Untitled Document
May 15, 2024 [GMT]
விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட முன்னாள் எம்.பி உடுவே தம்மாலோக தேரர்!
[Thursday 2018-07-26 19:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்வதற்காக விமானத்தில் ஏறிய ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான, உடுவே தம்மாலோக தேரர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார். வெளிநாடு செல்வதற்கு நீதிமன்ற தீர்ப்பில் வழங்கப்பட்ட திகதி பற்றிய சர்ச்சை காரணமாகவே அவர் இவ்வாறு விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார்.


வடக்கு, கிழக்கில் உள்ளிட்ட 7 மாகாணசபைளுக்கு ஜனவரியில் தேர்தல்!
[Thursday 2018-07-26 19:00]

வடக்கு,கிழக்கு உள்ளிட்ட 7 மாகாண சபைகளுக்கான தேர்தலை ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்லுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்தும், அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.


ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை! - என்கிறார் சரத் என் சில்வா
[Thursday 2018-07-26 19:00]

மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த திகதியை தீர்மானிப்பது மற்றும் தண்டனையை எதிர்நோக்கும் கைதிகளை பெயரிடுவது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதிகாரத்தை, ஏதேனும் ஒரு குழுவுக்கு வழங்க முடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.


நான் பட்ட வலியை இன்று உணர்ந்திருப்பார் அனந்தி! - தருணம் பார்த்து போட்டுத் தாக்கிய சத்தியலிங்கம்
[Thursday 2018-07-26 19:00]

தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்துவதற்கு காரணமாக இருந்த அமைச்சர் அனந்தி, அவர் மீது இன்று குற்றச்சாட்டு சுமத்தப்படும் போது தான் பட்ட வலியை உணர்ந்திருப்பார், என வட மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.


பொதுவேட்பாளரை ஆதரிக்கமாட்டேன்! - என்கிறார் சரத் பொன்சேகா
[Thursday 2018-07-26 19:00]

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். குமார் சங்கக்கார அடுத்த தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு வழங்குவீர்களா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கோத்தா கொலை முயற்சிக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட குருக்கள் விடுதலை!
[Thursday 2018-07-26 19:00]

கொள்ளுப்பிட்டி, பித்தல சந்தியில் கடந்த 2006 ஆம் ஆண்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த சர்மா எனப்படும், ஸ்ரீஸ்கந்தராஜா குருக்களை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முற்றாக விடுதலை செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.


கைது செய்யப்படமாட்டார் விஜயகலா! - என்கிறார் கம்மன்பில
[Thursday 2018-07-26 19:00]

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை அரசாங்கம் ஒரு போதும் கைது செய்யப் போவதில்லை என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபருக்கு ரீட் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி நீதிமன்றத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஒற்யைாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்க முனைகிறது கூட்டமைப்பு! - என்கிறார் கஜேந்திரகுமார்
[Thursday 2018-07-26 07:00]

ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குவதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரலில் மீண்டும் கொண்டு வரவுள்ள அரசியலமைப்பை நிராகரிக்க தமிழ் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சீனா - இந்தியா இராஜதந்திர இழுபறி - வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதில் சிக்கல்!
[Thursday 2018-07-26 07:00]

வடக்கில் போரினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத்திட்டம் தொடர்பாக, எழுந்துள்ள பிரச்சினைக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்வு காணுவார் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, தெரிவித்துள்ளார்.


ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை! - மகிந்த சமரசிங்க
[Thursday 2018-07-26 07:00]

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ராட் ஹுசைன் சொல்வதையெல்லாம் கேட்டு செயற்பட வேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாது. இலங்கைக்கு யாரும் கட்டளையிட முடியாது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு கட்டிலில் வாழ்வைக் கழித்த எழுத்தாளர் இர்பான் ஹாபிஸ் காலமானார்! Top News
[Thursday 2018-07-26 07:00]

பிர


சிறையில் மோசமாக நடத்தப்பட்டதாக மாற்றுத் திறனாளியான முன்னாள் போராளி முறைப்பாடு!
[Thursday 2018-07-26 07:00]

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தான் மோசமாக நடத்தப்பட்டதாகக் கூறி, முன்னாள் போராளியான, மாற்றுத்திறனாளி கைதியொருவர், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். நீதிமன்றின் விளக்கமறியல் உத்தரவுக்கமைய, யாழ். சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி​யே, யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளிநொச்சி அலுவலகத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.


மத்தலவை இந்தியாவுக்கு கொடுப்பதால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து! - ஜேவிபி எச்சரிக்கை
[Thursday 2018-07-26 07:00]
மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக அமையும் என்று ஜே.வி.பியின் ஊடகப்பேச்சாளரும் எம்.பியுமான, விஜித ஹேரத், எச்சரித்துள்ளார். ​ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடக ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுத்த சரத் பொன்சேகாவைக் கண்டிக்கிறது சர்வதேச அமைப்பு!
[Thursday 2018-07-26 07:00]

பாதாள உலகக் கோஷ்டியுடன் தொடர்புடைய அமைச்சர் எனக் குற்றஞ்சாட்டி, அமைச்சர் சரத் பொன்சேகா தொடர்பில் இலங்கைத் தனியார் வானொலி ஒன்று செய்தி ஒலிபரப்பாக்கியிருந்தது. குறித்த செய்தியை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டுமென, வானொலியின் ஆசிரிய பீடத்துக்கு, அமைச்சர் பொன்சேகா அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக, ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.


இராணுவ வாகனத்துடன் ஓட்டோ மோதி விபத்தில் காயமுற்றவர் மரணம்!
[Thursday 2018-07-26 07:00]

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ வாகனத்துடன் ஓட்டோ மோதியதில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பயனின்றி மரணமானார். கடந்த திங்கட்கிழமை இரவு கொடிகாமம் பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படையினரின் வாகனத்துடன் 3 பயணிகளுடன் வந்த ஓட்டோ மோதியது.


செட்டிக்குளத்தில் யானை தாக்கி ஒருவர் படுகாயம்!
[Thursday 2018-07-26 07:00]

வவுனியா செட்டிக்குளம் - சண்முகபுரத்தில் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 70 வயதான சுப்பையா பொன்னையா என்பவர் தனது வீட்டு காணிக்குள் சத்தம் ஏதோ கேட்பதை உணர்ந்து வீட்டிற்கு வெளியே சென்ற சமயத்தில் காட்டு யானையின் தாக்குலுக்கு உள்ளாகியுள்ளார். அவரின் சத்தம் கேட்ட அயலவர்கள் அவரை மீட்டெடுத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


ஜனாதிபதி தேர்தல் களத்தில் சங்கக்கார? - ஆதரவு வழங்கும் அமைச்சர்!
[Wednesday 2018-07-25 18:00]

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார அரசியலுக்கு வந்தால், அவருக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், சங்கக்கார எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் முன்னணியின் கீழ் போட்டியிடுவாரா? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.


41 ஆவது நாளாக தொடர்ந்த மன்னார் புதைகுழி அகழ்வுப் பணி!
[Wednesday 2018-07-25 18:00]

மன்னார் 'சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழியைத் தோண்டும் பணி இன்று 41 ஆவது நாளாக இடம்பெற்றது. மன்னார் நீதவான் ரீ.ஜே.பிரபாகரன் முன்னிலையில்,விசேட சட்ட வைத்திய நிபுனர் தலைமையில் குறித்த பணி இடம் பெற்றது.


வட மாகாணசபைத் தேர்தலை பிற்போடும் துணிச்சல் அரசுக்கு இல்லை! - எஸ்.எம்.சந்திரசேன
[Wednesday 2018-07-25 18:00]

ஏனைய மாகாண சபைகளின் தேர்தலை பிற்போடுவது போன்று, வடக்கு மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் துணிச்சல் அரசாங்கத்துக்கு இல்லை என கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.


எந்தச் சலுகை பறிபோனாலும் தூக்கில் போடுவது உறுதி! - ராஜித சேனாரத்ன
[Wednesday 2018-07-25 18:00]

எந்த தடை ஏற்பட்டாலும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக இணை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


எமது மக்களை நாமே வாழவைப்போம்- பேர்லின் அம்மா உணவு விநியோகத்தின் வாழ்வாதார உதவிகள்! Top News
[Wednesday 2018-07-25 18:00]

பேர்லின் அம்மா உணவு விநியோகம் கடந்த 5 ஆண்டுகளாக தாயக மக்களுக்கு தமது தொடர்ச்சியான உதவிகளை செய்துவருகின்றதை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்டும் வகையில் இவ் வாரம் மட்டக்களப்பில் 100 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் மாணவர்களுக்கான உதவிக் கருத்தரங்குக்கான அனுசரணையை அம்மா உணவு விநியோகம் முன்னெடுத்திருந்தது.


வடக்கில் மீன் உற்பத்திக்கான கைத்தொழிற் பேட்டை! - இந்திய முதலீட்டாளர்கள் திட்டம்
[Wednesday 2018-07-25 18:00]

வட மாகாணத்தில் ஏற்றுமதிக்கான மற்றுமொரு மீன் உற்பத்தி தொழில் பேட்டை அமைக்கப்படவுள்ளது. இதற்காக கடற்தொழில் நீர்வள அபிவிருத்தி கிராமிய பொருளாதார தொடர்பான இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி இந்திய முதலீட்டாளர்களுடன் பேச்சு நடத்தி வருகிறார். குறிப்பிட்ட முதலீட்டாளர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சருக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தை தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையில் நடைபெற்றுள்ளது.


சாவகச்சேரிப் பகுதியில் 3 பேரை வாளால் வெட்டி விட்டு வீடுகளில் கொள்ளை!
[Wednesday 2018-07-25 18:00]

சாவகச்சேரியில் நேற்றிரவு மூன்று வீடுகளுக்குள் உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்தவர்களைத் தாக்கி காயப்படுத்தியதுடன் பெண்கள், குழந்தைகள் அணிந்திருந்த தங்க நகைகளை அபகரித்துச் சென்றனர். சாவகச்சேரி சங்கத்தானை, சாவகச்சேரி வடக்கு, மீசாலை மேற்கு கேணியடி ஒழுங்கை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தவர்கள் அங்கிருந்தவர்களை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு நகைகளைக் கொள்ளையிட்டுள்ளனர்.


மஹேந்திரனை அழைத்து வந்தால் நானும் விளக்கமளிப்பேன்! - அடம்பிடிக்கும் மஹிந்த
[Wednesday 2018-07-25 18:00]

மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான சுத்திரதாரி அர்ஜுன மஹேந்திரனை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தால், நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான, குற்றச்சாட்டுக்கு தான் விளக்கமளிக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


தேர்தல் முறை குறித்து நாளைய கூட்டத்தில் முடிவு!
[Wednesday 2018-07-25 18:00]

மாகாண சபை தேர்தலை பழைய முறைமையில் நடத்துவதா அல்லது புதிய முறைமையின் கீழ் நடத்துவதா என்பது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.


4000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி!
[Wednesday 2018-07-25 18:00]

4,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த நேர்முகத் தேர்வில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட 4,000 பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா!
[Wednesday 2018-07-25 18:00]

வரலாற்றுப் புகழ் பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா அடுத்தமாதம் 11ஆம் திகதி ( 11/08/2018) செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 15 தினங்கள் திருவிழா நடைபெறும். 25/08/2018 சனிக்கிழமை தேர் திருவிழாவும் 26/08/2018 ஞாயிற்றுக்கிழமை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


புதுக்குடியிருப்பு நோக்கி சென்ற பஸ் விபத்து - 19 பேர் படுகாயம்! Top News
[Wednesday 2018-07-25 07:00]

கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், வவுனியா - பூனாவை பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் 19 பேர் படுகாயமடைந்தனர்.

Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா