாவற்றையும் விட, எமக்கு முன்னர் இருந்த பாரிய ஊழல் நிறைந்த தசாப்தத்திலிருந்து உங்களை விடுவிப்பதாக நாங்கள் வாக்குறுதியளித்தோம்.

இன்று, நாம் செய்திருப்பது போதுமானதாக இல்லையென மக்கள் எம்மிடம் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளாக பாழடைந்த நீதி முறைமையில் சுதந்திரம் மற்றும் விரைவுத்தன்மையை ஏற்படுத்தவும், பெருமளவில் இடம்பெற்று வரும் சிக்கல் நிறைந்த குற்றச் செயல்கள், கொலைகள் மற்றும் ஏமாற்று செயற்பாடுகள் தொடர்பில் வெற்றிகரமாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான சூழ்நிலையை பொலிஸாரிடம் வலுவூட்டுவதற்காகவும் நாம் ஆகக்கூடிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். இருந்த போதிலும், குற்றச் செயலொன்று இடம்பெற்றிருக்கலாம் என்ற சமிக்ஞை வெளியானவுடனேயே அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலக வேண்டுமென்பதையும் நீதி நிலைநாட்டப்படுவதற்கு முன்னரே சம்பந்தப்பட்டவர்களிடையே மிகவும் விறுவிறுப்புடன் குற்றச்செயல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதையும் நாட்டின் வரலாற்றில் எமது அரசாங்கமே முதற்தடவையாக ஊக்குவித்தது.

மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள இச்செய்தியானது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மிகவும் ஆழமாக மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதியை மிகப் பரந்தளவில் முன்னெடுக்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். எமது ஜனநாயக கதையின் இந்த முதல் அத்தியாயத்தை நாம் தொடங்கும்போது, கடந்த சனிக்கிழமை நாம் கண்ட இரண்டு குறிப்பிடத்தக்கச் செயற்பாடுகளுக்காக இலங்கை பெருமை கொள்ள முடியும்.

அதில் முதலாவது தான் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் சேவையின் கீழ், தேர்தலொன்றை நடத்தியமையாகும். இதற்கு முன்னர் எந்தவொரு அரசாங்கமும் அரச மற்றும் தனியார் சொத்துக்கள், வளங்கள் மற்றும் அரச ஊடகங்களை அரசியல் நோக்கிற்காக பயன்படுத்தாமல் விட்டதில்லை. இந்த சுயாதீன அமைப்புக்களின் கீழ் இலங்கை, தேர்தலை குழப்பக்கூடிய வகையிலான ஆகக்குறைந்த ஊழல்,மிரட்டல் மற்றும் வன்முறையைக் கொண்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது பெற்றுக்கொண்ட 5.77 மில்லியன் வாக்குகள்(47.6%) கடந்த வாரம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைக்கான தேர்தலில் 4.95 மில்லியன் வாக்குகளாக (44.7%) குறைவடைந்துள்ளமை இறுதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை எமக்கும் ஜனாதிபதி சிறிசேனவுக்குமாக சேர்த்து வாக்களித்த 46 சதவீத மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு மட்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை.மாறாக ராஜபக்ஷவின் ஆட்சியை எதிர்த்து கடந்த சனிக்கிழமை வாக்குச் சாவடிகளை நோக்கிச் சென்ற நாட்டின் 6.1 மில்லியன் பிரஜைகளையும் (55.3%) பாதுகாக்கும் பொறுப்பும் உள்ளது.

தாய் நாட்டை தரம் உயர்த்துவதற்காகவும் இலங்கை மீண்டும் எச்சந்தர்ப்பத்திலும் வாளால் ஆட்சி செய்யப்பட மாட்டாது என்பதனை உறுதி செய்வதற்காகவும் நம்பிக்கைக்குரிய ஜனநாயக அரசியல் சக்திகளுடன் சேர்ந்து எமது வாக்காளர்களின் நம்பிக்கையை பலப்படுத்துவதே எமது கடமையாகும்.அது தான் எமது தேவை என்பதனுடன் அதிலிருந்து நாம் தவற மாட்டோம். எமது ஜனநாயகமும் எமது குடியரசும் அதிலேயே தங்கியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



புரட்சிகர அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன்! - மேதினத்தில் சூளுரைத்த சிறீதரன்.
[Thursday 2024-05-02 07:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அதன் எதிர்கால தலைமைத்துவத்தையும் மக்கள் மன்றத்தின் முன் கையளித்து, தமிழ்த் தேசிய மே நாளன்று புரட்சிகர அரசியல் பயணமாக எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.



மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளர்!
[Thursday 2024-05-02 07:00]

வடக்கு, கிழக்கில் உள்ள எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கு ஆவன செய்யவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.



விக்கியின் 2 ஆவது விருப்பு வாக்கு யோசனை பொது வேட்பாளர் கோசத்தை மலினப்படுத்தும்!
[Thursday 2024-05-02 07:00]

தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் விக்னேஸ்வரனின் 2ஆம் வாக்கு அளிப்பது பற்றிய கூற்று சந்கேத்தை ஏற்படுத்துவதோடு பொதுவேட்பாளர் விடயத்தினை மலினப்படுத்துவதாகவும் உள்ளதென்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.



ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த தமிழர் தேசத்து மக்களும் நிராகரிக்க வேண்டும்! Top News
[Thursday 2024-05-02 07:00]

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த தமிழர் தேசத்து மக்களும் நிராகரிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் என்று தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் மேதினப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



எமது ஆட்சியின் கீழேயே அடுத்த மே தினம்! - அனுர சூளுரை.
[Thursday 2024-05-02 07:00]

முதலாளித்துவ வர்க்கத்தின் கீழ் இடம்பெறும் இறுதி மே தினக்கூட்டம் இதுவாகவே இருக்கும். அடுத்த மே தினக்கூட்டம் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழேயே நடைபெறும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க சூளுரைத்துள்ளார்.



எமது வேட்பாளரே வெற்றிபெறுவார்! - என்கிறார் மஹிந்த.
[Thursday 2024-05-02 07:00]

ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளரே வெற்றிபெறுவார் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பு கெம்பல் பார்க்கில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.



ஈழவேந்தன் மறைவுக்கு வேலன் சுவாமிகள் இரங்கல்!
[Thursday 2024-05-02 07:00]

எமது ஈழ விடுதலைப் பயண வரலாற்றில் தடம் மாறாமல் உயர்ந்த இலட்சியத்துடன் பயணித்த விடுதலைச் செம்மல் ம.க.ஈழவேந்தன் ஐயாவின் மறைவு எம்மையெல்லாம் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அன்னாருக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் சார்பில் எமது அஞ்சலிகளையும் புகழ் வணக்கத்தினையும் தெரிவித்துக்கொள்கிறோம் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.



வடக்கில் வெப்பநிலை 42 பாகை செல்சியசை விட அதிகரிக்கும்!
[Thursday 2024-05-02 07:00]

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில், அடுத்த சில நாட்களுக்கு 42 பாகை செல்சியஸ் இனை விட அதிகமான வெப்பநிலை காணப்படும் என, யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் அங்கீகரிக்கப்பட்ட வானிலையானருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.



இம்மாதக் கடைசியில் உயர்தரப் பரீட்சை பெறுபேறு!
[Thursday 2024-05-02 07:00]

கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



நாட்டின் மொத்த கையிருப்பு 05 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு!
[Thursday 2024-05-02 07:00]

கடந்தமார்ச் மாதம் வரை நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.



13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்துவோம்! Top News
[Wednesday 2024-05-01 17:00]

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் தெரிவித்தார். மேலும் திருத்தப்பட்ட மக்கள் சார்பான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எமது ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.



மானிப்பாயில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தின நிகழ்வு! Top News
[Wednesday 2024-05-01 17:00]

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தின நிகழ்வு இன்று மானிப்பாய் பிரதேச சபையின் பொது நோக்கு மண்டபத்தில் "அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து தலைமை உரை, விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றது.



கிளிநொச்சியில் பழைய நினைவுகளை மீட்டார் எரிக் சொல்ஹெய்ம்!
[Wednesday 2024-05-01 17:00]

நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இன்று கிளிநொச்சிக்கு தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டார். தான் சமாதான தூதுவராக பணியாற்றிய போது கிளிநொச்சிக்கு பயணம் செய்து விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய இடங்களை மீண்டும் ஒரு தடவை பார்த்துவிட்டு செல்வதற்காக கிளிநொச்சிக்கு இன்று சென்றிருந்தார்.



கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மே தினம்! Top News
[Wednesday 2024-05-01 17:00]

வடமாகாண ரீதியிலான தமிழ்த் தேசிய மே தினம் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட தொழிற்ச்சங்கங்களுடன் இணைந்து தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளை ஏற்பாடு செய்த மே தினம் மக்களின் எழுச்சி பேரணியோடு நடைபெற்றது.



காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கான முழு நிதியையும் வழங்கும் இந்தியா!
[Wednesday 2024-05-01 17:00]

காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கான மொத்த செலவையும் ஏற்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காங்கேசன் துறைமுகம் மொத்தம் 16 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது ஆகும்.



நுணாவில் விபத்தில் ஒருவர் பலி- 5 பேர் படுகாயம்!
[Wednesday 2024-05-01 17:00]

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி-நுணாவில் ஏ9வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறியரக உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.



உரும்பிராயில் சிக்கிய வாள்கள்!
[Wednesday 2024-05-01 17:00]

யாழ்ப்பாணம்- உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த காணிக்கு சென்ற பொலிஸார் மூன்று வாள்களையும் மீட்டு சென்றுள்ளனர். வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



மொட்டு, யானைக்கு பாஜக அழைப்பு!
[Wednesday 2024-05-01 17:00]

இந்தியாவில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளை தேர்தல் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை பெற அழைப்பு விடுத்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.



மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு!
[Wednesday 2024-05-01 17:00]

யாழ்ப்பாணத்தில் மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கதிரவேல் சுப்பிரமணியம் (வயது 64) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.



ஐதேக மேடையில் மொட்டு எம்.பி!
[Wednesday 2024-05-01 17:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கயாஷான் நாவானந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிறிசேனா மைதானத்திற்கு முன்னால் நடைபெற்று வருகிறது.


NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா