Untitled Document
May 9, 2024 [GMT]
விண்வெளியில் ஓராண்டு தங்கி புதிய சாதனை படைக்கவிருக்கும் அமெரிக்க வீராங்கனை!
[Wednesday 2019-04-17 17:00]

அமெரிக்கா, ரஷியா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அந்த மையத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 3 பேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின்னர் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அந்த வகையில், ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் சார்பில் ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர், இத்தாலியை சேர்ந்த லூகா பர்மிடானோ ஆகிய 2 வீரர்களும், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டீனா கூக் என்கிற வீராங்கனையும் வருகிற ஜூலை மாதம் 20-ந்தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்கிறார்.


வீரர்களை அனுப்பியதில் இந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி பாக்கி!
[Wednesday 2019-04-17 09:00]

உலகில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிற பல நாடுகளுக்கு ஐ.நா. அமைதிப்படைகளை அனுப்பி வைத்து வருகிறது. ஐ.நா. அமைதிப்படையில் பல நாட்டின் வீரர்களும் இடம் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில் இந்திய வீரர்கள் இடம் பெற்றிருப்பதற்கு இந்தியாவுக்கு ஐ.நா. சபை 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) பாக்கி வைத்து இருக்கிறது. இதை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.


பாரீஸ் 'நோட்ர-டாம்' தேவாலயத்தின் ஏழு பொக்கிஷங்கள் என்னென்ன? Top News
[Wednesday 2019-04-17 08:00]

பாரீஸ் நகரில் நோட்ர-டாம் கதீட்ரல் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்திருக்கிறது. அதனுடைய கூரையை சேதமாக்கி, கோபுரத்தை சரியச் செய்து, கட்டடத்தின் மற்ற அமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கதீட்ரலில் ``பெரும் சேதங்கள்'' ஏற்பட்டிருப்பதாக பாரீஸ் நகரின் துணை மேயர் இமானுவேல் கிரெகோய்ரே தெரிவித்துள்ளார். கதீட்ரலில் இருக்கும் கலைப் பொருட்கள் மற்றும் விலை மதிப்பற்ற பொருட்களை மீட்கும் பணியில் அவசரகால குழுக்கள் ஈடுபடுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உள்புறம் உள்ள மர வேலைப்பாடுகள் அழிந்துவிட்டன. ஆனால் 850 ஆண்டு காலம் பழமையான கோதிக் காலத்தைய இந்தக் கட்டடம் நகரின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக இருப்பதற்குக் காரணமாக இருந்த வேறு சிறப்பு அம்சங்கள் என்ன?


"நிகரகுவாவில் மனித உரிமை மீறல்கள் உச்சம்" – நிதி உதவி ரத்து!
[Wednesday 2019-04-17 08:00]

மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில் மனித உரிமை மீறல்கள் உச்சம் பெற்றுள்ளமை காரணமாக அந்த நாட்டுக்கான அனைத்துவிதமான நேரடி உதவிகளையும் கனேடிய அரசாங்கம் நிறுத்தியுள்ளது. அந்த நாட்டின் ஓய்வூதிய முறையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கே ஏற்பட்ட பேரணிகளை ஜனாதிபதி டானியல் ஓர்டேகா தலைமையிலான அரசு வன்முறை கொண்டு அடக்கியது. அதனை அடுத்து அந்த நாட்டு ஜனாதிபதி டானியல் ஓர்டேகாவை பதவி விலகுமாறு கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. இந்த அரச எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையில், 640க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்து.


இன்னும் 5 வருடங்களில் நோட்ரே-டேம் தேவாலயம் சீரமைக்கப்படும் - பிரான்ஸ் அதிபர் மெக்ரான்!
[Wednesday 2019-04-17 08:00]

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நோட்ரே-டேம் என்ற இடத்தில் உலக புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. 850 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயம் அந்நாட்டின் வரலாற்று சின்னமாக பார்க்கப்படுகிறது. அந்த தேவாலயத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. சில நிமிடங்களில் தீ, தேவாலயம் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியதால் தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் பலத்த சேதமடைந்து இடிந்து விழுந்தன. அத்துடன் தேவாலயத்தின் 2 கோபுரங்களில் ஒன்று முற்றிலுமாக எரிந்து போனது. தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு வந்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து தெரியவந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் நிலைமையை ஆய்வு செய்தார்.


தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட குழந்தைகள்! Top News
[Tuesday 2019-04-16 17:00]

சீனாவை சேர்ந்த 28 வயதான தாவோ என்பவர் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை கடந்த ஆண்டு ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது வயிற்றினுள் இருந்த இரட்டை பெண் குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதை பார்த்து பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.உடனே அதனை வீடியோவாக எடுத்த அவர், இணையதளத்தில் வெளியிட ஆரம்பித்தார். இந்த வீடியோவை பார்த்த இணையதளவாசிகள் பலரும் பெரும் ஆச்சர்யத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குறித்த உண்மைகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கு உயரிய விருது!
[Tuesday 2019-04-16 17:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்த ‘நியூயோர்க் டைம்ஸ்’, ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ ஆகிய பத்திரிகைகளுக்கு இந்த ஆண்டு புலிட்ஷர் (Pulitzer Prize) விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘நியூயோர்க் டைம்ஸ்’, ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ ஆகிய இரு பத்திரிகைகளும் வெவ்வேறு புலனாய்வுகளை மேற்கொண்டு ட்ரம்ப் மற்றும் ட்ரம்ப் குடும்பத்தினரைப் பற்றிய சில உண்மைத் தகவல்களை வெளிக்கொண்டுவந்தன. அவ்வகையில் குறித்த விருதுகளுக்கான பத்திரிகைகளின் விபரங்கள் நேற்று (திங்கட்கிழமை) புலிட்ஷர் விருதுக்குழுவால் அறிவிக்கப்பட்டன. ‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகை தனது புலனாய்வு மூலம், தன்னிடம் உள்ள சொத்துகள் அனைத்தும் தானே சம்பாதித்தது என்ற ட்ரம்பின் கூற்று பொய் என நிரூபித்ததற்காகவும் அவரது மாபெரும் வணிக சாம்ராஜ்ஜியம் மிகப்பெரிய அளவில் வரி ஏய்ப்புக்கான சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி வந்ததை நிரூபித்ததற்காகவும் மதிப்புவாய்ந்த பத்திரிகை விருது வழங்கப்படுவதாக புலிட்ஷர் விருதுக்குழு அறிவித்துள்ளது.


பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை!
[Tuesday 2019-04-16 17:00]

பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்வது குறித்து அமெரிக்க அரசு, புதிய பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த பயண அறிவுறுத்தலில், பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பதற்றம் நிறைந்த பகுதிகள் வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை வகுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தானை பொதுவாக அபாயம் நிறைந்த 3வது நிலையில் வைத்துள்ளது. பலூசிஸ்தான், கைபர் பாக்துன்க்வா மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களை மிகவும் அபாயகரமான 4-வது நிலையில் வைத்துள்ளது.


100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் பெண் பயிற்சியாளர்!
[Tuesday 2019-04-16 17:00]

சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில், பிரான்ஸ் நாட்டிடம் அடிமைப்பட்டிருந்த 'பிரெஞ்சு சேரி' என்று முன்னர் அழைக்கப்பட்டு, தற்போது புதுச்சேரியாக மாறிபோன புதுவையின் கடலோர கிராமம் ஒன்றில் பிறந்த டாவோ பொர்ச்சான் லின்ச், சிறுமியாக இருக்கும் போதே புதுச்சேரி கடற்கரை ஓரங்களில் அணி, அணியாக பலர் யோகாசன கலைக்கான பயிற்சியில் ஈடுபடுவதை மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தார். இதனால், இளமைக் காலத்தில் இருந்தே அவருக்கு யோகா கலையின் மீது அளவுகடந்த ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த ஈர்ப்பின் விளைவாக யோகா பயிற்சி வகுப்பில் சேர்ந்து, அக்கலையினை முழுமையாக கற்று தேர்ந்த டாவோ பொர்ச்சான் லின்ச், பின்னாளில் அமெரிக்கா சென்று குடியேறினார்.


ஆபாசப் படங்களை அழித்த பெற்றோரிடம் 86 ஆயிரம் டாலர் இழப்பீடு கேட்டு மகன் வழக்கு!
[Tuesday 2019-04-16 08:00]

அமெரிக்காவில் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் விவாகரத்து பெற்ற நடுத்தர வயது நபர் பெட்டி, படுக்கைகளை மூட்டைக்கட்டி கொண்டு, மிச்சிகன் மாநிலம், கிரான்ட் ஹேவன் பகுதியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டில் தஞ்சம் அடைந்தார். அவர்களின் ஆதரவில் தங்கி இருந்த அந்நபர், பின்னாளில் இன்டியானா மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தார். பெற்றோர் வீட்டில் அவர் விட்டுச் சென்ற பொருட்கள் எல்லாம் அவரது புதிய இருப்பிடத்துக்கு அனுப்பப்பட்டபோது 12 அட்டை பெட்டிகள் வந்து சேராததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனது வாலிபகாலத்தில் இருந்து சிறுகச்சிறுக சேகரித்து வைத்திருந்த கிடைத்தற்கரிய ஆபாசப் படங்களின் வி.சி.டி. மற்றும் சி.டி., டி.வி.டி. தொகுப்புகள் என்னவாயிற்று? என்று பெற்றோரிடம் ‘இமெயில்’ மூலம் அவர் விசாரிக்க, எதிர்முனையில் இருந்து வந்த பதில் அவரை ஆத்திரப்படுத்தியது. அந்த 12 பெட்டிகளில் இருந்தவற்றை எல்லாம் நானும் உன் அம்மாவும் சேர்ந்து அழித்து விட்டோம் என்று அவரது தந்தை பதில் அனுப்பி இருந்தார்.


லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்ராறியோவின் மனு விசாரணைக்கு வருகிறது!
[Tuesday 2019-04-16 08:00]

சர்ச்சைக்குரிய கார்பன் வரி தொடர்பாக லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்ராறியோ அரசாங்கம் தாக்கல் செய்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) மாகாண உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


பாரீசில் நேட்டர்டாம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து! Top News
[Tuesday 2019-04-16 08:00]

பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றான நாட்டர்டாம் தேவாலயம் தீவிபத்தில் முற்றிலும் அழிந்து போனது. தலைநகர் பாரீசின் மத்தியப் பகுதியில் அமைந்திருந்த இந்தத் தேவாலயம் 850 ஆண்டுகள் பழமையானது. பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டிருந்த இந்த தேவாலயத்தில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக நெருப்பு வேகமாகப் பரவியது.


உலகின் கடைசி மெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது!
[Tuesday 2019-04-16 08:00]

‘யாங்ட்ஷி’ என்று அழைக்கப்படும் ஆமைகள் தான் உலகிலேயே மிகவும் மெல்லிய ஓடு கொண்ட ஆமைகளாக அறியப்படுகின்றன. வரைமுறையற்ற வேட்டை, நீர் மாசுபாடு போன்ற காரணங்களால் இந்த வகை ஆமைகள் பேரழிவைச் சந்தித்தன. இந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில் 2 ஆமைகள் சீனாவில் உள்ள ஷூஷோ உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வந்தன. இவற்றில் ஒன்று ஆண் ஆமை, மற்றொன்று பெண் ஆமை ஆகும். மற்ற 2 ஆமைகளும் வியட்நாமில் உள்ளன.


பாகிஸ்தானில் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி!
[Monday 2019-04-15 17:00]

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் சித்ரால் மாவட்டத்தில் டேனின் கிராமத்தில் பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலை பகுதியில் இருந்து பெரிய அளவிலான கற்கள் மற்றும் கழிவுகள் உருண்டோடி வந்து வீடு ஒன்றின் மீது விழுந்தன. இதில் அந்த வீட்டில் இருந்த பெண் உள்பட 3 பேரும் கொல்லப்பட்டனர். இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், பன்னர் மாவட்டத்தில் மலை பகுதியில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று திரும்பும்பொழுது திடீரென மலையிடுக்குக்குள் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.


ரொறன்ரோ பெரும்பாகத்தில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை!
[Monday 2019-04-15 17:00]

ரொறன்ரோ பெரும்பாகம் உள்ளிட்ட ஒன்ராறியோவின் பெரும்பாலான தென்பிராந்தியங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வாழும் மக்கள் இன்று (திங்கட்கிழமை) கடுமையான மழையினை எதிர்கொள்ள நேரிடும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம், எச்சரிக்கை விடுத்துள்ளது.


114 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருத்துவர் கைது!
[Monday 2019-04-15 17:00]

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 114 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இரையாக்கிய மருத்துவர் சிக்கியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, பெர்ன் நீதிமன்றத்தால் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவரது நடவடிக்கைகளை கண்காணிக்க வலியுறுத்திய நீதிமன்றம், குறிப்பிட்ட அளவீடுகளை மீறினால், அந்த மருத்துவரை கைது செய்யலாம் என தீர்ப்பளித்திருந்தது.


கனடாவை அச்சுறுத்தும் வைரஸ்!
[Monday 2019-04-15 16:00]

கனடாவில் பரவிவரும் வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கனேடிய சுகாதாரத்துறை இதனைத் தெரிவித்துள்ளது. கனடாவின் ஆறு மாகாணங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸிற்கு salmonella என பெயரிடப்பட்டுள்ளது. குறித்த வைரஸ் தாக்கமானது பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பேர்ட்டா, சஸ்கச்சுவான், மனிடோபா, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் ஆகிய 6 மாகாணங்களிலேயே வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகின்றது.


முஸ்லிம் பெண் எம்.பி.க்கு எதிராக அதிபர் டிரம்ப் வன்முறையை தூண்டினாரா?
[Monday 2019-04-15 16:00]

முஸ்லிம் பெண் எம்.பி. இல்கான் ஒமருக்கு (Ilhan Omar) எதிராக, அதிபர் டிரம்ப் வன்முறையை தூண்டவில்லை என வெள்ளை மாளிகை மறுப்புத் தெரிவித்துள்ளது. மின்னசோட்டாவை சேர்ந்த, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இல்கான் உமர் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றுவதையும், இரட்டைக் கோபுர தாக்குதல் காட்சிகளையும் மிக்ஸ் செய்து, அதிபர் டிரம்ப் தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஏதோ சிலர் செய்த வேலை என இரட்டை கோபுர தாக்குதலைப் பற்றி இல்கான் உமர் கூறுவது போன்ற அர்த்தத்திலும், ஆனால் தாங்கள் அதை ஒருபோதும் மறக்க மாட்டோம் என அதிபர் டிரம்ப் கூறுவது போலவும் அந்த மிக்சிங் வீடியோ அமைந்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் நான்சி பெலோசி Nancy Pelosi இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, வீடியோவை டிரம்ப் உடனே நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


ஜப்பானில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்!
[Monday 2019-04-15 09:00]

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்த ஜப்பான் ஆலோசனை நடத்திவருகின்றது. ஜப்பானில் அதிகரித்துச் செல்லும் சிறுவர் துஷ்பிரயோகங்களை நிறுத்தும் வகையில் இவ்வாறு கடும் சட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளுக்கு பெற்றோர் வழங்கும் உடல்ரீதியான தண்டனைகளை ஜப்பான் அனுமதிக்கின்றது. ஆனால், அண்மைய காலமாக பதிவாகிய இரு மோசமான சிறுவர் துஷ்பிரயோக சம்பங்களைத் தொடர்ந்து சட்ட நடைமுறையை அமுல்படுத்த திர்மானிக்கப்பட்டுள்ளது. உடல்ரீதியான தண்டனைகளை தடைசெய்யும் சட்டத்தை கொண்டுவருவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.


பாகிஸ்தான் அரசு நல்லெண்ண அடிப்படையில் 2–வது முறையாக 100 இந்திய மீனவர்களை விடுவித்தது!
[Monday 2019-04-15 09:00]

பாகிஸ்தான் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தான் சிறைபிடித்து ஜெயிலில் அடைத்து உள்ளது. அந்த வகையில் 360 மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் நீண்டநாட்களாக அடைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஸ்–இ– முகமது பயங்கவரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் பலியானார்கள். இந்த சம்பவத்தினால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவியது. இந்த பதற்றத்தை தணிக்கும் வகையிலும் நல்லெண்ண அடிப்படையிலும் பாகிஸ்தான் சிறையில் உள்ள 360 இந்திய மீனவர்கள் 4 கட்டமாக விடுவிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் அறிவித்தது.


ஒட்டாவாவில் கனமழை பெய்ய வாய்ப்பு!
[Monday 2019-04-15 09:00]

ஒட்டாவாவில் கனமழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டாவா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நாளை(திங்கட்கிழமை) சுமார் 30 முதல் 40 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.


உலகின் மிகப்பெரிய விமானம் விண்வெளி திட்டங்களுக்காக உருவாக்கப்பட்டது! - பால் ஆலன்.
[Monday 2019-04-15 09:00]

விண்வெளி திட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானம், அமெரிக்காவில் வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது. மைக்ரோசாப்ட் என்ற மிகப்பெரிய நிறுவனத்தை பில்கேட்சுடன் இணைந்து ஆரம்பித்த பால் ஆலன், விண்வெளி திட்டங்களை செயல்படுத்துவதற்காக, ஸ்ட்ராடோலான்ச் சிஸ்டம்ஸ் கார்பரேசன் என்ற நிறுவனத்தை 2011 ஆம் ஆண்டு தனியாக தொடங்கினார். அந்த நிறுவனத்தின் தயாரிப்புதான் இந்த வெள்ளை நிற விமானம். ராக் என்ற பெயரில் அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய விமானமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு உடல்பகுதிகளுடன், 6 போயிங் 747 என்ஜின்களை கொண்டு பிரம்மாண்டமாக இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் இறக்கைகளின் நீளம் மட்டும் 117 மீட்டராகும். இது கால்பந்து மைதானத்தை விட அதிகமாகும். ஏர்பஸ் ஏ 380 என்ற விமானத்தின் இறக்கையை காட்டிலும் சுமார் ஒன்றரை மடங்கு பெரியது. செயற்கை கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்டை ஏவுவதற்காக இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


சட்டவிரோத தகவல்களை கொண்ட 33 ஆயிரம் மொபைல் செயலிகளை நீக்கிய சீனா!
[Sunday 2019-04-14 18:00]

சீனாவில் இணையதளங்களில் ஆபாச படங்கள், சூதாட்டம், மோசம் நிறைந்த காட்சிகள் மற்றும் சட்டவிரோத விளையாட்டுகள் ஆகியவை அதிகம் உள்ளன என புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து கடந்த டிசம்பரில் இருந்து இவற்றை நீக்க சீன இணையவெளி நிர்வாகம் (சி.ஏ.சி.) நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியது. இதுபற்றி அந்நிர்வாகம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீங்கிழைக்கும் 23 லட்சம் வலைதளங்களுக்கான இணைப்புகள் தடை செய்யப்பட்டு உள்ளன. இதேபோன்று சமூக நெட்வொர்க் தளங்களில் ஆபாச மற்றும் பிற சீர்கேடுகளை உருவாக்கும் 2.47 கோடி பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளன. 30 லட்சம் கணக்குகள் மூடப்பட்டு உள்ளன.


ஆஸ்திரேலியா இரவு விடுதியில் துப்பாக்கி சூடு; பலர் காயம்!
[Sunday 2019-04-14 18:00]

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிரஹ்ரான் மாவட்டத்தில் உள்ள லிட்டில் சேப்பல் தெரு மற்றும் மால்வெர்ன் சாலை அருகே இரவு விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில், விடுதிக்கு வெளியே அதிகாலை 3.20 மணியளவில் திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்து உள்ளனர். உள்ளூர் ஊடகங்கள் 3 அல்லது 4 பேர் காயம் அடைந்திருக்க கூடும் என தெரிவிக்கின்றது. எனினும் விக்டோரியா போலீசார் விரிவான விவரங்களை வெளியிடவில்லை. இந்த துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் தெரியவரவில்லை.


செல்லப் பறவை தாக்கியதில் உயிரிழந்த முதியவர்!
[Sunday 2019-04-14 18:00]

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் தனக்கு சொந்தமான செல்லப் பறவை தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். பறவை முதியவரை தாக்கியது தொடர்பாக தங்களுக்கு வெள்ளிக்கிழமையன்று தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அந்த முதியவர் காயமடைந்து இருந்ததாகவும் உள்ளூர் காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர். பிறகு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மார்வின் ஹஜோஸ் என்னும் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கசோவரி என்றழைக்கப்படும் இது தீக்கோழி இனத்தை சேர்ந்த பறக்க இயலாத பறவையாகும். ஃபுளோரிடாவின் வடக்கு பகுதியிலுள்ள அலசுவா என்னும் நகரத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்த விசாரணையை தொடங்கியுள்ள காவல்துறையினர் இதை 'துயரகரமான விபத்து' என்று குறிப்பிட்டுள்ளனர்.


ஜெர்மனி செல்பவர்கள் நீல அட்டை பெறுவது எப்படி?
[Sunday 2019-04-14 18:00]

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத மக்கள் ஜேர்மனியில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் உதவும் நீல அட்டை குறித்த சில தகவல்கள்… அமெரிக்காவில் வாழ்வோர் பணி புரிவதற்கான முழு உரிமைகளை வழங்கும் கிரீன் கார்டைப் பார்த்துதான் ஜேர்மனியும் இந்த நீல அட்டை என்னும் திட்டத்தைக் கொண்டுவந்தது. ஆனால் கிரீன் கார்டைப்போல் இல்லாமல், நீல அட்டை வைத்திருப்போர், தாங்கள் தங்கள் நாட்டில் வாங்கும் சராசரி சம்பளத்தை விட 1.5 மடங்கு அதிக சம்பளம் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும்.


உலகின் மிகப்பெரிய விமானம் வெற்றிகரமாக பறந்து தரையிறங்கியது!
[Sunday 2019-04-14 18:00]

பிரபல கணிப்பொறி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோராப்ட்’ கம்பெனியை 1975- ஆண்டில் பில் கேட்ஸ் உடன் இணைந்து கூட்டாக தொடங்கியவர் பால் ஆல்லென். வானத்தில் பறந்தவாறு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் தொழில்நுட்பத்துடன் உலகின் மிகப்பெரிய விமானம் ஒன்றை தயாரிக்க இவர் தீர்மானித்தார். இதன் விளைவாக கடந்த 2011-ம் ஆண்டில் ‘ஸ்டிராட்டோலான்ச்’ என்ற புதிய நிறுவனத்தை பால் ஆல்லென் தொடங்கினார். விமானத்தின் வடிவமைப்பு, கட்டுமானப் பணிகள் முடிந்து சோதனை ஓட்டமாக (அமெரிக்கா நேரப்படி 13-4-2019 அன்று காலை 6.58 மணியளவில்) பறக்க விடுவதற்கு நாள் குறிக்கப்பட்டது. அதன்படி, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மோஜாவே விமானம் மற்றும் விண்வெளி துறைமுகத்தில் இருந்து இந்த ‘மெகா’ விமானம் புறப்பட்டு சென்றது.


உக்ரைன் தூதரக வளாகத்தில் நிகழ்ந்த அதிர்ச்சியான சம்பவம்!
[Sunday 2019-04-14 08:00]

லண்டனில் உள்ள உக்ரேய்ன் தூதரக வாசலில் நிறுத்தப்பட்டிருந்த தூதரின் கார் மீது தனது காரை இருமுறை மோதிய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. உக்ரைன் தூதரின் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் வேகமாக தனது காரில் வந்த ஒருவன், தூதரின் காரை மோதி தாக்கினான். இது தற்செயல் விபத்து போல் தெரிந்தாலும் மீண்டும் அவன் இதே போல் காரை மோதியபோதுதான் போலீசார் விபரீதம் உணர்ந்து வேகமாக களமிறங்கினர்.

Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா