Untitled Document
September 21, 2024 [GMT]
உங்களுக்காக உழைக்க மீண்டும் எனக்கு வாய்ப்பு தாருங்கள்: - ஜெயலலிதா
[Saturday 2016-05-07 10:00]

சட்டப் பேரவைத் தேர்தலில், அதர்மமும், சந்தர்ப்பவாதமும், நாடகமும் தோற்க வேண்டும் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கூறினார்.ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் அவர், காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, கொடுங்கையூர் எழில் நகர் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியது:2015ஆம் ஆண்டு தேர்தலில் மகத்தான வெற்றி பெறச் செய்தீர்கள். இந்தத் தொகுதி மக்கள் எனது நெஞ்சில் நீங்காத இடம்பெற்றுள்ளீர்கள். இப்போதைய தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறேன். கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் பெருமழை கடந்த ஆண்டு கொட்டித் தீர்த்தது. சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது.


கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தமிழகத்துக்கு கருணாநிதி செய்த இரண்டாவது துரோகம்: - ராமதாஸ்
[Saturday 2016-05-07 09:00]

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தமிழகத்துக்கு கருணாநிதி செய்த இரண்டாவது துரோகம் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.அரியலூர் மாவட்டம், செந்துறையில் குன்னம் தொகுதி பாமக வேட்பாளர் வைத்திலிங்கம், பெரம்பலூர் தொகுதியில் சத்தியசீலன், ஜயங்கொண்டம் தொகுதியில் குரு, அரியலூர் தொகுதியில் போட்டியிடும் க.திருமாவளவன் ஆகியோரை ஆதரித்து வியாழக்கிழமை இரவு அவர் மேலும் பேசியதாவது:தமிழ்நாடு முழுவதும் அன்புமணி அலை வீசி வருகிறது. அந்த அரசியல் சூறாவளியில் அதிமுக, திமுக இரண்டும் காணாமல் போய்விடும். 20 சதவீத நடுநிலை வாக்காளர்கள் அன்புமணிக்கு வாக்களிக்க முடிவெடுத்துள்ளனர். இதேபோல 25% பெண்களும் சாரயத்தை ஒழிப்பேன் எனக் கூறி வரும் அன்புமணிக்குதான் வாக்களிப்போம் என்று கூறுகின்றனர். ஊடகங்களும் வேறு வழியில்லாமல் அன்புமணிதான் அடுத்த முதல்வர் என கூறுகின்றனர்.


மக்கள் நலக் கூட்டணி மூலம் தமிழகத்தில் சிறப்பான மாற்றம் உருவாகும்: - பிருந்தா காரத்
[Saturday 2016-05-07 09:00]

திராவிடக் கட்சிகள் மத்திய அரசுகளுடன் மறைமுக கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்படுவதால் தமிழக மக்கள் பிரச்னைகளுக்கு திராவிடக் கட்சிகளால் தீர்வு கிடைக்காது என்றார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத்.நாகையில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் சுமார் 83 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்து, பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு வேலை வழங்க எவ்வித முகாந்திரமும் இல்லை.


இலங்கைத் தமிழர்களின் நலனைக் காக்க யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான்: - பிரதமர் நரேந்திர மோடி
[Friday 2016-05-06 20:00]

சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:-சென்னையில் வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது விரைந்து வந்து உதவிகள் செய்தேன். இலங்கைத் தமிழர்களின் நலனைக் காக்க யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான். இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழர்களைக் காப்பாற்றினேன். இலங்கை அரசுடன் நல்லுறவை ஏற்படுத்தி தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது. தலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழக பாதிரியாரை மத்திய அரசு மீட்டது. இந்தியர்களின் கடுமையான உழைப்பால் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போதும் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. 2ஜி, 3ஜி என பல்வேறு ஊழல்களை செய்தது முந்தைய அரசாங்கம். காற்றில் இருந்துகூட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொள்ளையடித்தது. இப்போது 2ஜி, 3ஜி ஏலத்தால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இப்போது இளைஞர்களின் எதிர்காலம் இரண்டு கட்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் எதிர்காலம் என்னவாக இருக்க வேண்டும் என்பதே தற்போதைய பிரச்சனை ஆகும். தமிழக மக்கள் மோசமான அரசுகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல அரசுக்கும் மோசமான அரசுக்கும் மக்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. பா.ஜனதா அரசு அமைந்தால் மட்டுமே நல்ல அரசை தெரிந்துகொள்ள முடியும். எனவே, எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


மத்திய அரசுக்கு எதிராக பேரணி - மன்மோகன் சிங் , சோனியா , ராகுல் காந்தி கைது.!!
[Friday 2016-05-06 17:00]

மத்திய அரசுக்கு எதிராக பேரணியாக சென்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரை பொலிசார் கைது செய்துள்ளனர். இன்று காலை ஜந்தர் மந்தர் பகுதியில் ஜனநாயகத்தை காப்போம் என்ற முழக்கத்துடன் காங்கிரஸ் கட்சியின் பேரணி நடத்தினர். பேரணியின் முடிவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சோனியா காந்தி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி அரசு எடுக்கும் நடவடிக்கைகள் நாட்டை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.


இளம்பெண்ணின் ஆடையை கழற்ற வைத்த பாஜக எம்.பி!
[Friday 2016-05-06 17:00]

உத்தர பிரதேச மாநிலம் உன்னோவ் தொகுதியில் பாஜக எம்.பி.யான சாக்‌ஷி மகராஜ் சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர்போனவர். தற்போது போலீசார் அடக்குமுறையால் காயமடைந்த இளம் பெண்ணிடம் விசாரித்து ஆறுதல் கூறியபோது, அவரது ஜீன்ஸ் பேண்டை இறக்கி காயங்களை காட்டுமாறு கூறி உள்ளார். தற்போது இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கபட்டு சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் வார்த்தை இனிக்கிறது வாழ்க்கை இனிக்கவில்லை: - சீமான்
[Friday 2016-05-06 15:00]

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வார்த்தை இனிக்கிறது, வாழ்க்கை இனிக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லை கைப்பேசி. பொங்கலுக்கு கோ-ஆப்டெக்ஸில் இருந்து துணிகள் வாங்கிக் கொள்ள ரூ.500-க்கான வெகுமதி கூப்பன். மானம் காக்க துணிக்கூட வாங்கிக்கட்ட அருகதை இல்லாதவர்களாக மக்களை மாற்றி வருகிறது இலவசம்.கைப்பேசி வாங்கி, அம்மா ஜெயலலிதாவோட நேரடியாக பேசுகிறதா. யாருக்கு பேசுறது. யார் கேட்டது கைப்பேசி. மிக்ஸி. கிரைண்டர், துணிகள் வாங்க ரூ.500. யார் இதையெல்லாம் கேட்டு போராடியது.


பருவ மழை நன்றாகப் பெய்தால் பொருளாதார வளர்ச்சி மேலும் சிறப்பாக இருக்கும்: - மத்திய நிதியமைச்சர்
[Friday 2016-05-06 15:00]

இந்தியப் பொருளாதாரம் இப்போது சிறப்பாக உள்ளது; எனினும் இந்த ஆண்டு பருவ மழை நன்றாகப் பெய்தால் பொருளாதார வளர்ச்சி மேலும் சிறப்பாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.மக்களவையில் நேற்று நிதி மசோதாவில் சில திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அருண் ஜேட்லி கூறியதாவது: இந்தியப் பொருளாதார வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. எனினும், இந்த ஆண்டு பருவ மழை நன்றாகப் பெய்தால் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகமெடுக்கும். விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி விதிக்கும் யோசனை அரசுக்கு இல்லை. விவசாயத்தின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.


இனி எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன்: - வைகோ அதிரடி அறிவிப்பு
[Friday 2016-05-06 15:00]

இனி வாழ்நாளில் எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன் என்று வைகோ கூறினார்.ஆயிரம் விளக்கு தொகுதி மதிமுக வேட்பாளர் சி.அம்பிகாபதியை ஆதரித்து, மாதிரி பள்ளி பகுதியில் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது, பிரசார பேச்சை வைகோ நிறைவு செய்தபோது மதிமுக தொண்டர் ஒருவர், ""நீங்கள் முதல்வராகத் தேர்தலில் போட்டியிட வேண்டியது தானே'' என்று கேட்டார். அதற்கு, வைகோ அளித்த பதில்: ""அண்ணாவின் கொள்கைகளுக்காக, சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வதற்காக, மதுக் கடைகளை-ஊழலை ஒழிக்க, தமிழக மக்களைக் காக்க வாழ்கிறேன். எனக்கென சுயநலம் இல்லை. நாடு கெட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காக பேசுகிறேன். இனி என் வாழ்க்கையில் எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன்'' என்றார்.


வருமான வரித்துறையில் வேலை செய்யாமல் ஓபி அடித்த 33 பேருக்கு கட்டாய ஓய்வு!
[Friday 2016-05-06 08:00]

வருமான வரித்துறையில் சரியாக பணி செய்யாமல் ஓபி அடித்த 33 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பல அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய வருமான வரித்துறையில் பல அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பிரதமர் அலுவலகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டே உள்ளன. இந்நிலையில் அனைத்து மத்திய அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பணியில் செயல்படாமல் இருக்கும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்யுமாறும் பிரதமர் மோடி உத்தரவிட்டார்.


தோல்வி பயம் காரணமாகவே ஜெயலலிதா இலவச அறிவிப்பு: ராமதாஸ் அறிக்கை
[Friday 2016-05-06 08:00]

தோல்வி பயம் காரணமாகவே இலவச அறிவிப்புகளையும், வெற்றுத் திட்டங்களையும் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் நம்பி ஏமாந்த காலம் முடிந்து விட்டது. இத்தேர்தலில் பா.ம.க.விடம் ஜெயலலிதா வீழ்ச்சியடைவது உறுதியாகி விட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை..


நிழல் உலக தாதாவின் சொத்துக்களை முடக்க கோரி 6 நாடுகளுக்கு மத்திய அரசு கடிதம்!
[Friday 2016-05-06 08:00]

நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் சொத்துக்களை முடக்க வேண்டும் என கோரி 6 நாடுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள் நடத்திய தாவூத் இப்ராஹிமின் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் வெளிநாடுகளில் உள்ள அவனத சொத்துக்களை முடக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அமலாக்கத் துறை 6 நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சட்டமன்ற இறுதிக்கட்ட வாக்குப்பதிவு: - 103 வயதிலும் கடமையை நிறைவேற்றிய வாக்காளர்
[Friday 2016-05-06 08:00]

மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு 5வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கூச்பிகார் மாவட்டத்தில் தின்ஹட்டா கிராமத்தில் 103 வயது முதியவர் ஒருவர் வாக்களித்தார். அஸ்கர் அலி என்ற அந்த முதியவரை கிராமத்தவர்கள் சிலர் கைத்தாங்கலாக வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்தனர். வாக்களித்தபின் மையிடப்பட்ட விரலை உயர்த்திக் காட்டி ஜனநாயக கடமை ஆற்றிய மகிழ்ச்சியை சக வாக்காளர்களிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.


உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு: - 46 பேருக்கு சிகிச்சை
[Thursday 2016-05-05 18:00]

உத்தர பிரதேச மாநிலம் மதுரா கன்சி ராம் காலனியில் உள்ள குழந்தைகளுக்கான ஜூனியர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று மதியம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் பால் வழங்கப்பட்டுள்ளது. வீடு திரும்பியதும் இந்த குழந்தைகளில் பலருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஏசான் (5), கீர்த்தி (4) ஆகிய இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 46 பேர் மருத்துமவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


சோனியா காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் அமைப்பினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்!
[Thursday 2016-05-05 17:00]

சட்டப்பேரவையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. திமுக தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சென்னை தீவுத் திடலில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். அதற்காக சோனியா காந்தி விமானம் மூலம் இன்று மாலை 3 மணியளவில் சென்னை வந்தடைந்தார். பொதுக் கூட்டம் 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில், சோனியா காந்தியின் வருகையை கண்டித்து தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரீனா கடற்கரை சாலையில் உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இயக்குநர் கவுதமன் தலைமையில் மாணவர்கள் பவர் கலந்து கொண்டனர்.


சென்னை மதுரவாயல் பகுதியில் மதுவுக்கு எதிராகப் போராடிய பெண்கள் மீது போலீஸின் கொடூரத் தாக்குதல்!
[Thursday 2016-05-05 17:00]

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மாநிலம் முழுக்க பல்வேறு இடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதில் சென்னை மதுரவாயல் பகுதியில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது போலீசார் கொடூரமாகத் தடியடி நடத்தியதில் பெண்களின் மண்டை உடைந்து படுகாயம் அடைந்தனர்.மேலும் பலர் மீது போலீசார் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டதால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.மக்கள் அதிகாரம் அமைப்பினர் பல்வேறுக் கட்டங்களாக மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று மதுரவாயலில் உள்ள மதுக்கடைக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை அவர்கள் நடத்தினர். மதுக்கடைக்குப் பூட்டு போட அவர்கள் முயன்றபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டார்கள்.


கேரளாவில் இளம் பெண் மீது வீடு புகுந்து கொரூர கற்பழிப்பு! Top News
[Thursday 2016-05-05 08:00]

கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்து கிடந்த சம்பவம் 6 நாட்களுக்கு பிறகு தான் தெரியவந்துள்ளது. கேரள மாநிலம், பெரும்பாவூர் வட்டோலிப்பிடி கால்வாய் அருகே இருக்கும் தனது வீட்டில் இருந்த 30 வயது சட்டக்கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு, குடல்கள் வெளியே சரிந்து இறந்து கிடந்துள்ளதை பொலிசார் கண்டறிந்துள்ளனர். இந்த பலாத்கார சம்பவம் கடந்த 2012ம் ஆண்டு தலைநகர் டெல்லியில், ஓடும் பேருந்தில்


பத்து ஆண்டுகளுக்கு பிறகு வானில் சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு!
[Thursday 2016-05-05 08:00]

10 ஆண்டுகளுக்கு பிறகு சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு 9-ந்தேதி நடக்கிறது. இதனை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது.புதன்கோள் சூரியனின் முன் நகரும் அரிய நிகழ்வு வருகிற 9-ந்தேதி நடக்கிறது. இதனை அன்றைய தினம் மாலை 4.15 முதல் மாலை 6.20 வரை வானில் பார்க்கலாம். புதன் கோளின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளிக்கும்.இதை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது. இந்த நிகழ்வை பார்ப்பதற்காக சென்னை பிர்லா கோளரங்கில் 4 தொலைநோக்கி கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.புதன்கோள் சூரியனை கடக்கும் நிகழ்வை வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் காணலாம். இந்தியாவில் சூரியன் மறையும்போது இந்த நிகழ்வை காணமுடியும்.


செல்போன் கதிர்வீச்சால் மனிதர்களுக்கோ, பறவைகளுக்கோ தீங்கு ஏற்படுவதாக கண்டறியப்படவில்லை: - ரவிசங்கர் பிரசாத்
[Thursday 2016-05-05 08:00]

பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது, செல்போன் மற்றும் செல்போன் கோபுர கதிர்வீச்சால் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் தீங்கு ஏற்படுவதாக கூறப்படுவது குறித்து எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பினார்.இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவிசங்கர் பிரசாத், பதில் அளித்து கூறியதாவது:-இதுவரை நடத்திய ஆய்வுகள் அத்தனையிலும், செல்போன் மற்றும் செல்போன் கோபுர கதிர்வீச்சால் மனிதர்களுக்கோ, பறவைகளுக்கோ தீங்கு ஏற்படுவதாக கண்டறியப்படவில்லை. இது பற்றி உலக சுகாதார நிறுவனம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திய ஆய்வில் கூட செல்போன் கதிர்வீச்சால் உடல் நலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுவதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது என்றே தெரிய வந்துஇருப்பதாக தெளிவுபடுத்தி இருக்கிறது.


பச்சோந்தியை போல் தன் நிலையை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் மோடி அரசு: - சிவசேனை கடுமையாக சாடல்
[Thursday 2016-05-05 08:00]

காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக மோடி அரசு, பச்சோந்தியை போல் தன் நிலையை அடிக்கடி மாற்றிக் கொள்வதாக சிவசேனை கடுமையாக சாடியுள்ளது.இதுதொடர்பாக, சிவசேனையின் அதிகாரப்பூர்வ நாளேடான "சாம்னா'வில் இடம்பெற்ற தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:"காஷ்மீர் பிரச்னை தவிர்த்து பாகிஸ்தானுடன் அனைத்து விவகாரங்களையும் விவாதிக்கத் தயார்' என்று மோடி அரசு கூறிவந்தது.இந்நிலையில், "காஷ்மீர் பிரிவினைவாதிகளும் இந்திய குடிமகன்களே. எனவே காஷ்மீர் விவகாரத்தில் அவர்கள் எந்த நாட்டுப் பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை' என்று கூறியுள்ளது.


தண்ணீர்ப் பஞ்சம் நிலவுவதால் தங்கள் பெண்களை திருமணம் செய்து கொடுக்க பெற்றோர் மறுப்பு: - மக்களவையில் விசித்திரம்
[Thursday 2016-05-05 08:00]

ஒடிஸா மாநிலத்தில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவுவதால் 8 கிராமங்களில் தங்கள் பெண்களை திருமணம் செய்து கொடுக்க பெற்றோர் மறுக்கின்றனர் என்று மக்களவையில் விசித்திரமான தகவல் தெரிவிக்கப்பட்டது.ஒடிஸாவின் பாலாசோர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ரவீந்திர ஜேனா (பிஜு ஜனதா தளம்) புதன்கிழமை தண்ணீர் தட்டுப்பாடு விவகாரத்தை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:ஒடிஸா மாநிலத்தில் வறட்சியால், நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. 1,000 அடி ஆழத்தில்கூட தண்ணீரைப் பார்க்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், 8 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பெரியோர்கள் என்னைச் சந்தித்து, "எங்கள் கிராமங்களில் தண்ணீர்ப் பஞ்சம் உள்ளதால், மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எங்கள் கிராமங்களில் உள்ளவர்களுக்கு தங்கள் பெண்களை திருமணம் செய்து வைக்க மறுக்கின்றனர்' என்று வருத்தம் தெரிவித்தனர்.


கோடிக்கணக்கில் செலவு செய்து என்னை வீழ்த்த எதிர்கட்சிகள் திட்டம்: - திருமாவளவன்
[Wednesday 2016-05-04 21:00]

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.இன்று காலை ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் உள்ள ஆனந்தகுடி பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:


அதிமுக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவசப் பொருள்கள் வழங்கப்படும்: - நிர்மலா பெரியசாமி
[Wednesday 2016-05-04 19:00]

அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒரு லட்சம் மதிப்பிலான இலவசப் பொருள்கள் வழங்கப்படும் என அதிமுகவைச் சேர்ந்த நிர்மலா பெரியசாமி பேசியுள்ளது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் மே மாதம் 16 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தல் களத்தில் இருக்கும் திமுக, காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, தமாகா, பாஜக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன. ஆனால், தமிழகத்தை ஆளும் அதிமுக இன்னும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை.


தேர்தலில் மாற்றத்தை கொண்டு வராவிட்டால் எதிர்காலத்தில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பே இல்லை: - வைகோ
[Wednesday 2016-05-04 15:00]

மாற்றத்தை கொண்டுவராவிட்டால் எதிர்காலத்தில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பே இல்லை என்று வைகோ தெரிவித்தார். விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை தேமுதிக கூட்டணி வேட்பாளர் எல்.வெங்கடேசனை ஆதரித்து அவர் பேசியது:தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளின் ஊழல்களை அனைத்து தரப்பினரும் பேசி வருகின்றனர்.தமிழகத்தை படுகுழியில் தள்ளியதற்கு மதுக்கடைகள்தான் காரணம். மதுவை கொண்டு வந்தவர் கருணாநிதிதான்.தமிழகத்தில் காமராஜர், ஓமந்தூரார், அண்ணாதுரை போன்றோர் எளிமையான, தூய்மையான ஆட்சியைக் கொடுத்தனர். அதன் பின்பு வந்த ஆட்சியாளர்களின் செயல்பாடுகளால் தமிழகம் படுகுழியில் செல்கிறது.மதிமுக, கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இணைந்து புதிய இயக்கத்தைத் தொடங்கிய போது, இவர்கள் நீடிக்க மாட்டார்கள் என்றனர். விஜயகாந்த் திமுகவிடம் போய்விடுவார் என்றனர்.


தெலுங்கானா மாநிலத்தில் வெயில் கொடுமைக்கு 219 பேர் பலி!
[Wednesday 2016-05-04 08:00]

தெலங்கானா மாநிலத்தில் வெயிலின் கொடுமைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 219-ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தின் சில பகுதிகளில் இன்னமும் வெயிலின் தாக்கம் உள்ளது. வெயிலின் கொடுமைக்கு திங்கள்கிழமை வரை 178 பேர் உயிரிழந்தனர். தற்போது, உயிரிழப்பு 219-ஆக அதிகரித்துள்ளது. இதை 3 பேர் கொண்ட குழு உறுதி செய்துள்ளது. இதில், நல்கொண்டா மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 76 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்ததாக, மெஹபூப்நகரில் 35 பேர் உயிரிழந்தனர்.


இந்தியாவின் மதச் சுதந்திரம் தொடர்பாக ஆய்வு நடத்த அன்னிய நாடுகளுக்கு உரிமை இல்லை: - மத்திய அரசு
[Wednesday 2016-05-04 08:00]

இந்தியாவின் மதச் சுதந்திரம் குறித்து நேர்மறையாக அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா, இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டதாக மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.இந்தியாவில் மதச் சுதந்திரம் குறித்து சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணையம் ஆண்டறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2015-இல் இந்தியாவில் மத ரீதியிலான சகிப்புத்தன்மை மிகவும் மோசமான நிலையில் இருந்தது.சிறுபான்மைப் பிரிவினர்களான கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் மீது வன்முறை, துன்புறுத்தல், அச்சுறுத்தல் ஆகிய எண்ணற்ற சம்பவங்கள் நடந்துள்ளன.


ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல்: - சோனியா லஞ்சம் வாங்கியதாக சுப்பிரமணியன் சுவாமி புகார்
[Wednesday 2016-05-04 08:00]

இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி லஞ்சம் பெற்றிருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார்.இதுதொடர்பாக தில்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி வருமாறு:ரூ.3,600 கோடி மதிப்பிலான அந்த ஒப்பந்தத்தில், சோனியா காந்தியும் லஞ்சம் பெற்றுள்ளார். அவர் பெற்ற லஞ்சப் பணம், இந்தியாவுக்கு வரவில்லை. வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, ஜெனீவா, ஜூரிச்சில் உள்ள 2 வங்கிகளில் அந்தப் பணத்தை சோனியா காந்தி முதலீடு செய்திருக்கிறார் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.


மத்திய அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்: - பிரதமர் மோடி
[Wednesday 2016-05-04 08:00]

மத்திய அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஜனசங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான பல்ராஜ் மதோக்கின் மறைவுக்கு இக்கூட்டத்தில் பாஜக எம்.பி.க்கள் அஞ்சலி செலுத்தினர். அத்வானி, மோடி உள்ளிட்டோர் மறைந்த பல்ராஜ் மதோக்குடன் தாங்கள் நெருங்கிப் பழகிய தருணங்களை நினைவுகூர்ந்தனர்.

Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா