Untitled Document
May 12, 2024 [GMT]
 
பொதுமக்களினால் உருவாக்கப்பட்டு சுயாதீனமாக தொடர்ந்து இயங்கி வந்த ஐந்து அமைப்புக்கள் ஒரு கட்டமைப்பின்கீழ் ஒன்றாகின! Top News
[Friday 2016-02-26 22:00]

கனடியத் தமிழர் சமூக பொருளாதர தர்ம நிலையத்தினால் (Canadian Tamil Social and Economic Foundation - CTSAEF) முதன் முதலாக நடாத்தப்பட்ட மக்கள்சந்திப்பில் பல ஊடகங்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். இன் நிகழ்வில் தர்ம நிலையத்தின் சார்பில் பேசவல்லவர்கள் தமதுவேலைத்திட்டங்களை தெளிவாக மக்களுக்கு எடுத்துரைத்தனர். நீண்ட காலமாக பொதுமக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயம் இன்று கை கூடி உள்ளது. கனடாத் தமிழ் தொழில்நுட்ப கல்லுஸரி அறிவகம் வணிகம் கனடாத்தமிழர் விழைட்டுத்துறை உலகத்தமிழர் பத்திரிகை கனடிய தமிழ் வானொலி ஆகியவையை ஆரம்பகட்டமாக உள்ளடக்கபட்டுள்ளது - இதனையும் தாண்டி பொதுமக்களால் எதிர்பார்க்கப்படுகின்ற மற்றய அமைப்புக்களும் இம்முயற்சியில் விரைவில் இணைவார்கள் என எதிர் பார்க்கப்படுகின்றது.


வன்னி மயில் நடனப் போட்டி - 2016 Top News
[Wednesday 2016-02-24 07:00]

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற வன்னி மயில் நடனப் போட்டி - 2016 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - தமிழ் பெண்கள் அமைப்பு நடாத்திய நடனப்போட்டி நிகழ்வுகள் கடந்த 20.02.2016 சனிக்கிழமை மற்றும் 21.02.2016 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் SARCELLES பகுதியில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இரு தினங்களும் காலை 08.30 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகின. ஈகைச்சுடரினை சனிக்கிழமை, மாவீரர் கேணல் பருதி அவர்களின் தாயாரும் ஞாயிற்றுக்கிழமை , சார்சல் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.டக்ளஸ் அவர்களும் ஏற்றிவைத்தனர்.


மாணவி ஹரிஸ்ணவி கொலையைக் கண்டித்து வவுனியாவில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்! Top News
[Tuesday 2016-02-23 20:00]

மாணவி ஹரிஸ்ண வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வவுனியாவில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. வன்முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வவுனியா காமினி மாகாவித்தியாலயத்தில் இருந்து வவுனியா மாவட்ட செயலகம் வரை பேரணியாக பதாதைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பியவாறு சென்றனர்.


வறிய நிலையிலும் சாதனை படைத்த வடகிழக்கை சேர்ந்த மாணவர்களின் முன்னேற்ற பாதைக்கு உதவி! Top News
[Sunday 2016-02-21 09:00]

கடந்த கல்வி பொதுத்தர உயர் தர வகுப்பிலும் ஜந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப்பெற்று வறிய நிலையிலும் சாதனை படைத்த வடகிழக்கை சேர்ந்த மாணவர்களின் முன்னேற்ற பாதைக்கு மனிதாபிமான ரீதியில் கனடாவில் இருந்து வெளிவருகின்ற காலாண்டு தளிர் சஞ்சிகையும் அதன் தாய் அமைப்பான சுதந்திர மனித அபிவிருத்திகழகமும் இணைந்து நீண்ட தூரம் கால் நடையாக பாடசாலைக்கு பயணம் செய்யும் மாணவர்களுக்கு 20 - 02 - 2016 அன்று துவிச்சக்கர வண்டிகளை (சைக்கிள்) வழங்கி வைத்ததுடன் மாணவர்களுக்கான ருபா 5000,00 உதவு தொகையாகவும் வழங்கிவைக்கப்பட்டன இத்திட்டம் முதன் முறையாக மட்டக்களப்பு செங்கலடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது, மேலும் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையிலும் சுதந்திர மனித அபிவிருத்தி கழக கிழையினூடாக இது போன்ற செயல் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குகளை செயல் படுத்திவருவதும் குறிப்பிடதக்கது.


படுகொலை முயற்சியைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம்! Top News
[Saturday 2016-02-20 09:00]

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு பரமலிங்கம் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைத் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினரை தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் நேற்று வெள்ளிக்கிழமை (20) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. படுகொலை முயற்சி நடைபெற்ற Villeneuve-Saint-Georges நகரின் நகரசபை முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர். பிரெஞ்சு மொழியிலான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, போராட்டம் குறித்து அப்பகுதியில் வந்து சென்ற மக்களுக்கு விளக்கங்களும் அளிக்கப்பட்டன.


அதிகமான எலிகளை வேட்டையாடக்கூடிய கருவி கண்டுபிடிப்பு: மட்டு - மாணவி சாதனை! Top News
[Thursday 2016-02-18 19:00]

ஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடக்கூடிய ஒரு கருவியை மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவி ஜூட் தவசீலன் என்சலேற்றா கண்டு பிடித்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்புக்காக, அகில இலங்கை ரீதியில் 2015 ஆம் ஆண்டின் புத்தாக்கப் போட்டியில், என்சலேற்றா இரண்டாமிடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய பாடசாலையின் தரம் 9 இல் கல்வி கற்கும் என்சலேற்றா, வலயமட்டத்தில் முதல் இடத்தினை பெற்று, தேசிய மட்டத்திற்கு தெரிவாகியிருந்தார். அண்மையில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய ரீதியான போட்டியில் 2 ஆம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தை அவர் பெற்றுக்கொண்டார்.


கூகுள் பலூன் விழவில்லை, தரையிறக்கப்பட்டதாம்! Top News
[Thursday 2016-02-18 19:00]

கூகுள் பலூன் பழுதடைந்து விழவில்லை, பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது என்று கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இந்த பலூன், சோதனை நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கூகுள் நிறுவனம் இலங்கையில் வை-பை இணைய சேவையை வழங்குவதற்காக இலங்கைக்கு மேல் இணைய சேவையை வழங்கும் பலூன் ஒன்றை பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக அண்மையில் அனுப்பியிருந்தது.


''கனடா தமிழர் பேரவையின் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள என்னை அழைத்திருந்தனர்" - 'தளிர்" இராப் போசன விருந்துபசாரத்தில் வியாழேந்திரன் எம்.பி.உரை Top News
[Monday 2016-02-15 23:00]

'கனடா தமிழர் பேரவையினர் நடாத்திய பொங்கல் விழாவில் கலந்து கொள்ளுமாறு என்னையும் மற்றும் சில எம்.பீ.க்களையும் அழைத்திருந்தார்கள். ஆனால் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள எமக்கு உரிய நேரத்தில் விசா கிடைக்கவில்லை. அதனால் நான் மாத்திரம் காலம் தாழ்த்தி இங்கு வந்தேன். இது தான் எனது முதலாவது வெளிநா ட்டு விஜயமாகும். இங்கு வாழும் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு என்ற பாகுபாடு எதுவுமே இன்றி அன்புடன் என்னை வரவேற்று பல்வேறு சந்திப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய் திருந்தார்கள். ஆனால் எல்லாவற் றிலும் கலந்து கொள்ள எனக்கு அவகாசம் கிடைக்க வில்லை. அதனால் சிலர் மனவேதனை அடைந்துள்ளதாக அறிந்தேன். நாளை மாலை நான் நாடு திரும்புகின்றேன். அதுவரை சந்திக்கக் கூடியவர்களை நிச்சயமாக சந்திப் பேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் துன்பக் கடலில் மூழ்கியுள்ள மக்களுக்கு இங்குள்ள நீங்கள் அனைவரும் கைகொடுத்து உதவ ஆவலாய் இருப்பதையிட்டு நான் மிக்க மகி ழ்ச்சி அடைகின்றேன். எனது உற்ற நண்பரான சிவமோகன் ஏற்பாடு செய்துள்ள இவ் வைபவத்தில் கலந்து கொண்டுள்ள நீங்கள் மனிதாபிமானத்துடன் மட்டக்களப்பு மக்களுக்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளதை இட்டு நான் மிக்க மகிழ்ச்சி அடை கின்றேன். இதில் திரு. ஈழவேந்தன் ஐயாவும் கலந்து கொண்டிருப்பது பெரும் மகிழ்ச் சியை ஏற்படுத்துகின்றது."


பிரித்தானியாவில் இன்று இடம்பெற்ற "ஈகைப்பேரொளி" முருகதாசனின் 7ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு! Top News
[Friday 2016-02-12 22:00]

"ஈகைப்பேரொளி" முருகதாசனின் 7ம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று பிரித்தானியாவில் இடம்பெற்றது. "ஈகைப்பேரொளி" முருகதாசனின் வித்துடல் விதைக்கப்பட்ட இடத்தில் அவரதும், மற்றும் 21 தியாகிகள் நினைவாகவும் அமைக்கப்பட்டுள்ள நினைவுக் கல்லறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மூன்று மாவீரர்களின் சகோதரன் திரு.கிருபா அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து தாயவிடுதலைப் போரில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவேரர்களுக்காகவும், படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும், தியாகிகளுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மலர் மாலையினை திரு.ரூபன் அவர்கள் அணிவிக்க மலர்ச் செண்டை "ஈகைப்பேரொளி" முருகதாசனின் தாயாரும், சகோதரியும் வைத்து வணங்கினர்.


தாயக மக்களுக்கு கரம் கொடுப்பதே எமது தலையாயக் கடமை: - (Help for Smile - Germany) Top News
[Friday 2016-02-12 20:00]

சிங்கள பேரினவாத அரசு முன்னெடுக்கும் இன அழிப்பு போரினால் பாதிக்கப்பட்டு , உடல் உறுப்புகளை இழந்து , சொந்த உறவுகளை இழந்து , உடமைகளை இழந்து அடிப்படை வசதி அற்று கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு வாழும் எம் உயிர் தாயக உறவுகளுக்கு யேர்மன் தமிழ் மக்கள் சார்பில் தொடர்ச்சியாக கரம் கொடுத்து வருகின்றோம் . அந்தவகையில் கடந்த நாட்களில் மட்டும் உதவித்திட்ட வழங்கலாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வாழும் உறவுகளுக்கு அழுத்தப்புண்ணுக்கு எதிரான மருந்துக்கு நிதியுதவி (25000 ரூபாய் ), சுயதொழில் செய்யும் வகையில் தையல் இயந்திரம் (40000 ரூபாய் ), புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் உறவுக்கு சிகிச்சை பெறுவதுக்கான (390000 ரூபாய் ), இரண்டு உறவுகள் சிறிய கடைகள் திறந்து வியாபாரம் செய்வதுக்கான(200000 ரூபாய் ),நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வாழும் உறவுக்கு முதற்தடவையாக (10000 ரூபாய் ), சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கல் (100000 ரூபாய் ), சிறுவர் கல்வித்திட்ட பராமரிப்புக்கு தொடர்ச்சியான மாதாந்த நிதிப்பங்களிப்பு என பல்வேறு வேலைத்திட்டங்களை ஹெல்ப் போர் ஸ்மைல் அமைப்பு முன்னெடுத்துள்ளது.


கனடா தமிழர் தகவல் சஞ்சிகையின் 25 ஆண்டு பூர்த்தி வெள்ளி ஆண்டு மலர் வெளியீடும் விருது விழாவும்: Top News
[Thursday 2016-02-11 12:00]

கனடாவிலிருந்து 1991ம் ஆண்டு முதல் வெளிவரும் ஷதமிழர் தகவல்| மாதாந்த சஞ்சிகையின் 25 ஆண்டுகள் பூர்த்தி வெள்ளி விழா 2016 பெப்ரவரி மாதம் 7ம் திகதி ரொறன்ரோ நகர மண்டப அங்கத்தவர் சபா பீடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. வெள்ளி விழாவின் சிறப்பு அம்சமாக தமிழர் தகவலின் ஆண்டு மலர் ஷஇளந்தோப்புச் சுவடு| என்ற மகுடத்தில் இருநூற்றியிருபது பக்கங்களில் 82 கட்டுரைகளுடன் வெளியானது. இதன் வெளியீட்டு நிகழ்வுக்கு ரொறன்ரோ பல்கலைக்கழக பேராசிரியர் ஏ.ஜே.சந்திரகாந்தன் தலைமை தாங்கினார். லட்சுமி - மீனாட்சி சிவனேஸ்வரலிங்கம் சகோதரிகளின் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பமான விழாவின் தொடக்க உரையை கங்கா கந்தசாமியும்


அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நிறுவுனரான ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களது 39வது சிராத்த தினம்: Top News
[Wednesday 2016-02-10 22:00]

இலங்கைத்தீவில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியாக 1944ம் ஆண்டு உருவாக்கப்பட்ட முதலாவது அமைப்பு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகும். அதன் நிறுவுனரான ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களது 39வது சிராத்த தினத்தில் இன்று கூடியிருக்கின்றோம். இக்கட்சியானது 1947ல் சோல்பெரி ஆணைக்குழு மூலம் இலங்கைக்கு சுதந்திரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றபோது இத்தீவில் நிரந்தர பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சிங்கள மக்கள் ஏனைய இனங்களுக்கு எதிரான வகையிலும் தமக்கு மட்டும் சாதகமான வகையிலும் சட்டங்களை நிறைவேற்றுவதனை தடுப்பதற்காக ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஐம்பதுக்கு ஐம்பது என்ற கோரிக்கையை முன்வைத்தது. எனினும் துரதிஸ்டவசமாக சிங்களத் தரப்பினாலும் சோல்பெரி ஆணைக்குழுவினாலும் அக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.


பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான உதவிகளை வழங்கிய கனடா மாதகல் முன்னேற்ற கழகத்தினர்,கனடா வாழவைப்போம் அமைப்பினர்! Top News
[Tuesday 2016-02-09 15:00]

கனடா மாதகல் முன்னேற்ற கழகத்தினர் ,கனடா வாழவைப்போம் அமைப்பினர் மற்றும் அமெரிக்கா கலிபோர்னியாவைச் சேர்ந்த மிதிலா திலிபன், ஆகியோரின் அனுசரணையில் உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில்,கிளி, முல்லை, வவுனியா ,யாழ்ப்பாணம், மன்னார், மாவட்டங்களைச் சேர்ந்த முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு,கிளிநொச்சி கனகபுரம் சோலைவனம் பயிற்சி மண்டபத்தில் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் தலைவர் வி.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பாரளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான உதவிகளை வழங்குவதில் புலம்பெயர் உறவுகள் ஆற்றிவரும் பணி மகத்தானது! என குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான உதவிகளை புலம்பெயர் உறவுகள் பல்வேறு வழிகளிலும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


வ/ சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தின் இல்ல திறனாய்வு போட்டி: Top News
[Friday 2016-02-05 21:00]

வ/ சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தின் இல்ல திறனாய்வு போட்டி வித்தியாலயத்தின் அதிபர் திரு.சிவராஜா தலைமையில் 05.02.2015 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், தியாகராசா, எம்.பி.நடராஜா, பிரதி கல்வி பணிப்பாளர் திரு.வாகீசன், நெடுங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.கிருபானந்தன், வடக்கு வலயம் முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் இராஜேஸ்வரன், கனகராயன்குளம் பொலிஸ் அத்தியட்சகர், ஞானம் பவுண்டேசன் வடமாகாண இணைப்பாளர் யோகேஸ், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை சமுகத்தினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


சர்வஜன வாக்கெடுப்பை வலியுறுத்தி கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் இந்தியத் துணைத் தலைவர் உட்பட பல அரசியல் சந்திப்புக்களை மேற்கொண்டனர்: Top News
[Thursday 2016-02-04 19:00]

கனடியத் தமிழர்களின் ஒருமித்த குரலாக செயல்ப்பட்டு வரும் கனடியத் தமிழர் தேசிய அவையினர் (NCCT) தாம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே மூன்று தீர்மானங்களை முன்னிறுத்தி அதனது அரசியல் திட்டங்களை நடத்தி வருகின்றது. அவையாவன:

1) ஈழத்தில் தொடர்ச்சியாக தமிழ் இன அழிப்பு நடைபெறுகின்றது என்ற உண்மையை வலியுறுத்துதல்.

2) ஈழத்தில் இடம்பெறுகின்ற போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இன அழிப்பு என்பவற்றிற்கான பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தல்.

3) தமிழ்த் தேசிய இனம் தனது சுய நிர்ணய உரிமையை மீட்டெடுப்பதற்கான ஒர் நீண்ட கால அரசியல் தீர்விற்காக ஐ.நா மேற்பார்வையிலான ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்


மிசிசாகா தமிழ் ஒன்றியத்தின் தைப்பொங்கல் விழா
[Tuesday 2016-02-02 19:00]

மிசிசாகா தமிழ் ஒன்றியம் கடந்த 30.01.2016 அன்று தமிழ் மரபுத் திங்கள் மற்றும் தைப்பொங்கல் விழா


மட்டக்களப்பில் க.பொ.த.(உ.த) சிறந்தபெறுபேறு பெற்றவர்கள் கௌரவிப்பு: Top News
[Monday 2016-02-01 22:00]

அண்மையில் வெளியான க.பொ.த (உ.த) பரீட்சை முடிவுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அனுசரணையுடன் இடம்பெற்றது. பாலகன் கல்வி மேம்பாட்டுபிரிவின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி நிகழ்வுக்கு அக்கட்சியின் கொள்கை முன்னெடுப்பு பிரிவு இணைப்பாளர் சமயலிங்கம் அண்ணாத்துரை தலைமை தாங்கினார் இந்நிகழ்வு இன்று (311.01.2016) களுதாவளை கலாச்சாரமண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வைத்திய கலாநிதி கே.ரி.சுந்தரேசன் கலந்துகொண்டார். சிறப்பு அதிதியாக பட்டிருப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.உலககேஸ்பரம் மற்றும் கௌரவ அதிதிகளாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் அ.சுகுமார் மற்றும் மண்முனை தெ.எ.பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் வி.திரவியராஜா பிரபல இரசாயணவியல் ஆசிரியர் தருமலிங்கம் சுரேஸ் மற்றும் ஓய்வுபெற்ற வைத்தியர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


கிழக்கில் தமிழ் இழந்து போகும் அவல நிலை... Top News
[Monday 2016-02-01 19:00]

கனடா மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க ஒன்று கூடல் விழாவில் மட்டக்களப்பு பாராளுமண்ற உறுப்பினர் திரு.சதாசிவம் யாழேந்திரன் உரை....

'கிழக்கு மாகாணம் கல்வித் துறை, விளையாட்டுத் துறை,தொழில் துறை ஆகிய பல்வேறு துறை களிலும் நீண்ட காலமாக பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகின்றது. ஏனைய மாகாணங்க ளுடன் ஒப்பிடும் போது எமது கிழக்கு மாகாணம் அபிவிருத்தி குன்றிய மாகாணமாகவே இருந்து வந்துள்ளது. தமிழினத்தவர்கள் மாத்திரமல்ல எமது சகோதரர்களான முஸ்லீம் இனத்தவர்களும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றனர். இலங்கையில் வடக்கு கிழக்கில்தான் தமிழர்களின் இருப்பிடமும் பண்பாட்டுடன் வாழும் எமது தமிழ் நிலமுமாகும் ஆனால் இன்று கிழக்கு மாகானத்தை பொறுத்தவரையில் தமிழர்களுடய நிலங்களும் அடயாளமும் இல்லாது போகும் நிலை ஏற்ப்பட்டுள்ளது தமிழர்கள் அல்லாத இனத்தவர்கள் எமது மண்ணை ஆழ்வது மட்டுமல்ல அவர்கள் முன்னேற்றத்திலும் வளர்ச்சியடைந்து வருகிறார்கள்.காலப்போக்கில் கிழக்கில் தமிழ் இழந்து வடக்கில் மட்டுமே தமிழ் வாழும் நிலை உருவாகியுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் .


உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் அறிமுக நிகழ்வும், பிரமுகர் சந்திப்பும்! Top News
[Sunday 2016-01-31 20:00]

பிரித்தானிய மண்ணில் உருவாக்கம் பெற்றுவரும் உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் அறிமுக நிகழ்வும், பிரமுகர்களுடனான் சந்திப்பும் லண்டனில் இடம்பெற்றது. நேற்ரைய தினம் லண்டன் கில்டன் விடுதியில் மாலை 7:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் பொதுச்சுடரேற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தி நிகழ்வுகள் ஆரம்பமாயின. முதல் மாவீரன் லெப்.சங்கர் அவர்களின் தந்தை திரு. சின்னத்துரை செல்வச்சந்திரன், வைத்தியக் கலானிதி திரு.சோமசுந்தரராஜாவும் அவரது பாரியாரும், மூன்று மாவீரர்களின் சகோதரனும், தேசிய செயற்பாட்டாளருமான திரு.உருத்திராபதி சேகர், கணக்காளரும் நீண்டகால தேசிய செயற்பாட்டாளருமான சக்தி ஆன்மீகச் சுடரொளி நா. சீவரட்ணம் (ACA, ACMA) மற்றும், உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் நிர்வாகசபை உறுப்பினர் திரு கலைரஜன் அவர்களும் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தனர்.


பிக்கரிங் நகரில் நடைபெற்ற தமிழர் மரபுரிமை மாதத்தின் இறுதி நிகழ்வுகள்: Top News
[Sunday 2016-01-31 20:00]

TCASD என்று அழைக்கப்படும் டுறம் பிராந்திய தமிழ் கலாச்சார அறிவியல் கழகத்தின் ((Tamil Cultural and Academic Society of Durham)) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட


வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்!
[Saturday 2016-01-30 19:00]

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுவதோடு, 10 பாடசாலைகள் ஒரு அதிபர் அல்லது ஒரு ஆசிரியருடன் இயங்கி வருகின்றன. குறித்த கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் ஆரம்ப பிரிவிலிருந்து க.பொ.த.உயர்தரம் வரை கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் பாட ஆசிரியர்கள் உள்ளடங்கலாக 150 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றது.


பிராங்போட் தமிழலாய பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது: - நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள் பங்கெடுப்பு ! Top News
[Thursday 2016-01-28 23:00]

ஜேர்மன் பிராங்போட் தமிழலாயலம் முன்னெடுத்திருந்த பொங்கல் விழா வெகுசிறப்பாக இடம்பெற்றுள்ளது. தமிழர்களின் கலை


வ/ஒலுமடு அ.த.க.பாடசாலையின் இல்ல திறனாய்வு போட்டி: Top News
[Thursday 2016-01-28 22:00]

வவுனியா வடக்கு ஒலுமடு அ.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல திறனாய்வு போட்டி பாடசாலையின் அதிபர் திரு.விமலேந்திரன் தலைமையில் 28.01.2016 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் லிங்கநாதன், தியாகராசா, இந்திரராசா, நெடுங்கேணி பிரதேச செயலாளர் திரு.சத்தியசீலன், நெடுங்கேணி பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர்கள் பூபாலசிங்கம், செந்தூரன், வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் முன்னாள் தலைவரும், மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவருமான தேவராசா, கோட்டக்கல்வி அதிகாரி, அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


[Thursday 2016-01-28 19:00]

இத்தாலி பலேர்மோ மாநகரில் 24/01/2016 ஞாயிறு மாலை 4:00 மணியளவில் தைப்பொங்கல் சிறப்பு நிகழ்வு ஆரம்பமாகியது. ஆரம்ப நிகழ்வாக மண்டபத்திற்கு வெளியே மிகச் சிறப்பாக தமிழ்க்கலாச்சார முறைப்படி தைப்பொங்கல் இடம்பெற்றது. பின்னர் மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் தமிழீழ தேசியக்கொடியே ற்றலோடு அருட்தந்தை மற்றும் ஆலய பூசகர்கள்,தமிழ்த் தேசிய கட்டமைப்பின் பிரதிநிதிகள்,தமிழ்ச்சோலை,கலைப்பள்ளி பொறுப்பாசிரியர்கள் மங்கள விளக்கை ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது. பாடல்கள்,நடனங்கள்,கவிதைகள் சிறப்புரைகள் என்பன இடம்பெற்றன .இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.


கிளிநொச்சி - செஞ்சோலையின் மூன்றாம் ஆண்டு நிறைவுவிழா: Top News
[Monday 2016-01-25 22:00]

கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டு மூன்றாம் ஆண்டை பூர்த்தி செய்து பல நிறைவுகளைக் கண்டு கம்பீரமாகவும், மகிழ்வுடனும் பொலிவு தருகின்றது. இதன் மூன்றாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக செஞ்சோலை குடும்பத்தினரால் இன்று நிறைவுவிழா நிகழ்வுகள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் முதலில் விளக்கேற்றி, மாலை அணிவித்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர். இந்நிகழ்வில் இல்ல தந்தையும் NERDO நிறுவனத்தின் செயலருமான திரு.செ.பத்மநாதன் அவர்களும், பிரதம விருந்தினராக திரு.T.விஸ்வரூபன் (ஆணையாளர்- நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம்)


ஸ்ரார்ஸ்பூர்க் மாநகரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட தமிழர் புத்தாண்டு 2047 Top News
[Saturday 2016-01-23 20:00]

திருவள்ளுவர் ஆண்டு 2047 தைத்திருநாள் ஸ்ரார்ஸ்பூர்க் மாநகரில் 17.01.2016 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பொங்கல் பொங்கி கதிரவனுக்கு நன்றி செலுத்தி நடைபெற்ற விழாவில் ஸ்ரார்ஸ்பூர்க் மாநகர உதவி நகரபிதா, ஸ்ரார்ஸ்பூர்க் ஐரோப்பிய அபிவிருத்திக் குழு உப தலைவி, ஐரோப்பிய பெண்கள் அமைப்புத் தலைவி, மற்றும் அருட்தந்தை ஜெரார்ட் அவர்களுடன் வேற்றின மக்களின் அமைப்பு பிரதிநிதிகள், தமிழ்ச் சோலை மாணவர்கள் மற்றும் ஆசிரியரும் மங்கள விளக்கேற்றிச் சிறப்பித்திருந்தனர். தமிழீழ மண்மீட்புப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர் மற்றும் பொதுமக்களுக்காக அக வணக்கம் செலுத்தி கலைநிகழ்வுகள் தொடக்கப்பட்டன. அந்தவகையில் எழுச்சி நடனங்கள், பரதநாட்டியம், காவடி, கும்மி, கோலட்டம், நாடகம், வயலின் இசை மற்றும் மேலைத்தேய நடனங்களுடன் கவிதை, பேச்சு, எழுச்சி கானங்கள் என்பனவும் இடம்பெற்றன.


பசுமை நிறைந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள 1973 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைகழக கலைப்பிரிவு மாணவர்களின் ஒன்று கூடல்: Top News
[Friday 2016-01-22 23:00]

வவுனியா குருமன் காட்டில் அமைந்துள்ள ஹோட்டல் பிரின்சஸ் றோஸ் இல் கடந்த ஞாயிற்று கிழமை 1973 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைகழக கலைப்பிரிவின் மாணவர்களின் பசுமை நிறைந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் ஒன்று கூடல் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது இந்நிகழ்வில் கனடா.அவுஸ்ரேலியா,லண்டன் இலங்கை ஆகிய நாடுகளில் வசிக்கும் 56 மாணவர்களில் 26க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந் நிகழ்வில் கலந்து கொண்ட பழைய மாணவர்கள் அனைவரும் பேராசிரியர்களாகவும் ,விரிவுரையாளராகவும் தொழில் அதிபர்களாகவும், கல்விமான்களாகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.இந்நிகழ்வு வரலாற்று நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது.கலந்து கொண்டவர்கள் தாங்கள் கல்வி பயிலும் காலத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பசுமையான நிகழ்வுகளையும் நிறைவேறமுடியாத ஆசைகளையும் தமது இலட்சியங்களையும் தாங்கள் அடைந்த வெற்றிகளையும் பல்கலைகழக பகிடிவதை அனுபவங்களையும் எடுத்து கூறினார். அவர்களுடைய பகிர்வுகள் மிகவும் சுவாரஷ்யமாக இருந்தது.


அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை மொரிசியஸ் நாட்டு எதிர்கட்சித் தலைவருடன் சந்திப்பு: Top News
[Thursday 2016-01-21 21:00]

மௌரிசியஸ் நாட்டில் அனைத்துலக ஈழத் தமிழர் அவையின் அங்கத்துவ அமைப்பான மௌரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் மௌரிசியசில் இருக்கும் அனைத்து தமிழ் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து நடாத்திய தமிழர் திருநாள் தை பொங்கலை யொட்டி மலேசியா சிங்கப்பூர் தமிழ் நாடு ஆகிய இடங்களில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கு பற்றிய தமிழ் கலை காலாச்சார பொங்கு தமிழ் நிகழ்வில் அனைத்துலக ஈழத் தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார இணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் பிரான்சில் இருந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.தமிழ் மக்களின் பூர்வீகம் கலை கலாச்சாரத்தை மையப்படுத்தி நிகழ்சிகள் நடைபெற்றன.


இலண்டனில் நடைபெற்ற பொங்கல் விழா ! Top News
[Wednesday 2016-01-20 13:00]

இலண்டன் தமிழர் முன்னேற்றக் கழகமும், திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியும் இணைந்து இந்த ஆண்டு ஜனவரி 16ஆம் நாள், தமிழர் திருநாளாகிய பொங்கல் விழாவினை மிகவும் சிறப்பாக கொண்டாடினர். உழவுத் தொழிலையும், இயற்கையையும் போற்றும் தமிழரின் தனி அடையாளமான உழவர் திருநாள் விழாவினை ஒவ்வொரு ஆண்டும் இலண்டனில் கொண்டாடி வருகின்றனர். தமிழர் முன்னேற்றக் கழகமும் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியும் துவங்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் நிறைவையொட்டி இந்த ஆண்டு பொங்கல் விழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.


கனடியத் தமிழர் தேசிய அவை(NCCT) தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியினுடாக 21,000 கனடிய டொலர்களை நேரடியாக கையளித்தார்கள். Top News
[Tuesday 2016-01-19 18:00]

எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே என்பதையும் உலகில் எங்கு தமிழர்கள் துயருற்றாலும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் துடித்தெழுவார்கள் என்பதையும் கடந்த காலங்களில் உணர்வாகவும் செயலாகவும் நிரூபித்து காட்டியவர்கள் அன்னைத் தமிழக உறவுகள். ஈழ தமிழ் மக்களின் துயர் கண்டு துடி துடித்து உயிர் துறக்கும் ஈகைகள் வரை தமிழக உறவுகள் கை கொடுத்தாற்றிய கால கடன்களை மறவாமல் நன்றியுணர்வோடு அவர்கள் இடர் களைய கடனாற்ற உலகெங்கும் வாழும் ஈழத் தமிழ் உறவுகள் முதன் முதலாக முன்வந்த நிகழ்வாக அண்மையில் வந்த வெள்ள இடர் களைவு பணி அமைந்தது.

Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா