Untitled Document
May 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிரித்தானியாவின் பழமை வாய்ந்த வோல்சிங்கம் தேவாலயத்தில் முள்ளிவாய்கால் தமிழின அழிப்பு நினைவு நாளிற்கான அறிவித்தம்! Top News
[Monday 2024-05-06 06:00]

பிரித்தானியாவின் பழமை வாய்ந்த வோல்சிங்கம் தேவாலயத்தில் இன்று இடம்பெற்ற தமிழ் உற்சவத்திற்கு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்திருந்தனர். பிரித்தனியா தமிழர் பேரவையினரால் 15ம் ஆண்டு முள்ளிவாய்கால் தமிழின அழிப்பு நினைவு நாளிற்கான அறிவித்தலும் , சிறிலங்காவில் தொடரும் தமிழின அழிப்பினை புதிதாக உருவாக்கப்பட்ட ஐ நா கட்டமைப்பில் (O SLAP) சாட்சியங்களை பதிவிடும் உலகளாவிய வேலைத்திட்டம் பற்றிய விபரங்களும் வழங்கப்பட்டன.

இவ் உற்சவத்திற்கு வருகை தந்திருந்த தமிழ் மக்கள் சாட்சியங்களை பதிவிடும் விபரங்களை கேட்டு அறிந்து கொண்டதுடன் தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வுக்கான தமது தார்மிக ஆதரவினையும் வழங்கியிருந்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com



பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் தமிழ் இளையோர்களின் நடன நிகழ்வு Top News
[Thursday 2024-05-23 21:00]

சந்ததிகள் கடந்தும் தாயகம் இழந்தும் நீதிக்காக போராடும் தமிழ் இளையோர்கள் - பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தினத்தில் தமிழர்களின் வலியை உலகுக்கு உணர்த்திய தமிழ் இளையோர்களின் நடன நிகழ்வு.



ஊழி திரைப்படம் பற்றிய பின்னோட்டம்! Top News
[Tuesday 2024-05-21 21:00]

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான தமிழர்களின் வாழ்வின் இருண்ட யுகங்களை பற்றி பேசும் படமாக ஊழி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே 10ம் திகதி இலங்கையிலும், உலகளவிலும் இத்திரைப்படம் உலகளவில் திரையிடப்படவுள்ளது. ஈழத்தில் உருவாக்கப்பட்ட ஈழ திரைப்படமே ஊழி ஆகும். நாட்டில் இனவழிப்பு ஒன்று செய்யப்பட்ட பின்னர், தாம் நாட்டினை ஒன்றாகியதாக ஆட்சியாளர்கள் 2009ம் ஆண்டு கூறிய பின்னர், கிழக்கு மாகாணத்தில் தொடங்கும் கதையே ஊழி திரைப்படம். இந்த திரைப்படம் போருக்குப் பிந்தைய சூழலில் ஒரு சிறுவனின் வாழ்வு பற்றியும், 2009ம் ஆண்டிற்கு பின்னர் தமிழர்களின் இருண்ட யுகங்களை பற்றியும் பேசுகின்றது. இந்த திரைப்படத்தில் ஈழ கலைஞர்கள் , தென்னிந்திய கலைஞர்கள் மற்றும் தென்னிலங்கை கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.



தமிழின அழிப்பு நினைவுநாள் 2024 - யேர்மனி 18.05.2024! Top News
[Tuesday 2024-05-21 06:00]

18.05.2024 சனிக்கிழமை அன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15ஆவது ஆண்டு நினைவுநாள் யேர்மனியின் டுசில்டோவ் (Düsseldorf)நகரில் பேரெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது. பிற்பகல் 14:30 மணிக்கு நகரமத்தியில் பெருந்திரளான மக்களோடு ஆரம்பமாகிய பேரணி, தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பிலும் தமிழாலயங்களது ஒப்பனையும் பாவனையும் எனும் வடிவத்தில் முள்ளிவாய்க்கால் காட்சிப்படுத்தல்களோடும் மத்திய மாநிலத்தில் அமைந்துள்ள மாநில நாடாளுமன்றத்தினை நோக்கிப் பேரெழுச்சியோடு நகரத் தொடங்கியது. பேரணி செல்லும் வழியெங்கும் கூடி நின்ற வேற்றின மக்களுக்கு இளையவர்கள் துண்டுப்பிரசுரங்களை வழங்க, பேரணியில் கலந்து கொண்ட மக்கள் வானதிர கொட்டொலிகள் எழுப்பியவாறும் சென்றனர். பிற்பகல் நான்கு மணிக்கு மாநில நாடாளுமன்றத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தினைப் பேரணி வந்தடைந்தது.



ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழினப்படுகொலையின் 15வது ஆண்டு நினைவு கூறலும் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு கவனயீர்ப்பு நிகழ்வும்! Top News
[Monday 2024-05-20 18:00]

18/05/2023 சனிக்கிழமை பிற்பகல் 14.45 மணி தொடக்கம் 17.00 மணிவரை, Place Kléber (Homme de Fer) Strasbourg என்னும் இடத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர். பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக்கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டது. தமிழினப்படுகொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் சிறுவர் முதல் பெரியவர் வரை மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனர்.



யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் திருமதி. ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களது இறுதி வணக்க நிழ்வு! Top News
[Friday 2024-05-17 11:00]

கடந்த 02.05.2024 அன்று உடல்நலக் குறைவினால் யேர்மனியின் வூப்பெற்றால் நகரில் இயற்கையெய்திய தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் நாட்டுப்பற்றாளர். திருமதி. ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களது இறுதி வணக்க நிகழ்வு பெருமளவான தாயக மக்கள் புடைசூழ மிகவும் உணர்வுபூர்வமாக, அவர் வாழ்ந்த வூப்பெற்றால் நகரிலே நடைபெற்றது. யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உப அமைப்புக்களான, தமிழ்க்கல்விக்கழக ஆளுகைக்குட்பட்ட வூப்பெற்றால் நகரத் தமிழாலய ஆசிரியராகத் தமிழ் விருத்தியின் அர்ப்பணிப்பு மிக்கதான தொடர் பணியாற்றியதோடு, இருபது வருட நிறை நல் பணியின் விருதுப் பட்டயமாக “தமிழ்வாரிதி” எனும் சிறப்பினை ஏலவே பெற்றிருந்தார். அத்தோடு அனைத்துலகத் தமிழ்க்கல்விக்கழக நூலாக்கக் குழுவிலும் யேர்மனிய தமிழ்க்கல்விக்கழக சார்பான தனது பங்கேற்பையும் நல்கியிருந்தார்.



“பேசுவோம் போரிடுவோம் ” நூல் வெயீட்டு விழா: யேர்மனி, டோட்முண்ட்! Top News
[Monday 2024-05-13 18:00]

11.05.2024 அன்று தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் யேர்மனியக் கிளையின் வெளியீட்டுப்பிரிவினால், தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புறுப்பினர் திரு. க.வே.பாலகுமாரன் அவர்களது கட்டுரைகள் தொகுக்கப்பட்ட “பேசுவோம் போரிடுவோம் “எனும் நூல் யேர்மனியின் டோட்முண்ட் (Dortmund) நகரில் வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக்கிளைப்பொறுப்பாளர் திரு. சிறீரவீந்திரநாதன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைக்க, மாவீரர் நினைவுப்படத்திற்கு திருமதி.தீபா இரவிச்சந்திரன் அவர்களும் மே18 தமிழின அழிப்பு நினைவுப்படத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு டோட்முண்ட் நகரக் கோட்டப்பொறுப்பாளர் திரு.செல்லையா பாலகிருஸ்ணன் அவர்களும் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார்கள். தொடர்ந்து வருகை தந்திருந்த அனைவரும் மலர் சுடர்வணக்கம் செலுத்தினார்கள். நூல் வெளியீட்டு விழாவின் அடுத்தநிகழ்வாக மங்கல விளக்குகள் ஏற்றிவைக்கப்பட்டது.



போகம்பர சிறைச்சாலையை ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முதலீட்டாளர் முன் வந்திருக்கிறார்! Top News
[Sunday 2024-05-05 18:00]

போகம்பர சிறைச்சாலையானது வரலாற்று கட்டிடக்கலையுடன் கூடிய ஹோட்டல் வளாகமாகும்… ஒரு முதலீட்டாளர் ஏற்கனவே முன் வந்துள்ளார்… அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு. போகம்பர சிறைச்சாலையை ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முதலீட்டாளர் முன் வந்திருக்கிறார்.. இதன் பழமையைப் பாதுகாத்து அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.



கனடா நாடுகடந்த அரசவை தேர்தலில் அநீதிகள் இடம்பெற்றதாக குற்றச்ச்சாட்டு! Top News
[Thursday 2024-05-02 21:00]

இந்த புதிய சிக்கலுக்கு தீர்வுகளை எட்டுமா நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமைப்பணிமை ? தற்போதைய நான்காவது தவணைத்தேர்தல் முன்னெடுப்புகளில் அநீதிகள் இழைக்கப்பட்டு முன்னாள் அரசவை உறுப்பினர்கள் செயல்பாட்டாளர்கள் புதிய போட்டியாளர்கள் உள்ளிட்ட 14 பேர் முறையான காரணங்கள் இன்றி வேட்ப்புமனுக்கள் நீராகரிக்கப்பட்டது தொடர்பிலான பொதுமக்கள் மற்றும் ஊடக சந்திப்பு ஒன்று நேற்றுமாலை நடைபெற்றது.



எஹலேபொல மாளிகையின் உரிமையை உடனடியாக ஸ்ரீ தலதா மாளிகைக்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன அறிவுறுத்தல்! Top News
[Sunday 2024-04-28 20:00]

வரலாற்று சிறப்புமிக்க எஹலெபொல மாளிகை இந்நாட்டின் முதல் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் ஆகும். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைக்கப்பட்ட எஹலேபொல மாளிகையை தலதா மாளிகையிடம் ஒப்படைத்ததன் பின்னர் தொல்பொருள் மற்றும் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து இந்த மெழுகுசிலை அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்க தேல பண்டார தெரிவித்தார்.



34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – தென்மேற்கு மாநிலம், லன்டோவ்-எஸ்லிங்கன்! Top News
[Monday 2024-04-22 21:00]

யேர்மனியிலே 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து நெறிப்படுத்திவரும் தமிழ்க் கல்விக் கழகம் தென்மேற்கு மாநிலத்தில் 34ஆவது அகவை நிறைவு விழாவை 20.04.2024 சனிக்கிழமையன்று எஸ்லிங்கன் நகரில் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் இணைந்து பயணிக்கும் அனைவரையும் அழைத்துச் சிறப்போடு கொண்டாடியது.



நல்லூரில் வாழும் பழங்குடியின மக்களின் பல்வேறு பிரச்சினைகளை ஆராய விசேட குழு! Top News
[Monday 2024-04-08 22:00]

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்க திருகோணமலை அரசாங்க அதிபருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார். நல்லூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அண்மையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நல்லூரில் தங்களின் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை குறித்து கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.



34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி! Top News
[Monday 2024-04-08 22:00]

தமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழகம் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துத் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் 34 ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது.



செங்கலடி இலுப்படிச்சேனையில் வர்த்தக நிலையங்களை திறந்து வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்! Top News
[Monday 2024-04-08 06:00]

செங்கலடி இலுப்படிச்சேனையில் உள்ளுர் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் நோக்கில் வர்த்தக நிலையங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார். 22 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிராமிய வர்த்தக நிலையங்கள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.



ஏறாவூர்பற்றில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு! Top News
[Sunday 2024-04-07 08:00]

விவசாயிகள் மத்தியில் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை ஏறாவூர் பற்று பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. விவசாயிகளின் விளைச்சலை அதிகரிப்பதற்காக விவசாயச் சங்கங்களுக்கு விவசாய உபகரணங்களையும், மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கும் உபகரணங்களையம் ஆளுநர் வழங்கி வைத்தார்.



கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வவுணதீவு வீதி திறந்து வைப்பு! Top News
[Friday 2024-04-05 06:00]

140 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வீதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டதுடன், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோபாலரத்தினம் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா