Untitled Document
April 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
28 வயது வித்தியாசம் உள்ள நடிகருடன் ஜோடி போடும் திரிஷா!
[Monday 2024-02-05 18:00]

யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல் திரிஷாவும் தனக்குத்தானே ஆப்பு வச்சு கிட்டார். 40 வயதாகும் திரிஷா இப்போதும் தன்னுடைய மார்க்கத்தை விட்டுக் கொடுக்காமல் அஜித், விஜய் என கோலிவுட்டில் டாப் ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த சமயத்தில் தன்னைவிட 28 வயது அதிகம் இருக்கும் ஹீரோக்கு திரிஷா ஜோடியாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் சிரஞ்சீவிm அடுத்ததாக தன்னுடைய 156 ஆவது படமான விஷ்வம்பாரா என்ற படத்தில் இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது. பக்கா பேண்டஸி ஜானலில் உருவாகும் இந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. எம் எம் கீரவாணி இசையமைக்கும் இந்த படத்தை வரும் 2025 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி கோலிவுட் ரசிகர்களை காண்டேற்றி இருக்கிறது. ஏனென்றால் இந்த படத்தில் 68 வயதாகும் சிரஞ்சீவிக்கு திரிஷா தான் ஜோடியாக நடிக்கிறார். இந்த விஷயத்தை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவுடன் இணைந்திருக்கும் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.

18 வருடத்திற்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவியுடன் நடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவரும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான ‘ஸ்டாலின்’ என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இப்போது விஷ்வம்பாரா என்ற படத்தில் ஜோடி சேர்ந்திருக்கின்றனர். சிரஞ்சீவிகள் மகள் ராம்சரண் ஹீரோவாகவே நடிக்க வந்துவிட்டார். அதன் பிறகும் சிரஞ்சீவியின் மவுசு குறையாமல் இன்னும் கதாநாயகனாக தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.

68 வயதாகும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடிப்பது தெலுங்கு ரசிகர்களை குஷிபடுத்தினாலும், கோலிவுட்டில் அவருடைய மார்க்கெட் சரிய போகிறது. ‘இனிமேல் அஜித், விஜய்க்கு ஜோடி போடுவதை கனவில் கூட நினைத்துப் பார்க்காதீர்கள் திரிஷா!’ என்றும் தமிழ் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொந்தளிக்கின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா