Untitled Document
April 28, 2024 [GMT]
தமிழகத்தில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்பு!
[Friday 2024-03-29 07:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

  

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதாவது திருவள்ளூர் - 31, வட சென்னை - 67, தென் சென்னை - 64, மத்திய சென்னை - 58, ஸ்ரீபெரும்புதூர் - 53, காஞ்சிபுரம் - 31, அரக்கோணம் - 44, வேலூர் - 50, கிருஷ்ணகிரி - 41, தருமபுரி - 44, திருவண்ணாமலை - 49, ஆரணி - 48, விழுப்புரம் - 31, கள்ளக்குறிச்சி - 37, சேலம் - 52, நாமக்கல் - 58, ஈரோடு - 52, திருப்பூர் - 46, நீலகிரி - 33, கோயம்புத்தூர் - 59, பொள்ளாச்சி - 44, திண்டுக்கல் - 35, கரூர் - 73, திருச்சிராப்பள்ளி - 48, பெரம்பலூர் - 56, கடலூர் - 30, சிதம்பரம் - 27, மயிலாடுதுறை - 30, நாகப்பட்டினம் - 26, தஞ்சாவூர் - 36, சிவகங்கை - 39, மதுரை - 41, விருதுநகர் - 41, ராமநாதபுரம் - 56, தூத்துக்குடி - 53, தென்காசி - 37, திருநெல்வேலி - 53, கன்னியாகுமரி - 33 என மொத்தம் 1749 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்து திருவள்ளூர் -14, வட சென்னை - 49, தென் சென்னை - 53, மத்திய சென்னை - 32, ஸ்ரீபெரும்புதூர் - 32, காஞ்சிபுரம் - 13, அரக்கோணம் - 29, வேலூர் - 37, கிருஷ்ணகிரி - 34, தருமபுரி - 25, திருவண்ணாமலை - 37, ஆரணி - 32, விழுப்புரம் - 18, கள்ளக்குறிச்சி - 21, சேலம் - 27, நாமக்கல் - 48, ஈரோடு - 47, திருப்பூர் - 16, நீலகிரி - 16, கோயம்புத்தூர் - 41, பொள்ளாச்சி - 18, திண்டுக்கல் - 18, கரூர் - 56, திருச்சிராப்பள்ளி - 38, பெரம்பலூர் - 23, கடலூர் - 19, சிதம்பரம் - 18, மயிலாடுதுறை - 17, நாகப்பட்டினம் - 9, தஞ்சாவூர் - 13, சிவகங்கை - 21, மதுரை - 21, விருதுநகர் - 27, ராமநாதபுரம் - 27, தூத்துக்குடி - 31, தென்காசி - 26, திருநெல்வேலி - 26, கன்னியாகுமரி - 27 என மொத்தம் 1085 வேட்புமனுக்கள் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 வேட்பாளர்களும், குறைந்தப்பட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் போட்டியில் உள்ளனர். வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

  
   Bookmark and Share Seithy.com



அடுத்தடுத்து சிக்கிய போதைப் பொருட்கள்: பரபரப்பில் குஜராத்!
[Sunday 2024-04-28 18:00]

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.



திக் திக் நொடிகள்: சென்னையை கலங்கடித்த சம்பவம்!
[Sunday 2024-04-28 18:00]

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



குழந்தையின்மை சண்டையால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்!
[Sunday 2024-04-28 18:00]

தமிழக மாவட்டம் வேலூரில் பெண்ணொருவர் குழந்தையின்மையால் கணவருடன் ஏற்பட்ட தகராறில், தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் கொசவன்புதூரைச் சேர்ந்தவர் லிஷா (33). இவரது கணவர் பிரதீப் (40) கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி அமமுக பொறுப்பாளராக உள்ளார்.



தமிழகத்தின் வெப்பநிலை குறித்து வானிலை மையம் எச்சரிக்கை!
[Sunday 2024-04-28 18:00]

குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!
[Sunday 2024-04-28 08:00]

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.



குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!
[Sunday 2024-04-28 08:00]

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.



முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது!
[Sunday 2024-04-28 08:00]

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.



மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதல்: 2 வீரர்கள் பலி!
[Saturday 2024-04-27 18:00]

மணிப்பூரில் இந்திய - மியான்மர் எல்லையில் உள்ளூர் பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் நேற்றைய தினம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெற்றிருந்தது.



ஹெலிகாப்டரில் ஏறும் போது தவறி விழுந்த மம்தா பானர்ஜி!
[Saturday 2024-04-27 18:00]

மேற்கு வாங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் ஏறும் போது இருக்கைக்கு அருகே தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 2024 -ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.



விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள்: ஆசிரியர்கள் செய்த செயல்!
[Saturday 2024-04-27 18:00]

தேர்வு விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதிய 4 மாணவர்களுக்கு 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் வழங்கிய 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசம், ஜோன்பூரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் பி.பார்ம் செமஸ்டர் தேர்வின் முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகின.



தீ விபத்தின் போது கயிற்றை கொடுத்து 50 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுவன்!
[Saturday 2024-04-27 18:00]

நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 50 தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்திய மாநிலமான தெலங்கானா, ரங்காரெட்டி மாவட்டத்தில் நந்திகமவில் ஆல்வின் பார்மா நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள கட்டடம் ஒன்றில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.



நூதன மோசடியில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர் கைது!
[Saturday 2024-04-27 06:00]

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.



வெப்ப அலை முன்னெச்சரிக்கை: ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு!
[Saturday 2024-04-27 06:00]

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய என்.எஸ்.ஜி வீரர்கள்!
[Saturday 2024-04-27 06:00]

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இறங்கி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர். சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து அத்து மீறி சிலர் வண்ணத்தை உமிழும் பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.



அதீத வெப்பத்தால் வெளிரிப்போகும் பவளப்பாறைகள்: அபாயத்தின் எச்சரிக்கையா?
[Friday 2024-04-26 18:00]

பல்லுயிர் பெருக்கம் நிறைந்த மன்னார் வளைகுடா கடல் உயிர்க்கோள காப்பகத்தில் பவளப்பாறைகள் அதன் நிறங்களை இழந்து வெளிரிப்போக ஆரம்பித்ததால் மனிதனுக்கு இயற்கை சொல்லும் அபாய எச்சரிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெளிரிப்போகும் பவளப்பாறைகள் (Coral Reefs) இந்த நிலைமையின் தீவிரத்தை மதிப்பிடுவதற்காக நீருக்கடியில் விரைவான ஆய்வுகளை மேற்கொள்ள மாநில வனத்துறை உத்தரவிட்டுள்ளது.



இந்திய மக்களவை தேர்தலுக்கு ஏற்பட்ட செலவு தெரியுமா?
[Friday 2024-04-26 18:00]

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தேர்தல் என்றால் அது இந்திய மக்களவைத் தேர்தல் 2024 என்று கூறப்படுகிறது. இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களவை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்தல், உலகம் முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என அழைக்கப்படும் இந்திய மக்களவைத் தேர்தல் 2019 -ம் ஆண்டு நடைபெற்றது.



குடும்பத்தோடு மாலத்தீவுக்கு செல்லும் தமிழக முதலமைச்சர்!
[Friday 2024-04-26 18:00]

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 29 -ம் திகதி குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்டங்களில் பங்கேற்று திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.



நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு!
[Friday 2024-04-26 18:00]

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018 -ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு: பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
[Friday 2024-04-26 06:00]

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.



தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!
[Friday 2024-04-26 06:00]

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.


Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா