Untitled Document
April 27, 2024 [GMT]
மாசு காற்றை சுத்திகரிக்கும் கருவி கண்டுபிடிப்பு - பெய்ஜிங்கில் நிறுவ சீனா முடிவு!
[Sunday 2016-07-24 14:00]

தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு முலம் காற்று மாசுபடுகிறது. அதனால் பூமி வெப்பமடைந்து பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.அதை தடுக்க காற்றில் ஏற்படும் மாசுககளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நெதர்லாந்தை சேர்ந்த ரோசெகார்டே என்பவர் காற்று மாசு சுத்திகரிப்பு கருவியை தயாரித்துள்ளார். இக்கருவி 23 அடி உயரம் கொண்டது. மிக சிறிய அளவிலான அடுக்குமாடி கட்டிடத்தை போன்று வடிவம் உடையது.அதன் உள் பகுதியில் புகையை உறிஞ்சும் தொழில் நுட்பங்களுடன் கூடிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு முலம் காற்று மாசுபடுகிறது. அதனால் பூமி வெப்பமடைந்து பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.அதை தடுக்க காற்றில் ஏற்படும் மாசுககளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நெதர்லாந்தை சேர்ந்த ரோசெகார்டே என்பவர் காற்று மாசு சுத்திகரிப்பு கருவியை தயாரித்துள்ளார். இக்கருவி 23 அடி உயரம் கொண்டது. மிக சிறிய அளவிலான அடுக்குமாடி கட்டிடத்தை போன்று வடிவம் உடையது.அதன் உள் பகுதியில் புகையை உறிஞ்சும் தொழில் நுட்பங்களுடன் கூடிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

  

அவை ஒரு கால்பந்து மைதான அளவுஉள்ள இடத்தில் 36 மணி நேரத்தில் 70 முதல் 80 சதவீதம் வரையிலான மாசுபட்ட காற்றை வெளியேற்றி சுத்தம் செய்து புதிய காற்றாக தருகிறது.இக்கருவியை அதிக அளவு காற்று மாசுபட்டுள்ள பெய்ஜிங்கில் நிறுவ சீனா முடிவு செய்துள்ளது.வருகிற செப்டம்பரில் அங்கு இக்கருவி நிறுவப்பட உள்ளது. அதை தொடர்ந்து சீனாவின் மிகப் பெரிய நகரங்களிலும், அடுத்த ஆண்டில் இக்கருவி நிறுவப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை செய்யும் பிரிட்டன் அரண்மனை!
[Saturday 2024-04-27 18:00]

இங்கிலாந்து மன்னர் புற்றுநோயால் பாதிகப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கலவைக்கிடமாக உள்ளதாகவும் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் இப்போதே அரண்மனை நிர்வாகம் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022, செப்டம்பரில் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, சார்லஸ் இங்கிலாந்து மன்னராக மகுடம் சூடிய நிலையில் எதிர்பாரா வகையில் அவர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானார்.



ஜார்ஜ் பிளாயிட் மரணத்தைப் போல மற்ருமொருவர் உயிரிழப்பு!
[Saturday 2024-04-27 18:00]

அமெரிக்காவில், 2020-ஆம் ஆண்டு, காவலர் ஒருவர் தனது முழங்காலால் கழுத்தில் அழுத்தியதில், ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின இளைஞர் உயிரிழந்தது இனவெறிக்கு எதிராக பெரியளவிலான போராட்டங்களுக்கு வழிவகுத்தது.



பிரித்தானியாவில் இருந்து சீனாவுக்காக உளவுபார்த்த இருவர் அதிரடி கைது!
[Saturday 2024-04-27 18:00]

பிரித்தானியாவில் இருந்து சீனாவுக்காக உளவுப் பார்த்த அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்னாள் ஆய்வாளர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்னாள் ஆய்வாளர் கிறிஸ்டோபர் கேஷ் தனது நண்பர் 32 வயதான கிறிஸ்டோபர் பெர்ரியுடன் இணைந்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை சீனாவுக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.



கனடிய விமானத்தில் தலையங்கியினால் ஏற்பட்ட சர்ச்சை!
[Saturday 2024-04-27 18:00]

எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் பயணம் செய்த பழங்குடியின தலைவி ஒருவரது தலையங்கியினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விமானத்தில் வைத்து விமானப் பணியாளர்கள் குறித்த தலையங்கியை அகற்றியுள்ளனர். பழங்குடியின சமூகத்தின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள் இவ்வாறு தலையங்கி அணிவது வழமையானதாகும்.



மத்திய கிழக்கில் பரவும் பதட்டம்!
[Saturday 2024-04-27 06:00]

மத்திய கிழக்கில் மோதல் பரவுவதை தடுப்பதில் சீனா பங்கு வகிக்க முடியும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல்வேறு ராஜதந்திர உறவுகள் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.



மன்னர் சார்லஸ் தொடர்பில் அரண்மனை வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!
[Saturday 2024-04-27 06:00]

மன்னர் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு பொது வாழ்க்கைக்குத் திரும்புகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் ஊக்கமளிக்கும் முன்னேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து, மன்னர் சார்லஸ் அடுத்த வாரம் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.



உலகின் கடைசி உணவு ஆதாரம்: சுவல்பார்டு தீவிலுள்ள உலக விதை வங்கியில் என்ன இருக்கு?
[Saturday 2024-04-27 06:00]

நார்வே நாட்டின் வடக்கே, ஆர்டிக் வட்டத்திற்கு அப்பால் அமைந்துள்ள சுவல்பார்டு தீவு, உலகின் விதைப் பெட்டகம் என்று அழைக்கப்படுகிறது. பூமியில் உள்ள பல்வேறு வகையான பயிர்களின் விதைகளை பாதுகாப்பதற்காக, 2008-ம் ஆண்டு சுவல்பார்டு தீவில் உலக விதை வங்கி (Svalbard Global Seed Vault) நிறுவப்பட்டது. சுவல்பார்டு தீவுகள், 12 ஆம் நூற்றாண்டில் வைக்கிங் கடற்பயணிகளால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. 16 ஆம் நூற்றாண்டில், டச்சு மற்றும் ஆங்கில வேட்டையாடுபவர்கள் திமிங்கல வேட்டைக்காக இங்கு வந்தனர். 17 ஆம் நூற்றாண்டில், டென்மார்க் தீவுகளின் மீது அதன் ஆதிக்கத்தை நிலைநாட்டியது.



சீனாவின் நட்பை பெற போட்டிபோடும் அமெரிக்கா, ரஷ்யா!
[Friday 2024-04-26 18:00]

அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, நிரந்தர எதிரிகளும் கிடையாது என்பார்கள். அப்படித்தான் உலக நாடுகளும் நடந்துகொள்கின்றன. உக்ரைன் ரஷ்ய போர் துவங்கியதைத் தொடர்ந்து சீனா ரஷ்யாவுக்கு ஆதரவாகவே நிற்க, அல்லது, வேறு வகையில் கூறினால், ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதற்கு கண்டனம் தெரிவிக்காமலே இருக்கும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவு அளித்துவரும் அமெரிக்காவோ, கடந்த சில மாதங்களாக சீனாவுடன் நட்பு பாராட்ட விளைவதைக் கவனிக்கமுடிகிறது.



அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற இந்திய வம்சாவளி மாணவி கைது!
[Friday 2024-04-26 18:00]

அமெரிக்கப் பல்கலை ஒன்றில், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் அமைந்துள்ள Princeton பல்கலையில் பயிலும் அச்சிந்த்யா சிவலிங்கம் என்னும் மாணவி, பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.



வெளிநாடொன்றில் 56 குழந்தைகள் உள்பட 223 பேரை சுட்டுகொன்ற ராணுவத்தினர்!
[Friday 2024-04-26 18:00]

ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாசோவில் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உள்பட 223 பேரை ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ரஷ்யாவில் மீட்கப்பட்ட கனடியர் சடலம்!
[Friday 2024-04-26 18:00]

ரஷ்யாவில் கியூபாவில் விடுமுறையை கழிப்பதற்காக சென்ற கனடியர் ஒருவரின் சடலம் ரஷ்யாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கியூபெக்கின் மொன்றியாலைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார். 68 வயதான பாராஜ் ஜார்ஜோர் என்பவரின் சடலம் தவறுதலாக ரஸ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



பிரித்தானியாவில் இருந்து இத்தாலிக்கு ராணுவ விமானத்தில் பறந்த குழந்தை!
[Friday 2024-04-26 06:00]

இத்தாலிய அரசின் தலையீட்டை தொடர்ந்து, சிகிச்சைக்காக இங்கிலாந்திலிருந்து இத்தாலிக்கு ராணுவ விமானத்தில் குழந்தை கொண்டு செல்லப்பட்டது. இத்தாலிய அரசு தலையிட்டதையடுத்து, கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று இங்கிலாந்திலிருந்து இத்தாலிக்கு வான்வழியாக கொண்டு செல்லப்பட்டது.



பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு?
[Friday 2024-04-26 06:00]

15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை பெற்றோர் கட்டுப்படுத்த வேண்டும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கேட்டுக் கொண்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு பெற்றோர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று வியாழக்கிழமை தெரிவித்தார்.



பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேப்டன் டாம் மூர் வீடு விற்பனை!
[Friday 2024-04-26 06:00]

மீன் குளத்துடன் கூடிய பிரம்மாண்டமான கேப்டன் டாம் மூர் வசித்த வீடு சுமார் £2.25 மில்லியனுக்கு விற்பனைக்கு வந்துள்ளது. கோவிட்-19 ஊரடங்கு சமயத்தில் நடைபயிற்சி மூலம் நிதி திரட்டி மக்கள் மனதில் இடம் பிடித்த கேப்டன் Tom Moore, வசித்த வீடு £2.25 மில்லியனுக்கு விற்பனைக்கு வந்துள்ளது.



பிரித்தானியாவுக்குள்ளிருந்து வேறொரு நாட்டுக்குள் பெருமளவில் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்கள்!
[Thursday 2024-04-25 18:00]

பிரித்தானியா புலம்பெயர்ந்தோரையும் புகலிடக்கோரிக்கையாளர்களையும் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு நாடுகடத்த தீவிரமாக திட்டமிட்டுவரும் நிலையில், பிரித்தானியாவுக்குளிருந்து புகலிடக்கோரிகையாளர்கள் அயர்லாந்துக் குடியரசுக்குள் நுழைந்துவருவதாக அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



"ஆயுதங்களை கைவிட தயார்" - இரண்டு நிபந்தனைகள் முன்வைத்த ஹமாஸ் படைகள்!
[Thursday 2024-04-25 18:00]

பாலஸ்தீனிய ஹமாஸ் படைகள் இஸ்ரேலுடன் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கும் மேலான போர்நிறுத்தத்திற்கு உடன்படத் தயாராக உள்ளது என்று அந்த குழுவினரின் மூத்தல் அரசியல் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். 1967 க்கு முந்தைய எல்லைகளுடன் ஒரு சுதந்திர பாலஸ்தீனிய அரசு நிறுவப்பட்டால் ஆயுதங்களைக் கைவிடவும் அரசியல் கட்சியாகவும் மாற ஹமாஸ் படைகள் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



பண்டைய கால விசித்திர விலங்கை பார்த்த கனடிய குடும்பம்?
[Thursday 2024-04-25 18:00]

பண்டைய கால புராணங்களில் குறிப்பிடப்படம் விசித்திர விலங்கு ஒன்றை கண்டதாக கனடிய தம்பதியினர் தெரிவிக்கின்றனர். இராட்சத விலங்கினமாக கருதப்படும் லோச் நெஸ் எனப்படும் விலங்கு ஒன்றை கண்டதாக கனடாவைச் சேர்ந்த பெரி பால்ம் மற்றும் செனன் வைஸ்மேன் ஆகியோரே இவ்வாறு குறித்த விசித்திர விலங்கினை கண்டதாக தெரிவிக்கின்றனர்.



அமெரிக்காவை தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் வெடித்த போராட்டம்!
[Thursday 2024-04-25 18:00]

அமெரிக்க பல்கலைகழகங்களில் பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் போராட்டங்களை நடத்திவரும் நிலையில் அவுஸ்திரேலிய மாணவர்களும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அமெரிக்க பல்கலைகழகங்களை சூழவுள்ள பகுதிகளில்கூடாரங்களை அமைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.



"தாக்குதலை தடுக்க தவறிவிட்டேன்" - பதவியை ராஜினாமா செய்த மூத்த இஸ்ரேல் அதிகாரி!
[Thursday 2024-04-25 06:00]

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு தலைவர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு 7ம் திகதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் என 1200 பேர் கொல்லப்பட்டனர்.



ஆங்கிலேய கால்வாயில் பரிதாபம்: 5 பேர் பலியான சம்பவத்தில் 3 பேர் கைது!
[Thursday 2024-04-25 06:00]

ஆங்கில கால்வாயில் குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆங்கிலேய கால்வாயைக் கடக்க முயன்ற போது சிறுமி ஒருவர் உள்பட ஐந்து குடியேற்றத் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை பிரித்தானிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா