Untitled Document
April 27, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
‘ஒற்றைக்கட்டண’ திட்டம்! Top News
[Thursday 2024-02-08 18:00]

கடந்த திங்கட்கிழமையன்று, ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டும் போக்குவரத்து இணை அமைச்சர் விஜய் தணிகாசலமும் இணைந்து ஒன்ராறியோ அரசாங்கம் பொதுப் போக்குவரத்துப் பயணிகளுக்கான செலவைக் குறைப்பதற்காக 'ஒற்றைக்கட்டண' திட்டம் ஒன்றினை அறிவித்தனர். இந்த 'ஒற்றைக்கட்டண' நடைமுறை மூலம் சராசரியாக 1,600 டொலர்களை பயணிகள் சேமிப்பர். பிப்ரவரி 26, 2024 முதல், ரொறன்ரோ பொதுப்போக்குவரத்துச் சேவை (TTC) மற்றும் ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள 'கோ' (GO) போக்குவரத்துச் சேவை உட்பட இத்திட்டத்தில் பங்குபற்றும் அனைத்து சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் ஒருமுறை மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.

இதன்போது பேசிய முதல்வர் டக் ஃபோட், "ஒன்ராறியோவின் உழைக்கும் மக்களுக்கான செலவுகளைக் குறைக்கும் பணியில் எங்கள் அரசாங்கம் மும்முரமாக உள்ளது" என்று கூறினார். “ஒற்றைக்கட்டண முறையானது பல்கட்டண முறைமையை நீக்கி பயணிகளுக்கு 1,600 டொலர்களை வருடாந்த போக்குவரத்துச் சேமிப்பாக வழங்கும். இதேபோல், எரிவாயு வரிக்குறைப்பு, சாலைக் கட்டணக்குறைப்பு, வாகன உரிமத் தகட்டின் வருடாந்த கட்டண நீக்கம் போன்றவற்றின் மூலம் வாகன ஓட்டுநர்கள் நூற்றுக்கணக்கான டொலர்களைச் சேமிப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்" எனவும் அவர் தெரிவித்தார்.

ஒன்ராறியோ அரசின் முழுமையான நிதியுதவியில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த 'ஒற்றைக்கட்டண' முறை ஆண்டொன்றுக்கு போக்குவரத்துத்துறையில் எட்டு மில்லியன் புதிய பயணங்களுக்கு வழிவகுக்கும். மேலும் 'கோ' போக்குவரத்து (GO Transit), ரொறன்ரோ பொதுப்போக்குவரத்து (TTC), பிரம்டன் போக்குவரத்து, டூரம் பிரதேச போக்குவரத்து, மிசிசாகா போக்குவரத்து (MiWay), யோர்க் பிரதேச போக்குவரத்து (York Region Transit) ஆகியவற்றுக்கு இடையே பயணிக்கும் மாணவர்கள் மற்றும் முதியோர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வசதியான போக்குவரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

"பல குடும்பங்கள் நிதிநெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில், போக்குவரத்தை எளிமையாக்கும் எமது அரசின் இத்திட்டமானது, அவர்களுக்கு ஒரு நிவாரணமாக அமையும்" என போக்குவரத்து இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவித்தார். "முதல்வர் ஃபோர்டின் தலைமையின் கீழ், பொதுப் போக்குவரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை நாம் தொடர்ந்தும் மேற்கொள்வதன்மூலம் எமது மக்களின் சேமிப்பை அதிகரிப்போம்" என அவர் மேலும் தெரிவித்தார்.

ஒற்றைக்கட்டணத் திட்டத்தின் மூலம், 'கோ' (GO) போக்குவரத்துச் சேவை உட்பட பின்வரும் அனைத்து போக்குவரத்துச் சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் ஒருமுறை மட்டுமே கட்டணம் செலுத்துவார்கள்:

Barrie Transit

Brampton Transit

Burlington Transit

Bradford West Gwillimbury Transit

Durham Region Transit

Grand River Transit

Guelph Transit

Hamilton Street Railway

Milton Transit

MiWay

Oakville Transit

TTC

York Region Transit

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா