Untitled Document
April 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சிவகுமாரின் செயலால் பொது இடத்தில் காத்தோடு போன சூர்யாவின் மானம்!
[Monday 2024-02-26 18:00]

எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் சபை நாகரிகம், தன்னடக்கம், மரியாதை நிச்சயம் இருக்க வேண்டும். அதுவும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் கவனத்துடன் முன் வைக்க வேண்டும். ஆனால் நடிகர் சிவகுமார் அதை பின்பற்றுவதே கிடையாது.

மேடைக்கு மேடை நன்னடத்தைப் பற்றி கிளாஸ் எடுக்கும் இவர் செய்திருக்கும் ஒரு விஷயம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது இவர் காரைக்குடியில் நடைபெற்ற பழ கருப்பையாவின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது நடந்து கொண்ட முறைதான் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

அந்த விழா மேடையில் அவர் பேசிவிட்டு கீழே இறங்கி செல்லும்போது வயதான பெரியவர் ஒருவர் அவருக்கு சால்வை அணிவிக்க முன்வருகிறார். ஆனால் சிவகுமார் அதை ஏற்காததோடு அவர் கையில் இருந்த சால்வையை பிடுங்கி எறிந்து விட்டு செல்கிறார். அந்த காட்சி தான் தற்போது மீடியாவில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். ஆனால் அநாகரீகமாக பொது இடத்தில் அதை தூக்கி எறிந்தது நிச்சயம் யாரும் எதிர்பாராதது தான். ஏற்கனவே ஒருமுறை செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை இவர் தட்டிவிட்டது பூதாகரமாக வெடித்தது.

அதை அடுத்து இப்போது சால்வை விஷயத்திலும் அவர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். இதை தான் தற்போது நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் மரியாதை, ஒழுக்கம் பற்றி கிளாஸ் எடுக்கும் நீங்கள் மற்றவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் என சிவகுமாரை ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா