Untitled Document
November 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதா உயர்நீதிமன்றம்? - குருபரன் - சுமந்திரன் எதிர்வாதம்
[Wednesday 2017-09-13 07:00]

உள்ளக சுயநிர்ணய உரிமையை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்து வரும் கூற்றை சட்டத்தரணி குருபரன் நிராகரித்துள்ளார்.

உள்ளக சுயநிர்ணய உரிமையை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்து வரும் கூற்றை சட்டத்தரணி குருபரன் நிராகரித்துள்ளார்.

  

உள்ளக சுயநிர்ணய உரிமையை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லையெனவும், அதன் தீர்ப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கனகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்திருப்பதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் சட்டத்தரணி குருபரனின் கூற்றை எம்.ஏ.சுமந்திரன் மறுத்துள்ளார். இதுபற்றி சுமந்திரன் தெரிவிக்கையில், உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி கோரிக்கையொன்று முன்வைக்கப்படலாம் என உயர் நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



காலியில் மீண்டும் ஊரடங்கு - வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை! Top News
[Saturday 2017-11-18 19:00]

சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக, காலி ஜின்தோட்ட பிரதேசத்துக்கு உட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில், பொலிஸ் ஊரடங்கு சட்டம், இன்றுமாலை 6 மணிமுதல் மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு சட்டம், நாளை காலை 6 மணிவரையிலும் அமுலில் இருக்குமென, காலிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சந்தன அழககோன் தெரிவித்தார்.



நாம் இழைக்கும் தவறுகள் வருங்காலச் சந்ததியின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடும்! - முதலமைச்சர் Top News
[Saturday 2017-11-18 19:00]

இயற்கையில் பிறந்த நாங்கள் இன்று செயற்கைக்கு அடிமையாகி விட்டோம். உணவில் செயற்கை, உற்பத்தியில் செயற்கை, மருந்தில் செயற்கை! மக்கள் வாழ்க்கை செயற்கையின் சிறைக்கைதியாகி விட்டது. இன்று நாம் இழைக்கின்ற தவறுகள் எமது வருங்காலச் சந்ததியினரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.



பிரதமரின் சிறப்புரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்! - ஆணைக்குழுவுக்கு ரணில் நிபந்தனை
[Saturday 2017-11-18 19:00]

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிப்பதற்கு, பிரதமருக்குரிய சிறப்புரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தரப்பிலிருந்து, நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவே பிரதமரிடம் கேள்விகளை எழுப்புவார் என்றும் தெரியவருகின்றது.



உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு - தமிழரசுக் கட்சியுடன் ரெலோ பேச்சு!
[Saturday 2017-11-18 19:00]

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான ஆசனப்பங்கீடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக்கட்சி, ரெலோ ஆகியவற்றின் பிரமுகர்களுக்கிடையில் நேற்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.



காலி கலவரம்- வலைத்தளங்களில் வதந்தி பரப்பியோர் குறித்து சிஐடி விசாரணை!
[Saturday 2017-11-18 19:00]

காலி, ஜின்தொட்டவில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், சமூக வலைத்தளங்களில் மற்றும் ஏனைய முறைமைகளின் ஊடாக பொய்யான தகவல்களை பிரசாரப்படுத்திய, பிரிவினைவாத நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்தக் கோரும் நியூசிலாந்து பிரதமர், மறுக்கும் ஆஸ்திரேலியா!
[Saturday 2017-11-18 19:00]

மனுஸ்தீவு மற்றும் நவுருவில் உள்ள ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த அகதிகளில் சுமார் 2000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள 150 அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்த ஆஸ்திரேலியாவிடம் நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா அர்டெர்ன் கோரி வருகிறார் . அத்துடன் இந்த அகதிகளின் நலனுக்காக 3 மில்லியன் டாலர்கள் வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



மன்னாரில் பிள்ளையார் சிலைகள் உடைப்பு! Top News
[Saturday 2017-11-18 19:00]

மன்னாரில் இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் பிள்ளையார் சிலைகள் திருட்டு மற்றும் உடைப்புச் சம்பவங்கள், இடம்பெற்றுள்ளன. மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடு பாதைக்கு முன்பாக வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை, நான்காவது தடவையாக இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.



மஹிந்தவின் 72 ஆவது பிறந்த நாள்! - கேக் வெட்டி கொண்டாட்டம் Top News
[Saturday 2017-11-18 19:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது 72ஆவது பிறந்த நாளை இன்று கேக் வெட்டி குடும்பத்தாருடன் இணைந்து தனது அலுவலகத்தில் கொண்டாடியுள்ளார்.



அனைத்து இன மக்களையும் இலங்கையர்கள் என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியம்! - டக்ளஸ் தேவானந்தா
[Saturday 2017-11-18 19:00]

அனைத்து இன மக்களையும் இலங்கையர்கள் என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு, சட்டம், ஒழுங்கு மற்றும் தென் பகுதி அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



வவுனியாவில் சிக்கிய கேரள கஞ்சா - பெண் உட்பட இருவர் கைது!
[Saturday 2017-11-18 19:00]

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 9.30 மணியளவில் 2 கிலோ 32 கிராம் கேரள கஞ்சாவுடன் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணொருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.



வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஜயப்பன் மாலையணியும் நிகழ்வு! Top News
[Saturday 2017-11-18 19:00]

வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் ஜயப்பன் மாலை அணியும் நிகழ்வு நேற்று (17.11.2017) காலை 8.00 மணியளவில் அம்மா சாமி , பாபு குருசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கார்த்திகை மாதம் முதல் திகதியான நேற்று 20க்கு மேற்பட்ட ஜயப்பன் பக்த அடியார்கள் மாலை அணிந்து கொண்டனர்.



காலியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை! - ஊரடங்கு சட்டம் Top News
[Saturday 2017-11-18 09:00]

காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக சில பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. காலி மாவட்டத்தின் குருந்துவத்தை, வெலிபிட்டிமோதர, மஹாலபுகல, உக்வத்த, ஜின்தோட்டை (மேற்கு மற்றும் கிழக்கு), பியதிகம ஆகிய பிரதேசங்களில் நேற்று இரவு ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டது.



தேசியக்கொடி ஏற்ற மறுத்த வடக்கு கல்வி அமைச்சருக்கு எதிராக விசாரணை?
[Saturday 2017-11-18 09:00]

வட மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தேசியக்கொடியை ஏற்ற மறுத்திருப்பது தொடர்பில் உடன் விசாரணை ஒன்றை நடத்தும் பொறுப்பு வட மாகாண ஆளுநருக்கு இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.



வடக்கில் பொலிசாரின் விடுமுறைகள் ரத்து!
[Saturday 2017-11-18 09:00]

வடமாகாணத்துக்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களிலிருந்து விடுமுறையில் சென்ற பொலிஸார் அனைவரினதும் விடுமுறை, உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் பூதாகரமாகியுள்ள வாள் வெட்டுச் சம்பவங்கள் மற்றும் மாவீரர் தின அனுஷ்டிப்பை கருத்திற்கொண்டே, பொலிஸாரின் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.



எஸ்.எம்.ஜீயின் உடல் நல்லடக்கம்! Top News
[Saturday 2017-11-18 09:00]

மூத்த ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் (எஸ்.எம்.ஜீ) அவர்களின் இறுதிக்கிரியை நேற்றுமாலை நடைபெற்றது. மட்டக்களப்பில் கடந்த புதன்கிழமை காலமான ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் அவர்களின் பூதவுடலுக்கு அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.



நான்காகப் பிரிக்கப்படுகிறது கல்முனை மாநகரசபை! - சம்பந்தன் தலைமையில் குழு அமைப்பு
[Saturday 2017-11-18 09:00]

கல்முனை மாநகரசபையை 04 உள்ளூராட்சி சபைகளாக பிரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேசசபை வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த தினங்களில் போராட்டங்களும் இடம்பெற்றிருந்தன. இதற்கு சிலர் எதிரப்பும் தெரிவித்திருந்தனர்.



யாழ். குடாநாட்டின் புவியியல் அமைப்பில் மாற்றம்!
[Saturday 2017-11-18 09:00]

யாழ். குடாநாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்த மழை காரணமாக புவியியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக புவியியல் பிரிவு பேராசிரியர்களை மேற்கோள்காட்டி, இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



நாடாளுமன்ற குழு அறைக்குள் பாம்பு!
[Saturday 2017-11-18 09:00]

நாடாளுமன்றத்தின், முதலாவது இலக்க குழு அறைக்குள் இருந்து பாம்பு ஒன்று நேற்று நாடாளுமன்றப் பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. நாடாளுமன்ற தரைத்தளத்தில் உள்ள முதலாவது இலக்க குழு அறையில் நேற்றுக்காலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், அங்கு ஒளிந்திருந்த பாம்பு ஒன்றை கண்டுபிடித்து பிடித்துச் சென்றனர். பிடிக்கப்பட்ட பாம்பு, பூனைப்பாம்பு வகையைச் சேர்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



முஸ்லிம்களுக்கு சிறந்த அரசியல் தலைவர்கள் கிடைத்துள்ளார்கள்! - பாராட்டுகிறார் அனந்தி!
[Saturday 2017-11-18 09:00]

விடுதலைப் புலிகளைப் பிளவுபடுத்திய தென்னிலங்கைத் தலைவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதிலும் வெற்றி கண்டுள்ளனர் என வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.



மயிலிட்டி மீள்குடியேற்றத்துக்கு 150 மில்லியன் ரூபா வழங்குகிறது நோர்வே!
[Saturday 2017-11-18 09:00]

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக விடுவிக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் மீளக் குடியேறும் மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு 150 மில்லியன் ரூபாவை வழங்க நோர்வே அரசாங்கம், முன்வந்துள்ளது.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா