Untitled Document
May 14, 2024 [GMT]
சுண்டிக்குளத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்களுடன் ரவிகரன் சந்திப்பு!
[Monday 2024-04-29 05:00]



கரியல்வயல், சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ள இடங்களுக்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஞாயிற்றுக்கிழமை களவிஜயம் மேற்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

கரியல்வயல், சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ள இடங்களுக்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஞாயிற்றுக்கிழமை களவிஜயம் மேற்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

  

1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் கடந்த வருடம் (07.12.2023) அன்றையதினம் தாக்கல் செய்திருந்தனர்.

சுண்டிக்குளம் தேசிய பூங்காவிற்குள் உட்சென்றமை , தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை , காணிகளை வெளியாக்கியமை, பாதைகளை அமைத்தல் மற்றும் பாதைகளை பயன்படுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

610 ஏக்கர் காணியில் குறித்த மக்கள் விவசாயம் மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் 370 ஏக்கர் விவசாய நிலங்களில் சிறியளவில் பற்றைகள் வளர்ந்துள்ளதனால் பயிர்ச்செய்கை மேற்கொண்ட நிலங்களுக்கு அனுமதி வழங்கப்படாது உள்ளது. கிட்டத்தட்ட 1000 ஏக்கர் விவசாய நிலப்பரப்பில் 4 தலைமுறைக்கு மேற்பட்டு விவசாய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வழக்கானது (07.12.2023) அன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டதன் பின்னர் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 2ம் திகதிக்கு அடுத்த வழக்கிற்கு தவணையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்குத் தடை! Top News
[Tuesday 2024-05-14 17:00]

அம்பாறை- பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.



முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவாக குருதிக் கொடைக்காக குவிந்த மாணவர்கள்! Top News
[Tuesday 2024-05-14 17:00]

கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு இன்றையதினம் காலை முதல் இடம்பெற்றது.



பொலீஸ் அராஜகத்திற்கு மௌன அங்கீகாரம்!
[Tuesday 2024-05-14 17:00]

திருகோணமலை சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து விற்பனை செய்த பெண்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டு கைதுசெய்யதுள்ளதை கண்டித்துள்ள புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக்கட்சி இச் சம்பவம் பற்றி ரணில்-ராஜபக்ச ஆட்சி கண்டும் காணாதது போன்று இருந்து வருவது தொடரும் பொலீஸ் அராஜகத் திற்கு மௌன அங்கீகாரம் வழங்குவதாகும் என தெரிவித்துள்ளது



சமாதானத்துக்கான வாய்ப்பை அடியோடு குலைத்து விடும்!
[Tuesday 2024-05-14 17:00]

படுகொலையுண்ட தமது உறவுகளை நினைவேந்தும் நமது மக்களின் உரிமையை அடக்குமுறைச் சட்டங்களை ஏவி மறுப்பது நாட்டில் அமைதி, சமாதானத்துக்கான வாய்ப்பை அடியோடு குலைத்து விடும் என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.



நல்லிணக்கத்துக்கான கடைசி வாய்ப்பையும் இறுக மூடியிருக்கிறது இலங்கை அரசு!
[Tuesday 2024-05-14 17:00]

தமிழர்கள் மறைந்த தமது உறவுகளை நினைவேந்தும் நிகழ்வையும் கூட, இனங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்துவதற்கு எதிரான சட்டத்தின் மூலம் தடுப்பதற்குக் களம் இறங்கியமை மூலம் தேசிய நல்லிணக்கத்துக்கான கடைசி வாய்ப்பையும் இறுக மூடி இருக்கின்றது இலங்கை ஆட்சிப் பீடம். இது பெரும் துரதிஷ்டவசமானதாகும் என ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



பெறுபேறுகள் வர முன்னரே உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!
[Tuesday 2024-05-14 17:00]

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு முன்னதாக உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைவாக அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.



எதிரணியின் பொது வேட்பாளராக களமிறங்கத் தயார்!
[Tuesday 2024-05-14 17:00]

தமிழ்ப் பொதுவேட்பாளராக நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். அரச தலைவராக வருவதற்கு அரச தலைவர் வேட்பாளராக, எதிரணி சார்பான பொதுவேட்பாளராக, என்னைக் களமிறங்கச் சொன்னால் அது தொடர்பில் பரிசீலிக்கமுடியும் என அரச தலைவர் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



15 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்! - இரு இளைஞர்கள் கைது.
[Tuesday 2024-05-14 17:00]

மட்டக்களப்பு - வெல்லாவெளி பிரதேசத்தில் தனது அம்மம்மா வீட்டிற்கு சென்று தனிமையில் வீதியில் திரும்பிக் கொண்டிருந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 26, 21 வயதுடைய இளைஞர்கள் இருவரை திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.



விஜயதாசவுக்கு எதிராக தடை கோரி வழக்கு!
[Tuesday 2024-05-14 17:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ செயற்படுவதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் சரத் ஏக்கநாயக்க, அமைச்சர் விஜதாச ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.



இணுவிலில் ஐஸ் ஆய்வுகூடம் சிக்கியது!
[Tuesday 2024-05-14 17:00]

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



முள்ளிவாய்க்கால் ஆத்மாக்கள் ராஜபக்ஷ குடும்பத்தை ஒருபோதும் நிம்மதியாக வாழவிடாது!
[Tuesday 2024-05-14 05:00]

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பசியில் வாடி கஞ்சிக்காக வரிசையில் நின்ற குழந்தைகள் மீது குண்டுகளை வீசி கொலை செய்ய கோட்டாபய ராஜபக்ஷ கட்டளை பிறப்பித்தார். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்த ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருபோதும் நிம்மதியோடு இருக்கப்போவதில்லை. இறந்துபோன முள்ளிவாய்க்கால் ஆத்மாக்கள்,இவர்களை ஒருபோதும் நிம்மதியாக இருக்க விடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.



இனவாதப் பொலிசாரின் எடுபிடிகளாகியுள்ள நீதிமன்றங்கள்! - கஜேந்திரன் காட்டம்.
[Tuesday 2024-05-14 05:00]

வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா? பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா ? எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார்.



ஜனாதிபதி ரணிலுடன் டொனால்ட் லூ சந்திப்பு! Top News
[Tuesday 2024-05-14 05:00]

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்றுச் சந்தித்து கலந்துரையாடினார்.



விஞ்ஞான பரீட்சையில் நீக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து 12 புள்ளிகளுக்கான வினாக்கள்!
[Tuesday 2024-05-14 05:00]

தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து விஞ்ஞான பாடத்துக்கு 12 புள்ளிகளைக் கொண்ட வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கற்பிக்காத பாடப்பரப்பில் இருந்து கேள்வி கேட்கும் போது பரீட்சாத்திகள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான ரோஹிணி கவிரத்ன கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.



ரஷ்யாவில் 600 இலங்கை தற்கொலை குண்டுதாரிகள்!
[Tuesday 2024-05-14 05:00]

ரஷ்ய யுத்த களத்தில் உள்ள இலங்கையர்கள் இன்னும் 10 நாட்களுக்குள் தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்படவுள்ளதால் ரஷ்ய யுத்த களத்தில் உள்ள 600 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர உடனடியாக இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என எதிரணி எம்.பி.யான தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.



கஞ்சி வழங்கியதற்காக கைதா? நாடு எங்கே போகின்றது? - விக்னேஸ்வரன் கேள்வி.
[Tuesday 2024-05-14 05:00]

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் இரவு வேளையில் மிக மோசமான முறையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனும் கொழும்பிலிருந்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.



பள்ளிமுனை கடற்பரப்பில் காற்றுடன் கடும் மழை - வள்ளம் கடலில் மூழ்கி மீனவர் பலி!
[Tuesday 2024-05-14 05:00]

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் இருந்து நேற்று மாலை வள்ளத்தில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வள்ளம் மூழ்கி கடலில் விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்தவர் மன்னார் பள்ளிமுனை மேற்கு பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.ஜான்சன் என்ற குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



ரஷ்யாவில் உயிருடன் எஞ்சியிருப்போரை இலங்கைக்கு அழைத்து வர ஏற்பாடு!
[Tuesday 2024-05-14 05:00]

ரஷ்யாவுக்கு இலங்கையர்களை அனுப்பும் மனித கடத்தல் மோசடியில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது,இவர்களினால் அங்கு அனுப்பப்பட்டு ரஷ்ய யுத்தக் களத்தில் உயிரிழந்த இலங்கையர்களின் உடல்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்னும் உயிருடன் இருப்பவர்களை நாட்டுக்கு அழைத்து வர இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.



முறிகண்டியில் ஆணின் சடலம்!
[Tuesday 2024-05-14 05:00]

முறிகண்டி பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்குப் பின் பகுதியிலேயே சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.



ரஷ்யாவுக்கு கூலிப்படையினரை அனுப்பும் மோசடிக்குப் பின்னால் உதயங்க வீரதுங்கவா?
[Tuesday 2024-05-14 05:00]

ரஷ்ய யுத்த களத்துக்கு இலங்கையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை சட்டவிரோதமான முறையில் அனுப்பும் மோசடியின் பின்னணியில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் தொடர்புப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுவதாகத் தெரிவித்த சுயாதீன எதிரணி எம்.பி.யான காமினி வலேபொட, பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யுத்தம் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஆகவே இந்த நாடுகளின் யுத்தக் களத்துக்கும் இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்


Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா