Untitled Document
May 11, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மாபெரும் வெற்றிப்படத்திற்காக சிவாஜி கணேசன் வாங்கி சம்பளம்!
[Sunday 2024-04-28 08:00]

நடிப்பின் இலக்கம் என கூறப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் ஹீரோவாக நடித்து வந்த சிவாஜி ஒரு கட்டத்தில் இனிமேல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கவேண்டுமென முடிவு செய்கிறார். ஹீரோவாக எப்படி முத்திரை பதித்தாரோ, அதே போல் தான் ஏற்று நடித்த ஒவ்வொரு குணச்சித்திர கதாபாத்திரங்களையும் மக்கள் மனதில் பதியவைத்தார். ஆனால், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கியபின், தயாரிப்பாளர்களிடம் சம்பளம் குறித்து எதுவுமே பேசமாட்டாராம் சிவாஜி.

தன்னை படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்கும் தயாரிப்பாளர்களிடம், இந்த கதாபாத்திரத்திற்கு எவ்வளவு தரவேண்டும் என நினைக்கிறாயோ, அதை மட்டும் கொடு போதும் என கூறிவிடுவாராம்.

அப்படி அவர் நடித்த ஒன்ஸ் மோர் திரைப்படத்திற்காக முதலில் ரூ. 100 மட்டுமே சம்பளமாக வாங்கி இருக்கிறார். பின் படத்தின் வியாபாரம் முடிந்த நிலையில், சிவாஜி கணேசனுக்கு ரூ. 10 லட்சம் சம்பளமாக கொடுத்தாராம் எஸ்.ஏ. சந்திரசேகர்.

இதனை தொடர்ந்து கமல் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் திரைப்படத்திற்காக, நடிகர் சிவாஜி கணேசனுக்கு ரூ. 20 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்பின் ரஜினியுடன் இணைந்து சிவாஜி கணேசன் நடித்த படம் தான் படையப்பா. இப்படத்தில் ரஜினியின் தந்தை கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்திருப்பார். மக்கள் மனதில் இருந்து இன்று வரை நீங்கா இடத்தை இவருடைய கதாபாத்திரம் பிடித்துள்ளது.

இப்படம் வியாபாரம் முடிந்தபின், தயாரிப்பாளரிடம் இருந்து சிவாஜி கணேசனுக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது. இதை தனது மகன் ராம்குமாரிடம் கொடுத்துள்ளார். காசோலையை பார்த்த ராம்குமார், அப்பா இதில் ரூ. 1 கோடி என்று போடப்பட்டுள்ளது என கூறியுள்ளார். தயாரிப்பு தரப்பில் ஒரு பூஜ்யத்தை அதிகமாக போட்டிருப்பார்கள். ரூ. 10 லட்சம் தான் சம்பளமாக இருக்கும் என சிவாஜி கூறியுள்ளார்.

பின் தயாரிப்பாளருக்கு போன் கால் செய்து பேசிய சிவாஜி கணேசன், காசோலையில் ரூ. 1 கோடி என தவறாக சம்பளம் போடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதற்கு தயாரிப்பாளர் தரப்பு, இல்ல சார் சரியாக தான் போட்டிருக்கும், ரஜினிகாந்த் சார் தான் உங்களுக்கு ரூ. 1 கோடி சம்பளம் கொடுக்க சொன்னார் என கூறினார்களாம்.

இந்த விஷயம் நடந்த பிறகு, ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்து சிவாஜி கணேசன் கடிதம் கூட எழுதினாராம். நாம் எவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றாலும், நம்முடைய மூத்த கலைஞரை எப்படி மதிக்க வேண்டும் என்று ரஜினிகாந்தை பார்த்து தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

  
  
   Bookmark and Share Seithy.com



உச்சகட்ட கவர்ச்சியில் திவ்யா பாரதி! Top News
[Saturday 2024-05-11 06:00]

சுடிதார் அணிந்த சொர்க்கமாய் தற்போது இணையங்களில் பேச்சுலர் நாயகி திவ்யா பாரதி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை அள்ளிச் செல்லக்கூடிய வகையில் உள்ளது. இந்த புகைப்படத்தில் திகட்ட, திகட்ட கவர்ச்சியை காட்டி திக்கு முக்காட வைத்திருக்கும் திவ்யபாரதி இளசுகளின் ரத்தத்தை சூடேற்ற வைத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.



விஜய்யின் அரசியல் என்டரிக்கு லாரன்ஸ் கூறிய கருத்து!
[Friday 2024-05-10 18:00]

ராகவா லாரன்ஸ் நடிகர், இயக்குனர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் என்பதையும் தாண்டி மக்களுக்கு ஒரு நல்ல மனிதராகவும் பல நல்லதுகளை செய்து வருகிறார். முக்கியமாக மாற்றுத்திறனாளிகளிடம் இருக்கும் திறமைகளை கண்டுபிடித்து அதை முன்னுக்கு கொண்டு வரும் வகையில் லாரன்ஸ் அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.



சூர்யா குடும்பத்தால் அமீருக்கு ஏற்பட்ட அதிருப்தி!
[Friday 2024-05-10 18:00]

அமீரின் திரைப்படம் தொடங்கியதே பருத்திவீரன் படத்தில் தான். இந்தப் படத்தில் பல பிரச்சனைகளை அமீர் சந்தித்தார். சமீபத்தில் கூட இது மிகப்பெரிய பூதாகரமாக வெடித்திருந்தது. ஞானவேல் ஆரம்பித்து வைத்த இந்த பிரச்சனையை அவரே மன்னிப்பு கேட்டு முடித்து வைத்தார்.



"கமல் படத்தில் சிம்பு நடிக்க கூடாது" - அதிர்ச்சியை கிளப்பிய தயாரிப்பாளர்!
[Friday 2024-05-10 18:00]

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவர் தற்போது கமலுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இதற்கான அறிவிப்பு வெளிவந்தது. இந்த நிலையில், நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் கமலின் தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்க கூடாது என பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் புகார் அளித்துள்ளார்.



மறைந்த பின்பும் கேப்டனுக்கு கிடைத்த கௌரவம்!
[Friday 2024-05-10 06:00]

கேப்டன் விஜயகாந்த் தான் மட்டுமல்லாமல் பிறரையும் வாழ வைத்து மகிழக்கூடியவர். சினிமாவில் அவருடைய பங்களிப்பு அளப்பறியாதது. கேப்டன் பிரபாகரன் படத்திற்கு பிறகு ரசிகர்களால் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டார். இந்த சூழலில் நடிகர் சங்கத்திலும் கேப்டனாக சில காலம் பணியாற்றினார். அதன் பிறகு அரசியலில் இறங்கிய விஜயகாந்த் தேமுதிக கட்சியை தொடங்கினார். அதன்பிறகு உடல்நிலை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.



டி.ராஜேந்தர் அவர்களின் தாடிக்கு பின்னால் இப்படியொரு வேதனையா?- யாருக்கும் தெரியாத தகவல்!
[Friday 2024-05-10 06:00]

கோலிவுட்டில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என அனைத்து துறைகளிலும் கலக்கியவர் தான் டி.ராஜேந்தர். இன்று அவர் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஒருதலை ராகம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் வெறும் இயக்கம் மட்டுமின்றி வசனம் எழுதுவது, கேமரா, இசையமைப்பு என எல்லா ஜானரிலும் கலக்கினார்.



தளபதியுடன் களமிறங்கும் சீமராஜா!
[Thursday 2024-05-09 18:00]

விஜய்யின் கோட் படத்தில் பிரபலம் ஒருவர் நடிப்பது இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. வெங்கட் பிரபு படம் என்றாலே எக்கச்சக்க பட்டாளம் நிறைந்திருக்கும். அதிலும் குறிப்பாக கோட் படத்தில் பல பிரபலங்கள் நடிக்கின்றனர். மைக் மோகன், அஜ்மல், பிரசாந்த், சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி என பலர் சங்கமித்து உள்ளனர். விஜய் பிறந்தநாள் அன்று கோட் படத்தின் டிரைலர் வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.



சுந்தர் சி இடமிருந்து பிரிக்க முடியாத 2 விஷயங்கள்!
[Thursday 2024-05-09 18:00]

கமர்சியல் படங்களை இப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில் கில்லாடியாக செயல்படுவார் சுந்தர் சி. இவரின் அரண்மனை சீரிஸ் 4 பாகங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்பொழுது அரண்மனை நான்காம் பாகம் வெளியாகி சக்கபோடு போட்டுக் கொண்டிருக்கிறது.



58 வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்ய போகும் ராஷ்மிகா மந்தனா!
[Thursday 2024-05-09 18:00]

இந்தியளவில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தென்னிந்திய சினிமாவையும் தாண்டி பாலிவுட்டில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வருகிறது. கடைசியாக அனிமல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கடுமையான விமர்சனங்களை இப்படம் சந்தித்து இருந்தாலும் கூட, வசூல் ரீதியாக இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.



கைப்புள்ள கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?
[Thursday 2024-05-09 06:00]

சுந்தர் சியின் படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் என்றால் அது பிரசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் படம் தான். இந்தப் படத்திற்கு பிளஸ் பாய்ண்டாக அமைந்தது வடிவேலுவின் கைப்புள்ள கதாபாத்திரம் தான். இதில் வரும் காமெடிகள் அனைத்துமே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.



திஷா பாட்னி நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சி! Top News
[Thursday 2024-05-09 06:00]

நடிகை திஷா பாட்னி ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அவர் தற்போது சூர்யா ஜோடியாக கங்குவா படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அவர் கடற்கரையில் பிகினி உடையில் போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள் இதோ...



ரஜினி, விஜய், அஜித்தை ஒரே போடாக போட்டு தாக்கிய அமீர்!
[Wednesday 2024-05-08 18:00]

குகையில் விழுந்த நண்பர் ஒருவரை கட்டி அணைத்தவாறு இன்னொரு நண்பர் கயிறு மூலம் மேலே ஏறுகிறார். சுற்றி இருக்கும் நண்பர்கள் கூட்டம் இருவரையும் பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்கள். பேக்ரவுண்டில் ‘ மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது’ என்ற பாடல் வரி.



அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
[Wednesday 2024-05-08 18:00]

நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதை தவிர்த்து கீத்து மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்சிக் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என தகவல் வெளியானது. யாஷ் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் அவருக்கு அக்காவாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்கவிருந்தார். ஆனால், திடீரென அவர் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக நயன்தாரா நடிக்க வைக்க இயக்குனர் கீத்து மோகன் தாஸ் முடிவு செய்துள்ளாராம்.



"அரண்மனை 4" ஐந்து நாட்களில் செய்துள்ள வசூல்!
[Wednesday 2024-05-08 18:00]

கடந்த வாரம் வெளிவந்து மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் அரண்மனை 4. சுந்தர் சி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் தமன்னா, ராஷி கன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



சுந்தர்.சி பட நடிகை மரணம்!
[Wednesday 2024-05-08 06:00]

இயக்குனர் சுந்தர்.சியின் இருட்டு என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் மலையாள நடிகை கனகலதா. அவர் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்த நிலையில் தமிழில் சில படங்களில் நடித்து இருக்கிறார். பிரஷாந்த் நடித்த உனக்காக பிறந்தேன் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா