Untitled Document
April 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
"நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" - ஏவி ராஜுவுக்கு கெடு வைத்த த்ரிஷா!
[Thursday 2024-02-22 18:00]

சமூக வளைத்தளத்தில் தன்னை பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜுவுக்கு எதிராக நடிகை த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ள விடயம் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் த்ரிஷா. இவர் தொடர்பில் சேலம் மாவட்டத்தின் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு அவதூறாக பேசியிருந்த காணொளியொன்று இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

அவர் அவ்வாறு அவதூறாக பேசியமைக்கு திரைத்துறையினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஏவி ராஜு க்கு நடிகை திரிஷா வக்கீல் நோட்டிஸ் அனுப்பிவைத்திருக்கின்றார்.

குறித்த நோட்டீசை திரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு ஏ.வி.ராஜுவின் பேச்சால், கடந்த நான்கு நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் இதற்கான நட்ட ஈட்டு தொதையை அவர் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பத்திரிக்கை, சமூக வலைத்தளங்களில், த்ரிஷா குறித்து அவர் பேசியுள்ள, வெளியிட்டுள்ள அவதூறான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் அனைத்து பதிவுகளையும் உடனடியாக நீக்க அல்லது அகற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

இந்த அறிவிப்பை பெற்ற 24 மணி நேரத்திற்குள் திரிஷாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதுடன், மன்னிப்பு அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் ஏ.வி.ராஜூவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் ஆங்கில செய்தித்தாள்களில் மன்னிப்புக் கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்களிலும் மன்னிப்பு கேட்டு காணொளி வெளியிட வேண்டும் என நடிகை திரிஷா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா