Untitled Document
June 2, 2024 [GMT]
 
அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
[Wednesday 2024-05-08 18:00]

நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதை தவிர்த்து கீத்து மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்சிக் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என தகவல் வெளியானது. யாஷ் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் அவருக்கு அக்காவாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்கவிருந்தார். ஆனால், திடீரென அவர் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக நயன்தாரா நடிக்க வைக்க இயக்குனர் கீத்து மோகன் தாஸ் முடிவு செய்துள்ளாராம்.

விமான நிலையத்தில் பரபரப்பு: கருணாஸிடம் பறிமுதல் செய்யப்பட்ட 40 குண்டுகள்!
[Sunday 2024-06-02 19:00]

காமெடி நடிகராக வந்த கருணாஸ் இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியின் தலைவராகவும் உள்ளார். இன்று அவர் சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்காக விமான நிலையம் வந்திருந்தார். அங்கு அவரை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவருடைய கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.


வசூல் வேட்டையாடும் சூரியின் கருடன்!
[Sunday 2024-06-02 19:00]

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் கருடன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்திற்கு முதல் காட்சியிலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது.


லெஜண்ட் சரவணனின் தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு!
[Sunday 2024-06-02 19:00]

தொழிலதிபர் சரவணன் கடந்த ஆண்டு வெளிவந்த தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்தையே பிரமாண்டமாக தயாரித்து வெளியிட்டு இருந்தார். இப்படத்தை ஜெடி - ஜெரி இயக்கியிருந்தார். ஊர்வசி ரவுடேலா, விவேக், யோகி பாபு, விஜயகுமார், சுமன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.


"மோடி வந்த பிறகு தான் எனக்கு கன்னியாகுமரியே தெரியும்" - கிண்டலடித்த நடிகர் பிரகாஷ் ராஜ்!
[Sunday 2024-06-02 08:00]

பாஜக தோற்பதற்கு உரிய அனைத்து வேலைகளையும் பிரதமர் நரேந்திர மோடி செய்து விட்டார் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.


"பட வாய்ப்புக்காக இப்படி நடிக்கவும் தயார்" - திவ்யா பாரதி!
[Sunday 2024-06-02 08:00]

சில நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமாவில் ஒரே திரைப்படத்தின் மூலமாக பெரும் உயரத்தை தொடுவார்கள். அப்படியான ஒரு சில நடிகைகளில் நடிகை திவ்யா பாரதி முக்கியமானவர் என்று கூறலாம். நிறைய திரைப்படங்களில் நடித்தும் கூட தமிழில் பல நடிகைகளுக்கு எப்பொழுதும் பெரிதாக வரவேற்பு கிடைத்தது இல்லை. நடிகை அஞ்சலி எல்லாம் நிறைய திரைப்படங்களில் நடித்த பிறகுதான் ஓரளவுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்றார்.


இமய மலைக்கு நிம்மதியை தேடி சென்ற சூப்பர் ஸ்டார்!
[Saturday 2024-06-01 16:00]

படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் ரஜினியை பார்த்து ஒரு வசனம் சொல்வாங்க. வயசானாலும் உன் அழகை ஸ்டைலும் அப்படியே இருக்குது என்று. அந்த படம் எடுக்கும்போது ரஜினிக்கு தோராயமாக வயது ஒரு 40 கடந்திருக்கும் என்று வைத்துக் கொள்ளலாம். இப்போது எழுவதை கடந்த நிலையிலும் சூப்பர் ஸ்டார் அப்படியே அழகு மற்றும் ஸ்டைலுடன் இருக்கிறார். ரஜினியை தியேட்டரில் பெரிய ஸ்கிரீனில் பார்ப்பது தான் மாஸ். ஆனால் அதைத் தாண்டி அவர் எதிர்ச்சியாக எடுக்கும் ஒரு சில புகைப்படங்கள் கிளாஸ் ஆக அமைந்து விடும்.


யானை போல் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்ட வடிவேலு!
[Saturday 2024-06-01 16:00]

வடிவேலு இரண்டாவது இன்னிங்ஸில் நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்து மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். ஆனால் சொல்லிக் கொள்ளும்படி பழைய மாதிரி அவருக்கு வாய்ப்புகளும் படங்களும் ஹிட் ஆகவில்லை. மீண்டும் மக்கள் அவரை ரசிக்க தவறுகிறார்கள்.


விஜய், அஜித் படங்களை நிராகரித்தாரா சாய் பல்லவி?
[Saturday 2024-06-01 16:00]

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவர் நடிப்பில் தற்போது தமிழில் அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது. தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவி பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் திரைப்படத்தில் சீதையாக நடித்து வருகிறார் சாய் பல்லவி என்பது குறிப்பிடத்தக்கது.


போட்டியை சமாளிக்க விஜய் டிவி எடுத்த முடிவு!
[Saturday 2024-06-01 08:00]

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு போட்டியாக தற்போது சன் டிவியின் டாப் குக், டூப் குக் என்ற ஷோ அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு முன் விஜய் டிவியில் இருந்த செஃப் வெங்கடேஷ் பட் தான் தற்போது சன் டிவிக்காக ஷோ நடத்தி வருகிறார்.


இத்தனை கோடி சம்பளமா? - வடிவேலுவால் வாயடைத்து போன இயக்குனர்!
[Saturday 2024-06-01 08:00]

வைகைபுயல் வடிவேலுவை பற்றி பெரிய அளவில் அறிமுகம் கொடுக்க தேவையில்லை, அனைவர்க்கும் பரிட்சயமானவர். சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்த வடிவேலு, மாமன்னன் படத்தின் மூலமாக நல்ல ஒரு கம்பேக் கொடுத்தார்.


மஞ்சிமல் பாய்ஸை விரட்டியடிக்கும் இளையராஜா!
[Friday 2024-05-31 18:00]

இளையராஜாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய அனைவரும் இன்று ஒரு விரோதியை போல பார்க்கின்றனர். எல்லாத்துக்கும் காரணம் இசைஞானி தான். அவரிடம் இல்லாத சொத்துக்களே இல்லை. இப்பொழுது மேற்கொண்டு பணத்தாசை பிடித்து திரிகிறார்.


கதையின் நாயகனாக நின்றாரா சூரி?
[Friday 2024-05-31 18:00]

சசிகுமார், உன்னி முகுந்தன், சூரி மூவர் கூட்டணியில் கருடன் இன்று வெளியாகி உள்ளது. துரை செந்தில்குமார் இயக்கி இருக்கும் படத்தின் ட்ரெய்லரே வேற லெவல் மிரட்டலாக இருந்தது. தற்போது படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அதன்படி முதல் காட்சிக்கு கிடைத்த வரவேற்பு நிச்சயம் படம் ஹிட் என்பதையும் உறுதி செய்துள்ளது.


ஸ்ட்ராப் இல்லாத மேலாடை: திணறடிக்கும் ஷாலு ஷம்மு! Top News
[Friday 2024-05-31 18:00]

ஷாலு ஷம்மு நகைச்சுவை நடிகையாக தமிழ் திரை உலகில் அறிமுகமான இவர் 2008-ஆம் ஆண்டு தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். இவர் 2008-ஆம் ஆண்டு வெளி வந்த தசாவதாரம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து 2009-ஆம் ஆண்டு வெளி வந்த காஞ்சிபுரம் திரைப்படத்தில் துணை கதாநாயகியாக நடித்து பிலிம் பேர் பெற்றார்.


ட்ரெண்டிங்கில் இருக்கும் விஜய் டிவியின் 5 சீரியல்கள்!
[Friday 2024-05-31 06:00]

ஒரு காலத்தில் சீரியல் என்றாலே அது சன் டிவி தான் இன்று மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார்கள். ஆனால் தற்போது சன் டிவி சீரியலை விட மற்ற சேனல்களும் வித்தியாசமான புதுப்புது பிரிவுகளை கொண்டு வருவதால் சில சேனல்களுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. அப்படி கொஞ்சம் கொஞ்சமாக சன் டிவி இடத்தை பிடித்து வருகிறது விஜய் டிவி.


"இவருடன் நடிக்க படுக்கையை பகிரவும் தயார்" - பிரபல இளம் நடிகை வெளிப்படை!
[Friday 2024-05-31 06:00]

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். பாய்ஸ் திரைப்படத்திற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் இவர் நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக இருந்து வருகிறார். மாதவனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் சித்தார்த் என்று கூறலாம்.


போதையில் அஞ்சலியிடம் மட்டமாக நடந்து கொண்ட பாலைய்யா!
[Thursday 2024-05-30 18:00]

சர்ச்சைகளுக்கு பெரிய அளவில் பேர் போனவர் தான் தெலுங்கு நடிகர் பாலையா. இவருடைய படங்களை ரசிப்பவர்களின் ரசலின் மீது சந்தேகப்படும் அளவுக்கு தான் இவருடைய நடிப்பு இருக்கும். சமீபத்தில் கேங்ஸ் ஆப் கோதாவரி என்னும் தெலுங்கு படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பாலையா கலந்து கொண்டார்.


கோட்-க்கு போட்டியாக விடாமுயற்சி எடுக்கும் விஸ்வரூபம்!
[Thursday 2024-05-30 18:00]

ஒரு விஷயத்தில் எந்த அளவிற்கு நாம் மெனக்கெடு செய்கிறோமோ, அதற்கு ஏற்ற மாதிரி தான் பலனும் கிடைக்கும் என்று சொல்வார்கள். அதே மாதிரி அசால்டாக சில விஷயங்களை எடுத்தால் அதற்கு ஏற்ற மாதிரி தான் ரிசல்ட் வரும். அப்படித்தான் அஜித் சினிமாவில் ஏதோ ஏனோதானோ என்று நடித்துக் கொண்டு வருகிறார்.


45 வயது நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்!
[Thursday 2024-05-30 18:00]

தமிழ் சினிமாவில் முரட்டு சிங்கிளாக வலம் வருபவர் பிரேம்ஜி. 45 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் அவரிடம் திருமணம் பற்றி தான் எல்லா பேட்டிகளிலும் கேள்வி கேட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது பிரேம்ஜிக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


இசை பெரிதா? பாடல் பெரிதா? - கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிய ரஜினிகாந்த்!
[Wednesday 2024-05-29 18:00]

இமயமலைக்கு புறப்படும் நடிகர் ரஜினிகாந்திடம் கேட்கப்பட்ட மோடி மற்றும் இசை குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் சென்றது பேசுபொருளாகியுள்ளது. ‘வேட்டையன்’ படப்பிடிப்பை முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், கடந்த ஒரு வாரம் அபுதாபியில் ஓய்வெடுக்க சென்று சென்னை திரும்பினார். இதனையடுத்து, இன்று அதிகாலை ஒரு வாரகால ஆன்மிக பயணம் செல்ல இமயமலை கிளம்பியுள்ளார். இவர், ஒவ்வொரு வருடமும் இமயமலை பாபாஜி குகை, கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.


உதயநிதி உடன் கிசுகிசுக்கப்பட்ட 5 நடிகைகள்!
[Wednesday 2024-05-29 18:00]

உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் ஜெயித்து இன்று அரசியலிலும் நல்ல ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு நடிப்பு சரியாக வரவில்லை என்றாலும் அதன் பின் அதில் அனுபவம் வந்த பிறகு நன்றாக நடிக்க ஆரம்பித்தார். இவர் நடித்த பாதி படங்களுக்கு மேல் ஓரளவு டீசன்டான விமர்சனம் கிடைத்தது. அதன் பின் மாமன்னன் படத்தோடு நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.


சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கும் போகும் பிரபல இயக்குனர்!
[Wednesday 2024-05-29 18:00]

தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது. இப்படத்திற்கு பின் சூர்யா சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்திருந்தார். இவர்களுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும். அந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகவும் இணையத்தில் தகவல்கள் வந்துகொண்டு இருக்கிறது.


"புயலுக்கு தயாராக இருங்க" - தனுஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்!
[Wednesday 2024-05-29 06:00]

நடிகர் தனுஷ் அடுத்து ராயன் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். தனுஷே இயக்குவதால் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜெ.சூர்யா உள்ளிட்ட பலரும் முக்கிய ரோல்களில் நடித்து இருக்கின்றனர்.


பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மலையாள சென்சேஷன் நடிகை!
[Wednesday 2024-05-29 06:00]

பிரதீப் ரங்கநாதன் கோமாளி என்ற படத்தை இயக்கி பிரபலம் ஆனவர். அதன் பின் லவ் டுடே படத்தை இயக்கி நடித்து இருந்தார். அந்த படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். மேலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்திலும் நடிக்கிறார்.


சாத்தியமில்லாததை விஜய் இடம் திணிக்கும் வலது கரம்!
[Tuesday 2024-05-28 18:00]

விஜய் பெரிய ரிஸ்க் எடுத்து அரசியலில் இறங்கியுள்ளார். தளபதி 69 தான் கடைசி படம் என்று ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ரசிகர் மன்ற தலைவர்களிடம் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளார்.மற்ற கட்சிகளிடமிருந்து தனித்து விளங்குமாறு அறிவுரை கூறி வருகிறார்.


மும்பை போனதும் பச்சோந்தியாக மாறிய சூர்யா!
[Tuesday 2024-05-28 18:00]

பொதுவாக ஒவ்வொருவரும் இடம் பொருள் ஏவல் தெரிந்து அதற்கேற்ற மாதிரி நடந்து கொள்வார்கள். ஆனால் நல்லவர் போல் ஒரு முகத்திரையை போட்டு அதன் பின்பு அது பொய் முகத்தை காட்டும் பிம்பம் போல் செயல் படுவது பச்சோந்தி. ஏனென்றால் இதுதான் சூழ்நிலைக்கேற்ப நிறத்தையும் குணத்தையும் மாற்றிக் கொள்ளும். அதுபோலத்தான் நடிகர் சூர்யா மாறிக்கொண்டு வருகிறார் என்று வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.


விமர்சனங்களுக்கு ராகவா லாரன்ஸ் கொடுத்த பதில்!
[Tuesday 2024-05-28 18:00]

நடிகர் ரகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். தொடர்ந்து படங்கள் நடிப்பது மட்டுமின்றி சொந்த தயாரிப்பிலும் பல படங்கள் நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான சம்பளதற்கு பலவேறு விதங்களில் மற்றவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தி வருகிறார் ராகவா லாரன்ஸ்.


சுச்சி லீக்சை மிஞ்சிய அந்தரங்க லீலை: சிக்கிய 4 பிரபலங்கள்!
[Tuesday 2024-05-28 06:00]

சில வருடங்களுக்கு முன்பு சுச்சி லீக் என்ற விஷயம் திரையுலகத்தை ஆட்டிப்படைத்தது. அதில் தனுஷ், திரிஷா, அனிருத் ,ஆண்ட்ரியா என ஒவ்வொருவரின் போட்டோவும் வெளியாகி கதி கலங்க வைத்தது. அது ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் சுசித்ரா அதை ஓப்பன் செய்து பரபரப்பை கிளப்பினார். அதில் சம்பந்தப்பட்டவர்களே அந்த போட்டோவை கொடுத்து லீக் செய்ய வைத்தார்கள் என அவர் சொன்னது தான் ட்விஸ்ட்.


பானுப்ரியாவின் பரிதாப நிலை!
[Tuesday 2024-05-28 06:00]

80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை பானுப்ரியா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் மொழித்த பழமொழி திரைப்படங்களில் வெற்றி நாயகியாக ஜொலித்து வந்திருந்தார் . 90 ஸ் காலகட்டத்தில் இந்தி திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். ஆந்திர பிரதேசம் மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்ட பானுப்பிரியா தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக அறியப்பட்டிருந்தார். இதுவரை 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் பானுப்பிரியா தெலுங்கில் மட்டும் கிட்டத்தட்ட 50 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.


அரசியலுக்கு முன் மொத்த சண்டையையும் முடிவுக்கு கொண்டு வந்த தளபதி!
[Monday 2024-05-27 19:00]

விஜய் பற்றிய செய்திகள் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அவர் கட்சி ஆரம்பித்ததிலிருந்து கோட், தளபதி 69 என ஒவ்வொன்றும் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதேபோன்று அவருடைய தனிப்பட்ட விஷயங்களும் பரபரப்பை ஏற்படுத்தும். அப்படித்தான் இவருக்கும் இவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகருக்கும் இருக்கும் மனவருத்தம் அனைவருக்குமே தெரியும்.


சிவகார்த்திகேயன் தயாரித்து லாபமடைந்த 4 படங்கள்!
[Monday 2024-05-27 19:00]

சிவகார்த்திகேயன் தெரிந்தவர், தெரியாதவர், நண்பர் என எல்லாருக்கும் கையெழுத்து போட்டு பெரும் கடனில் மாட்டிக் கொண்டார். 2 படங்களை மொத்தமாய் நம்பி, அதுல பாதாளத்தில் விழுந்துவிட்டார். வரிசையாக தொடர் தோல்விகள், நாலா பக்கமும் கடன் என மீள முடியாத அளவுக்கு 50 கோடிக்கு மேல் கடன் கொடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா