Untitled Document
April 26, 2024 [GMT]
வவுனியாவில் குழந்தையைக் கடத்திய மற்றொருவர் கைது!
[Monday 2018-06-04 19:00]

வவுனியாவில் எட்டு மாதக் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா குட்சைட் வீதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்களால், 8 மாத ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டது, பின்னர் அந்தக் குழந்தை புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருந்தது.


மஹிந்தவைப் பிரதமராக்க வேண்டும்! - என்கிறார் வாசு
[Monday 2018-06-04 19:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமராக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


4 கிலோ கஞ்சாவுடன் கைதடியில் இளைஞன் கைது!
[Monday 2018-06-04 19:00]

தென்மராட்சி- கைதடி பகுதியில் 4 கிலோ கேரள கஞ்சாவுடன், சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


அமைச்சரவை முடிவை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் பங்கேற்க இராணுவப் பேச்சாளருக்கு தடை!
[Monday 2018-06-04 07:00]

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு, இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்துவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க விடுத்துள்ள விசேட கட்டளையின் பிரகாரமே, இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


சரணடைந்தோர் விபரத்தை தரமறுக்கும் படைத் தரப்பு!
[Monday 2018-06-04 07:00]

இறுதிப்போரில் சரணடைந்த போராளிகளின் விபரங்களை, காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ், படை அதிகாரிகளிடம் கோரியதாகவும், ஆனால் முழுமையான விபரங்கள் தங்களிடம் இல்லையென அவர்கள் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 5 அகதிகள், படகோட்டிகளுடன் கைது! Top News
[Monday 2018-06-04 07:00]

தமிழ் நாட்டிலிருந்து கடல்வழியாக, தாயகம் திரும்பிய ஐந்து அகதிகள் உட்பட ஏழு பேரை வடக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறையிலிருந்து 11 கடல் மைல் தொலைவில் நேற்றுக் காலை இவர்கள் கைது செய்யப்பட்டனர் என கடற்படை தெரிவித்துள்ளது.


பிரதி சபாநாயகர் பதவிக்கு போட்டி அதிகரிப்பு - நாளை இரகசிய வாக்கெடுப்பு!
[Monday 2018-06-04 07:00]

பிரதி சபாநாயகர் பதவிக்கு, நாளை நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அரசமைப்பின் 64 (3) உறுப்புரைக்கமையவே, புதிய பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறும்.


விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது! - கஜேந்திரகுமார்
[Monday 2018-06-04 07:00]

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


போலியான வாக்குறுதிகளை வழங்க முடியாது! - சாலிய பீரிஸ்
[Monday 2018-06-04 07:00]

சரணடைந்தவேளை காணாமல்போனவர்கள் குறித்த விவகாரம் எங்கள் அலுவலகத்தின் முன்னுரிமைக்குரிய விடயமாக உள்ளது என காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் தெரிவித்தேன் என காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.


கூட்டு எதிரணியினரை ஒதுக்கினார் மைத்திரி! - மஹிந்தவுக்கு மட்டும் பதவி
[Monday 2018-06-04 07:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நேற்றைய புதிய அதிகாரிகள் தெரிவின் போது, கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஓரங்கட்டப்பட்டனர். சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபை மற்றும் அகில இலங்கைச் செயற்குழு ஆகியன நேற்று கூடின. இதன்போது, கூட்டு எதிரணியில் அங்கம் வ​கிக்கும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவருக்கும் எந்தவொரு பதவியும் வழங்கப்படவில்லை.


ஐதேகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதாலேயே தோல்வி! - ஜனாதிபதி
[Monday 2018-06-04 07:00]

ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசியல் கூட்டணி வைத்துக் கொண்டதன் காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளுராட்சி தேர்தல்களில் தோல்வியை சந்தித்தது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு கூட்டத்திலேயே சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.


ஓடும் பஸ்ஸில் இருந்து துண்டாகி விழுந்த பல்கலைக்கழக மாணவனின் கை!
[Monday 2018-06-04 07:00]

பஸ் ஒன்றில் பயணித்த பல்கலைக்கழக மாணவனின் கை, விபத்தில் துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளார். நேற்று நண்பகல், கொழும்பிலிருந்து பிபிலை சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும், எதிர்த்திசையில் வந்த டிப்பர் ரக லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


தேவிபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணி! - மாவீரர் நாளுக்கு இப்போதே ஏற்பாடுகள் Top News
[Sunday 2018-06-03 18:00]

இறுதிப்போரின் போது வீரச்சாவடைந்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லம், இன்று காலை சிரமதானப் பணிகள் மூலம் துப்புரவு செய்யப்பட்டன. தேவிபுரம் மாவீரர் துயிலுமில்ல செயற்பாட்டு குழுவினரின் ஏற்பாட்டில் இந்தச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.


மகிந்த- மைத்திரியை இணைத்து புதிய கூட்டணி! - ஐதேகவை தோற்கடிக்க கூட்டமைப்பையும் பங்காளியாக்க முயற்சி
[Sunday 2018-06-03 18:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைக்கும் என்றும், இந்த கூட்டணியே 2020 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தெரிவு செய்யும் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.


சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம்! Top News
[Sunday 2018-06-03 18:00]

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பிரியதாஸ நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தற்காலிக தேசிய அமைப்பாளராக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் தற்காலிக பொருளாளராக அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.


ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் போரில் வென்றிருப்பார் பிரபாகரன்! - மஹிந்த
[Sunday 2018-06-03 18:00]

போர் நடைபெற்ற காலத்தில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்திருந்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் பிரபாகரன் போரில் வெற்றியைப் பெற்றிருப்பார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


இந்த வருடத்துக்குள் தேர்தல்! - ஜனாதிபதி
[Sunday 2018-06-03 18:00]

இந்த வருடத்துக்குள் அனைத்து மாகாண சபைகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.


புலிகளின் 1500 கோடி ரூபா சொத்துக்கள் அரசுடைமையாம்!
[Sunday 2018-06-03 18:00]

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 1500 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகில் காணப்பட்ட காணி, வெள்ளவத்தையிலுள்ள சுகபோக வீட்டுத் தொகுதி, கொழும்பு ஜம்பட்டா வீதியிலுள்ள நவீன அச்சகம், கருவாத்தோட்டத்திலுள்ள காணி, பல படகுகள் உட்பட வங்கிக் கணக்குகளும் இதில் அடங்குவதாக கூறப்படுகிறது.


இலங்கைக் கடற்படைக்கு முதல் தடவையாக கிடைத்துள்ள வாய்ப்பு!
[Sunday 2018-06-03 18:00]

இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள உலகின் பாரிய கடற்படை பயிற்சியில் முதல் தடவையாக இலங்கையும் பங்கேற்கவுள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 2ஆம் திகதி வரை இந்த பயிற்சி, ஹவாய் தீவுகள் மற்றும் தென் கலிபோர்னியா ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.


வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு ஊர் திரும்பியவர் விபத்தில் பலி!
[Sunday 2018-06-03 18:00]

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.


வீசா இன்றி 42 நாடுகளுக்கு செல்லக் கூடிய இலங்கை கடவுச்சீட்டு! - சர்வதேச தரப்படுத்தலில் 93 ஆவது இடம்
[Sunday 2018-06-03 18:00]

உலகளவில் பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலை Henley Passport Index நிறுவனம் வெளியிட்டுள்ளது. வீசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டை கொண்ட நாடாக ஜப்பான் முன்னிலை பெற்றுள்ளது. இதைப் பயன்படுத்தி 189 நாடுகளுக்கு வீசா இல்லாமல் சென்று வரலாம்.


விமானத்தில் வெளிநாட்டுப் பெண்ணுடன் தவறாக நடந்த இளைஞன் கட்டுநாயக்கவில் கைது!
[Sunday 2018-06-03 18:00]

விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, பிரித்தானிய பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லைகளை கொடுத்த இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். டோஹா கட்டாரிலிருந்து கட்டுநாயக்க நோக்கி வந்த விமானத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞனே கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஜித்தாவில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி Top News
[Sunday 2018-06-03 18:00]

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), ஜித்தா மண்டலத்தின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் (01-06-2018) வெள்ளிக்கிழமையன்று இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


நீதித்துறை உயர்மட்டத்தினால் காப்பாற்றப்படும் கோத்தா?
[Sunday 2018-06-03 08:00]

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவதில் இருந்து நீதித்துறையின் உயர்மட்டத்தினால் காப்பாற்றப்படுவதாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மிக் போர் விமானக் கொள்வனவு மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தம்மைக் கைது செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்குத் தடை விதிக்குமாறும் கோரி, சிறிலங்காவின் உச்சநீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்திருந்தார்.


வடக்கில் இராணுவப் பின்னணியுடன் அடாவடித்தனங்களில் ஈடுபட்டுள்ள லீசிங் நிறுவனங்கள்!
[Sunday 2018-06-03 08:00]

வவுனியாவில் லீசிங் நிறுவன ஊழியர்களால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் முறைப்பாட்டினை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறும், தவறினால் உங்களை 4ஆம் மாடிக்கு கொண்டு சென்று விசாரிப்போம் என்றும் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று!
[Sunday 2018-06-03 08:00]

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் முக்கியமான கட்டமைப்புகளான- மத்திய குழு, நிறைவேற்றுக் குழு மற்றும் தேசிய மட்டக் குழுக்களின் முக்கியமான கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வவுனியாவில் நேற்றிரவு வாள்வெட்டில் இளைஞன் படுகாயம்- 7 இலட்சம் ரூபா கொள்ளை! Top News
[Sunday 2018-06-03 08:00]

வவுனியா - கூமாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் வீடொன்றில் நேற்று இரவு நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூமாங்குளம் பிள்ளையார் வீதியுள்ள வீடொன்றுக்கு பட்டா வாகனத்தில் வந்த 15க்கும் மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள், வீட்டு வளாகத்திற்குள் சென்று அங்கு நின்ற இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டனர்.


பிரபாகரனின் பண்பும், பெருந்தன்மையும் எந்த தலைவர்களுக்கும் இல்லை! - ஆனந்தசங்கரி புகழாரம்
[Sunday 2018-06-03 08:00]

விடுதலைப் புலிகளின் தலைவர் தம்பி பிரபாகரனுக்கு இருக்கும் பண்பு இன்றைய தலைவர்கள் எவருக்கும் இல்லை என்று தெரிவித்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத் தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் சாவகச்சேரியில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா