Untitled Document
April 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வசூல் வேட்டையாடும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’!
[Saturday 2024-03-02 19:00]

2006ம் ஆண்டில் கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வெளியாகி உள்ள படம் தான் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான இந்த படத்திற்கு மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த படத்தின் ஏழாவது நாள் வசூல் விவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. கேரளாவில் மஞ்சும்மல் பாய்ஸ் என்ற பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றி வரும் 11 நண்பர்களில் ஒருவர் குணா குகையில் சிக்கிக் கொள்கிறார். அவரை எப்படி மீட்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் ஸ்டோரி.

இயக்குனர் சிதம்பரம் இயக்கியுள்ள இந்த மலையாள படத்தில் 60% தமிழ் பேசுவது மட்டுமல்லாமல், இந்த படத்தின் கதை தமிழ்நாட்டில் நடப்பதால் இங்கும் நன்றாக ஓடுகிறது. இந்த படத்தில் உலகநாயகன் கமலஹாசனின் குணா படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலும் இடம்பெற்றது தான் ஹைலைட்.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் 7வது நாள் வசூல் விவரம் இதனால் தமிழ் ஆடியன்ஸை சேட்டன்கள் கவர்ந்து விட்டனர். இந்த படத்தை பார்த்த பின்பு உலக நாயகன் கமல்ஹாசனும் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தார். அவர் மட்டுமல்ல உதயநிதி ஸ்டாலின், தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரும் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.

வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், உலக அளவில் 7 நாட்களில் மட்டும் 50 கோடியை வசூலித்துள்ளதாக தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலில் இணையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா