Untitled Document
April 26, 2024 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



சீனாவின் நட்பை பெற போட்டிபோடும் அமெரிக்கா, ரஷ்யா!
[Friday 2024-04-26 18:00]

அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, நிரந்தர எதிரிகளும் கிடையாது என்பார்கள். அப்படித்தான் உலக நாடுகளும் நடந்துகொள்கின்றன. உக்ரைன் ரஷ்ய போர் துவங்கியதைத் தொடர்ந்து சீனா ரஷ்யாவுக்கு ஆதரவாகவே நிற்க, அல்லது, வேறு வகையில் கூறினால், ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதற்கு கண்டனம் தெரிவிக்காமலே இருக்கும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவு அளித்துவரும் அமெரிக்காவோ, கடந்த சில மாதங்களாக சீனாவுடன் நட்பு பாராட்ட விளைவதைக் கவனிக்கமுடிகிறது.



அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற இந்திய வம்சாவளி மாணவி கைது!
[Friday 2024-04-26 18:00]

அமெரிக்கப் பல்கலை ஒன்றில், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் அமைந்துள்ள Princeton பல்கலையில் பயிலும் அச்சிந்த்யா சிவலிங்கம் என்னும் மாணவி, பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.



வெளிநாடொன்றில் 56 குழந்தைகள் உள்பட 223 பேரை சுட்டுகொன்ற ராணுவத்தினர்!
[Friday 2024-04-26 18:00]

ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாசோவில் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உள்பட 223 பேரை ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ரஷ்யாவில் மீட்கப்பட்ட கனடியர் சடலம்!
[Friday 2024-04-26 18:00]

ரஷ்யாவில் கியூபாவில் விடுமுறையை கழிப்பதற்காக சென்ற கனடியர் ஒருவரின் சடலம் ரஷ்யாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கியூபெக்கின் மொன்றியாலைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார். 68 வயதான பாராஜ் ஜார்ஜோர் என்பவரின் சடலம் தவறுதலாக ரஸ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



பிரித்தானியாவில் இருந்து இத்தாலிக்கு ராணுவ விமானத்தில் பறந்த குழந்தை!
[Friday 2024-04-26 06:00]

இத்தாலிய அரசின் தலையீட்டை தொடர்ந்து, சிகிச்சைக்காக இங்கிலாந்திலிருந்து இத்தாலிக்கு ராணுவ விமானத்தில் குழந்தை கொண்டு செல்லப்பட்டது. இத்தாலிய அரசு தலையிட்டதையடுத்து, கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று இங்கிலாந்திலிருந்து இத்தாலிக்கு வான்வழியாக கொண்டு செல்லப்பட்டது.



பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு?
[Friday 2024-04-26 06:00]

15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை பெற்றோர் கட்டுப்படுத்த வேண்டும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கேட்டுக் கொண்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு பெற்றோர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று வியாழக்கிழமை தெரிவித்தார்.



பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேப்டன் டாம் மூர் வீடு விற்பனை!
[Friday 2024-04-26 06:00]

மீன் குளத்துடன் கூடிய பிரம்மாண்டமான கேப்டன் டாம் மூர் வசித்த வீடு சுமார் £2.25 மில்லியனுக்கு விற்பனைக்கு வந்துள்ளது. கோவிட்-19 ஊரடங்கு சமயத்தில் நடைபயிற்சி மூலம் நிதி திரட்டி மக்கள் மனதில் இடம் பிடித்த கேப்டன் Tom Moore, வசித்த வீடு £2.25 மில்லியனுக்கு விற்பனைக்கு வந்துள்ளது.



பிரித்தானியாவுக்குள்ளிருந்து வேறொரு நாட்டுக்குள் பெருமளவில் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்கள்!
[Thursday 2024-04-25 18:00]

பிரித்தானியா புலம்பெயர்ந்தோரையும் புகலிடக்கோரிக்கையாளர்களையும் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு நாடுகடத்த தீவிரமாக திட்டமிட்டுவரும் நிலையில், பிரித்தானியாவுக்குளிருந்து புகலிடக்கோரிகையாளர்கள் அயர்லாந்துக் குடியரசுக்குள் நுழைந்துவருவதாக அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



"ஆயுதங்களை கைவிட தயார்" - இரண்டு நிபந்தனைகள் முன்வைத்த ஹமாஸ் படைகள்!
[Thursday 2024-04-25 18:00]

பாலஸ்தீனிய ஹமாஸ் படைகள் இஸ்ரேலுடன் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கும் மேலான போர்நிறுத்தத்திற்கு உடன்படத் தயாராக உள்ளது என்று அந்த குழுவினரின் மூத்தல் அரசியல் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். 1967 க்கு முந்தைய எல்லைகளுடன் ஒரு சுதந்திர பாலஸ்தீனிய அரசு நிறுவப்பட்டால் ஆயுதங்களைக் கைவிடவும் அரசியல் கட்சியாகவும் மாற ஹமாஸ் படைகள் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



பண்டைய கால விசித்திர விலங்கை பார்த்த கனடிய குடும்பம்?
[Thursday 2024-04-25 18:00]

பண்டைய கால புராணங்களில் குறிப்பிடப்படம் விசித்திர விலங்கு ஒன்றை கண்டதாக கனடிய தம்பதியினர் தெரிவிக்கின்றனர். இராட்சத விலங்கினமாக கருதப்படும் லோச் நெஸ் எனப்படும் விலங்கு ஒன்றை கண்டதாக கனடாவைச் சேர்ந்த பெரி பால்ம் மற்றும் செனன் வைஸ்மேன் ஆகியோரே இவ்வாறு குறித்த விசித்திர விலங்கினை கண்டதாக தெரிவிக்கின்றனர்.



அமெரிக்காவை தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் வெடித்த போராட்டம்!
[Thursday 2024-04-25 18:00]

அமெரிக்க பல்கலைகழகங்களில் பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் போராட்டங்களை நடத்திவரும் நிலையில் அவுஸ்திரேலிய மாணவர்களும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அமெரிக்க பல்கலைகழகங்களை சூழவுள்ள பகுதிகளில்கூடாரங்களை அமைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.



"தாக்குதலை தடுக்க தவறிவிட்டேன்" - பதவியை ராஜினாமா செய்த மூத்த இஸ்ரேல் அதிகாரி!
[Thursday 2024-04-25 06:00]

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு தலைவர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு 7ம் திகதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் என 1200 பேர் கொல்லப்பட்டனர்.



ஆங்கிலேய கால்வாயில் பரிதாபம்: 5 பேர் பலியான சம்பவத்தில் 3 பேர் கைது!
[Thursday 2024-04-25 06:00]

ஆங்கில கால்வாயில் குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆங்கிலேய கால்வாயைக் கடக்க முயன்ற போது சிறுமி ஒருவர் உள்பட ஐந்து குடியேற்றத் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை பிரித்தானிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.



பாரிஸ் ஒலிம்பிக்கில் தாக்குதலுக்கு திட்டமா? - 16 வயது சிறுவன் கைது!
[Thursday 2024-04-25 06:00]

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் "வீர மரணம் அடைய விரும்புகிறேன்" என்று கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 16 வயது சிறுவனை பிரான்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 21ம் திகதி நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் "வீர மரணம் அடைய விரும்புகிறேன்" என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்படும் 16 வயது சிறுவனை பிரான்ஸ் நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை கைது செய்துள்ளது.



இரத்தம் சொட்ட பக்கிங்ஹாம் அரண்மனை அருகில் பாய்ந்து சென்ற குதிரைகளால் பரபரப்பு!
[Wednesday 2024-04-24 18:00]

மத்திய லண்டனில் சாலை நடுவே ரத்தம் சொட்ட ஐந்து குதிரைப்படை குதிரைகள் சாரதி இல்லாமல் பாய்ந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குதிரைகளின் ஒரு சாரதிக்கு காயம்பட்டிருக்கலாம் என்றே முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மத்திய லண்டனின் தெருக்களில் ஒரு ஜோடி குதிரைகள், பீதியடைந்து, அவற்றில் ஒன்று ரத்தத்தில் நனைந்தபடி பாய்ந்து சென்றுள்ளது.



ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட நாடொன்றிற்கு அமெரிக்கா எச்சரிக்கை!
[Wednesday 2024-04-24 18:00]

ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பாகிஸ்தான், தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரான் ஜனாதிபதியான Ebrahim Raisi, மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்தார். ஏப்ரல் 22ஆம் திகதி ஈரான் ஜனாதிபதியும், அவரது மனைவியும், வெளியுறவு அமைச்சர் முதலான சில அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் பாகிஸ்தான் சென்றார்கள். தற்போது அவர்கள் ஈரான் திரும்பிவிட்டனர்.



காட்டுத்தீ அபாயத்தில் கனடா!
[Wednesday 2024-04-24 18:00]

வழக்கத்துக்கு மாறாக, குளிர்காலத்தில் உஷ்ணம், அதிகரித்து வரும் வறட்சி மற்றும் எதிர்வரும் மாதங்களில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம் என பல காரணங்களால், மீண்டும் ஒரு பயங்கர அழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீ சூழலை கனடா எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக பெடரல் அரசு எச்சரித்துள்ளது.



இங்கிலாந்து சிறுவனின் கையில் கிடைத்த அபூர்வ வளையல்!
[Wednesday 2024-04-24 18:00]

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வளையல் இங்கிலாந்து சிறுவன் ஒருவர் கையில் கிடைத்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ரோவன் என்ற 12 வயது சிறுவன் தனது செல்லப்பிராணியுடன் அப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றுள்ளான். அப்போது தரையில் ஒரு வினோதமான பொருள் தட்டுப்பட்டுள்ளது.



கனடாவின் தேடப்படும் குற்றவாளி: தகவலுக்கு $100,000 சன்மானம்!
[Wednesday 2024-04-24 06:00]

டொராண்டோ பொறியாளரின் துப்பாக்கி சூடு கொலை வழக்கில் கனடாவின் தேடப்படும் குற்றவாளியான நபர் தொடர்பான தகவலுக்கு $100,000 சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. “கடின உழைப்பாளி" என்று குடும்பத்தினர் விவரித்த டொராண்டோ பொறியாளர் Shamar Powell 2023 ஜூலை மாதத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பரிதாபமாக கொல்லப்பட்டார்.



லண்டனில் புனித ஜார்ஜ் விழாவில் பரபரப்பு!
[Wednesday 2024-04-24 06:00]

லண்டனின் மையப்பகுதியில் நடைபெற்ற புனித ஜார்ஜ் விழாக் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் லண்டனின் மையப்பகுதியில் நடைபெற்ற புனித ஜார்ஜ் விழாக் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது.


NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா