Untitled Document
May 3, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
திரையில் மீண்டும் ஜோடி சேரும் சூர்யா, ஜோதிகா!
[Friday 2024-04-19 07:00]

நட்சத்திர ஜோடிகளான சூர்யா, ஜோதிகா இருவரும் 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையில் இணைய உள்ளனர். இதை அறிந்த சூர்யா ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்த ஜோதிகா பட பிஸியாக இருந்து வருகிறார். மம்முட்டியுடன் தி கோர் படத்தில் நடித்த நிலையில் பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.

இதுதவிர பாலிவுட்டிலும் சில படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து கிட்டத்தட்ட ஏழு படங்கள் நடித்துள்ளனர். பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் 6 மற்றும் சில்லுனு ஒரு காதல் படங்கள் இவர்களது கூட்டணியில் உருவானது.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடன் நடிக்கவில்லை. இப்போது சூர்யாவின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. டாப் 10 நடிகர்கள் எடுத்துக் கொண்டால் அதில் அவரது பெயரும் இருக்கும்.

இதனால் ஜோதிகா தனது மார்க்கெட்டை ஏற்றுவதற்காக தனது கணவருக்கு கொக்கி போட்டு அவருடன் சேர்ந்து நடிக்க உள்ளார். இப்படத்தை பெங்களூர் டேஸ் படத்தை இயக்கிய அஞ்சலி மேனனோ இயக்க உள்ளார்.

மேலும் இந்த கதை ரொமான்டிக் கதையாக இருந்தால் செமையாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த படத்திற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாக இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா