Untitled Document
April 27, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மலையாள சினிமாவை தூக்கி நிறுத்திய மம்முட்டியின் 7 ஹிட் படங்கள்!
[Sunday 2024-02-18 18:00]

அழகன்,மௌனம் சம்மதம், மணிரத்தினத்தின் தளபதி போன்ற படங்களின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான மம்முட்டி தற்போது 70 வயதை கடந்த பின்பும் இளம் நடிகர்களுக்கு முன்னுதாரணமாகவும் தரமான கதைகளுடன் கூடிய படங்களில் நடித்து இன்றும் இளமை மாறாது வலம் வருகிறார் மம்முட்டி.

இந்த மாஸ் நடிகரின் படங்கள் திரைக்கு வருகிறது என்றாலே குஷியாகி விடுகின்றனர் ரசிகர்கள். அந்த அளவு மலையாள சினிமாவை தூக்கி நிறுத்திய மம்மூட்டியின் தரமான 7 ஹிட் படங்களை காணலாம்.

பிரம்மயுகம்: அமானுஷ்யம் நிறைந்த மந்திர மற்றும் மாயாஜாலங்களை இறக்கி ரசிகர்களை இருக்கையில் நுனிக்க அமரச் செய்து பயம் ஏற்படுத்தி இருந்தார் மம்முட்டி. இந்த வயதில் இவரது அனுபவம் எதார்த்தம் என்று இருந்தாலும், எதார்த்தத்தை மிஞ்சிய நடிப்பில் பார்வையாளர்களின் சிந்தனையே வென்றிருந்தார் மம்மூட்டி.

நண்பகல் நேரத்து மயக்கம்: மம்முட்டி மற்றும் ரம்யா பாண்டியன் நடித்த இப்படத்தை மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கியிருந்தார். தெரியாத நபரின் வீட்டுக்குள் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அந்த வீட்டில் இருப்பவர்களுடன் பழகுவது என சுவாரசியமான கதையுடன் ரசிகர்களையும் பயணிக்க வைத்தார் மம்முட்டி

கண்ணூர் ஸ்குவாட்: காவல் அதிகாரியாக மம்மூட்டியின் நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட படம் கண்ணோடு ஸ்குவாட். சாதாரணமாக திருடன் போலீஸ் கதைதான் என்றாலும் படத்தின் காட்சி அமைப்புகளுக்கு ஏற்ப பரபரப்பை பார்வையாளர்களுக்கு கடத்தி திருடனை பிடிக்கும் முனைப்பை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தி இருந்தனர் இந்த கண்ணூர் ஸ்குவாட் அணியினர்.

காதல் தி கோர்: முன்னணி நடிகர்கள் ஏற்க தயங்கும் தன் பாலின ஈர்ப்பாளராக நடித்து உணர்வு ரீதியான கதையில் சபாஷ் போட செய்திருந்தார் மம்முட்டி. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் நான்கு மடங்கு லாபத்தை சம்பாதித்து விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

ரோர்சாக்: மனைவியின் சாவுக்கு பழிவாங்கும் கணவனாக சைக்காலஜிக்கல் திரில்லர் கதையில் மிரட்டி உள்ளார் மம்முட்டி. பல டுவிஸ்ட்க்களுடன் விறுவிறுப்பை கூட்டியிருந்தது ரோர்சாக்.

பீஷ்ம பர்வம்: குடும்பத்தில் உள்ள துரோகிகள் எதிரியுடன் சேர்ந்து வீழ்த்த நினைக்க, மகாபாரதத்தில் பீஷ்மரை போல் தனிப்பட்ட சந்தோஷத்தை கருத்தில் கொள்ளாது இறுதி வரை குடும்பத்திற்காக போராடுவதாக ஒரு கேங்ஸ்டர் ஸ்டோரி போல அமைந்தது மம்மூட்டியின் பீஷ்ம பர்வம்.

புழு: மிக மிக சிம்பிளான கதையை திரில்லிங் உடன் கலந்து மம்மூட்டியை நெகட்டிவ் ரோலில் வெளிப்படுத்தி ரசிகர்களின் இதயங்களை நொறுங்க செய்தது இந்த புழு. காட்சிக்கு காட்சி திருப்பங்களுடன் ஸ்மார்ட் வில்லனாக எதிராளியை வீழ்த்தி இருந்தார் மம்மூட்டி.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா