Untitled Document
February 24, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
யாழ்ப்பாணத்தில் தொடரும் வாள்வெட்டு! - இருவர் காயம், வீட்டுக்குத் தீவைப்பு
[Tuesday 2017-11-14 18:00]

மானிப்­பாய் மற்­றும் கோப்­பா­யில் இடம்பெற்ற வாள்­வெட்­டுக்­க­ளில் 2 பேர் படு­கா­ய­ம­டைந்­த­னர். மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்­த­வரை வாளால் வெட்­டி­ வீழ்த்­தி­ விட்டு வெட்­டுக்­குழு மோட்­டார் சைக்­கி­ளை­யும் கொள்­ளை­ய­டித்­துச் சென்­றது. இந்­தச் சம்­ப­வம் கோப்­பாய் இரு­பாலை வீதி­யில் கோப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து சில நூறு மீற்­றர் தூரத்­தில் நேற்­றி­ரவு இடம்­பெற்­றது. அத­னால் அந்த இடத்­தில் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

மானிப்­பாய் மற்­றும் கோப்­பா­யில் இடம்பெற்ற வாள்­வெட்­டுக்­க­ளில் 2 பேர் படு­கா­ய­ம­டைந்­த­னர். மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்­த­வரை வாளால் வெட்­டி­ வீழ்த்­தி­ விட்டு வெட்­டுக்­குழு மோட்­டார் சைக்­கி­ளை­யும் கொள்­ளை­ய­டித்­துச் சென்­றது. இந்­தச் சம்­ப­வம் கோப்­பாய் இரு­பாலை வீதி­யில் கோப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து சில நூறு மீற்­றர் தூரத்­தில் நேற்­றி­ரவு இடம்­பெற்­றது. அத­னால் அந்த இடத்­தில் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

  

கோப்­பாய் வடக்­கைச் சேர்ந்த சிறி­காந்­தன் என்­ப­வரே இரு கையி­லும் படு­கா­ய­ம­டைந்­தார். அவர் யாழ்ப்­பாண நக­ரி­லி­ருந்­து ­வீடு திரும்­பிக்­ கொண்டி­ருந்­த­ போது வாள் வெட்டு நடத்­தப்­பட்­டது. அவர் மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்­துக்­ கொண்­டி­ருந்­த ­போது அவ­ரைப் பின்­ தொ­டர்ந்து 2 மோட்­டார் சைக்­கிள்­க­ளில் சென்­ற­வர்­களே வாளால் வெட்­டி­னர் என்று ஆரம்ப விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. உட­ன­டி­யாக எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை, விசா­ரணை இடம்­பெ­று­கி­றது என்று கோப்­பாய் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

அதேவேளை, நவாலியில் நேற்­றி­ரவு வீடு புகுந்த குழுவினர் நடத்திய வாள்­வெட்­டில் குடும்பத் தலைவர் காய­ம­டைந்தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. வாளால் வெட்­டி­ய­வர்­கள் தப்­பிச் சென்­றுள்­ள­னர் என்று கூறப்­பட்­டது. அது தொடர்­பில் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­தாக மானிப்­பாய் பொலி­ஸார் நேற்­றி­ரவு தெரி­வித்­த­னர்.

இதற்கிடையே, வாள்­வெட்­டுக் குற்­றச்­சாட்­டில் விளக்­க­ம­றி­ய­லில் இருந்து பிணை­யில் வந்­தி­ருந்­த­வ­ரின் வீட்­டுக்­குள் புகுந்த மற்­றொரு வாள்­வெட்­டுக் குழு பொருள்­களை அடித்­துச் சேதப்­ப­டுத்தி தீ வைத்­துள்­ளது. இந்­தச் சம்­ப­வம் கல்­வி­யங்­காடு முக்­கு­று­ணிப் பிள்­ளை­யார் வீதி­யி­லுள்ள ஒழுங்­கை­யில் நேற்­றி­ரவு இடம்­பெற்­றது.

பல இடங்­க­ளில் வாள்­வெட்டு நடத்­திய குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்ட 9 பேரில் ஒரு­வர் பல மாதங்­க­ளாக யாழ்ப்­பாண நீதி­வான் மன்­றி­னால் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­தார். சில மாதங்­க­ளுக்கு முன்­னரே அவர் பிணை­யில் வெளி­யே ­வந்­தி­ருந்­தார். அவர் ஒரு மாண­வர். அவ­ரது வீட்­டுக்­குச் சென்றே நேற்று வாள்­வெட்­டுக் குழு இப்­ப­டிச் செய்­தது. பின்­னர் தீ அணைக்­கப்­பட்­டது. கோப்­பாய் பொலி­ஸா­ருக்கு இது குறித்து அறி­விக்­கப்­பட்­டது. குறித்த மாண­வன் மீதான வழக்கு இன்­னும் நிலு­வை­யில் உள்­ளது என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.

  
   Bookmark and Share Seithy.comஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திடீர் மரணம்!
[Saturday 2018-02-24 08:00]

இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி திடீரென மரணமானார். கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் இன்று அதிகாலை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 54 வயதான உனா மக்கோலி, மருத்துவ விடுப்பில் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிரிகேடியர் பிரியங்க விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட பிரித்தானியா!
[Saturday 2018-02-24 08:00]

பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களை சைகையின் மூலம் அச்சுறுத்திய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பாக உலக தமிழ் பேரவை பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அனுப்பிய மின்னஞ்சலுக்கு லண்டனில் உள்ள வெளிநாட்டு அலுவலகத்திலிருந்து, கொமன்வெல்த் அலுவலகத்தில் இருந்தும் பதில் அனுப்பப்பட்டுள்ளது.மன்னாரில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் குடும்பங்களுடன் கச்சதீவுக்குப் பயணம்!
[Saturday 2018-02-24 08:00]

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் படகுகள் மூலம் பயணமாகியுள்ளன. தலைமன்னார், பேசாலை, பள்ளிமுனை, கோந்தைப்பிட்டி கடற்பகுதியூடாக மக்கள் படகுகள் மூலம் கச்சதீவை நோக்கி பயணமாகியுள்ளனர். இவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.செப்ரெம்பரில் மாகாணசபைத் தேர்தல்!
[Saturday 2018-02-24 08:00]

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தகவல் வெளியிட்டுள்ளார். மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைகளின் பதவிக் காலம் பூர்த்தியாக உள்ளநிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.கூட்டமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்து விட்டனர்! - கெஹலிய ரம்புக்வெல
[Saturday 2018-02-24 08:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வடக்கு – கிழக்கு மக்கள் நிராகரித்து விட்டமையை தேர்தல் பெறுபெறுகள் நன்கு புலப்படுத்தி நிற்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.அர்ஜுன் அலோசியஸ் சிறைச்சாலை வைத்தியசாலையில்!
[Saturday 2018-02-24 08:00]

மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.கபீர் காசிமுக்கு உயர்கல்வி அமைச்சு?
[Saturday 2018-02-24 08:00]

அமைச்சரவை மாற்றம் நாளை இடம்பெறும் என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த அமைச்சுக்கள் பலவற்றில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. அமைச்சர் கபீர் ஹாசிமின் அரச தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சுப் பதவி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவிற்கும், அவரது உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கைவிடப்படுகிறது எட்கா!
[Saturday 2018-02-24 08:00]

எட்கா எனப்படுகின்ற இலங்கை - இந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதில் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதால் அந்த முயற்சியை இலங்கை அரசு தற்காலிகமாக ஒத்திவைக்கக்கூடும் எனத் தெரியவருகின்றது.கட்டுநாயக்கவில் 10 தங்கக் கட்டிகளுடன் மூவர் கைது!
[Saturday 2018-02-24 08:00]

55 இலட்சம் ரூபா பெறுமதியான 10 தங்க கட்டிகளுடன் இந்திய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் நேற்று பிற்பகல் SG 004 எனும் இந்திய தனியார் விமான சேவை விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மதுரை நோக்கி பயணிக்க இருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர். 48, 52, 52 வயதுடைய குறித்த சந்தேகநபர்களால் கொண்டு வரப்பட்ட கைப்பையை கதிர் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது, அதில் மறைத்து வைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அவதானிக்கப்பட்டுள்ளது.உலக சமாதானத்தை வலியுறுத்தி கனடாவில் தொடங்கிய மரதன் வவுனியாவைச் சென்றடைந்தது! Top News
[Friday 2018-02-23 20:00]

வவுனியா பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வரும் உலக சாதனை வீரன் சுரேஸ் ஜோஷிம் உலக சமாதானத்தினை வலியுறுத்தி ஆரம்பித்த மரதன் ஓடடம், இன்று வவுனியாவை வந்தடைந்தது. கனடாவில் இருந்து ஆரம்பித்த மரதன் இன்று வவுனியா சூசைப்பிள்ளையார் கோவிலை வந்தடைந்துள்ளது. ஏழ்மையின் சின்னமாகிய பனையின் பாளையை ஏந்தியவாறாக, 72 நாட்டுக்கு 123 நாட்களில், சுமார் 4000 கிலோமீற்றர் ஓடிச்செல்லவுள்ள இப்பயணமானது, இன்று வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஆரம்பித்திருந்தது.மீண்டும் கூட்டமைப்பில் இணையும் சாத்தியம் இல்லை! - சிவசக்தி ஆனந்தன்
[Friday 2018-02-23 20:00]

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் மீண்­டும் இணை­வ­தற்கு எந்­தச் சாத்­தி­ய­மும் இல்லை என்று, ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்­பின் செய­ல­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சிவ­சக்தி ஆனந்­தன் திட்­ட­வட்­ட­மாக தெரிவித்துள்ளார். “ நாம் நான்கு கட்­சி­கள் இணைந்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில்­தான் இருந்­தோம். தமிழ் அர­சுக் கட்­சி­யில் இருக்­க­வில்லை. அந்­தக் கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தில் போட்­டி­யிட்­டி­ருந்­தோமே தவிர, அந்­தக் கட்­சி­யில் இணை­ய­வில்லை.கச்சதீவு செல்ல போதிய படகுகள் இல்லை! - பக்தர்கள் அவதி Top News
[Friday 2018-02-23 20:00]

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு செல்வதற்காக குறிகாட்டுவான் துறையில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கினர். பெருமளவான பக்தர்கள் இம்முறை கச்சதீவுக்கு செல்வதற்காக இறங்கு துறைக்கு சென்ற நிலையில் அங்கு போதிய படகுகள் காணப்படவில்லை.வடக்கின் அபிவிருத்தி, அரசியல் நிலவரங்கள் குறித்து ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பேச்சு!
[Friday 2018-02-23 20:00]

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.வத்தளையில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த மஞ்சு சுட்டுக்கொலை!
[Friday 2018-02-23 20:00]

வத்தளைப் பகுதியில், பிரபல பாதாள குழுத் தலைவர் என அழைக்கப்படும், தடல்லகே மஞ்சு விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரை கைது செய்யவதற்காக சென்றிருந்த போது, அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக சந்தேக நபர் முயற்சித்த நிலையில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது பாதாள குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.தியத்தலாவ குண்டு வெடிப்புக் குறித்து விசாரிக்க இராணுவ விசாரணைக்குழு அமைப்பு!
[Friday 2018-02-23 20:00]

தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஆறு பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து தெரிவித்துள்ளார்.சாவகச்சேரி, பருத்தித்துறையில் தமிழ்க் காங்கிரஸ் ஆட்சியமைப்பதைக் கூட்டமைப்பு குழப்பாது!
[Friday 2018-02-23 20:00]

உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதோ அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பதில்லை என்று கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை, சாவகச்சேரி நகரசபைகள் மற்றும் நெடுந்தீவு பிரதேசசபை என்பவற்றின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கூட்டமைப்பு மோதுவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஐதேக முக்கிய தலைவர்களுடன் ரணில் ஆலோசனை!
[Friday 2018-02-23 20:00]

ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் அடங்கிய குழுவினரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான, விசேட திட்டத்தை சமர்ப்பிக்குமாறும் அவர்களிடம் பிரதமர் கோரியுள்ளார்.தேசிய ஒலிம்பிக் குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் வென்றார் சுரேஸ் சுப்ரமணியம்!
[Friday 2018-02-23 20:00]

ஒன்பது வருடங்களின் பின்னர் இன்று நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழுத் தேர்தலில் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கை டெனிஸ் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், ஆசிய டெனிஸ் சங்கத்தின் தற்போதைய பிரதி தலைவராகவும் கடமையாற்றுகிறார். தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் பதவிக்காக சுரேஸ் சுப்பிரமணியமும், ரொஹான் பெர்னாண்டோவும் போட்டியிட்டிருந்தனர். இதேவேளை, தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளராக மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவாகியுள்ளார்.அமைச்சரவை மாற்றம் - ஞாயிறு வரை ஒத்திவைப்பு!
[Friday 2018-02-23 20:00]

அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படும் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.களுத்துறை வைத்தியாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு அமையவே அமைச்சுக்களில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என, அவர் இதன்போது தெரிவித்தார்.5 வீத வாக்குகளைப் பெறாத வேட்பாளர்களின் கட்டுப்பணம் பறிபோகும்!
[Friday 2018-02-23 20:00]

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 5% இற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற அனைத்து வேட்பாளர்களினதும் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்படும் என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா