Untitled Document
May 1, 2024 [GMT]
எப்போதும் படித்து கொண்டிருப்பவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்: - ஆய்வில் புதிய தகவல்
[Monday 2016-08-08 18:00]

சிலர் எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தையோ அல்லது செய்தி தாள்களையோ வாசித்துக் கொண்டிருப்பர். அவ்வாறு இருப்பவர்களை புத்தகப் புழு என்று அழைப்பார்கள். அவ்வாறு இருப்பவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.சமீபத்தில் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் இந்த ஆய்வு 3 பிரிவுகளில் நடத்தப்பட்டது. அதில் ஒன்று புத்தகத்தையே படிக்காதவர்கள், மற்றொன்று வாரத்தில் 3


கொலஸ்ட்ராலை கரைக்கும் பச்சை பட்டாணி!
[Monday 2016-08-08 07:00]

பச்சை பட்டாணியில் ஹைப்பொநியூடிரிஷியன்ஸ் அதிகம் நிறைந்துள்ளதால் அதன் பலன்கள் ஏராளம். பச்சை பட்டணியில் உள்ள கௌமெஸ்டிரால் எனப்படும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் ஒன்றாகும். பச்சை பட்டாணியின் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். இந்த பச்சை பட்டாணி உடலில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, இதய நோய்களை தடுப்பதே இந்த பச்சை பட்டாணியின் மிக முக்கிய பலனாகும். இதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருட்களும் சிறிதளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.


மதுவை விட மிக ஆபத்தானது பிராய்லர் கோழி ! - அதிர்ச்சி தகவல்
[Monday 2016-08-08 07:00]

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


எடையைக் குறைக்க சமையலுக்கு இந்த எண்ணெய்களை யூஸ் பண்ணுங்க!
[Friday 2016-08-05 19:00]

பொதுவாக எண்ணெய்கள் உடல் எடையை அதிகரிக்கத் தான் உதவும் என்று பலரும் நினைக்கின்றனர். ஏனெனில் எண்ணெய்களில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது என்பதால் தான். ஆனால் சில எண்ணெய்களில் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்ல கொழுப்புக்கள் உள்ளது. மேலும் அந்த எண்ணெய்கள் உடல் எடையை அதிகரிக்காமலும் தடுக்கும்.


கோலா குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் என்ன நடக்கும்..? - ஆய்வு தகவல் இதோ!
[Friday 2016-08-05 19:00]

இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவலாக அனைவராலும் விரும்பி பருகப்படும் குளிர்பானமாக உள்ள கோக்க கோலாவை குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன?

முதல் பத்து நிமிடம்:

நமது இரத்த மண்டலத்தில் பத்து தேக்கரண்டி அளவிலான சர்க்கரை ஒரே நேரத்தில் பாய்கிறது. (இது ஒருநாள் முழுவதும் ஒரு மனிதர் உட்கொள்ளக் கூடிய அதிகபட்ச சர்க்கரையின் அளவாகும்) இதன்விளைவாக, உங்களுக்கு வாந்தி வரக்கூடும்.


பூமியைப் போல உயிர்கள் வாழ தகுதியுள்ளா 20 புதிய கிரகங்கள்! - நாசா தெரிவிப்பு
[Friday 2016-08-05 18:00]

பூமியைப் போலவே உயிர்கள் வாழ தகுதியுள்ளா 20 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா கெப்ளர் தொலைநேக்கி மூலம் பூமியைப் போல வேறு எதும் கிரகங்கள் இருக்கிறதா? என்று ஆராய்ச்சி செய்து வருகிறது. விண்ணில் செலுத்தப்பட்டுள்ள கெப்ளர் தொலைநோக்கி மூலம் இதுவரை 400 புதிய கிரகங்கள் கண்டுப்பிடிக்கப்படுள்ளன.


இடுப்பு கொழுப்பை குறைக்க வீரபத்ராசனம்!
[Friday 2016-08-05 06:00]

வீர என்றால் போர்வீரன் பத்ர என்றால், நல்லவிதமான என்று பொருள். வீரனைப் போன்ற நிலையில் நின்று கொண்டு இந்த ஆசனம் செய்வதால் வீரபத்ராசனம் என்று பெயர் வந்துள்ளது.

செய்முறை :

முதலில் தடாசனத்தில் அதாவது நேராக நில்லுங்கள். சுவாசத்தை ஆழ்ந்து இழுத்து விடவும். பின்னர் இரு கால்களையும் விரித்துக் கொண்டு நிற்கவும். இப்போது வலது பாதத்தை வலது பக்கமாக பார்க்கும்படி திருப்பவும். வலது காலை இப்போது மடக்குங்கள்.


பாகற்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது:
[Thursday 2016-08-04 07:00]

கொடி வகையைச் சேர்ந்த பாகற்காயில் சுவை என்னவோ கசப்பாக இருந்தாலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டின், கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, மினரல்ஸ், பி காம்ளெக்ஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் சிறிதளவு விட்டமின் C போன்ற சத்துகள் நிறைந்துள்ளது.


அலையலையாய் அழகு கூந்தல்! - அது எப்படி ?
[Wednesday 2016-08-03 21:00]

சினிமா நடிகைகள், விளம்பர மாடலிங் போன்றவர்களுக்கு மட்டும் கூந்தல் எப்படி பளபளப்பாக மின்னுகிறது என்பது புரியாத புதிர். சிலர் பணத்தை விரையம் செய்தும், மணிக்கணக்கில் செலவழித்தும், கூந்தலுக்கு உயிரோட்டமே இல்லை என்று குறைகூறுகின்றனர். இதற்கு காரணம் கூந்தலின் ஆரோக்கியம்தான். உங்களுக்கும் பட்டுப்போன்ற ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.


உடற்கழிவுகளை வெளியேற்றும் உடற்பயிற்சி: - படிப்பீர் பயனடைவீர்.
[Wednesday 2016-08-03 19:00]

உடற்பயிற்சி மூலம் வெளியாகும் வியர்வை உடற்கழிவுகளை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றது. உடற்பயிற்சி என்பது உடல் நிலையையும், நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள். நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச் சறுக்கல், மிதிவண்டி ஓட்டுதல், விளையாடுதல், நடனம் ஆடுதல், யோகாசனம் செய்தல், உடலுழைப்பு என எல்லாம் உடற் பயிற்சிகளே. இதய நோய், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற குறைகளை உடற்பயிற்சியினால் கட்டுப்படுத்த இயலும்.


வெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி - பாக்டீரியல்! - நன்மை என்ன?
[Wednesday 2016-08-03 06:00]

உலகம் முழுவதும் சமையலில் பயன்படுத்தும் ஓர் பொதுவான காய்கறி தான் வெங்காயம். இந்த வெங்காயத்தின் சுவை வித்தியாசமாக இருப்பதோடு மட்டுமின்றி, இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் உள்ளடக்கியது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். பொதுவாக வெங்காயத்தைப் பயன்படுத்தும் போது, அதன் தோலை தூக்கி எறிந்து விட்டு, அதனுள் உள்ளதை தான் பயன்படுத்துவோம். இந்த கட்டுரையைப் படித்த பின், இனிமேல் அந்த வெங்காயத்தை தோலை நீங்கள் தூக்கி எறியமாட்டீர்கள். ஏன் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


அதிகமாக பசியெடுத்தால் ஆபத்து!
[Wednesday 2016-08-03 05:00]

அடிக்கடியோ அல்லது அதிகமாகவோ பசியெடுத்தால் ஆபத்து அடிக்கடியோ அல்லது அதிகமாகவோ பசியெடுத்தால் கூட ஆபத்து அதிகமில்லை, பசிக்காக நாம் தேடும் தீர்வே ஆபத்து. பசி எடுத்தால் உடனே நாம் எல்லோரும் என்ன செய்வோம் அப்படியே யோசியுங்கள் பார்ப்போம்நா - கரீகம் என்ற பெயரில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் மிகவும் ஆபத்தை விளைவிக்கின்றது. சுவையைக் கூட்டுவதற்காக உணவுகலான நூடுல்ஸில் மோனோசோடியம் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இதுப்பசியைத் தூண்டிவிடுவதால் கலோரிகளின் அளவு கூடுகின்றது. இவை உடலுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன.


7 நாட்கள் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
[Tuesday 2016-08-02 17:00]

பண்டையக் காலத்தில் இருந்து பூண்டு மற்றும் தேன் ஓர் சிறந்த மருத்துவப் பொருளாக திகழ்ந்து வருகிறது. எகிப்து, இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பல உடல்நலப் பாதிப்புகளுக்கு பூண்டு மற்றும் தேனை மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர். இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிகப்படியாக இவற்றை மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளதாக பல வரலாற்று கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது. அருமருந்தாக திகழும் இந்த இரண்டின் கலவையும் சிறந்த நோய் தீர்க்கும் மருந்து என கூறப்படுகிறது


தாய்மை பற்றி யாரும் அறிந்திராத ரகசியங்கள்!
[Tuesday 2016-08-02 06:00]

பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம். தாய்மை! ஒரு கரு உருவான நிமிடத்தில் இருந்து, குழந்தையைப் பிரசவிக்கும் நிமிடம் வரையிலான காலம் - உண்மையிலேயே ஒரு தாய்க்குக் கிடைக்கும் ஆனந்த அனுபவம். 'கருவுறுதல்' பற்றிப் பலர் சொல்லும் கட்டுக்கதைகளையும், பிரசவம் பற்றிய தவறான கண்ணோட்டங்களையும் உண்மை என நம்பும் பல பெண்கள், மகப்பேறு அனுபவத்தையே கொஞ்சம் திகிலோடுதான் எதிர்கொள்கிறார்கள். 'கருத்தரித்தல்' என்னும் அதிசய நிகழ்வினை, அறிவியல்பூர்வமாக அறிந்துகொள்ள வேண்டும். கரு உருவானதும் அதை எதிர்கொள்ளவும், பாதுகாக்கவும் பெண்களின் கருப்பையும் உடலும் எப்படித் தயாராகிறதோ, அதேபோல மனதளவிலும் தயாராக வேண்டும். நேர்மறை எண்ணங்களும் ஆரோக்கியமான சூழலும் ஊட்டமிக்க உணவுகளும், ஒரு பெண்ணுக்கு பிரசவத்தை இனிய அனுபவமாக மாற்றுகின்றன.


'யாகூ' வீழ்ந்த கதை - ஒரு சோக கதை !
[Saturday 2016-07-30 18:00]

இந்தியாவில் இருக்கும் அனைவரிடமும், ஆதார் கார்டு இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் ஐடி இருக்கும். அவ்வளவு தூரம் கூகுள் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு, ஜிமெயில், கூகுள் மேப்ஸ், ஹேங் அவுட்ஸ் போன்றவற்றின் மூலம் நம்மை ஆட்கொண்டு இருக்கிறது. ஏதேனும் இணையத்தில் தேட வேண்டும் என்றாலும் கூட, 'கூகுள் செய்து பாருங்கள்' என்றுதான் சொல்கிறோம். ஆனால், இவையெல்லாம் ஒரு காலத்தில் யாகூவிற்கு சொந்தமாய் இருந்தன. கிராமங்களில் கேபிள் கனெக்சன் என்பதை எப்படி, தனியார் சேனல் பெயர் சொல்லி அழைக்கிறார்களோ அது போலத்தான் இணையத்தின் முகமாக யாகூ இருந்தது.


வாட்ஸ் ஆப் உரையாடல்களை ஒருபோதும் அழிக்க முடியாது!
[Saturday 2016-07-30 12:00]

பேஸ்புக்கின் வசமுள்ள 'வாட்ஸ் ஆப்' தற்போது அதில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை என்கிரிப்டு செய்து 3-வது நபர் பார்க்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு வசதியை வழங்கி வருகிறது. இந்நிலையில், வாட்ஸ் ஆப் உரையாடல்களை நாம் அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது என ஆப்பிள் இயங்குளத்தின் பிரபல பாதுகாப்பு வல்லுனர் ஜோனதன் செட்சியார்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'வாட்ஸ் ஆப்'-பில் உரையாடல்களை நாம் டெலிட் செய்தாலும், கிளியர் செய்தாலும் அல்லது 'Clear all chats' மூலமாக அழித்தாலும் அந்த உரையாடல்கள் முற்றிலுமாக அழிந்துவிடாது. அதை 3-வது நபரால் கண்காணிக்க இயலும்.


முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தின் மருத்துவ பயன்கள்:
[Saturday 2016-07-30 11:00]

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா, பிரேசில், கென்யா போன்ற நாடுகளில் பெருமளவில் விளையக்கூடியது. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் வெளிறிய வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் பலாச்சுளைகள் காணப்படுகிறது. இப்பழத்தில் விட்டமின் A மற்றும் விட்டமின் C அதிகமாக உள்ளது, மேலும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துகள் உள்ளது. பலாக் கொட்டைகளில் விட்டமின் B-1, விட்டமின் B-2 உள்ளன. மருத்துவ பயன்கள் பலாப்பழம் இரத்த சோகை வராமல் தடுப்பதுடன் உடலில் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய் வராமல் தடுக்க பலாப்பழம் உதவுகிறது.


நாட்டு மருத்துவத்தில் - முகத்துக்கு பொலிவு தரும் ரோஜா!
[Friday 2016-07-29 21:00]

தோலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, சரும பராமரிப்பு குறித்து நலம் தரும் பார்க்கலாம். தோல் நோய்களை போக்குவதில், கஸ்தூரி மஞ்சள் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. இது, தோலுக்கு மென்மையை தருகிறது. தேங்காய் தோலுக்கு நன்மை தருகிறது. சோற்றுக் கற்றாழை, பாதாம் ஆகியவை தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. தோல் ஆரோக்கியமாக இருக்க அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆளிவிதை பொடியுடன் சிறிது கசகசா, தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தோலில் தடவினால் தோல் வறண்டு போகாமல் ஆரோக்கியமாக இருக்கும். சருமம் பளபளப்பாக இருக்கும்.


7.7 லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சியை அளித்தது 'மைக்ரோசாப்ட்'
[Friday 2016-07-29 21:00]

'மைக்ரோசாப்ட்' 7.7 லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சியை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. உலகின் மாபெரும் மென்பொருள் நிறுவனமான 'மைக்ரோசாப்ட்' கடந்த 2003-ம் ஆண்டில் துவங்கப்பட்ட 'சிக்சா' திட்டத்தின் கீழ் இதுவரை 12 மாநிலங்களில் 7.7 லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சியை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 'மைக்ரோசாப்ட் இந்தியா' நிறுவனம் தனது சமூக பணிகள் குறித்த 'சிட்டிசன்ஷிப் ரிப்போர்ட் 2015-16'-ஐ வெளியிட்டுள்ளது. அதில், பிராஜக்ட் சிக்சா, சக்சம், ஜோதி, யூத்ஸ்பார்க் உள்ளிட்ட திட்டங்கள் குறித்த சாதனைகளை பட்டியலிட்டுள்ளது.


பேஸ்புக் நிறுவனம் கடந்த காலாண்டில் எதிர்பார்த்த வருவாயைவிட அதிக வருமானம் ஈட்டியுள்ளது!
[Friday 2016-07-29 11:00]

பிரபல சமூக, ஊடக வலையமைப்பான பேஸ்புக் நிறுவனம் கடந்த காலாண்டில் எதிர்பார்த்த வருவாயைவிட அதிக வருமானம் ஈட்டியுள்ளது. இது, கடந்த வருடம் இந்த காலப்பகுதியைவிட நூற்றுக்கு 186 சதவிகதிமாக அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வருமானம், 2015 ஆம் ஆண்டில் குறித்த காலப்பகுதியைவிட 719 மில்லியன் டொலர் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.


சோர்வு ஏற்படுவதற்கான காரணங்கள்:
[Monday 2016-07-25 18:00]

சில நபர்கள் வெகு சீக்கிரமாக சோர்வடைந்து விடுவர். அதிக வேலைப்பளு, தூக்கமின்மை போன்ற காரணங்களால் சோர்வு ஏற்படுகிறது.
தூக்கமின்மை - குழந்தைகளுக்கு எட்டு முதல் பத்து மணி நேரமும், பெரியவர்களுக்கு ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியம். தூக்கத்தில் மூச்சுவிட
மறத்தல் - இந்த நிலை மிகவும் குண்டான, புகை பழக்கம் உள்ளவர்களுக்கு வரும். உறக்கத்தில் அடிக்கடி மூச்சு நின்று நின்று வருவதால் இவர்கள் நாள் முழுவதும் சோர்வாகவே இருப்பார்கள். எட்டு மணி நேரம் தூங்கினாலும் இரண்டு மணி நேரம் தூங்கிய உணர்வே இருக்கும்.
மாறுபட்ட உணவு: காலை உணவு சாப்பிடாமல் இருத்தல், சரிவிகித உணவு உண்ணாமை, நேரம் தவறி சாப்பிடுதல், அதிகபடியான அசைவ உணவு, உணவு அலர்ஜி இதற்கு மருத்துவம் கட்டாய காலை உணவு, பழங்கள், அளவுடன் அசைவம், அலர்ஜி உள்ள உணவை தவிர்த்தல்.


வெரைஸான் தொலைதொடர்பு நிறுவனம் யாகூவை வாங்குகிறது!
[Monday 2016-07-25 18:00]

பிரபல தேடுதல் தளமான யாகூவை வெரைஸான் தொலைதொடர்பு நிறுவனம் 4.83 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2017 ம் ஆண்டின் தொடக்கத்தில் நிறுவன கைமாற்றம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது இணையத்தில் தேடுதல், செய்தி, வீடியோ போன்ற தேவைகளுக்கு முன்பெல்லாம் கூகுளை விட யாகூவைத்தான் அதிகமான மக்கள் பயன்படுத்தினார்கள். ஆனால், 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் யாகூவின் செல்வாக்கு சரிய தொடங்கியது. கூகுள், யூ-டியூப், பேஸ்புக் போன்ற புது வரவுகளால் யாகூவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.


வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைத் தீர்க்கும் வெள்ளரிக்காய்:
[Monday 2016-07-25 07:00]

வெள்ளரிக்காய் அப்படியே உண்ணத் தூண்டும் அளவுக்கு அதற்கென தனிச்சுவையும் உண்டு. நன்கு ஜீரணம் ஆகக்கூடியது. சிறுநீர் பிரிவதை தூண்டச் செய்வது. இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக் கூடியது. வெள்ளரிக்காய் பித்தநீர் மற்றும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகின்றது. அண்மைக்கால ஆய்வுகள் வெள்ளரிக்காயின் நன்மைகள் குறித்து பல தகவல்களை வெளியிட்டுள்ளன.


சோயா ஒரு நிறைவான சத்து உணவு!
[Sunday 2016-07-24 18:00]

தாவர உணவுகளில் மிகவும் ருசியான சோயா பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒர் உணவாகும். சோயா பீன் (Bean) (சோயா அவரை) மிக அதிக புரதச் சத்து நிறைந்த தானியமாகும். உணவுகளில் உள்ள புரதத்தின் அளவுகள் ( 100g இற்கு கணக்கிடப்பட்டுள்ளது.


மன அழுத்த பிரச்னைக்குத் தீர்வாகும் ஏலக்காய் - வாசனைப் பொருட்களின் அரசி
[Friday 2016-07-22 23:00]

வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிகப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.


மூட்டு மற்றும் எலும்பு வலிகளுக்கு அற்புதமான நாட்டு வைத்தியம்!
[Friday 2016-07-22 18:00]

தற்போது மூட்டு மற்றும் எலும்பு வலியால் ஏராளமானோர் கஷ்டப்பட்டு வருகின்றனர். மூட்டு மற்றும் எலும்புகளில் ஏற்படும் நாள்பட்ட உட்காயங்கள் தான் முக்கிய காரணம். எனவே ஒவ்வொருவரும் தங்களது எலும்புகள் மீது சற்று அதிக அக்கறை காண்பிக்க வேண்டியது அவசியம். பொதுவாக மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள் வயதான காலத்தில் தான் ஏற்படும். ஆனால் இன்றோ 30 வயதிலேயே மூட்டு பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது. இதற்கு மோசமான உணவுப் பழக்கம் மற்றும் எலும்புகளுக்கு வேண்டிய சத்துக்கள் முறையாக கிடைக்காமல் இருப்பதும் காரணங்களாகும்.


தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள்!
[Friday 2016-07-22 18:00]

தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம். மேலும் தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் பானங்களுள் ஒன்று.


நாம் பயன்படுத்தும்மெ மெமரி கார்டு பற்றி நாம் அறியாத தகவல்கள்!
[Tuesday 2016-07-19 22:00]

இன்று நமது அழியாத நினைவுகளை பதிய வைக்க நாம் பயன்படுத்தும் முக்கியமான பொருள் தான் மெமரி கார்டு ஆகும். இது மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம். இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம். செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனை அமைத்தனர்.

Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா