Untitled Document
July 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
அர்ஜெண்டினாவில் கோமா நிலையில் இருந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை: - நெகிழ்ச்சியான சம்பவம்
[Friday 2017-04-21 18:00]

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கோமா நிலையில் இருந்த போது குழந்தை பிறந்துள்ளது.அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் Amelia Bannan (34), இவர் பெண் பொலிசாக பணியாற்றி வருகிறார், இவரது கணவரும் பொலிஸ் அதிகாரி என்று கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த ஆண்டு Amelia Bannan கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனால் அவர் கோம நிலைக்கு சென்றார். அவர் கர்ப்பமாக இருந்த நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.கோமா நிலைமைக்கு சென்றதால், அவருக்கு தனியாக செவிலிய பெண் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கோமா நிலையில் இருந்த போது குழந்தை பிறந்துள்ளது.அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் Amelia Bannan (34), இவர் பெண் பொலிசாக பணியாற்றி வருகிறார், இவரது கணவரும் பொலிஸ் அதிகாரி என்று கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த ஆண்டு Amelia Bannan கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனால் அவர் கோம நிலைக்கு சென்றார். அவர் கர்ப்பமாக இருந்த நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.கோமா நிலைமைக்கு சென்றதால், அவருக்கு தனியாக செவிலிய பெண் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

  

இதைத் தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் கோமா நிலையில் இருந்த கடந்த 4 மாதங்களுக்கு முன்பு Amelia Bannan-வுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது.தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையின் பயனாக அமேலியாவுக்கு சமீபத்தில் கோமாவில் இருந்து மீண்டும் பழைய நினைவுகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



டொனால்டு டிரம்புக்கு சூனியம் வைத்த பிரபல பாடகி!
[Monday 2017-07-24 12:00]

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அந்நாட்டின் பிரபல பாடகி லானா டெல் ரே 'சூனியம்' வைத்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இந்த ஆண்டு துவக்கத்தில் தேர்தடுக்கப்பட்ட சமயத்தில் இருந்து அவருக்கு எதிர்ப்புகள் தொடர்ந்து வலுத்து வருகிறது. அவரது வலதுசாரி தாக்கம் உடைய சிந்தனைகளும், அமெரிக்க நாட்டினரைத் தவிர பிற நாட்டினர் மீது காட்டும் துவேஷமும் இதற்கு முக்கிய காரணங்களாகும். அமெரிக்காவின் பல முக்கிய பிரபலங்களும் டிரம்புக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்



போதை மருந்து கடத்தல்காரர்களை போலீஸார் சுட்டுத் தள்ள வேண்டும்: - இந்தோனேசியா அதிபர்
[Monday 2017-07-24 12:00]

கைது நடவடிக்கையின் போது சரணடைய மறுக்கும் போதை மருந்து கடத்தல்காரர்களை போலீஸார் சுட்டுத் தள்ள வேண்டும் என இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ அதிரடியாக அறிவித்துள்ளார்.இந்தோனேசியாவில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் ஜோகோ விடோடோ இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:



காபூலில் கார் தற்கொலை குண்டு தாக்குதல்: - 24 பேர் பலி
[Monday 2017-07-24 12:00]

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கார் தற்கொலை குண்டு வெடித்ததில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறைந்தது 42 பேர் காயமடைந்துள்ளனர்; பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சங்கள் எழுந்துள்ளன



வெனிசுவேலாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வயலின் இசைத்தவர் காயம்!
[Monday 2017-07-24 08:00]

வெனிசுவேலா நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வயலின் இசைத்துப் பிரபலபடைந்த உய்லி ஆர்டீகா என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.போலீசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் தலைநகர் காரகாசில் அண்மையில் நடந்த மோதலில் அவருக்கு இந்தக் காயம் ஏற்பட்டது.



ஈராக்கில் தான் தீவிரவாத தாக்குதல்கள் அதிகம்!
[Monday 2017-07-24 08:00]

உலகளவில் 2016ம் ஆண்டில் அதிகளவு தீவிரவாத தாக்குதல் நடந்த நாடுகளின் பட்டியலில் ஈராக் முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்கா வெளியிட்டுள்ள Conuntry Report on Terrorism என்ற பட்டியலில் 2965 தீவிரவாத தாக்குதலுடன் ஈராக் முதலிடத்தில் உள்ளது.1340 தாக்குதல்களுடன் ஆப்கானிஸ்தான் இரண்டாம் இடத்திலும், 972 தாக்குதல்களுடன் இந்தியா மூன்றாம் இடத்திலும், 737 தாக்குதல்களுடன் பாகிஸ்தான் நான்காம் இடத்திலும் உள்ளது.



ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புத்த ஆலயம்!
[Sunday 2017-07-23 19:00]

மியான்மரில் பெருகி வந்த ஆற்று வெள்ளத்தில் புத்த ஆலயம் ஒன்று தகர்ந்து முழுகும் காட்சி தத்துருவமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. மியான்மர் என்ற பெயரில் அழைக்கப்படும் பர்மா நாட்டின் பக்கொக்கு என்ற இடத்தில் புத்த ஆலயம் ஒன்று கம்பீரமாக காட்சி அளித்து வந்தது. ஐய்ஐயார் வட்டி என்ற நதியின் கரையில் இருந்த இந்த ஆலயம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து நீரில் முழுவதுமாக மூழ்கியது.



ஆப்கன் போலீசார் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகள்: - 16 போலீசார் பலி
[Sunday 2017-07-23 09:00]

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணம் தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, தலிபான்களை எதிர்த்து சண்டையிட்டு வரும் ஆப்கன் ராணுவத்துக்கு ஆதரவாக நேட்டோ படைகளும், அமெரிக்க படைகளும் போரில் ஈடுபட்டுள்ளன.



பிரிட்டனில் அதிகரிக்கும் குற்றங்கள்: - வெளியான அறிக்கை
[Sunday 2017-07-23 09:00]

பிரித்தானியாவில் அரங்கேறும் குற்றச்செயல்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடத்துடன் ஒப்பிடுகையில் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளதாக பிரித்தானிய அரசாங்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் இவ்வருடம் மார்ச் மாதம் வரை குறைந்தது ஐந்து மில்லியன் குற்றச்செயல்கள் குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.



நடுவானில் விமானத்தின் ஜன்னலை திறந்துவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண்!
[Sunday 2017-07-23 09:00]

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வந்த ஜெஸ்ஸி என்ற பெண்மணி விமானத்தின் மூலம் கலிபோர்னியாவிற்கு பயணம் செய்துள்ளார்.அப்போது, இவர் அமர்ந்திருந்த இருக்கையின் முன்புற இருக்கை காலியாக இருந்துள்ளது. இதனால் தனது காலை எடுத்து முன்புற இருக்கையில் வைத்துள்ளார். அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து தன்னை அறியாமல் விமானத்தின் ஜன்னல் கதவை திறந்து விட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.



மைக்கேல் ஜாக்சன் வளர்த்த மனிதக் குரங்கு வரைந்த ஓவியங்களின் கண்காட்சி: - ஆர்வத்துடன் பார்க்கும் ரசிகர்கள்
[Saturday 2017-07-22 17:00]

மைக்கேல் ஜாக்சனின் செல்லப்பிராணியான மனிதக் குரங்கு வரைந்த ஓவியங்களின் கண்காட்சி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமியில் நடைபெற்று வருகிறது. பப்புள்ஸ் எனப் பெயரிடப்பட்ட 34 வயது மனிதக் குரங்கு, பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சனால் வளர்க்கப்பட்டது.



உலக மருத்துவ வரலாற்றில் தனக்குத் தானே ஆபரேஷன் செய்து கொண்ட ரஷிய டாக்டர்!
[Saturday 2017-07-22 16:00]

பனிப் பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷிய ஆய்வு கூடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டராக பணியாற்றியவர், லியோனிட் ரோகோசோவ்.29-4-1961 அன்று காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல் என ஒன்றுபட்ட பல உடல் உபாதைகள் ஏற்பட்டன. சிறிது நேரத்திற்கு பிறகு கடுமையான வயிற்று வலியும் சேர்ந்துக்கொள்ள மனிதர் துடிதுடித்துப் போனார். தனக்கு தெரிந்த கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தும் வயிற்று வலி மட்டும் குறைந்தபாடில்லை.



விவசாயிகளின் 8,000 ஆடுகளை வேட்டையாடிய ஓநாய்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட பிரான்ஸ் அரசு!
[Saturday 2017-07-22 16:00]

பிரான்ஸ் நாட்டில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் விவசாயிகள் வளர்க்கும் ஆடு, கோழிகளை வேட்டையாடிய ஓநாய்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மலைப்பிரதேசங்களாக உள்ள தென்-கிழக்கு பிரான்ஸில் ஓநாய்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. விவசாயிகளின் பண்ணைகளில் புகுந்து, அல்லது மேய்ச்சலுக்கு வரும் ஆடுகளை ஓநாய்கள் கொல்வது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.



ஆஸ்திரேலிய பெண் சுட்டுக் கொலை: - தார்மீக பொறுப்பேற்று பதவி விலகிய பெண் போலீஸ் அதிகாரி
[Saturday 2017-07-22 16:00]

அமெரிக்காவின் மினேசோடா மாநிலத்தில் உள்ள மின்னேபொலிஸ் நகரில் கடந்த 15-ம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த 40 வயது யோகா ஆசிரியரான ஜஸ்டின் டாமண்ட், அந்நகர போலீசால் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்வபம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவில் அதிர்வை ஏற்படுத்தியது.



ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ். தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவல்: - இண்டர்போல் எச்சரிக்கை
[Saturday 2017-07-22 16:00]

ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல் நடத்த தயாராக உள்ள 173 ஐ.எஸ். தற்கொலைப்படை தீவிரவாதிகளின் பட்டியலை இண்டர்போல் அமைப்பு வெளியிட்டுள்ளனர்.பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், பிரித்தானியா ஆகிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.



இளவரசரை கைது செய்ய உத்தரவிட்ட சவுதி மன்னர்: - குவியும் மக்கள் ஆதரவு
[Saturday 2017-07-22 16:00]

சவுதி இளவரசர் செய்த கொடூர செயலுக்காக அவரை கைது செய்த சவுதி மன்னருக்கு மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதுடன் அரசு மீதான மக்களின் நம்பிக்கையும் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.சவுதி அரேபியாவின் இளவரசர் அப்துல்லஜிஸ் துப்பாக்கியை காட்டி மிரட்டியும், பலரை இரத்தம் சொட்ட சொட்ட அடிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



கென்யாவில் இளம்பெண்ணின் ஆடையை கிழித்தவர்களுக்கு மரண தண்டனை: - நீதிமன்றம் அதிரடி
[Friday 2017-07-21 18:00]

இளம்பெண் ஒருவரின் ஆடையை கிழித்து அவரை அவமானம் செய்த மூன்று இளைஞர்களுக்கு கென்யா நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த 2014ம் ஆண்டு, பேருந்தில் இளம் பெண் ஒருவரை மூன்று இளைஞர்கள் 'இப்படி கவர்ச்சியாக ஆடை அணிந்திருந்தால், உன்னை பார்க்கும் ஆண்களுக்கு கற்பழிக்கவே தோன்றும்’ எனக் கூறி அவரை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர்.



நிகழ்ச்சி மேடையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பிரபல பாடகி!
[Friday 2017-07-21 17:00]

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பாடகி ஒருவர் மின்சாரம் தாக்கி மேடையிலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Barbara Weldens(35) என்பவர் சிறு வயது முதல் பல்வேறு பாடல்களை பாடி பிரபலமானவர் ஆவார்.வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாடல்களை பாடி உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து பல விருதுகளையும் வென்றுள்ளார்.



வட கொரியாவுக்கு அமெரிக்கர்கள் பயணிப்பதற்கான தடை விரைவில் !
[Friday 2017-07-21 17:00]

வட கொரியாவுக்குச் செல்லும் அமெரிக்கர்களைத் தடை செய்ய அமெரிக்கா தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா தனது குடிமக்களை வட கொரியாவுக்குப் பயணிப்பதைத் தடை செய்ய முன்வந்துள்ளதாக, அமெரிக்காவில் இருந்து வட கொரியாவுக்கு சுற்றுப் பயணத்தை அளித்து வரும் இரண்டு டிராவல் ஏஜென்சி நிறுவனங்கள் இது குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளன.



நாயை தத்தெடுத்து பராமரித்து வரும் இங்கிலாந்து ராணி எலிசபெத்!
[Friday 2017-07-21 15:00]

இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு நாய்களின் மீது பிரியம் அதிகம். எனவே அவர் 3 நாய்களை வளர்க்கிறார். அந்த நாய்களுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வார்.அப்போது முன்னாள் விளையாட்டு வீரர் பில் பென்விக் என்பவரும் தனது விஸ்பா என்ற கார்ஜி இன நாயுடன் நடைபயிற்சி செய்து வருவார். அந்த நாயின் மீது ராணி எலிசபெத் பாசம் வைத்தார்.



நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் சுமந்த மண் பை ரூ.11 கோடிக்கு ஏலம்!
[Friday 2017-07-21 09:00]

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்கு சென்ற போது அங்குள்ள மண், கல் துகள்களை சேகரிக்க பயன்படுத்திய பை 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 11 கோடி ரூபாய்) அளவுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.மனிதர்களின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல்லாக இருப்பது, நிலாவில் மனிதர்களை களமிறக்கியது தான். 1969-ம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அப்பல்லோ 11 என்ற விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகிய இருவரை நிலாவுக்கு அனுப்பிவைத்தது.


Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா