Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
விஜய், அஜித்தை தாண்டி அடுத்த தலைமுறைகளை நம்பி இருக்கும் 6 ஹீரோக்கள்!
[Saturday 2024-05-04 17:00]

சினிமாவில் காலம் காலமாக இரண்டு நடிகர்களுக்கு இடையே போட்டி நிலவி வருவது வழக்கம்தான். அந்த வகையில் எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருந்து இப்பொழுது இருக்கும் விஜய் அஜித் வரை போட்டி போட்டு கொள்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு அடுத்து இளம் ஹீரோக்கள் எக்கச்சக்கமாக வந்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களில் யார் அடுத்த தலைமுறைகளில் இடம் பிடிக்க போகிறார் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த லிஸ்டில் இடம் பிடிப்பதற்கு கிட்டத்தட்ட ஆறு ஹீரோக்கள் போட்டி போட்டு வருகிறார்கள். அவர்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

குட் நைட் மணிகண்டன்: பழகப் பழக தான் ஒருவரை பிடிக்கும் என்று சொல்வது போல் குட் நைட் மணிகண்டன் நடிப்பை பார்க்க பார்க்க அவரை பிடிக்க ஆரம்பித்து விட்டது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அவருடைய கதாபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஒவ்வொரு படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் வெளிவந்த லவ்வர் படத்திலும் இவருடன் நடிப்பு பாராட்டும் வகையில் அமைந்து விட்டது. அந்த வகையில் இவருடைய படத்திற்கும் தற்போது வரவேற்பு கிடைக்கிறது.

அசோக் செல்வன்: சூது கவ்வும் முதல் ப்ளூ ஸ்டார் படம் வரை தேர்ந்தெடுத்த ஒவ்வொரு படங்களும் கதை வித்தியாசமாகவே இருந்தது. அந்த வகையில் இவருடைய படங்களை நம்பி போகலாம் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றும் விதமாக கதை இருக்காது என்று பெயரை எடுத்திருக்கிறார்.

விஷ்ணு விஷால்: படிப்படியாக முன்னேறி ஒவ்வொரு வெற்றியும் பார்த்துக் கொண்டு வருகிறார். வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்திருந்தாலும் இப்பொழுது வரை மறக்க முடியாத படமாக குள்ளநரி கூட்டம்,முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி போன்ற படங்கள் வெற்றி படங்களாக நிலைத்து நிற்கிறது. இதனைத் தொடர்ந்து தன்னை நிரூபித்துக் காட்டும் வகையில் வித்தியாசமான கதையுடன் கூடிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

பிரதீப்: கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்தார். இதில் இவருக்கு கிடைத்த வரவேற்பும் பாராட்டும் பிடித்திருந்ததால் தொடர்ந்து இனி நடிப்பில் கவனம் செலுத்தி ஹீரோவாக மாறலாம் என்று முடிவெடுத்து விட்டார். அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் தற்போது நடித்துக் கொண்டு வருகிறார். இவருடைய எதார்த்தமான நடிப்பிற்கு மக்கள் விழுந்து விட்டார்கள்.

ஹரிஷ் கல்யாண்: ஆரம்பத்தில் இவர் நடித்த சந்து சமவெளி படம் சர்ச்சைக்குரிய படமாக அமைந்தது. ஆனாலும் கிடைத்த வாய்ப்பை தொடர்ந்து பயன்படுத்தி பல படங்களை கொடுத்தார். பிறகு பிக் பாஸ் சீசன் முதல் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பிறகு நடித்த படங்கள் அனைத்தும் மக்களுக்கு பிடித்த மாதிரி கொடுத்து இவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். கடைசியாக வெளிவந்த பார்க்கிங் படத்தில் வித்தியாசமான நடிப்பை பார்க்க முடிந்தது. தற்போது இவர் கைவசம் இருக்கும் படங்கள் 100 கோடி வானவில், டீசல், லப்பர் பந்து.

கவின்: தற்போது இவர் தான் ட்ரெண்டிங் ஹீரோ என்று சொல்லலாம். ஏனென்றால் இவருடைய படத்திற்கு மக்களிடத்தில் இருந்து பேராதரவு கிடைக்கிறது. முக்கியமாக எந்த மாதிரி நடித்தால் மக்களை ஈர்க்கலாம் என்ற யுத்தியை தெரிந்து வைத்திருக்கிறார். அதன்படி இவர் நடித்த அனைத்து படங்களுமே வெற்றி பெற்றுவிட்டது. டாடா மற்றும் லிப்ட் படங்கள் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவே செய்யாது. இதனைத் தொடர்ந்து தற்போது மே 10ம் தேதி ஸ்டார் படம் வெளிவர இருக்கிறது. இந்தப் படமும் நஷ்டம் ஏற்படாத வகையில் வெற்றி பெற்றுவிடும்.

இப்படி இந்த ஹீரோக்கள் அனைவரும் மக்களுக்கு பிடித்த நாயகனாக ஒவ்வொரு படங்களிலும் வெற்றியை கொடுத்து வருகிறார்கள். இவர்கள் தான் அடுத்த தலைமுறைகளை நம்பி இருக்கும் ஹீரோக்களாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா